2009-02-05

Time Factor

நண்பர் ஒருவரின் இடக்கு முடக்கான கேள்வி நீங்கள் எல்லாமே time factor பார்த்து கொண்டு இருப்பியல் ஏன் ஆக வேண்டியது ஆகல என்று.

ஹோ அதுவா, அதுக்கும் நம்மளுக்கும் வெகு தூரம், அம்மா விடம் தான் கேட்கணும். நானும் அவசரம் இல்லை. இருக்கிற பிரச்சனைகளை ( Hem.. எனக்குள் ஒரு பிரச்னையும் இல்லை பொதுவாக இந்த வயசில படிக்க வேனும் எண்டு ஒரு அவாவில் நிக்கிறன், முடிப்பம் அதை தான் சொன்னான்) தீர்த்து போட்டு செய்வம் எண்டு இருக்கிறம். இது தான் எனது பதில்.

உந்த பிரச்சனையை தீர்க்க ஒரு வழி இருக்கு என்று அடிக்கடி எனக்கு ஒரு நண்பர் சொல்லுவதை கேட்டு உள்ளேன். போய் Pettah இல ஒரு printer ஐ பிடிச்சு அவனுக்கு வீட்டு Address ai குடுத்து பிரிண்ட் இக்கு வார திருமண அழைப்பிதல் ஒவ்வொன்றிலும் ஒரு Copy யை எங்க வீட்டுக்கும் அனுப்பு. ஆகிற செலவையெல்லாம் கணக்கு போடு இப்பவே செட்டில் பண்ணுறன் எண்டு ஒரு பிடியாக சொல்லு, இதை வீட்டில receive பண்ணுற அம்மா ஒரு முடிவு எடுப்பா, கெதியா மகனுக்கும் பார்ப்போம் எண்டு.

தம்பி மாரே உதை யாருக்கும் செய்ய try பண்ண வேண்டாம், பிறகு வம்பில போய் முடியும்..

சரி சரி உந்த Time Factor கதையில கன அனுபவங்கள் இருக்கு. கன சோகமாய் முடிஞ்சும் இருக்கு. படிக்கிற காலத்தில் இருந்து எனக்கு ஏதோ எல்லாமே time இக்கு நடக்கணும், பொறுமையே இல்லை, வீட்டிலையும் அப்படி, படிப்பிலும் அப்படி, வேலை செய்யிற இடத்தில ஒரு படி கூட. அதுவும் நம்ம மாணவர்கள் சில வேலைகளில் பாவம்.

உதை விட பஸ் பயணங்கள் ஆஹா ஓஹோ. அதுவும் Campus ila படிக்கும் போது எனக்கு Bus ai கண்டால் வாழ்க்கையே வெறுக்கும் . நாங்கள் இருந்த இடம் Route கண்டி மகாகந்தை( கலகா வீதி) . இந்த பஸ் காரருக்கு நான் பேசாத பேச்சும் இல்லை சிலவேளைகளில். நான் மட்டும் அல்ல , என்னோடு சில பேர் சேர்த்தும் திட்டுவாங்கள், சில வேளை நான் மட்டும், இதுக்கு காரணம் அவங்கள் செய்யும் அநியாயமான வேலைகள் தான்.

ஒரு முறை நான் கண்டிக்கு போய் சாப்பிடுவம் என்று ஏறி இருந்தால் ( 10 AM - போயா தினம்) அதுவும் போகுது போகுது. போகும் பாதையில இந்த பஸ்ஸை விட யாரும் பஸ் ஓடுறதா தெரியவே இல்லை. Galaga சந்தியில யாருமே இல்லை , கண்டக்டர் இறங்கி நிண்டு rajwatte, ... உட பார , High school என்று போகுது .. ஒருக்கா சொன்னாலும் பரவாய் இல்லை , அதுவும் 5 தடவை சொல்லி இருப்பான் அந்த படு பாவி கண்டக்டர், யாரை பார்த்து சொன்னான் என்று தான் எனக்கும் பிரச்சனை, என்ன செய்ய பொறுமையா இருந்தன், யாரவது உதவிக்கு வருவாங்களா என்று திட்ட, சரி கொஞ்ச தூரம் போனால் பிறகாவது யாரும் தொடங்குவான்கள் என்றால் , ஒருத்தனும் இல்லையே.

சரி சரி பொறுமையா இருப்பம் என்று நினைக்க ஒரு மாதிரி 45 mins aala High School சந்தி வந்துட்டு. இப்போ இந்த பஸ் மேல போற பாதியில poka வேனும், அதுக்குள்ள யாரை யாவது கூட எடுத்திட்டு போகலாம் எண்டு 15 நிமிஷமாய் கூப்பிடுறான், யாருமே வாறதா காணவே இல்லை. சரி நான் முடிவெடுத்தாச்சு இறங்கி போவம் என்று சடார் எண்டு எழும்ப முன்னுக்கு இருந்த மாத்தையா தொடங்கினார் தன் வேட்டையை , அவர் நினைத்தார் போலும், நான் வேட்டைக்கு தான் போறன் என்று , அவர் பேசாத பேச்சு இல்லை, but Conductor o Good shed , உட பாறை எண்டு கூபிட்றான். சரி மாத்தையா தனிய என்று நமக்கு தெரிஞ்ச மொழியில அவனை ஒரு பிடி பிடிச்சா அவன் சொன்னான் ' மல்லி உமக்கு அவசரம் எண்டால் இறங்கி நடவும்' நானும் விடுறதா இல்லை, பேசி பேசி ஒரு கட்டம் Bus னுள்ளே ஒரே அமர்க்களம் ,எல்லாரும் திட்ட தொடங்கிட்டாங்கள், ஓட்டுனர் இதுதான் chance endu Bus aiye நிப்பாட்டி போட்டு சொன்னான் , பஸ் போகாது , என்ஜின் பிரச்சனை என்று , 10 நிமிஷம் இருக்கட்டாம் எல்லாரையும் என்று . பஸ் ஒருக்கா அதிர்ந்துது ..ஓஒ என்ற Sound aale.....

அவனவன் போயிட்டான் திரும்பி வரேக்க அதே பஸ் , என் நிலைமையை யோசித்து பாருங்கோவன்.சாப்பிட்ட சாப்பாடு செமிச்சது மட்டும் இல்லாமல் ஒரு குட்டி தூக்கம் கூட போட்டு பார்த்தேன்

இதுக்குள்ள நம்ம Engineer நண்பர்களுக்கு ஆகா ஓகோ என்று கம்பலை பஸ், அந்த பஸ் இல காலையில 8 மணிக்கு குருந்து வத்தையில ஏறி அக்பர் இல இறங்கினாலே போதும், எதோ கண்டி போய் வந்த மாதிரி பீலிங் இதுக்கும்.. இல்லையா பசங்களா???

கண்டியில் இருந்து கொழும்பு போகும் போது கடவத்தையில தொடங்கி களனி பாலம் வரும் வரைக்கும் 2 மணித்தியாலம் பாதையில இருக்கிற கடையும் சனமும் பார்க்கிறது தான் எனக்கு வேலை.

புகை வண்டிதான் எல்லாத்துக்கும் மேலால கொஞ்சம் பரவாய் இல்லை .

அதுவும் உந்த கொழும்பு- பதுளை .. train வேணாம் விட்டுடுவம்...

கொழும்பு நண்பர்களுக்கு 155, 102, 154, ( (141 சிலவேளைகளில்) ஏறி இருந்தா பொறுமையின் எல்லை விளங்கும், நானும் 155 kku facebook ila ரசிகர் கூட்டம் இருப்பதை பார்த்தும் உள்ளேன். வாழ்க பஸ் காரரும் அவங்க பஸ் களும்!!!
Related Posts Plugin for WordPress, Blogger...