2009-11-04

எனக்கு பிடித்த "இதயம்" சொல்லில் ஆரம்பிக்கும் "இதயம் வலிக்கும் " பாடல்கள்

இந்த தலைப்பில் எழுத எந்த பின் காரணங்களும் இல்லை. எனக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கும் அதனால் இந்த பாட்டுகளை விரும்புகிறேன் என்று நினைக்க வேண்டாம். பின்னடைவுகள் தான் பிறகு பாரிய வெற்றியை தரும் என்ற நம்பிக்கையில் ... !!!


ராத்திரி இணைய வசதி இல்லை அதனால் இருந்த காணொளி பாடல்களை வரிசைப்படுத்தி பார்த்தேன்.
அதில் ஒரு சில என்னை எப்பவோ கவர்ந்தவை. அதில் இதயம் என்று ஆரம்பிக்கும் பாடல்கள் மூன்று .
ஒருக்கா நீங்களும் கேளுங்கள். நிச்சயம் பிடிக்கும் என்று நம்புறேன்





பாடல் ஒன்று :-


மோகனின் சூப்பர் கிட் படங்களில் ஒன்று தான் தான் இந்த இதயக் கோவில், எத்தனை முறையும் பார்த்து கொண்டு இருக்கலாம். பாடல்கள், கௌண்டமணி பகிடிகள், காதலின் வலி என்று எல்லாமே நிறைந்த ஒரு நிறைவான படம். ஒரு சோகமான முடிவு.. என்ன செய்வது காதல் தோல்வி என்று வந்துவிட்டால் இது எல்லாம் விளைவுகள் தான் என்பதை புரிய வைத்த படம்.

படம்:- இதயக் கோவில்
பாடியோர்:- எஸ் பி பாலசுப்ரமணியம்,இளையராஜா
இசைஅமைத்தவர்:-இளையராஜா


இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்


(டூயட் )

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்

ஆத்ம ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் ராகம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல
எனது ஜீவன் ஒன்றுதான் என்றும் புதிது

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்


(சோகம் )

காமம் தேடும் உலகிலே ஜீவன் என்னும் கீதத்தால்
ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாயே
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்


பாடல் இரண்டு

நான் பிறந்த ஆண்டில் வந்து இன்று வரை இல்லை என்றுமே இந்த பாடல் மெகா ஹிட் தான். ஈழத்து வானொலிகளில் ராத்திரி வேளையில் நடக்கும் பழைய மெட்டுகளை மீட்டி தரும் நிகழ்ச்சிகளில் இந்த பாட்டு எப்படியும் ஒலிக்கும். எனக்கு அங்கே கேட்டு தான் விளைவால் தேடி பிடித்து வைத்து இருக்கேன்.

படம் : புதிய வார்ப்புகள்
பாடல் : பஞ்சு அருணாசலம்
பாடியவர் : ஜென்சி
இசை : இளையராஜா
வெளியான ஆண்டு : 1979
பாரதிராஜா, பாக்யராஜ், ரத்தி அக்னி ஹோத்ரி


இதயம் போகுதே
இதயம் போகுதே எனையே பிரிந்து
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ
இதயம் போகுதே

மணியோசை கேட்டு மகிழ்வோடு நேற்று
கைகள் தட்டிய காலை சென்றதெங்கே
அரும்பான என் காதல் மலராகுமோ
மலராகி வாழ்வில் மனம் வீசுமோ
இதயம் போகுதே எனையே பிரிந்து



லாலல லாலல லாலல லாலல
லால லால லால லால.....

சுடுநீரில் விழுந்து துடிக்கின்ற மீன்போல்
தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா
குயில் கூவ வசந்தங்கள் உருவாகுமோ
வெயில் தீண்டும் பூவில் பனி நீங்குமோ
இதயம் போகுதே எனையே பிரிந்து

மலைசாரல் ஓரம் மயிலாடும் நேரம்
பாடல் சொல்லவும் தேவன் இல்லையம்மா
நிழல் போல உன்னோடு நான் சங்கமம்
தரவேண்டும் வாழ்வில் நீ குங்குமம்

இதயம் போகுதே எனையே பிரிந்து
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ
இதயம் போகுதே

பாடல் மூன்று

எல்லாருக்கும் தெரிந்த முரளியின் இதயம் படத்தில் இடம் பெற்ற இதயமே இதயமே பாடல் .

காட்சியும் அதன் பின் பாடலும்



சரிங்க இப்போ பாடல்


இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே



பனியாக உருகி நதியாக மாறி
அலை வீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து
உயிர்க் காதல் உறவாடிக் கலந்தேன் இன்றே
இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம்
கோலம் கலைந்ததே புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்

இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே

என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று
உன் மீது படவில்லை துடித்தேன்
அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சைத் தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்

இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே

1 comment:

subhikanna said...

Very nice Swamiji.

All the three songs are my favourite too.

Thank you.

Best regards....
Kannan
9739020131
subhikanna@yahoo.co.in

Related Posts Plugin for WordPress, Blogger...