2009-12-31

விடை பெரும் 2009 - சோகங்கள் தான் நிறைய


இந்த ஆண்டு உண்மையில் பல நெருக்குவாரங்களை தந்த ஆண்டு. எனக்கும் கூட ..எம்மின மக்களுக்கும் கூட.. உலக ரீதியிலும் கூட ஒரிரு சந்தோஷமான , துக்கமான சம்பவங்கள் நடந்தேறின..

அண்மையில் சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள ஐநா காரியாலயம் செல்ல கூடிய வாய்ப்பு கிடைத்து இருந்தது. அங்கே நான் கண்ட ஒரு சில மனித உரிமை / உரிமை மீறல் சம்பந்த மான கார்ட்டூன்கள்.
இத்தனை யும் போட்டு வைச்சு இருக்கின்ற ஐநா ஏன் எங்களை கண்டு கொள்ளவில்லை


ஒரு காலத்தில் இதை விட நீண்ட பட்டியல் கொண்ட ஈழத்து அவலப் படங்களை போட்டு இருக்கலாம் .. நீ அன்று களத்துக்கு போய் இருந்தால் .. :(

2009-12-29

தமிழர் புத்தாண்டாம் தைப்பொங்கல் தினம்

தமிழர் திருநாளாம் தை மாதம் முதல் தேதியைத் (அதாவது தைப்பொங்கல் தினமே ) தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடும் முறையை பின்பற்றாத தமிழர்கள் இனியாவது கடைப்பிடித்தல் வேண்டும்.. இன்றைக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தகவலை பலரோ சிலரோ அறிந்து இருந்தும் யாருமே பின் பற்ற வில்லை . காரணம் நாம் எமது பண்பாட்டை பிறருக்காக விட்டு கொடுப்பதும் அல்லது பிறரின் பண்பாட்டுக்கு அடிமையாகி இருப்பதுமே!தமிழ்ப் புத்தாண்டின் தேதியை மாற்றிவிட்டால் தமிழர்களின் தலைவிதி மாறிவிடுமா ? இது எனது நண்பன் கேட்ட சடார் கேள்வி. ஆமா /இல்லை . எது வேண்டுமென்றாலும் சொல்லி வாதிடலாம். அதை வாசகர்கள் நீங்களே தீர்மானியுங்கள். நான் சொல்ல கூடிய ஒன்று . ஒரு இனத்துக்குரிய கலை, கலாச்சார, மொழி , சமய நம்பிக்கைகள் , வாழ்வியல் சம்பந்தமான வற்றை அந்த இனம் முற்று முழுதாக பின்பற்றும்போது அந்த இன மக்கள் பூரண நிம்மதி, சுகங்கள், அடைய வேண்டிய சொவ்பாக்கியங்கள் எல்லாவற்றையும் அடைகின்றனர்.
(இதை மேலைத்தேய இன மக்களுடன் ஒப்பிட்டு பார்க்கவும். )


மேலும் எனது நண்பி சொன்ன கருத்து : தமிழில் பேசினாலே கவுரவம் குறைவு என்று எண்ணும் எண்ணத்தை பலர் கொண்டு இருக்கிறார்கள் ,இதை எல்லாம் விட்டு, நாங்கள் தமிழர்கள், தமிழில் தான் கதைப்போம் , தமிழ் பண்பாட்டையே பின்பற்றுவோம் , எந்த நாட்டிலிருந்தாலும் தமிழில் பேசுவதையும், படிப்பதையும் ஊக்குவிப்போம் என்ற தீர்மானம் போட்டாலே அது நம் தமிழ்த் தாய்க்குச் செய்யும் பெரிய பணி. கடைசி இதையாவது செய்வீர்களாக.

ஷா பா .. அப்போ சித்திரை புத்தாண்டு தமிழர்களின் புத்தாண்டு அல்லவா ? இது வேற ,, அதுதானே சொல்லிட்டம் .. தமிழர்களின் புத்தாண்டு ,.. தை 14 என்று. பிறகு என்ன .. ??
சித்திரைப்புத்தாண்டு, ஆரியர்களின் காலக்கணீப்பீட்டில் அவர்களுக்கு புத்தாண்டு.

2008 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் நாட்டிலே கூட தைப்பொங்கலையே புத்தாண்டாக கொண்டாடும் படி கிழட்டு முதல்வர் ( கடைசி இதிலை யாவது ஞானம் வந்திச்சு). அறிவிச்சும் இருக்கார். அது எங்களுக்கு உங்க தெரிய போகுது.
நீங்க தானே செய்திகள் நடக்கேக்க தொலைக்காட்சி பெட்டியை நிறுத்தி அதுக்கு ஒய்வு குடுப்பீங்க. மற்ற நேரம் எல்லாம் ஒன்றில் ..ஒன்றுக்குமே உருப்படாத சீரியல் பார்ப்பீங்க அல்லது போனால் 'தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முதலாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன (வந்த முதல் நாளே காணாமல் போன!) படங்களையும் இல்லாட்டி போனால் தமிழே தெரியாத நடிகைகளின் பேட்டிகளையும் ( அதுவும் நெத்தியில் நிக்கும்முடியை 100 தரம் இழுத்து இழுத்து பேட்டி குடுக்கும் ) பார்ப்பீங்க.. எப்போதான் திருந்த போறீங்களோ.


சரி நீங்களும் இந்த தேசத்தில் இருகுறீங்கள் என்றதை இந்த முறையாவது காட்டுங்கள் உலகத்துக்கு.

2009-12-26

லேட்டஸ்ட் பாடல்களில் பிடித்தவை


அண்மையில் வெளி வந்த படங்களில் எனக்கு பிடித்த பாடல்கள்

  1. பையா படத்தில் வந்த துளி துளி பாடல் ..


லிங்குசாமி தானே இயக்கி வரும் படம் தான் பையா. படத்தில் தமன்னா எனது கனவு நாயகி (முன்னைய பதிவு) , கார்த்தி சிவகுமார் நடிக்கின்றனர்.கடந்த மதம் தான் இந்த ஆடியோ வெளியிடபட்டது. அண்மையில் நான் இலங்கை சென்று திரும்பும் போது எனது ipod இல் இந்த பாடல்களை ஏற்றி கொண்டு வந்தேன். கேட்க சந்தர்ப்பம் கிடைத்தது ஜெர்மனி இல் இருந்து புகை வண்டி பயணத்தின் போது.. ஆகா அருமை. யுவன் சங்கர் ராஜா இசையில் .. சூப்பர்..!!! அந்த பயணித்த அதிகாலை நேரத்தில் நானே ஆறு தொடக்கம் எழு தடவைகள் கேட்டே விட்டேன்.
நீங்களும் ஒருக்கா கேளுங்களேன்.
இப்பாடலை ஹரிசரண் ( காதல் படத்தில் உனக்கென இருப்பேன் பாடல் மூலம் அறிமுகம் ) தன்வி ஷா (ஜெய் ஹோ பாடல் ) ஆகியோர் பாடி இருக்கின்றனர்.
படத்தில் தமன்னா வின் கவர்ச்சிக்கு குறைவே இல்லை என்பதுக்கு ஒரிரு புகைப்படங்கள் .:)

துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...
பார்த்தால் பார்க்க தோன்றும் பேரை கேட்க தோன்றும்,
பூபோல் சிரிக்கும்போது காற்றாய் பறந்திட தோன்றும்....
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொள்ளுதடா...
அழகாய் மனதை பறித்து விட்டாளே......
.துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூமுகம் காணவே ஆயுள்தான் போதுமோ!
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டுத்தான் பூக்களும் பூக்குமோ!
நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும், பார்வை ஆளை தூக்கும்...
கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும்...
பாதம் ரெண்டும் பார்க்கும்போது கொலுசாய் மாறதோன்றும்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே....
செல் செல் அவளுடன் செல் என்றே காள்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொள்ளுதடா...


சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன் தோழ்களில் சாயுவேன்..
பூமியில் விழுகிற வேளையில் நிழலையும் ஓடிபோய் ஏந்துவேன்,
நெஞ்சிலே தாங்குவேன்,
காணும்போதே கண்ணால் என்னை கட்டிபோட்டாள்,
காயமின்றி வெட்டி போட்டாள்..உயிரை ஏதோ செய்தாள்...
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும் அங்கே வந்து ஒட்டு கேட்டாள்... கனவில் கூச்சல் போட்டாள்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே...
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொள்ளுதடா...

துளி துளி துளி மழையாய் வந்தாளே... சுட சுட சுட மறைந்தே போனாளே...துளி துளி துளி மழையாய் வந்தாளே... சுட சுட சுட மறைந்தே போனாளே...2. ஈரம் படத்தில் வந்த மழையே .. பாடல்

தாமன் இசையில் ரஞ்சித் இந்த பாடலை பாடி உள்ளார். இந்த படத்தை திரையில் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் பாருங்கள்.உண்மையில் சூப்பர் படம் .

விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வை பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத் தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே இனிமே நீதான் துணையே


மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தானா
தனியே தனியே நனைந்தேன் மழையே
உன் மனமே மனமே தீயாய் கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போலே
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே
(மழையே..)

ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
உல்லா ஹ உல்லா ஹ ஒ
உல்லா ஹ உல்லா ஹ ஓ

மை மை மழையே

உன் ஆடைப்ட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓரப்புன்னகையாய் பெரும் தூரல் வருகிறது
உன் முகத்தில் அசையும் மொழி
இலைத்துளியாய் நனைகிறது
உன் கைகள் தீண்டுவதால் அடை மழையேப் பொழிகிறது
போதும் போ நீப்போ என் கண்கள் வலிக்கிறது
போடிப்போ நீப்போ என் உள்ளம் உணர்கிறது
(விழியே..)


3- அழகாய் பூக்குதே பாடல் - நினைத்தாலே இனிக்கும்

விஜய் ஆந்தோனி யின் இசையில் பிரசன்னா , ஜானகி ஐயர் பாடிய பாடல். படமும் பார்த்தேன். கொஞ்சம் வித்தியாசமான கதை :) ரசித்து பார்க்கலாம்.
இந்த படத்தில் வந்த பனராஸ் பட்டு கட்டி குத்து பாட்டு எனக்கு ஆரம்பத்திலே இருந்து பிடிக்கும். ( முதல் பதிவு )அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
(அழகாய்..)

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஒரே கருவரை கண்ட நாளை
கண்ணில் ஈரம்
(அழகாய்..)கடவுளின் கனவில்
இருவரும் இருப்போமே ஓஹோ
கவிதையின் வடிவில்
வாழ்ந்திட நினைப்போமே ஓஹோஹோ

இருவரும் நடந்தால்
ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோஹோ
ஒரு நிழல் அதிலே
இருவரும் தெரிவோமே ஓஹோஹோ

சில நேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன் உன்னாலே
(அழகாய்..)

ஒரு முறை நினைத்தேன்
உயிர் வரை இனித்தாயே ஓஹோ
மறுமுறை நினைத்தேன்
மனதினை வதைத்தாயே ஓஹோஹோ

சிறு துளி விழுந்து
நிறை குடம் ஆனாயே ஓஹோஹோ
அறை கணம் பிரிவில்
வரைவிட செய்தாயே ஓஹோஹோ

நீ இல்லா நொடி முதல்
உயிர் எல்லாம் ஜடத்தை போல் ஆவேனே
(அழகாய்..)4 ஆதவன் படத்தில் அன்பே உன்னால் மனம் freezing

இந்த படத்தை திரையில் பார்த்த போது . இந்த பாட்டு முடியும் வரை விசில் அடிச்சே களைச்சு போனேன். கார்த்திக் , ஹரிணி இந்த பாடலை பாடியுள்ளனர்.ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். [ முதல் பதிவு ]


அன்பே உன்னால் மனம் freezing
அடடா காதல் என்றும் amazing
Excuse me let me tell you something
நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங்
நீ வீசும் அம்பு என் மேல் பாய
காதல் வந்து என்னை ஆழ
வருவாயோ என்னை காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் வாழ

ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
என் இளமையில் இளமையில் பனித்துளி
குதுகளி
எனக்கும் உனக்கும் ஏன் இடைவெளி
நீ இரவினில் இரவினில் எனை வாசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி

அஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா
என் கனா என் கனா என்றுமே நீதானா
(ஹசிலி..)உரசாமல் அலசாமல் உயிரோடு ஊருது ஆசை
அடங்காமல் இதுங்காமல் இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை
இரு விழியே ஏவுகணை உனக்கெதுவா இங்கு இணை
உன் இடையோ ஊசி முனை உடைந்திடுமோ சேரு என்னை

ஏன் என்னை தீண்டினாய் வெப்பமா
நான் உனக்கு பூக்களின் உப்புமா
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சி கொன்றாய்
(ஹசிலி..)

உயிரோடு உயிரோடு என்னை கொல்ல நெருங்குகிறாயே
விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் இறங்குகிறாயே
யாரிதழில் யாரிதழோ வேர்த்துவிடும் வெங்குழலோ
உச்சி முதல் பாதம் வரை எத்தனையோ வித்தைகளோ

நீ ஆடை பாதியா பாதியா
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதிதான் பூமியா
நீ முத்தப்பேயா மேதை நீயா
(ஹசிலி..)


இறுதியாக சர்ச்சைக்குரிய வேட்டைக்காரன் படத்தில் இருந்து

வேட்டைக்காரன் எனது பார்வையில்


(m)ஒரு சின்ன தாமரை
என் கண்ணில் பூத்ததே..
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி
தைக்கின்றதே..

இதை உண்மை என்பதா
இல்லை பொய்தான் என்பதா..
என் தேகம் முழுவதும்
ஒரு வெண்மீன் கூட்டம்
மொய்க்கின்றதே ... <ஒரு>

(f)என் ரோம கால்களோ
ஒரு பயணம் போகுதே..
உன் ஈரப் புன்னகை
சுடுதே..

என் காட்டு பாதையில்
நீ ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே
மலர்ந்தேன்.. உயிரே .. <என்>

(ஒரு)(m)உன் பெயர் கேட்டாலே
அடி பாறையில் பூ பூக்கும் ..
உன் காலடி தீண்டிய
வார்த்தைகள் எல்லாம்
கவிதைகளாய் மாறும்..

(f)உன்தெரு பார்த்தாலே
என் கண்கள் அலை மோதும்..
உன் வாசல் தேடி போக சொல்லி
கெஞ்சுது என் பாதம்..

(m)என் வாழ்க்கை வரலாற்றில்
எல்லாமே உன் பக்கங்கள்...

(f)உன்னாலே என் வீட்டின்
சுவரெல்லாம் ஜன்னல்கள்..

(ஒரு)

(m)உன் குரல் கேட்டாலே
அந்த குயில்களுக்கும் கூசும்..
நீ மூச்சினில் சுவாசித்த காற்றுகள்
மட்டும் மோட்சத்தினை சேரும்..

(f)அனுமதி கேட்காமல்
உன் கண்கள் என்னை மேயும்..
நான் இத்தனை நாளாய்
எழுப்பிய கோபுரம்
நொடியில் குடை சாயும்..

(m)உன் கைகள் கோர்க்காமல்
பயணங்கள் கிடையாது..

(f)உன்னோடு வந்தாலே
சாலைகள் முடியாது..

(ஒரு)
(என்)


இதை விட வேறு பல கிட் பாடல்களும் இருக்கலாம் . மீண்டுமொரு தடவை சந்திக்கும் வரை ..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

2009-12-23

வருகிறான் பாரு எந்திரன் - சித்திரை 2010நாங்க தீவிர ரஜனி ரசிகர்கள் .. இந்த முறை எல்லாமே எந்திரன்... பற்றிய ஒரு சில தகவல்கள் !!

காதலன் படம் முடிந்ததுமே இயக்குநர் ஷங்கர் இயக்க நினைத்த படம் ரோபோ. ஷங்கரின் கனவுப்படமான ரோபோவில் கமல் நடிப்பதாக இருந்தது. எழுத்தாளர் சுஜாதாவின் வானொலி நாடகமான இயந்திரனையும், முதலில் நாவலாகவும் பின்னர் தொலைக்காட்சித்தொடராகவும் வெளிவந்த என் இனிய இயந்திராவையும் தழுவியே ரோபோவுக்கான திரைக்கதையை எழுதித்தந்தார் சுஜாதா.


திரைக்கதையில் தனக்கு நிறைய டெவலப் செய்ய வேண்டியிருக்கும் என்று கமல் சொல்ல தனது கதையின் ஒரிஜினாலிட்டியை இழக்க விரும்பாத சுஜாதா இழுத்தடிக்க, கமல்- ஷங்கர் டீம் அப்போது இந்தியனில் இறங்கினார்கள். அடுத்து பாய்ஸ், முதல்வன் என்று முடித்துவிட்டு மீண்டும் சுஜாதாவிடம் போனால் கமல் கேட்ட மாற்றங்களில் சமாதானம் அடையவில்லையாம் அவர்.இந்த நிலையில் ஷங்கரைக் கூப்பிட்டார் ஷாருக்கான். தனக்காக இந்தியில் ஒரு படம் பண்ணுங்க என்று சொல்ல ரோபோவை சொன்னார் ஷங்கர். கதையில் எந்த கரக்‌ஷனும் சொல்லாமல், தானே தயாரிக்கிறேன் என்று முன்வந்த ஷாருக், திரைக்கதையில் பாலிவுட்டுக்கான மசாலாக்களை சேர்த்துக்கொண்டு வாருங்கள் என்று சொல்ல, இவருக்கு கமலே பரவாயில்லை என்று அலுத்துக்கொண்டே சுஜாதாவிடம் சொல்லாமலே ஸ்கிரிப்ட் ஒர்க்கில் உட்கார்ந்த போதுதான் ரஜினி அழைத்து தனியார் என்ஜினியரிங் கல்லூரிகளுக்கு சாட்டையடி கொடுக்கிற மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் பண்ண முடியுமா என்று கேட்டிருக்கிறார். ஏழு நாட்களில் ஷங்கர் செய்த கதைதான் சிவாஜி.


பிறகு ஷாருக்கு கோபமாகி ரோபோ ஸ்கிரிப்ட் என்ன ஆச்சு என்று கேட்க, ஷங்கர் செய்த கரக்‌ஷன்களை சொல்லியிருக்கிறார்.. இந்தமுறை கமலைப் போலவே கதையில் கரக்‌ஷன் சொன்னவர் ஷாருக். பார்த்தார் இது சரிப்பட்டு வராது என்று வந்துவிட்டாராம் ஷங்கர்.ரஜனி இமைய மலை சென்றிந்த போது

வந்தவர் ரோபோவை தமிழில் யாரை வைத்து பண்ணலாம் என்று யோசித்திருக்கிறார்.. அஜீத்துடனும் பேச்சுவார்த்தை நடந்தது. இதற்குள் ரஜினியே முன்வந்து ரோபோ கதையின் மூலம் நாம் மீண்டும் இணையலாமே என்று சொல்ல, இதை கேள்விப்பட்ட ஷாருக் கடுப்பாகி மவனே ரோபோ டைட்டிலேயே நீ நினைச்சுப்பார்க்கக்கூடாது என்று ரோபோ டைட்டிலை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் பதிவு செய்துவிட்டாராம்.. மவனே யாருக்கிட்ட...?! தமிழன்னா உனக்கு தொக்காபோச்சா... அதுக்கு வேற எவனையாச்சும் பாரு என்றே ~எந்திரன்| டைட்டிலை வைத்திருக்கிறார்கள்.120 கோடி பட்ஜெட். ரஜினியின் கனவு நாயகி ஐஸ்வர்யாராயை சம்மதிக்க வைத்த்தில் பா. சிதம்பரத்தின் பங்கு உண்டு என்கிறது நம்பத்தகுந்த வட்டாரம். பெரு நாடு உட்பட பல வெளிநாடுகளில் எந்திரன் படமாக்கப்பட்டாலும் படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு தமிழ்நாட்டிலேயே படம் பிடித்திருக்கிறார்கள்.

சென்னை மற்றும் சென்னை புறநகர் பழைய மகாபலிபுரம், மாதவரம், மணலி, சிறுசேரி, மயிலாப்ப+ர் சிட்டிசெண்டர், கானாத்தூர், மாயாஜால், மதுரவாயில், வேலுர் என்று படப்புடிப்பு 90 சதவிகிதம் முடிந்துவிட்டது.

ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடிக்கும் எந்திரன் படத்தில் வைரமுத்து இரண்டு பாடல்களையும் , வாலி இரண்டு பாடல்களையும் , பா.விஜய் ஒரு பாடலையும், வைரமுத்துவின் மகன் ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார்கள். அப்படியானால் நா. முத்துக்குமார் பாடல் எதுவும் எழுதவில்லையா என்றால் , அங்கேதான் ஷங்கர் ஆள் பார்த்து வேலை வாங்குவதில் கில்லாடி என தங்களது குருவின் புகழைப் பாடுகிறார்கள் அவரின் உதவி இயக்குனர்கள்.

கதைப்படி இரண்டு ரஜினிகளில் ஒருவர் சூப்பர் கம்பியூட்டரால் இயங்கும் எந்திரமனிதன். அதுவும் படுபுத்திசாலியான எந்திர மனிதன். அவர்... sorry...அது படத்தில் பல எடாகூடமான விஷயங்களை பண்ணுகிறது. குறிப்பாக ஹீரோ ரஜினிக்கு தெரியாமல் அவரது காதலி ஐஸ்வர்யா ராயுடன் டுயட் பாடிவிட்டு வருகிறது. தன்னுடன் டுயட் ஆடுவது ரோபோவா என்பது ராய்க்கும் தெரியாதாம். டூயட் பாடும்போது , மனித உருவமாக தன்னை மாற்றிக் கொள்ளும் ரோபோவின் புரோகிராமில் ஏற்படும் சின்னச் சின்ன குளறுபடிகளால் எந்திர மனிதன் உருவத்துக்கு திடீர் திடீரென்று மாற , புத்திசாலி ரோபொ இந்த உண்மை ஐஸ்வர்யா ராய்க்கு தெரிந்து விடாமல் இருக்க பண்ணும் அலப்பறைகள் அந்த டூயட்டில் செம ரொமாண்டிக் காமடியாக பதிவாகி இருக்கிறதாம். (இதையே பெரு நாட்டில் படம் பிடித்து வந்த்திருப்பதாகச் சொல்கிறார்கள்.)

இத்தனை புத்திசாலியான ரோபொவை உருவாக்கியவர் ரஜினியின் அப்பா. அவர் ஒரு ரோபாட்டிக் விஞ்ஞானி. இவரே எதிர்பார்காத வண்ணம், தானே சிந்திக்கத் தொடங்கும் ரோபோ, ஒருநாள் தமிழில் புதுக்கவிதை சொல்கிறதாம். செமகாட்டமான பொலிட்டிகல் சட்டயரிக் நிறைந்த இந்தக் கவிதையை கவிஞர் நா. முத்துகுமாரிடம் எழுதி வாங்கி படமாக்கி இருக்கிறாராம் ஷங்கர். கவிதைக்கும் வெயிட்டான பெமண்டும் கொடுத்திருக்கிறார்களாம்.

ஆக ரோபொ ரஜினி அரசியல் கவிதை சொல்லும் அழகை எந்திரனில் கட்டாயம் எதிர்பார்க்கலாம். எந்திரனில் பெரும்பாலன காட்சிகளுக்கு கார்க்கி வைரமுத்து வசனம் எழுதியிருக்கிறார்.

எந்திரன் ரோபோவை எரித்து செயலிழக்கச் செய்யும் உச்சக்கட்ட காட்சியை வேலூர் விஜடி கல்லூரியின் ஆராய்ச்சி க்கூடத்தில் விரைவில் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறது எந்திரன் படக்குழு. 2010 ஏப்ரலில் திரைக்கு வரவிருக்கிறாம் எந்திரன்.

ஹய்யா
! நாங்களும் எந்திரன் நியூஸ் சுட்டு கொடுத்துட்டோம்ல!


2009-12-20

வேட்டைக்காரன்- ஒரு திரை அனுபவம்வேட்டைக்காரன் வழமைபோல் ஐரோப்பா முழுதும் வரும் என்பது உறுதி. ஐரோப்பா முழுதும் திரையிடும் உரிமையாளர் ,அவரும் ஒரு ஈழத்தமிழர், உறுதி பட கூறிய பின்னர், நாங்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்.. என்ற ஒரு முடிவுடன்.. இன்று ஞாயிறு எங்கள் வீட்டுக்கு அருகாமையில் தான் ஈரோஸ் சினிமா திரையரங்கு ...அங்கேதான் தமிழ் திரைப்படங்கள் திரையிடுவது வழக்கம்.கொட்டும் snow இலும் மிதி வண்டியில் ஒரு மிதி மிதித்து கொண்டு போனால்.. ஏற்கனவே நானூறு சனம் , அதுவும் ஈழத்தமிழர் , நெதர்லாந்து வாழ்தமிழர்கள் , கூடி நிற்கின்றனர்.. அவர்கள் இப்படி ஒரு புறக்கணிப்பு பற்றி எதுவும் கதை இல்லை .
கிறிஸ்மஸ் விடுமுறை , எல்லாரும் குடும்பமாக வந்து இருந்தனர். நாங்களும் வந்த ஓரிரு கொஞ்சம் வெளிப்பான சகோதரிகளை ஒரு லுக்கு அடித்து கொண்டு போய் வழமை போல் பால்கனி இல் அமர்ந்தோம்.கடந்த முறை வன்னியில் கடும் யுத்தம் நடை பெற்ற போது தான் வில்லு வந்தது , அப்போது படம் ஓட்ட வில்லை ,மக்கள் இறக்கிறார்கள் , நாங்கள் படம்பார்க்க கூடாது என்ற ஒரு நல்ல முடிவு . அதனால் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை எப்படியாவது ஒட்டி வெற்றியடைய வேண்டும் என்று ஒரு முடிவில் இருந்ததை அறிந்துமிருந்தேன்.

படம் சொன்ன படி நேரத்துக்கு தொடங்கியது. விஜய் ரசிகர்களின் அட்டகாச விசில் , கை தட்டி , கூ அடித்து ஆரவாரம் ஒரு புறம் , மறு புறம் இடம் இன்றி நிலத்தில் இருந்த சனத்தின் ஆரவாரம். நாங்கள் முதலே reserve செய்த படியால் தப்பி விட்டோம். நாங்கள் reserve செய்யும்போது இப்படி புறக்கணிப்பு கதை தெரியாது. இருந்தாலும் படம் பார்க்க முன் தெரிந்தது உண்மை. நான் பார்க்க முடிவெடுத்த காரணங்கள் பல , ஏற்கனவே சொல்லி இருந்தேன். விசேடமாக நான் கொழும்பில் நிண்ட போது , 75o ரூபாய்க்கு வேட்டைக்காரன் டிக்கெட்டை வாங்கிய சனம் பலர். புறக்கணிப்பு என்றால் எல்லாரும் தான். இது என்ன .கொழும்பில் ஒரு கதை வெளிநாட்டில் ஒரு கதை. இதை விட இந்த படத்தை அதிக விலை குடுத்து வாங்கியதால் இந்த விலை டிக்கட்டு என்று ஊடக துறை நண்பர் கூறியதும் ஞாபகம் இருக்கு. ஏன் கொழும்பில் புறக்கணிக்காமல் வெளிநாட்டில் புறக்கணிக்கனும் ?? நியாயம் எல்லா இடமும் ஒன்று தான் ??
சரி அதை விடுவம்.வேட்டைக்காரன் எழுத்து வரும்போது எங்கட ரசிகர்கள் அடிச்ச விசில் அரங்கமே அதிர்ந்தது.. என்ன இருந்தாலும் விஜயின் அறிமுகம் சரியே இல்லை .. எதிர்கால சூப்பர் ஸ்டார் என்றால் ஒரு அதிரடியா வரணும் , சும்மா வந்து ஒரு பொலிசு கூட தமாஷ் பண்ணும் காட்சியை காட்டிலும் கொஞ்சம் வித்தியாசமாய் செய்து இருக்கலாம்.கொமெடி என்ன வென்றால் , விஜய் கையால் ஒரு koncrete தூணை அடித்து அதனுள் இருக்கும் கம்பிகள் ( நாலு )அடிச்ச அடியில் வளைந்த கட்சிக்கு நான் எழும்பி விசில் அடிச்சது விஜய் ரசிகர்களை கடுப்பு ஏத்தியதும் மறக்க முடியாத ஒன்று. என்னை நோக்கி ஏதோ கெட்ட வசனத்தில் பேசியது கேட்டது.. நான் விஜய் எவ்வளவு effort எடுத்து அதை செய்ததுக்கு தான் விசில் அடிச்சேன்..

எங்கையோ முந்தி வாசிச்ச கொமெடி :
பத்திரிக்கை நிருபர் : வேட்டைக்காரன் படத்தில யாரு காமெடி பண்ணுறாரு சார்??? மாறன்:நடிக்கிற விஜய் யே காமெடி தானே அப்புறம் என்னத்துக்கு புதுசா ஒரு கேரக்டர்??
உண்மைதான் ( நான் சொல்லுறது விஜயை அல்ல ) , விஜய் தான் main ரோல் காமெடியை செய்தாலும், சத்தியன் காமெடியில் சறுக்கியே இருக்கார் .. சில இடங்களில் காமெடி தானா என்று யோசிக்க வைப்பதும் .. சில இடங்களில் வெறுப்பு தருவதுமாக இருக்கின்றது..

பாடல்கள் , அவற்றின் காட்சியமைப்பு, எல்லாமே நன்று.. வழமை போல் ஆடும் விஜயின் எந்த steps இம் இல்லாமல் கொஞ்சம் புதுசா முயற்சி செய்தது வரவேற்க தக்கது.. குட்டி விஜயின் ஆட்டம் கூட பரவாய் இல்லை ..(நான் படம் எடுத்த வேகத்திலும் அனுக்ஷா ஆடின வேகம் கூட :) இருந்தாலும் கொஞ்சம் கவர்ச்சி தான் .. படத்தில் பாடல்களில் மட்டும் எடுப்பு இல்லாட்டியும் மனதை திருப்தி படுத்தும் வகையில் கவர்ச்சி இருக்கு . எதிர்காலத்தில் இதை மீள் பரிசீலனை செய்தால் நன்று ..பிளஸ்+2 வை நாலு ?? atempt செய்து பாஸ் பண்ணி விஜயின் ரோல் மாடல் என்று நினைக்கின்ற தேவராஜன் ஐ பி எஸ். படித்த கல்லூரிக்கு சீட்டு வாங்கி சென்னை வருகின்றார். வரும் போது தான் சுசி என்ற ( சுசீலா ) நாயகியை ரயிலில் சந்தித்து கற்பனையில் மிதக்கின்றார்.


கற்பனையில் போகும்காட்சி .. :(

சுசியின் பாட்டி கதைத்தாரா அல்லது எதாவது உளறினாரா என்று சரியான சந்தேகம்.. வேகமான பேச்சும் குடுகுடு நடையும் .. எங்கட காதை, கண்ணை ஏதோ செய்ய வைத்ததை உணர்ந்தேன்.

செல்லானு ஒரு ரௌடி சென்னையை கைக்குள் வச்சிருக்கான் அவன் ஒரு பொண்ணை ஆசைப்பட்டால் அவளுடைய குடும்பத்திற்கு டார்ச்சர் கொடுத்து பொண்ணை அடைந்துவிடுவான். அப்படி ஒரு செல்லானுவை விஜயிக்கு தெரியவருவது வகுப்பு தோழியையும் (உமா) செல்லான்னு வர சொன்னது தான்.
செல்லானு உமாவுக்கு காசு செருகிய காட்சி .. கொஞ்சம் கிளு கிளுப்பு தான்..

கொதித்து எழுந்த விஜய் ஒரு அண்ணனாக தன்னை ஏற்று கொள்ளுமாறு சொல்லி உமாவை கையும் மெய்யுமாக செல்லானு இடத்துக்கு அழைத்து சென்று .. என்ன தான் செய்வார் ??

அப்பாடி போட்டு தாக்கோ தாக்கி .... சபா .............!! அந்த சண்டைக்காட்சிகள் பார்த்தது எங்கட காதுகள் இப்பவும் அடைப்பு தான் .. பல்கனியில் இருந்ததோ தெரிய வில்லை ஏதோ எனக்கு அடி விழுற மாதிரி பீலிங்க்ஸ் தான் இருந்திச்சு..

அடிச்ச அடியில் செல்லானு ஒய்ந்து போட்டார் ( அப்புறம் விஜையை பொலிசு காரனாய் வரும் சாயாஜி ஷிண்டே அடித்து நொறுக்கி encounter இல் போட்டு தள்ள தயார் ( சிவாஜியில் ரஜனி எப்படி தப்பி போனதோ அதே மாதிரி தான் .. ஆனால் இங்கே போலீசை தாக்கி போட்டு காட்டுக்குள் பாய்ந்து ஓடினது தான் .. அப்புறம் ஒரு நீர் வீழ்ச்சி .. அதுக்குள் பாயும் விஜய் .. அப்புறம் நான் நினைத்தேன் படம் முடிந்து போச்சு என்று .. இனி தான் வேட்டை ஆரம்பம் என்று வருது ..: யம்மாடி இப்பதான் இடைவேளை .... லொள்.வேதநாயகம் அன்கோவால் .. அதுதான் செல்லானுவின் அப்பா( .. பணத்தால் அமைச்சரா கூட வர இருந்தவர் .. :( இலங்கை அரசியல் வாதி ஒருத்தர் மாதிரி ..) ) அவரது அட்ட காசங்களை ஒவ்வொன்றாக தகர்த்து எறிகின்றார் .. ஒரு பாஷா ரஜனி என்று சொல்லுங்களேன்.. அதே setup .. சங்கர் படம் மாதிரி எல்லாத்தையும் அழித்தும் , அடித்தும் நொறுக்குகிறார்.
செல்லானுவை போட்டு தள்ள ஆற்றுக்குள் , செல்லானுவுடன் டபுள் கப் பிக்கப்புடன் .பாய்ந்து விடும் காட்சி .. கொஞ்சம் ஓவர் பில்ட் up. விஜய் மட்டும் நீந்தி வெளியே வர முன் ,, Auto lock போட்டுட்டு வாறது, விஜய் இது தங்களுக்கே கூடவா தெரியலையா ???சாயாஜி ஷிண்டே கொஞ்சம் வடிவாக பொலிசு காரன் மாதிரி நடித்து கலாய்த்து இருக்கலாம். விஜையை மடக்கும் சந்தர்ப்பங்களில் விஜயிடம் ஏதோ ஒரு காரணத்தால் மாட்டி , விஜயை மடக்க முடியாமல் தவிர்க்கும் காட்சிகள் ..கொஞ்சம் மாற்றி அமைத்து இருக்கலாம் ..பொலிசு ஒரு காமெடியான ரோல் போலே இருக்கு .. இது எனது கருத்து.

பத்திரிக்கை நிருபர் மனோபாலாவும் ஓரிரு காட்சிகளில் வந்து கொமேடியாக செய்தி சேகரிக்கும் காட்சிகளை செய்ய முயற்சித்தும் எதுவும் காமெடியாக ரசிக்க கூடிய மாதிரி தோன்ற வில்லை..

ரவி., அதாவது பொலிசு ரவி என்ற ரோலில் வரும் விஜய் மாடி கட்டடத்துக்குள் சுசியை கடத்தி கொண்டே வைச்சு இருக்கும் கூட்டத்தை அடித்து நொறுக்கும் காட்சிகள் சில கொஞ்சம் ஓவர் ..

அனுஷ்காவின் இடுப்படி பிடித்து விஜய் ஆடும்போது விசில்களுக்கு குறைவில்லை.. :)

இறுதியாக வேதநாயகம், விஜயின் நண்பனை கொலை செய்த பின் துடித்து எழும் விஜய் .. ஐ பி எஸ் தேவராஜின் ஐடியா மூலம் .. வேதநாயகம் அரசியல் அமைச்சராக வர முன் போட்டு தள்ள போய் விஜய் ஆட்டோவில் வேதநாயகம் வீட்டுக்கு முன் இறங்கும் போது கிட்ட தட்ட எனக்கே சிரிப்பு வந்திட்டு.. முப்பது வில்லன்கள் வேட்டி உடுத்து பட்டை தீட்டி ரெடியா அடி வாங்க நிக்குறதை பார்த்து , தொடர் விசில் அடிச்சு ஒரு கல கலப்பை ஏற்படுத்தி விட்டேன் .. அரங்கம் முழுதும்.. அடிச்ச விசிலுக்கு ஒரு கை தட்டல் .. எனக்கு..!!!எல்லாரையும் அடித்து நொறுக்கி இனி வேதநாயகம் மட்டும் எஞ்சிய நிலையில் பொலிசு விஜையை கைது செய்ய , முன்னுக்கு இருந்த நண்பி சொன்னது கூட ஒரு பெரிய காமெடியா இருந்து எல்லாரும் சிரிச்சது மறக்க முடியாது: அவ சொன்னது " இப்பவே மூன்று மணி நேரம் பொறுமையா பார்த்து போட்டம் .. இன்னுமாவா.. " ஹா ஹா ..

இறுதியில் வேதநாயகத்தை , பாதிக்கப்பட்ட ஐ பி எஸ் தேவராஜனே போட்டு தள்ளின விதம் .. கொஞ்சம் த்ரில் தான் ..


என்னை பொறுத்த மட்டில் இது வெற்றி படம் என்பது உறுதியாக சொல்ல முடியாது .. ரஜனியின் பாஷா+ சிவாஜி + சங்கர் படம் + பகவதி + வில்லு + திருப்பாச்சி எல்லாமே இருக்கு ..


வேட்டைக்காரன் எங்கள் காசை வேட்டையாடிவிட்டான்.. !!!


2009-12-19

பஸ் நம்பர் 155 இம் நீதிமன்ற வழக்கும்கொழும்பில் ஓடும் 155 பஸ் வண்டியால் பாதிக்கப்பட்டோர் பலர் .. அதில் பயணம் செய்த ஒருவன் செய்த காரியத்தால், பொலிசு விசாரணை வழக்காக வந்து நீதிமன்றில் அந்த இளைஞன் நிறுத்தப்படுகிறான்.
பராசக்தி படத்தில் சிவாஜி கதைத்த போன்றதொரு கற்பனை ..
( ஒரு புது முயற்சி .. பிழை என்றால் திருத்தி விடவும் )

நீதிபதி :- உன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறாய் :

குற்றவாளி :-
இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது. புதுமையான பல வழக்குகளை கண்டிருக்கிறது.
ஆனால் இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானது அல்ல.
வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவனல்ல.
வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாக பேருந்தில் பயணிக்கும் ஜீவன்களில் நானும் ஒருவன்...
ஒட்டுனரை கியர் தடியால் தாக்கினேன்..
கண்டக்டரையும் கண்மூடித்தனமாக தாக்கினேன்..
குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றேன் இப்படியெல்லாம்..
நீங்கள் எதிபார்ப்பீர்கள் நான் இவற்றையெல்லாம் மறுக்கப் போகின்றேன் என்று....
இல்லை நிச்சயமாக இல்லை...
தாக்கினேன் ஏன்..
அவன் வண்டியை ஓட்டியதற்காகவா இல்லை..உருட்டியதற்காக............
நானே பாதிக்கப்பட்டேன்.. நேரடியாக பாதிக்கப்பட்டேன்....

என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும்.
கேளுங்கள் சொல்கிறேன் :


யாழ்ப்பாணத்திலே பிறந்தேன் நான்.
பிறக்க ஒரு தேசம் ,
பிழைக்க ஒரு தேசம் .
இது தமிழனின் விதி.

ஆவணி திங்கள்,
வாரத்தின் முதல் நாள்
அதுவும் திங்கள்,
காலை எட்டு மணி
அம்மா செய்த புட்டை கூட
அரைகுறையாக விழுங்கி கொண்டு
வெளுத்து வைச்ச A/L shirt இக்கு
கறுப்பாக ஒரு ஜீன்சு, ஒரு tie
கையில் எனது persoanal file
எடுத்த வீச்சுக்கு அப்பாவுக்கு கூட
போட்டு வாறேன் என்று சொல்லாமல்
வெள்ளவத்தை bus தரிப்புக்கு
ஓட்டோடி வந்தேன் interview போக,
நான் போக வேண்டிய ஊர்களை சொன்னபடி
வசந்தமாய் வந்தது பஸ் வண்டி 155,
ஓடோடி போய் ஏறினேன்
முன் சீட்டிலும் அமர்ந்தேன் ..
வெள்ளவத்தை கடக்க அரை மணி நேரம் ,
பம்பலபிட்டி கடக்க அரை மணி நேரம்...
அப்போ மருதானை தான் எப்போவரும் ?
நான் interview போவேனா என்று ஏக்கம்,
பக்கத்து seat Aunty யிடம் இடைக்கிடை கேட்டேன்
வரும் வரும் விரைவில் வரும் என்ற பதில் தந்தாள்!


Interview கேள்விகளை வாசித்தபடி
அவன் போட்ட தமிழ் டப்பான் கூத்தை கேட்டபடி
ஒன்று அரை மணி நேரம் கழித்து அடைந்தேன் நகர மண்டபத்தை,
யாருமே இல்லை அழைத்து செல்ல ..
இருந்தாலும் conductor இன் அறை கூவல் தொடர்கிறது ..
அங்கே நின்ற மாட்டை பார்த்தா??
மாடு கூட அவனது அறை கூவலை கேட்பதகா தெரிய வில்லை

அறைகூவல் அவன் தொழில்
ஒவ்வொரு இடமும் பல முறை கூவி செல்வது அவன் கடமை
அந்த கூவலுக்கு தான் சம்பளம் அவனுக்கு
அதுக்காக யாருமே இல்லாத இடத்தில் கூவுவதா ??
இப்படியே போனால் எப்போதான் நான் மருதானை போவது
இது என்னோடு நிண்டு போகட்டும் என்று முடிவெடுத்தேன்!!

உனக்கேன் இவ்வளவு அக்கறை,
உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை,
என்று கேட்பீர்கள்.
நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன்.
interview நேரம் முடிஞ்சு போச்சு ..!!
வேலையும் போச்சு!!!
வாழ விட்டார்களா இந்த மன்னனை,
இது சுயநலம் என்பீர்கள்
இல்லவே இல்லை என் சுயநலம் பொதுநலம் கலந்திருக்கிறது.
ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.

எழுந்தேன் ஆசனத்தை விட்டு,
புடுங்கி எடுத்தேன் கியர் தடியை
அடித்தேன் ட்ரிவரை
அவன் அப்பி யனவா சொல்லும் வரை அடித்தேன்
ஓடி வந்த கண்டக்டர் ஐ மீது பாய்ந்து பாய்ந்து அடித்தேன் ..
அவன் மணி அடிக்கும் மட்டும்!!

இது செய்ய தூண்டியது யார் குற்றம் .. ??
விதியின் குற்றமா?
அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் 155 பஸ் ஓனர்களின் குற்றமா?
டிக்கெட் போடாமல் பணம் பறிக்கும் இந்த பஸ் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்?
மகிந்தவின் குற்றமா?
அல்லது
பசிலின் குற்றமா ??
அல்லது
பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் அரசாங்கத்தின் குற்றமா?

நான் மட்டும் நினைத்து இருந்தால்
Toyota Corrola வாங்கி ஓடி இருப்பேன்,
இல்லவே இல்லை நானுமொரு பொது மகன்
அதனால் தான் பொது மக்கள் போல்
பயணம் செய்ய முயற்சித்தேன்!!

விட்டார்களா இல்லை ..!!!
பாருங்கள் என் நிலபரத்தை,
இன்று மாவட்ட நீதிமன்றில்
குற்றவாளியாக நிக்குறேன் ..

சொல்லுங்கள் இப்போது உங்கள் தீர்ப்பை
நான் செய்தது தவறா சரியா
என் வாதத்தை ஆராயுங்கள்
வாழ விடுங்கள் என்னை
என்னை மட்டுமா
எத்தனை பேர்
155 bus ஆல் பாதிக்கப்பட்டார்கள்
எல்லாருக்கும் ஒரு தீர்ப்பு தாருங்கள்

நீதிபதி தீர்ப்பில்: 155 பஸ் ஓனர்களின் நடவடிக்கை தான் இந்த மாதிரி இளைஞர்களை உருவாக்கியது .. இதனால் இந்த பஸ் எங்கேயாவது தரிப்பில் இரண்டு நிமிடத்துக்கு மேல் நின்றால் உடனடியாக அயலில் உள்ள பொலிசு இக்கு அறியப்படுத்தவும் என்று சொல்வதோடு .. இந்த இளைஞனுக்கு இந்த சம்பவத்தால் எந்த வேலையை இழந்தானோ அதே இடத்தில மீண்டும் interview வைத்து தகுதியானவன் ஆயின் வேலைக்கு எடுக்க உத்தரவிடுகிறேன் ""


காலப்போக்கில் (2012): 155 நம்பர் பஸ் ஆனது 138 நம்பர் பஸ்சிலும் வேகமாக ஓடியது ...

2009-12-18

வேட்டைக்காரன் பார்ப்பதா ??விடுவதா ??வேட்டைக்காரன் வந்துட்டான் .. யாரும் பார்க்க கூடாது என்று எழுதினால் ..அவர்களை நான் சந்தித்து அரசியல் பேசலாம் .. என்று இருக்கேன் ..

என்னமோ காரணங்கள் எல்லாம் சொல்லி புறக்கணிக்க சொல்கிறார்கள். உண்மையை சொல்ல போனால் இந்த காரணங்கள் எதுவுமே அடிப்படை அற்றவை . இதுக்கு முதலில் செய்ய வேண்டிய அல்லது செய்ய தவறிய பலதை செய்ய முயற்சிப்போம்,

நான் கண்ட உண்மை:
  1. புலம்பெயர் தமிழர்களிடம் போராட்டத்திற்கு என சேகரிக்கப்பட்ட நிதியில் சொகுசு வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர்களை ஒரு கை பார்ப்போம் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா
  2. இலங்கை ஏர்லைன்ஸ் ஐ புறக்கணியுங்க என்று சொல்லினம் : அங்க கட்டு நாயக்கவில் தமிழர்தான் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் ஐயே ஓட்டுறாங்கள்.. எல்லாம் நிரம்பி வழியுது எங்கட சனத்தால... இதை விட கொழும்பில் இருக்கின்ற தமிழ் விமான agents எல்லாரும் தங்கள் contracts ஐ நிறுத்தலாம் தானே . இதுவே முற்று புள்ளி வைக்கும் தானே .. முடியாது .. பிறகு என்ன . ஒரு முறை ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் குடுத்த offer கூட நான் புறக்கணித்து இலங்கை சென்று வந்தேன் .. அதே பிளேன் ..இலங்கையில் இருந்து ஜெர்மனி செல்லும்போது ..முழுக்க தமிழ் சனம் தான் அதுவும் ஜேர்மன் வாழ் தமிழ் சனம் தான் போனதை கண்டேன் ..என்ன நியாயம்.
  3. புலம்பெயர் நாடுகளில் இலங்கை பொருட்களை புறக்கணியுங்கள் என்று அத்தனை பெரிய பிரச்சாரம் செய்தீர்கள் .. உங்கள் பலர் புலம்பெயர் நாடுகளில் இலங்கை பொருட்களை எடுத்து விற்பவனும் ஈழத்தமிழர் தான் என்பதை அறிய மாட்டீர்கள்.. :ஆனால் எல்லா பொருட்களும் ஈழ தமிழனின் கடையில இன்னும் விற்கப்படுகிறது.
  4. கலைஞர் துரோகி என்றீர்கள் : இன்றும் புலம்பெயர் நாடுகளில் கலைஞர் டிவி யை ஈழத்தமிழன் தான் sattelite மூலம் வழங்கி காசு உழைக்கின்றான் . இதுக்கு என்ன பதில் சொல்வீர்கள்??
  5. என்ன மோ தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ்மக்களுக்கு நல்ல தீர்வு தரும் என்று சொன்னிர்கள் ..கடைசியில் குறுக்கு அரசியிலில் எல்லாரும் தமிழனையே பங்கு போட்டு கொள்கிறார்கள் ..
  6. இறுதியாக தமிழ் படங்களை புலம்பெயர் நாடுகளில் திரையிடுவோர் ஈழத்தமிழர் தான் . அவன் தன் உழைப்பு கெட்டு போகுமென்று சொல்லி நிறுத்த மாட்டான் .. அதால படமும் ஓடும்.. நாங்களும் பார்ப்போம்.
இப்படி எத்தனையோ இருக்கு சொல்ல..

ஒரு வகையில் போராட்டத்தின் தோல்வியே இப்படி யான தேவையற்ற விதண்டாவாதங்கள் தான் காரணம் என்பதை நீங்கள் அறிவீர்களா????..

வன்னியில் சனம் கஷ்டப்படுகின்றது, லண்டனில் ஊர்வலம் , உன்ன விரதம் , அதே இடத்தில சற்று தள்ளி .. மது அருந்திய யாழ் இளைஞர்களின் அட்டகாசம் ??யார்தான் நிறுத்தினார்கள் ??? கண்டுக்க தேவை இல்லை என்று சொல்ல கூடாது ? இவை தான் எங்களையே ..எங்கள் போராட்டத்தையே கொச்சை படுத்தின .. எத்தனையோ சொல்லலாம்..

சும்மா எடுத்த வீச்சுக்கு ..புறக்கணிப்போம் என்றால் ... என்ன இது .. முதலில் நாங்கள் ஒவ்வொருவரும் செய்வது சரியாய் இருக்கா என்று யோசியுங்கள்..
அதை எல்லாம் களையுங்கள்.. முதலில்.. பிறகு .. இங்கே வருவம்..

எல்லாத்தையும் நிற்பாட்ட முடியுமா .??? முடியுமானால் நிற்பாட்டுங்கள் .. நான் வேட்டைக்காரன் பார்க்கிறதை நிறுத்துரன்..

வேட்டைக்காரன் பார்த்தால் துரோகி ,, பார்க்காதவன் தேசபற்றாளி என்பது என்ன விதத்தில் நியாயம்??? கொஞ்சம் யோசியுங்கள் ..

மொக்கு சினா என்பதிலும் ,, மொக்கு தமிழன் என்பதையே சொல்லலாம் .,.இந்த கோமாளிகளால் :)( கோமாளிகள் என்பது .. சும்மா தேவையில்லாத கதையை பரப்பி தேவையற்ற விதண்டாவாதங்களை உருவாக்குவோரை சொன்னேன்)

திருட்டு கொப்பி:-குறிப்பு : நான் விஜய் ரசிகனுமில்லை ..ஆனால் நியத்தை சொன்னேன் .. :)


2009-12-12

ஆன்லைன் இல் தரிசனமாம்...--திவ்விய தரிசனம்

நாட்டில இப்பெல்லாம காமடி பண்ணிற ஆக்களின்ட தொகை கூடிக்கொண்டே போகுது. எதைப்பார்த்து ரசிக்கிறது எண்ட குழப்பத்தில நம்மட சனமும் குழம்பிப்போயிருக்குது. இந்த காமடி வழங்கல்களில எதாவது தடங்கல்கள் அல்லது இடைவெளிகள் தோன்றுமிடத்து மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழ்வின் இணையத்தளம் "முருகப்பெருமான் பொற்கிழி வழங்கினார்." , "வானில் தோன்றிய அம்மனின் அரிய புகைப்படம்" , "சிறுமியாக வந்த அம்மன் சிலையாக மாறிய அதிசயம்" போன்ற செய்திகளை வழங்கி மக்களின் ரசிப்புத்தன்மையை சோதித்து வருகிறது. ஒரேவிதமான காமடிகள் சலிப்புத்தட்டும். எனவே கொஞ்சம் வித்தியாசமா எதாவது பண்ணினா வசூல் கூடும் எண்ட வியாபாரத்தந்திரம் இப்ப சூடு பிடிச்சிருக்கு.

எதை வேணுமெண்டாலும் வீட்டிலிருந்தபடியே ஒன்லைன்ல வாங்கலாம் என்றளவுக்கு இப்ப வசதிகள் கூடிப்போய்ச்சு. முந்தி வீடுவீடா கொண்டுபொய் கூவிவித்தவ கூட website open பண்ணித்தான் விக்கணும் என்ற அளவுக்கு நிலமை தலைகீழ். இதில பண்டங்கள் சேவைகள் என்ற பாகுபாடே கிடையாது. உங்களிட்ட சரக்கும் வாங்கிறதக்கு ஆக்களும் இருந்தா நீங்கள் விலைப்படுத்திடலாம்.

எல்லாத்துக்கும் விளம்பரம் முக்கியம். இப்படி online ல செய்யப்படுற செய்யப்படுற விளம்பரங்களில கணிசமான இடத்தைப்பிடிக்கிறது இந்த பாலியல் தொழில் செய்யிறாக்களின்ர விளம்பரங்கள்தான் எண்டு ஒரு கருத்துகணிப்பு சொல்லுது. இதிலயும் குறிப்பாக இந்த live chat,or video chat எனப்படுகின்ற internet இனூடன சரசத்துக்கு அழைக்கும் வலைத்தளங்களின் விளம்பரங்கள் ஏராளம்
எனவே இதன் பயனார்களுக்கும், சேவை வழங்குநர்களுக்கும் video chat மிகவும் இன்றியமையாத ஓர் அம்சமாகும் என நேற்றுவரை நானும் நினைத்திருந்தேன்.

அம்மா பகவானின் skype ஊடான திவ்விய தரிசனத்துக்கான அழைப்பு விடுக்கும் விளம்பரத்தை பார்த்தபின்பே புரிந்துகொண்டென் அடடா எல்லாவித தரிசனங்களுக்கும் video chat உதவும் என்று.


சிந்தித்துப்பார்த்தபோது புலப்பட்டது ஏன் இந்த ஊடகம் தெரிவுசெய்யப்பட்டதென்பதும். அதில் தவறேதுமில்லை என்பதும். "திவ்விய தரிசனம்", "முற்றுந்திறத்தல்" இறுதியில் "முத்திநிலை அடைதல்" போன்ற ஒற்றுமைகள் காணப்பட்டாலும், சில கேள்விகள் எழவே செய்கின்றன. வழமையான live chat க்கு அழைக்கும் விளம்பரங்களில் பயனாளர்கள் முத்திநிலையை அடையும் வரைக்குமான முற்றுந்திறத்தலுக்கான கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த விளம்பரத்தில் அத்தகைய கட்டண விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவேதான் இது மாதாமாதம் சந்தா கட்டுகின்ற members க்கு மட்டுமான அழைப்பாயிருக்குமோ என்று எண்ணத்தோணுகிறது.

ஒரே விதமான வியாபாரத்தை செய்தவர்கள் மட்டுமே போட்டி போட்ட காலம் போய், இப்போ ஒரே ஊடகத்துக்குள்ளால வியாபாரம் செய்யற ஆக்களெல்லாம் போட்டி போடத் தொடங்கீட்டினம். இல்லாட்டி live chat பண்ணறவை "products"விக்கினமாம் எண்டு அம்மா பகவான் கூட்டணியும் ஒன்லைன்ல AmmaBhagavan Oilsஐ விலைப்படுத்தியிருக்கினம் ($68USD + shipping charge $8.95).


இந்த வியாபாரச்சந்தடிகள் ஓயிறமாதிரி தெரியல. இதெல்லாத்தையும் நம்பி பின்னால இழுபடுற கூட்டமாவது தெளியிறமாதிரி தெரியல. வீட்டில வைச்சிருக்கிற பாதத்தை தொட்டா கரண்டடிக்குது. புல்லரிக்குது என்டெல்லாம் பீத்திக்கொண்டு திரியிற கூட்டத்தில ஒருத்தனாவது சிந்திக்கத்தலைப்பட்டால் வியாபாரக்கூட்டம் ஆட்டங்கண்டுவிடும்.

வீட்டில இருக்கிற பாத்தில தொட்டால் கரண்ட் அடிக்கப்பண்ணிற அம்மா பகவான், தரிசனம் கொடுக்கிறதுக்கு மட்டும் எதுக்கு எதுக்கு skype ஐ பாவிக்கணும்?

விஞ்ஞானத்துக்கும் மெஞ்ஞானத்துக்குமிடையில் ஆரோக்கியமாக உறவு ஆரம்பகாலத்தில் இருந்ததில்லை. மனிதன் தனது சிந்திக்கும் திறனுக்கு அப்பாற்பட்ட விசயங்களை தொடர்ந்து ஆராய்ந்து புத்திக்கு வேலை கொடுகாமல், மிக இலகுவாக கடவுள் செயல் என்ற சுலபமான முடிவுக்கு வர முடிந்ததால் மெஞ்ஞானவாதிகளின் வியாபாரம் ஓகோ என நடந்துகொண்டிருந்த காலத்தில், அத்தகைய மாயைத் திரைகளையெல்லாம் கிழித்தெறிந்த விஞ்ஞானத்தின் மீது ஆன்மீகவாதிகள் கொண்டிருந்த கோபம் நியாயமானதே.

அனால் இன்று அதே ஆன்மீகவாதிகள் அல்லது ஆன்மீகவாதிகள் என்று தம்மை சொல்லிக்கொள்வோர் தங்களது பரப்புரைகளுக்கும் வியாபாரங்களுக்கும் விஞ்ஞானத்தையும் அதன் கண்டு பிடிப்புக்களையும் பயன்படுத்துவது விந்தைக்குரியதே..!

தன்னைச் சார்ந்த; தன்னை பின்பற்றுகின்ற; தன்னை கடவுள் அம்சமாக நினைக்கிற ஒரு கூட்டத்துக்கு தரிசனம் வழங்குவதற்கு கட்டணம் வசூலிக்கிற முறைமையிலுள்ள கேவலத்தன்மையை சிந்தித்துப்பார்ப்பவர்கள் அத்தகைய சித்துவிளையாட்டுகளக்கு துணைபோக மாட்டார்கள்.

மதநம்பிக்கை என்கிற விடயம் புரையோடிப்பொயிருக்கிற வரைக்கும் இந்த அடிமைத்தனம் இருக்கவே செய்யும். விழிப்புணர்வை எற்படுத்தலாம் எண்டொரு நப்பாசை எம்போன்றோருக்கு. இதை விவாதிக்கப்போய் வாய்த்தர்க்கங்கள் மூழுவதே மிச்சம்.

அண்மையில கூட இல் ஓர் அன்பர் என்னை எச்சரித்திருந்தார். "மற்றவர்களின் நம்பிக்கைகளின் மேல் கருத்துக்களை சொல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்." என்று.
உண்மைதான். அனால் எந்த நம்பிக்கை? எவர் எவர்மீது கொண்ட நம்பிக்கை? போலி வேடதாரிகள் மக்களின் இறைநம்பிக்கையின் நிலைப்பு மீது கொண்ட நம்பிக்கையா? அல்லது சிந்திக்கத் திராணியற்ற மக்கள் கூட்டம் தங்கள் பகவான்களின் தெய்வாம்சத்தின் மீது கொண்ட நம்பிக்கையா? இந்த இரண்டில் எதையுமே குழப்பும் நோக்கமோ தேவையோ எமக்கில்லை! உங்கள் மனங்களில் கடவுளராக உள்வாங்கப்பட்டவர்கள், எங்கள் கண்களுக்கு சமூகவிரோதிகளாக தென்படுகிறார்கள். அவர்களை நாங்கள் புறக்கணிக்கிறோம் அவ்வளவுதான்.

அவர்ளை தெய்வாம்சம் கொண்டவர்கள் என்றும், இறை தூதர்கள் என்றும் கூறி அவர்களை பின்பற்ற உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ! அதே போல் அவர்களை போலி என்றும் சழுகவிரோதிகள் என்றும் கூறி, அவர்களை விமர்சிக்க எமக்கும் அதேயளவு உரிமை இருக்கிறது. இவை எவ்வகையிலும் உங்கள் பகவான்களுக்கோ, அல்லது அவர்களின் அடிவருடிகளுக்கோ பாதிப்பை ஏற்படுத்தப்கோவதில்லை. அவர்களுக்குரிய வசூலில் குறையேதும் இருக்காது. வழமைபோல் வந்துகொண்டேயிருக்கும்.

இந்த நீரோட்டத்தில் கலக்காமல் நாங்கள் முழுதாக கரையேறிவிட்டோம் எனும்போது, இன்னும் நடுஆற்றில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களைத்தான் கரையேற்ற முற்பட்டுக்கொண்டிருப்பதை விடுத்து மறுகரையில் முதிதாக ஆற்றில் இறக்கிவிடப்படுபவர்களை தடுத்துநிறுத்த முயல வேண்டும் ஏனெனில் இப்பொதும் அதே சமயப்புத்தகமும் அதே புராணங்களும் புதிது புதிதாக அச்சடிக்கப்பட்டு பள்ளிகளில் திணிக்கப்படுகிறதே..!

குளத்தில் குளித்துக்கொண்டிருந்த தங்தையை காணவில்லை என்று தேம்பியழுத ஞானசம்பந்தருக்கு உமையம்மை இடபவாகனத்தில் வந்து பாலூட்டினார் என்று சமய ரீச்சர் வாசிச்சு முடிக்கைக்கிடையிலேயே, ஒரு மாணவன் எழுந்து "ஷெல் அடிச்சு
செத்துப்பொன தாயின் மார்பில பால் குடிக்க தேம்பியழுத நூற்றுக்கணக்கான பச்சிளம் குழந்தைகளுக்கு பால தர உமையம்மை ஏன் ரீச்சர் வரேல்ல?" என்றொரு கேள்வியை கேட்டால் அந்த சமய ரீச்சர் என்ன பதில் சொல்ல முடியும்..! எனவே நீண்டகாலத்தக்கு தாக்குப்பிடிக்கமுடியாத ஓர் மார்க்கத்தில் வியாபாரம் செய்து குளிர்காய நினைக்கும் மதவியாபாரிகளை நாங்கள் விமர்சிப்பதில் தவறேதுமில்லை.

அவர்கள் உனக்கு என்ன தீங்கு செய்தார்கள் எனும் கேள்வி நியாயமானதே. எனக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது ஏற்படலாம் எனும் ஊகத்தினாலோ எதனையும் எதிர்க்க வேண்டும் விமர்சிக்க வேண்டும் என சட்டம் ஏதும் கிடையாது. நான் சார்ந்துள்ள சமூகத்தின் ஓர் அங்கத்தவனாக, எனக்கிருக்கும் சமூகப்பொறுப்பு காரணமாக, சமூகவிரோதிகளை சுட்டிக்காட்டுவதில் தவறொன்றும் இல்லலையே!

சிலமாதங்களுக்கு சுகந்தமாறன் எனக்கொரு சவால் விட்டிருந்தான்.
"தண்னியடிச்சிட்டு வாயால் வாந்தி எடுப்பதே பெரிய துன்பமாக உள்ளது.ஆனால் இவர்கள் எல்லாரும் வாயால் லிங்கம் எடுப்பார்கள் தெரியுமா?.சஞ்சே அவர்களை சும்மா எண்ட நீ...முடிஞ்சா வாயால ஒரு மயிர எடுத்துக்காட்டு பார்ப்பம்? நீயும் தலை மயிர் வளர்த்து,பல நாள் குளிக்காமல்,பல் தீட்டாமல் இருந்தால் சாமியார் களை தானா வந்து சேரும்.நேரடியா தரிசனம் தந்தால் செருப்படி வாங்கும் ஆபத்து உண்டென்பதால்
ஒன்லைன் சாமியாரா மாறி வெப்கமெரா வில தரிசனம் தந்து PAYPAL மூலமா தட்சணைக்காசு பெற்றுக்கொள்ளலாம்.ஏன் ஒருக்கா இத முயலக்கூடாது?."


முயலலாம். அனால் இந்த webcam தரிசனம் எனும் idea ஐ அம்மாபகவான் சுட்டுவிட்டபடியால் நாங்கள் வேற எதாவது advance live streaming technologyஐ பாவிக்கறமாதிரி சிந்திக்கலாம். சிலகோடி ருபாய் பணமும், ஒரு சில ஆயிரம் மக்களும், 5-6 மொழிகளில் பத்திரிகை, ஊடகங்களும் இருக்குமாயின் எனக்கு நானே தெய்வத்தன்மை கற்பித்து அற்புத அதிசயங்கள் செய்ததாகத் கதை கட்டி விட்டுப் பிரச்சாரம் செய்தால் ஒரு ஆண்டுக்குள்ளேயே பல லட்சக் கணக்கில் மக்கள் மண்டியிட்டுப் பின்பற்றும் புதிய மதத்தைக் காணலாம்.

இந்தவழியில் தான் உங்கள் பகவான்களும் உருவானார்கள். புரிந்துகொள்ளுங்கள் அல்லது புரிந்துகொள்ள தலைப்படுங்கள்!
- நன்றி -
தகவல் பரிமாற்றம் - சஞ்சய்

2009-12-05

எனக்கும் பிடிக்கும் - தமன்னாவை
தமிழ் சினிமாவில் தோன்றி மறையும் நடிகைகள் தான் அதிகம் .. நயன்தாரா , அசின் , த்ரிஷா என்று பலர் .. வந்தாலும் .. தமன்னா வின் அறிமுகம் எங்களை போன்ற இளம் வாலிபர்களுக்கு புது விருந்து .

புதிய தமிழ் படங்கள் வரும் போது அப்பப்பவே பார்த்து விடுதல் வழமை.கல்லூரி என்னும் படம் வந்த போது, படத்தின் பெயரை பார்த்தாலே .. என்னமோ சரி இல்லை .. இந்த படம் இப்போ வேணாம் என்று பின் தள்ளி போட்டே விட்டேன். கேடி , வியாபாரி .. நடிகர்கள் பெயரால் பார்க்கவில்லை .. :(

கடந்த ஆண்டு ஒரு முறை ஜெர்மனி நண்பர்களின் வீட்டுக்கு சென்றிந்த போது, அங்கே ஐரோப்பிய சன் டிவியில் தான் உன் பார்வையில் ஓர் ஆயிரம் பாடல் ( நீங்கள் நினைக்கிற பாடல் இல்லை -)அதே விஜயகாந்த் படப்பாடலை


அம்மன் கோவில் கிழக்காலே:- ராதா- விஜயகாந்து


இங்கே
தமன்னா என்னும் குடும்பப்பாங்கான ஒரு அழகி பாடுகிறாள். எனக்கு கடுப்பு ஆனது .. அந்த அழகான காட்சியில் அவள் ஒருத்தி பாடுறாள் ஒரு சாம்பிராணி எழும்பி போகுது.. வந்த கடுப்புக்கு பேசியே இருப்பன் ,.. கிட்ட இருந்து இருந்தால்..கல்லூரி படத்தில் - தமன்னாஅயன் படத்தில் தமன்னா

அப்பவே ஒரு முடிவோட நண்பனிடம் சொன்னேன் மச்சான் இது யாரு : எங்கள் list இல இல்லாத நடிகை ; என்று சொல்ல நண்பனின் தங்கை உடனே , இந்த படம் தன்னிடம் DVD இல இருக்கு copy பண்ணுங்க,, என்றதும் ஒரே சந்தோசம்,, train இல் திரும்பி வரும் போது பார்த்திட்டு வரலாம் தானே. இரவு கடும் மழை, குளிர் வேற , Hamberg மாநிலத்தில் இருந்து எங்கள் வீட்டை நோக்கிய பயணத்தில் பார்க்க தொடங்கியாச்சு. படம் எவ்வளவு சரி இல்லையோ இந்த அழகியை பார்த்து விடல் வேண்டும் என்ற நோக்கில் முழுப்படமும் பார்ப்பதாக முடிவு.

எனக்கு முதலில அந்த பாட்டு கேட்கணும் என்று போட்டு forward பண்ணி பண்ணி கொண்டு வந்தால் இந்த பிடித்த பாட்டு மாட்டிச்சு:நல்ல காட்சியமைப்பு .. இசை என்று பிடிச்சுபோச்சு.. மாறி மாறி இந்த பாட்டையே ஒரு ஐந்து ஆறு தரம் கேட்டு இருப்பன். :)

ஒரு அரை மனதோடு கேட்க வேண்டிய பாட்டையும் கேட்டேன். நல்ல வடிவா இருக்கே என்று ஒரு கலகலப்பு.. எதோ எனக்கு பார்த்த பொண்ணு மாதிரி ..:)இதுக்கு மேலாக வந்த பாட்டு தான் : சரியா தவறா .. என்ன கொடுமை எனக்கு பிடித்த பாட்டு .. எப்புடி நான் miss பண்ணினேன் .. அவ்வளவு வருத்தத்தில் .. படம் பார்க்க வெளிக்கிட்டால் .. எனது laptop battery charge 15%. என்ன கொடுமை ராஜா இது .. என்று எனது ஆசனத்துக்கு எதிரே இருந்த அம்மணியிடம் அனுமதியுடன் இடம் மாறி அமர்ந்து கொண்டு( அவவுக்கு கிட்ட தான் plug இருந்திச்சு ) charge பண்ணின படி படம் பார்த்தேன். என்ன சரவணா இந்த படம் இந்த சோகத்தில் ... மனமே சரி இல்லை ..


இந்த காலத்தில் இப்படி ஒரு படத்தை எடுத்து சோகத்தில் முடிப்பார்கள் என்று யார்தான் எதிர்பார்த்தது. இன்றைய ரசிகர்களுக்கு படம் நல்ல முடிவா இருக்கணும்.. இல்லாட்டி படம் கிட் இல்லை.. இது எப்புடி .. ஒரு நல்ல அழகான , குளிர்மையான நடிகையின் எதிர்காலத்தை வீனாக்கிடுவான்களோ என்று புலம்பல்.. :(ஒரு மாதிரி அதிகாலை வீடு வந்தாச்சு.. உடனே தமன்னா என்று இணையம் முழுக்க தேடு தேடி .. அந்த நடிகை விவரம் , என்ன படம் எல்லாம் நடிச்சது .. என்று எல்லாம் ,, ஒரே தகவல் எடுத்தாச்சு.. இனி என்ன அவ்வளவு படத்தையும் இறக்கி பார்க்கிறது தானே..


பல்கனியில் இரண்டாம் வரிசை ஆசனத்தில் :)

இப்படி எனது மனதுக்குள் புகுந்த பிடித்த நடிகையின் படிக்காதவன் படம் நெதர்லாந்தில் வெளியிடபட்டது. அப்போது நான் எப்புடியும் போய் டிகேட் வாங்கி முன்னுக்கு இருந்து( balcony இல் ) பார்க்கணும் என்று முடிவோட. இருந்தாச்சு. அன்று எதோ விடுமுறை நாள். அதால் சனமும் வரவில்லை. 400 பேர் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் இருபது பேர்.. அளவில்.. எனக்கு எதோ VIP show போட்ட மாதிரி ஒரு கற்பனை .. எப்படா தமன்னா வருவாள் என்று இருக்க வந்தாள் பாருங்க .. என்னை மறந்து விசில் அடிச்சாச்சு.. :) அப்படி ஒரு ஆரவாரம்..

இந்த பாட்டு முழுக்க அடிச்ச விசில்.. நினைக்க ஏலாது.. :)
தனுஷ் பற்றி கவலை இல்லை , தமன்னா வரும் காட்சி எல்லாமே , ரசிச்சு பார்த்தேன்,.. என்னமோ தெரியல பிடிச்சு போச்சு.. :)
பி கு : இப்போ எல்லா dvd யும் இருக்கு :)

ஒரு மாதிரி தமன்னா ரசிகனாக மாறியாச்சு.. :) பதிவுலகத்தில் பலர் தமன்னாவை புகழ்ந்து கட்டியும் ஒரு சிலர் தாழ்த்தியும் எழுதி இருந்தனர், தாழ்த்தி எழுதியோருக்கு இட்ட பின்னூட்டங்கள் .. எனக்கு மறக்க முடியாது ....இப்பவும் ஞாபகம் இருக்கு.. எனது நண்பர் ஒருத்தர் வாங்கின அறுவை ..


அப்பா அம்மா விளையாட்டு .. - படிக்காதவன்


நேற்று இன்று நாளை படபிடிப்பு பற்றி தமன்னா கூறியவை :
ஒரு செய்திக்குறிப்பில் வாசித்து மகிழ்ந்தது "அசின், த்ரிஷா உள்ளிட்ட கதாநாயகிகள் வேறு மொழிப்படங்களே கதியென்று கிளம்பி போய் விட்டதாலும், நயன்தாரா பிரபுதேவா காதல் வலையில் இருந்து இன்னும் மீளாததாலும் தமிழ் சினிமா இளம் ஹீரோக்களின் சாய்ஸ் தமன்னாவாகத் தான் இருக்கிறது." "தம்மனாவின் காட்டில் காசுமழை..."

எனக்கு இந்த படம் ( நேற்று இன்று நாளை ) அவ்வளவு பிடிக்காமல் இருந்தாலும் பின்னால் வந்த சூப்பர் கிட் சூர்யாவின் அயன் ..யாவ் .. என்ன கொடுமை .. ஐந்து தடவைகள் பார்த்தேன்.. இறுதியாக இலங்கையில் நின்ற போதும் பார்த்தேன்.. :) இப்பவும் எப்பவும் பார்க்கலாம்.. ஒரு romance படம் ... நல்ல நடிப்பு .. கவர்ச்சி .. இளமையான சிறு பிள்ளைத்தனமான .. நடிப்பு நல்லாவே இருந்திச்சு..


விழி மூடி யோசித்தால் ..நெஞ்சே .. நெஞ்சே..Oyaayiye Yaayiye

கல்லில் ஆடும்-- ஆனந்த தாண்டவம்ஆனந்த தாண்டவம்: மதுமிதாவாய் தமன்னா.. படம் பற்றி பிழையான கருத்துக்கள் .. இருந்தாலும் பாடல்கள் எனக்கு பிடிக்கும். படமா முக்கியம் .. தமன்னா தானே முக்கியம்.. :)
கண்டேன் காதலை-வெகுநாட்கள் கழித்து தமிழில் கச்சிதமான ஒரு குடும்பப்படம்.

கண்டேன்
காதலை - ஒரு நாள் இரவில் -- என்ன பாடல் ... போட்டுட்டு ஆடிட்டே இருக்கலாம் .. என்ன இசை


ஒரு பதிவில் நான் வாசித்த சுவாரஸ்யமான எழுத்துக்கள் "சில ஃபிகர்களை பார்த்ததுமே உள்ளங்காலில் முத்தமிட வேண்டும் என்று எனக்கு தோன்றும். உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? ‘கண்டேன் காதலைதமன்னாவைப் பார்த்ததுமே இவ்வுணர்வு தோன்றுகிறது." என்னை போல இன்னொரு தீவிர ரசிகன் இருக்கான் என்று சொல்லலாம் ..நக்கீரனில் இருந்து :’’தினத்தந்தி குருவியார் பதிலில் தமன்னா இடுப்பில் கிள்ளினால் என்னவாகும்? என்று கேட்டு இருக்கிறார். அதற்கு பதில், ``அந்த இடம் சிவப்பாகி விடும்'' என்று இருந்தது. எந்தஇடம் என்று குருவியார்சொல்லவில்லை. தமன்னாவின் இடுப்பாஅல்லது கிள்ளியவரின் கன்னமா? என்று தெரியவில்லை.

வியாபாரி படத்தில் வந்த ஜூலை மாதத்தில் பாடலும் கொஞ்சம் அளவான கவர்ச்சி தான்:
இது எல்லாம் போகட்டும் வர இருக்கும் கார்த்தியின் ( சூர்யாவின் தம்பி ) பையா பாடல்களும் சுப்பரா இருக்கு .. http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.12319/

பொங்கலுக்கு வரட்டும் ஒரு கை பார்ப்போம் என்று இருக்கேன் ...:)

இப்படியாக தான் எனது விருப்புக்குரிய நடிகையாக தமன்னா வின் வருகை .. இடம்பெற்றது .. உங்களுக்கும் தமன்னாவை பிடிக்கும் நாள் வெகு தூரம் இல்லை .. :)PS: விஜயின் ஐம்பதாவது படத்தில் தமன்னா என்று சொல்லபடுகின்றது.. இதுக்கு நான் எந்தவிதமான கருத்துக்களும் கூற விரும்ப வில்லை . படம் கட்டாயம் பார்ப்பேன் .. கடைசி தமன்னாவுக்காக வேண்டி....


நண்பர் ஒருவரின் கனவில் இப்படி தானாம் மந்திரம் வருது :-

நயநமே ஸ்வாகா
ஓம் க்ரீம் அசின் னாய நமக
ஓம் க்ரீம் தமனாவாக
ஓம் க்ரீம் ஸ்ரேயவாக
ஓம் க்ரீம் நமீ தேவதா நமக
நயநமே ஸ்வாகா!!!
2009-12-03

நாங்க எடிட் போட்டா தாங்க மாட்டீங்களா

எதாவது எழுதுவம் என்றால் நேரம் இல்லை ; ரொம்ப பிஸி .. எனக்கு பிடிச்ச ஒரு காணொளி .. நல்ல ஒரு மசாலா கலவை .. பாருங்க .. பிறகு யார் தயாரிச்சது என்று கேட்க கூடாது ... :)புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது இடி இடிக்குது


கொடி பறக்குது கொடி பறக்குது - வேட்டைக்காரன் வரத பார்த்து
கொல நடுங்குது கொல நடுங்குது


துடி துடிக்குது துடி துடிக்குது
நிலைகுலையுது நிலை குலையுது வேட்டைக்காரன் வரத பார்த்து


பட்டாகத்தி பளபளக்க
பட்டி தொட்டி கலகலக்க
பறந்து வரான் வேட்டைக்காரன்
பாமரனின் கூட்டுக்காரன்


நிக்காம ஓடு ஓடு ஓடு .....வரான் பாரு வேட்டைக்காரன்.


என்னதான் இருந்தாலும்
மொத்ததுல பாட்டு படு ஜோரு. இனி நீங்களே இந்த படத்தோட பாட்டை வெறுத்தாலும் உங்களை எங்கள் 'சன்' அடிக்கடி கேட்க வைப்பான்..

ஒரு விளம்பரம் :- சிவராத்திரி 2010 :-

" இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முதலாக திரைக்கு வந்து இரண்டு மாதமே ஆன வேட்டைக்காரன் சிவராத்திரி இரவு பத்து மணிக்கு உங்கள் சன் டீவியில் காணத்தவறாதீர்கள் " சிவராத்திரியை ஜோராக நித்திரை கொள்ளாமல் கொண்டாடுங்கள் !! என்று ஒரு பெரிய விளம்பரம் வரும். :) திரைப்படத்தின் முதல் பகுதியை வழங்குவோர் குட் நைட் நுளம்பு சுருள் . இறுதிப்பகுதியை வழங்குவோர் பனடோல் .. உங்கள் தலை வலிகளை போக்க .. படம் தொடங்கும் போதே அருந்துங்கள் .. !!


2009-12-01

தமிழரின் தீப நாள் -கார்த்திகை தீபம்(திருவண்ணாமலை அடி வாரம் )
இன்று கார்த்திகை தீபத்திருநாள். ஆலயங்களில் , வீடுகளில் எல்லாம் தீபம் ஏற்றி வழிபாடும் நாள்.

தீப வழிபாடு பண்டைய காலந்தொட்டே பலமுறைகளிலும் நடைபெற்று வருகிறது.

சைவர், வைஷ்ணர், ஜைனர் என்ற பாகுபாடு இன்றி எல்லா மதத்தினரும் தீப வழிபாட்டைக் கடைபிடிக்கின்றனர்.

இந்தியாவில் வடக்கில் தீப வழிபாடு ‘தீபாவளி’ என்றும் , தெற்கே தீப வழிபாடு ‘கார்த்திகை தீபம்’ என்றும் கொண்டாடப்படுகிறது.


தீப தானங்கள் பதினாறு வகை தென் நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது. தீப வழிபாட்டில் சிறப்பானது கார்த்திகை தீபம்.

கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவது கார்த்திகை தீபம்.

தீப ஒளியின் தாத்பர்யம் நம்முன் இருக்கும் அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞானத்தைத் தருவதாகும். பண்டைய காலத்தில் ஞாயிறு, திங்கள், நெருப்பு இம் மூன்றையும்தான் தமிழர்கள் வழிபட்டு வந்தனர் என்று சொல்வார்கள்.

”அன்பே தகழியா ஆ ர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் ”

திருமூலர் தீபவழிபாட்டை பற்றி திருமந்திரத்தில்:

”விளக்கொளியாகிய மின் கொடியாளை
விளக்கொளியாக விளங்கிடு நீயே !
விளக்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடுவார்கள் விளங்கினர் தானே !
– என்று சிறப்பித்துக் கூறுகிறார்.

இவை தீப வழிபாட்டின் முக்கியம் சொல்லும் புராணங்கள்.

குறிப்பு: அத்துடன் தீபாவளி ஆரிய திருநாள் என்றும் கார்த்திகை திருநாளே தமிழர் திருநாள் . இத்தனை முக்கியம் வாய்ந்த தமிழர் திருநாளான இந்த நாளில் எல்லோரும் தீபம் ஏற்றி இன்றைய கார்த்திகை தீப திருநாளை கொண்டாடுவோமாக.


இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்தத் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று ,பஞ்ச பூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையின்( ஈசன் ஜோதிப் பிழம்பாய் நின்ற இடம் ) உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.


இத்தனை இன்று பெரும்பாலான இந்திய தமிழ் ஒளிபரப்புகள் நேரடியாக வர்ணனை செய்யும்.( முன்னர் ஜெயா தொலைக்காட்சி செய்த ஞாபகம் ). மிக பலத்த பாதுகாப்புடன் நிகழும் இந்த நிகழ்ச்சியை காண பலர் கூடுவர். மிக நீண்ட தூரத்துக்கு இந்த காட்சியை காணலாம்.

வாசித்தவற்றுள் பிடித்த கவிதை :

உகலமெல்லாம் தீப ஒளி பரவ
நல்லன எல்லாம் நடக்க
ஆளுவோர் மனம் மாற
மக்கள் நலமொன்றே நினைக்க
வீணாகும் தண்ணீரை சேமிக்க
அதன் மூலம் நல்ல வளம் பெருக
பொது ஜனமும் தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்க
வன்முறை ஒழிய
தீவிரவாதம் அழிய
எங்கும் அமைதி நிலவ
உலக மக்கள் நிம்மதியான வாழ்வு வாழ
இந்நன்னாளில் எங்கும் ஒளி பரவட்டும்
சாந்தி நிலவட்டும்
அதற்கு
ஏற்றுக தீபம்...போற்றுக தீபம்...கார்த்திகை தீபம்!!!!!!!!!!!!!!!!!!!

"சொக்கப்பனை கொளுத்துதல்".

கோவிலுக்கு அருகே, திறந்த வெளியில், ஒரு காய்ந்த மரத்துண்டை (அனேகமாக பப்பாளி மரத்தண்டு- ஊரில் என்றால் , சிலவேளைகளில் பெரிய மூங்கில் தடி ) நிறுத்தி அதனைச் சுற்றி காய்ந்த பனை மட்டைகளைக் கட்டி வைப்பார்கள். ( கிடுகும் பயன்படும் )இதற்கு சொக்கப்பனை என்று பெயர். சாயங்காலப் பூஜை முடிந்து சுவாமி வீதி உலா வந்தபின்( சுட்டி விளக்கு தரும் ஒளியில் சுவாமி வருதல் கண் கொள்ளாக்காட்சி.) ( பெரும்பாலும் ஆறுமுகசாமியே வள்ளி சமேத தெய்வானை யுடன் வலம் வருவார் ), கோவில் எல்லாம் விளக்கேற்றிய பின்னர், கோவில்குருக்கள் வெளியே வந்து, சொக்கப்பனைக்கு தீபாராதனைக் காட்டி அதைக் கொளுத்தி விடுவார். பனை மட்டையில் தீ பிடித்ததும் படபடவென்று ஒசையுடன் வெடித்துக் கொண்டே கொழுந்து விட்டு எரியும். மிகப்பிரகாசமான ஒளியை தருவது மட்டும் இல்லாமல் தத்துவத்தையும் பொலிந்து இருக்கும் இந்த காட்சி. நம்மவர்கள் உப்பு போட்டு வெடிக்க வைத்து கேலியாகுவதுதான் வழமையான ஒன்றே.

சுருக்கமாய் சொன்னால் ,கார்த்திகை தீபவிழா ஆணவ இருளை நீக்கி, ஞான ஒளியை நம்முள் பெருக்க உகந்த விழாவாகும்.

தமிழ் சினிமா பாடல்கள் :-

Related Posts Plugin for WordPress, Blogger...