2009-06-13

அம்மாவும் நானும் Alarm மும்

தினமும் எனது Alarm செய்யும் தொல்லை
சற்று காலமாய் புதுவிதமான மாற்றம்
அதுக்கு இன்னுமொரு காரணம் இருக்கு , பிறகு சொல்லுறன்

அம்மா இம்முறை இங்கு வந்து மூன்று வாரங்கள் நின்றவ .
தினமும் அவவுக்கு என்னுடைய Alarm செய்யும் தொல்லையோ தொல்லை
சொல்லி முடியாது
குறிப்பாக எனக்கு படுக்கும் நேரம் என்பது define பண்ண இல்லை , விரும்பிய நேரம் படுப்பன் , எழும்புவன் மீண்டும் படுப்பன். எந்த வித நேர அட்டவனை இல்லை.
அறையில் இருக்கிற மூன்று Alarmமும் அடிக்கிறது பத்தாது என்று பார்த்தா எனது Mobile செய்யும் தொல்லையோ பெரும் தொல்லை
அடிக்கடி வரும் SMS சத்தம் வேற, ??????????????

அதிகாலையில் ( 2:00 AM , 3.00 AM, 4 A.M )எனதுAlarm நல்லூர் கோவில் மணி மாதிரி அடிக்கும்.

இதுக்கு மேலால Mobile 3 A.M என்றால் காணும் தானும் சேர்ந்து ஓசை எழுப்பும்
இங்கு வந்த அம்மா இரண்டு நாள் பொறுத்து பார்த்தா பொடியன் எதாவது செய்வானா என்று, ஒரு முன்னேற்றமும் இல்லை. அதனால தானா சொன்னா தம்பி நீ உதுகளை நிப்பாட்டி போட்டு படும். எதுவும் உமக்கு கேட்குது இல்லை
உதுகளோட உம்மட ரேடியோ , டிவி, லைட் எல்லாமே 24 மணி நேர சேவை

அப்படி எங்க தாண்டா உந்த பழக்கம் பழகினி??

நான் சொன்னன் 2003 இல இருந்தே இதுதான் செய்யுறம் என்று . என்னுடன் என்றுமே வேலை செய்யும் இடத்துக்கு அம்மா வந்ததே இல்லை , ஒருக்கா வந்து பார்த்து இருந்தா இங்க இந்த பீலிங் வந்து இருக்காது ha ha.

இந்த எல்லா சத்தங்களுக்குள் அம்மாவை வெறுப்பு அடைய செய்தது எனது Mobile Alarm இக்கு வைத்த பாட்டு தான்
கொஞ்சம் கேளுங்க

ஹே வெற்றி வேலா
நம்ம ஆட்டம் தான் எகிறுது தோழா
ஏயி அடி ஜோரா
நாம எப்பவும் ஜெயிக்கணும் தோழா
பள்ளி கூடம் போகமலே First கிளாசில பாசான கூட்டம் இது

இது ஒருக்கா இரண்டு தடவை என்றால் பரவாய் இல்லை . நான் நிப்பாட்டும் மட்டும் அடிக்கும் ..
என்ன கொடுமை இது என்று அவவுக்கே பொறுக்க முடியல
என்னதான் நினைத்தாவோ தெரியாது ha ha..

அவ்வளவு பாசமான அம்மா தான் என்னுடைய அம்மா
இந்த அம்மா ஸ்பெஷல் ஆக்கமாய் இதை வெளி விடுகிறன்

Yahoo Messenger செய்த வேலை

அண்மையில் எனது திருமணத்திற்காக கொழும்பு சென்ற போது நடந்த பல பம்பல்களுக்குள் இதுவும் ஒன்று தான்.

வீட்டில் நானும் எனது நண்பர்களில் ஒருவருமான அரசாங்கமும் தான் கூடுதலாக வீட்டில் நடை பெற்ற வேலைகளை மேற்பார்வை செய்வது வழக்கம்.
புதன்கிழமை திருமணம் ஆதலால் செவ்வாய் காலை சந்தையில் வழமை போல பொருட்கள் ரொம்பவே வாங்க வேண்டி இருந்ததால் காலை 8:00 மணிக்கே வீட்டை விட்டு புறப்பட வேண்டி ஆயிட்டு.

காய்கறி , வெத்திலை, தேசிக்காய் , குங்குமம் , என்று ஒரு தொகை பொருட்கள் . இடை இடையே வீட்டுக்கு வந்து வைத்து விட்டு போவது வழமை. ஒரு மாதிரி முதல் தரம் வரும் போது , வெத்திலை 1500 , 500 ரதி குங்குமம் ( இது வாங்கின கதை வேற குறிப்பில்) , சீவல், 500 தேசிக்காய் என்று ( தாம்பூலம் தேவைக்காக இந்த அளவில் கொள்வனவு செய்தது)கொண்டு வந்து சேர்த்தோம்.

சரி கதைக்கு வருவம் எனது அறையில் நிறைய பொருட்கள் காரணமாக இடம் காணாத படியால் எனது Laptop ஐ சுவாமி அறையில் வைக்க வேண்டியதாயிட்டு.

வழமை போல Skype, MSN, Messenger, Facebook, Google Talk எல்லாமே எல்லாத்திலும் Online.
இதில Y-Messenger செய்த வேலை தான் எங்கள் வீட்டையே ஆட்டி படைத்து விட்டது.

அம்மா வீட்டில் நண்பர்களோடு கதைத்து கொண்டு இருக்கும் போது இந்த Y-Messenger இல் sign in , sign out, போது ஏற்படும் ஓசைகள் எல்லாரையும் ஒருக்கா பதை பதைக்க செய்து விட்டது.

எனது அம்மா விற்கு இதை ( sounds) பற்றி தெரியாது.அவருடன் கதைத்து கொண்டு இருந்தவர்களுக்கு கூடவும் போல இருக்கு.
அவர்கள் மெல்லமாக வந்து சுவாமி அறையில் எங்க சதம் வருது என்று பார்த்தால் எதுவுமே இல்லை. ( உண்மையும் தானே யாரும் sign in , sign out பண்ண வேணுமே). சரி சிறிது நேரத்திக்கு பிறகு இரண்டு மூன்று தடவை சத்தம் திரும்பவும் வர, ஒரே பர பரப்பு!

அவர்கள் தங்களுக்குள் கூடி ஒரு தீர்மானம் எடுத்தாச்சு போல இந்த வெத்திலை , சீவல் , தேசிக்காய் பை களுக்குள் தான் ஏதோ இருக்கு என்று. அவர்கள் யாருமே வடிவா கிட்ட போகவும் இல்ல. உற்று நோக்கவும் இல்ல .

இறுதியாக முடிவு பொடியன் பாம்பு குட்டியையும் சந்தையில் இருந்து கொண்டு வந்து விட்டான். எனி என்ன ஒரு படையை தயார் படுத்தி தாக்குதலை தொடங்குகிறது தானே . உண்மையும் தான், உடனடியா உள்ளக தொலைபேசி மூலம் தொடர் மாடி காவலாளி , கீழ் வீட்டு நண்பர், எங்கள் மேல் வீட்டில் தங்கி இருந்த நண்பர் என்று எல்லாரும் வந்தாச்சு, இதில் எங்கள் காவலாளி தான் முன்னால் செல்லும் ரெக்கி தளபதி. பின்னால எங்கட வயதான உறவினர்கள் , அம்மாவின் நண்பர்கள் என்று களத்தில். சத்தம் வரும் போது ஒரு ஓங்கி அடி வெத்திலை பை இக்கு. சத்தம் வரும் போது மிஞ்சின தேசிக்காய் பை இக்கு அடி. பிறகு சீவல் பை. நல்ல வேலை எந்த பையுமே எதுவுமே உடைஞ்சு கொட்டு பட வில்லை

நிலைமை மோச மாகி கொண்டு வந்தது .

தகவல் எங்களுக்கு வழங்கப் பட்டது. நாங்களும் உண்மையாவே பாம்பை கொண்டு வந்திட்டம் என்று எங்கள் வாகன சாரதிக்கு ஒரு ஆடர் , வீட்டை உடனே போகும் படி. நாங்கள் கொட்டகேன வில் இருந்து வெள்ளவத்தை வாறதுக்க ( 1 மணி நேரத்துக்க ) எத்தின தரம் பை அடி வாங்கி இருக்கும் என்று நேரில பையை பார்த்தா எனக்கு தான் தெரியும்.

எனக்கு பாம்பு குட்டி வேற எங்கையும் போயிட்டா , இல்லை இன்னும் நாங்கள் கொண்டு வந்த பை இக்கவா, என்று ஒரே குழப்பம், ஏனெனில் நான் இந்த அறைக்குள் தான் தூங்குவது வழக்கம் ஹா ஹா

வீட்ட வந்தாச்சு. எல்லாரும் எங்களை கண்டதும் தம்பி நீர் கொண்டு வந்த பாம்பு திமிர் பிடிச்சது போலும். இந்த அடி வாங்கியும் என்னும் சத்தம் போடுது. எனக்கு இதை கேட்கவே நடுங்க தொடங்கிற்று. இன்னும் உயிரோட நிக்குதே என்று. சரி இனி என்ன விதி யாரைத்தான் விட்டது என்று போட்டு கையில தும்பு கட்டையும் கொண்டு சுவாமி அறைக்குள் நுழைந்தேன். ஒரு சத்தமும் இல்லை.

அம்மாவின் நண்பர் ஒருவர் எப்படி சத்தம் போட்டது என்று போட்டு காட்டியும் ஆச்சு. சரி எனி என்ன நானும் சொன்னன் கட்டிலில என்னுடைய laptop, மெல்ல எடுத்து hall மேசையில வைச்சிட்டு தொடருவம் என்று சொல்லி போட்டு நான் அதை ஒரு மாதிரி hall மேசையில தூக்கி வைச்சு போட்டன்.

பிறகு நானும் அரசாங்கமும் பாம்பு குட்டி தேடும் வேட்டை. hall இல் திடீர் என்று ஒரே சத்தம் முதலில சத்தம் போட்டது எங்கள் காவலாளி தம்பி மேசைக்கு மேல குட்டி வந்திட்டு என்று.
திடீர் என்று இந்தா இந்தா என்று எல்லாரும் ஒருக்கா ஆர்ப்பரிக்க , எங்க எங்க என்று நானும் அரசாங்கமும் கேட்க உந்தா உந்தா என்று காட்ட. உண்மையாவே எனக்கு ஒரு heart Attack வந்து போன பீலிங். காலையில சாப்பிட்ட செமிச்ச சாப்பாடு கூட வாயிக்கால வந்த மாதிரி இருந்திச்சு.

நானும் போய் பார்த்தா தான் விளங்கிஞ்சு இந்த பாம்பு குட்டி என்ன என்று.

ஒரேடியா சிரிப்பு தான். lol.

என்ன கொடுமை என்றால் எங்கள் தொடர் மாடி காவலாளி கையை பிடிச்சு பார்த்தேன் , பாம்பு நடுக்கம் என்னும் குறையவே இல்லை.
இவங்க எல்லாம் காவலாளி யா . என்று தோன்றிச்சு, இதுக்கு எங்க அரசாங்கம் சொன்னான் பாம்பு என்றா படையே நடுங்கும் பிறகு எந்த மூலைக்கு காவலாளி!

அரசாங்கம் -எனது நண்பரின் எங்கள் வீட்டு காட் பெயர். அவர்தான் வேறு யாரும் இல்லை எனது சக வகுப்பு தோழன், முன்னால் மூன்று வருட ரூமா (பல்கலையில்) சுரேன்.

பிறகு என்னுடைய காட் என்ன என்று கேட்கிற இல்லை . இதுக்கு பதிலை யாரும் ஒரு ஆள் உங்களுக்கு சொல்லும்.
Related Posts Plugin for WordPress, Blogger...