2010-05-15

எந்த ஊரை சொல்லுறது??

தேசிய அடையாள அட்டை மாற்றனும். இத்தனை வயசாச்சு ( மூன்று கழுதை வயசு) இப்பவும் பாடசாலை மாணவன் என்று போட்டு இருந்தால், அதை பார்த்திட்டு என்னையும் பார்த்திட்டு (எனது வடிவையும் , உடலமைப்பையும் சொன்னேன் ) கட்டி வைச்சு பொல்லால அடிப்பாங்கள் . அதால அட்டையை மாற்றுவம் என்று போட்டு விதானையிட்ட போய் ஒரு பத்திரம் எடுத்து நிரப்ப வெளிக்கிட்டால் கனக்க பிரச்சினை.

இருந்த ஊர்களில் எந்த ஊரை சொந்த ஊர் என்று போடுறது. பிறந்த இடத்தை தான் போடுறது வழமை . இருந்தாலும் பிறந்த ஊரில் நான் ஒரு அல்லது இரண்டு வருடம் தான் இருந்தேன். வவுனியாவில் எட்டு வருடங்கள் , சுன்னாகத்தில் ஒரு வருடம் , யாழ்ப்பாணத்தில் எட்டு வருடங்கள், கொழும்பில் பதினான்கு வருடங்கள் ( இதுக்க கண்டியில் ஐந்து வருடங்கள் , நெதர்லாந்தில் மூன்று வருடங்கள் , வேலை செய்யும் ஊர் ஐந்து வருடங்கள் உள்ளடக்கம்).

விதானை என்னுடைய கதையை கேட்டால் தலை சுத்தி விழுந்தாலும் விழுந்திடுவா. ( அம்மையார் தான் விதானை) . தொழிலை விட்டுட்டு போனாலும் போயிடுவா. ஹா ஹா :)

பிறந்த ஊர், இருந்த ஊர், புகுந்த ஊர், புலம்பெயர்ந்த ஊர் , படித்த ஊர், வேலை செய்யும் ஊர், எத்தனை ஊரையா எம்மளுக்கு ?? நம்மளுக்கு எங்கு இருந்தாலும் எல்லாம் ஒன்று தான்.


(கண்ணனின் யாழ் புகைப்பட தொகுப்பில் இருந்து )

இந்த ஊர் கதை சொல்லும் போது எனக்கு பிடித்த கண்ணதாசனின் வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றது.
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா?

மிகவும் பழைய பாடல் ..கேட்டு ரசித்து பாருங்கள்..

2010-05-09

அன்னையர் தினமும் "அம்மா" க்களும்

இன்று உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது. என்னை பொறுத்த மட்டில் வருடம் முழுதும் கொண்டாடினால் தான் அவளருமை, பெருமை களை சொல்லி முடிக்கலாம். எல்லாருடைய அம்மாக்களும் போற்றப்பட வேண்டியவர்கள். அவர்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.


என் வாழ்வில், எனது அம்மா குருவாக, அன்னையாக, வாழ்கையின் ஒவ்வொரு படிகளிலும் எனக்கு உதவியாக/ வழிகாட்டியாக இருந்து வருகின்றதை நினைக்க பெருமையாக இருக்கின்றது. எனது அன்னையர் தின வாழ்த்துக்கள் உங்களுக்கு உரித்தாகட்டும்.

எனக்கு பிடித்த அம்மா பாட்டு... உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைகின்றேன் ...


2010-05-07

தற்காலிக பின்னடைவுகள், மனதை உருக்கிய பாடல், சுறா அனுபவங்கள்

தற்காலிக பின்னடைவுகள்:

மலையே ஆடினதாம் மதிலாடினால் என்ன. அதுதான் எனது திருமண வாழ்க்கை, இன்னும் ஒரு இரு நாட்களுக்குள் முற்று புள்ளிக்கு வந்து விடும். நீண்ட நாட்களாக நான் பட்ட துன்பியல் அனுபவங்களுடன் கூடிய விளக்கமான அறிக்கை கொழும்பு மாவட்ட நீதி மன்றம் விவாகரத்து வழங்கப்படுகிறது என்று அறிவித்த பின்னர் தரப்படும். அனுபவங்கள் வாழ்கையின் பாடங்கள்......:)

மனதை உருக்கிய பாடல்:
கடந்த வாரம் 155 இலக்க பஸ்ஸில் மருதானைக்கு சென்று வர வேண்டியதாயிற்று. வெள்ளவத்தையில் ஏறும் போது பஸ்ஸில் சனமே இல்லை, இருந்தாலும் கொஞ்ச சனத்தை தன் சாதுரியத்தால் சேர்த்து போட்டான். முன் ஆசனத்தில் இருந்து பஸ்ஸின் இசைதட்டில் இருந்து ஒலித்து கொண்டு இருந்த அழகான சோக பாடல்களை இரசித்து கொண்டு இருந்தேன். கேட்ட பாடல்களில் எனக்கு பிடித்த, என்னை இரசிக்க வைத்த பாடல் இதுதான்.
நெஞ்சே நெஞ்சே பாவை நெஞ்சே ........................:)



விசேடமாக இந்த பாட்டை ஓட்டுனர் திருப்பி திருப்பி போட்டு பஸ்ஸில் சென்றோருக்கு தன் காதல் "வலி"மையை உணர்த்தி விட்டார். மருதானையில் இறங்கும் போது அவருக்கு ஒரு வாழ்த்து சொல்லி போட்டு இறங்கினேன்:).


சுறா அனுபவங்கள்

நீண்ட நாட்கள் வெளிநாட்டில் இருந்து வித்தியாசமான இரசிகர்களுடன் திரைப்படம் பார்த்து வந்த நான் , அண்மையில் விஜய் இன் சுறா படத்தை லோக்கல் பஜாருடன் பார்த்து ரசித்தேன்( ஒரு பொய் சொல்லுறன் ). தமன்னாவுக்காக தான் நான் அந்த படத்தை பார்த்தேன். தமனாவை ரசித்தேன். படம் பரவாய் இல்லை .. இருந்தாலும் விஜய் அடுத்த முறையாவது அடுத்தவன் காசை சுரண்ட முன், கொஞ்சம் கவனமாய் படத்தை எடுத்தால் சரி.

சுறா படம் பற்றி வந்த ஜோக்ஸ் களில் எனக்கு பிடித்தது :

மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனையை விட அதிகபட்ச தண்டனையாக கட்டி வச்சு சுறா திரைப்படம் பார்க்க விடவேண்டும் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் இன்று கோரிக்கை விடுத்தார்:)
Related Posts Plugin for WordPress, Blogger...