2009-08-31

இப்படியும் Train ஓட்டுறாங்களே!!!!அண்மையில் எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றில் ஜேர்மன் நாட்டில் இவ்வாறு தொங்கு Train (tram style) ஓடுவதாகவும் அதன் நிழல் படங்களின் தொகுப்பும் கிடைக்க பெற்றது.
ஆமாம் உண்மைதான், அதில் பயணம் செய்ய எனக்கும் ஒரு முறை சந்தர்ப்பம் கிடைத்தது. அண்மையில் அந்த நகரத்துக்கு சென்று இருந்த போது, வழமையாக வரும் மெட்ரோ வண்டி போல தான் (அதன் அமைப்பு ) நானும் ஏறி நின்றால், அது வழமைக்கு மாறாக தொங்கிய படி சென்றது. Traffic இல்லை, சனம் தான் கொஞ்சம் நெருசல், என்றாலும் நல்ல ஒரு பயணம், ஏறத்தாள 2-3 Km தூரம் சென்ற பலன் எனக்கு கிடைத்தது.
செல்லும் பாதை:
கட்டிடங்களுக்கு நடுவே சரி , வீதியின் குறுக்கும் நெடுக்கும் சரி , ஆற்றின் மேலாக சரி செல்லும் போது இயற்கையை ரசிப்போரும், புகைப்படங்கள் எடுப்போரும் என்று ஒரே ஆரவாரமாய் இருக்கும்.


(உடைஞ்சு விழுந்தால் கெதி என்னாகிறது, ஒரு விசாரணை கமிஷன் வைக்க வேண்டியதுதான் )

தரிசிக்கும் Stations யாவும் 2,3 மாடி கட்டிடம் இல்லாவிட்டால் நிலத்தில் இருக்கும்.
எனக்கு இப்பவும் ஞாபகம் இருகின்றது, 5 மாடி கொண்ட Car Park இன் மூன்றாம் மாடியில் தரிசித்து சென்றது.

நான் இதில் பயணம் செய்யும் போது எனது கைதொலைபேசியால் எடுத்த ஓரிரு புகைப்படங்கள் இங்கே !!!


எனது E71 Nokia கைத்தொலைபேசியால் சுட்டது


எனது E71 Nokia கைத்தொலைபேசியால் சுட்டது

அதிசயம் ஆனால் உண்மை !!!!
என்ன என்று யோசனையா?
மாதம் முடிகிறது என்றாலும் ஒருமுறை இந்த மாத நாட்காட்டியை உற்று பாருங்கள்.
5 சனி
5 ஞாயிறு
5 திங்கள்

வேலை செய்வோர் சந்தோஷப்படுங்கள் ; வீட்டில் இரண்டு நாட்கள் மேலதிகமாக ஓய்வில் குடும்பத்தாருடன் (நிம்மதியாக ???) செலவழித்து இருப்பீர்கள் .

வேறு ஒன்றும் இல்லை , இது மீண்டும் 823 வருடங்களுக்கு பின் தான் வருமாம்.. !!!

உண்மை தானா என்று கணக்கு போட்டு பாருங்களேன் ???

2009-08-29

நான் இந்த சுவாமியார் இல்லைங்க!!!!

எனது நண்பன் எனது வலைத் தளத்துக்கு இன்று மாலை வந்து விட்டு, இந்த படங்களை உள்ளடக்கிய மின்னஞ்சலை அனுப்பி வைத்து போட்டு ஒரு Call எடுத்து கேட்டான், (நடு ராத்திரியில்.... வேற நேர காலம் எல்லாம் இல்லையா இந்த சந்தேகம் எல்லாம் கேட்க ??) சுவாமியாரே நீங்களும் இப்படியா என்று.

நான் அவர் இல்லைங்கோ என்று உடனடியாகவே காரசாரமான பதில் அனுப்பி வைச்சு போட்டேன்.
மகா ஜனங்களே ( கவுண்ட மணி Style இல ) நான் அவன் இல்லைங்கோ !!!

எனது ஆச்சிரமம் கொஞ்சம் வித்தியாசம். அப்புறம் அது எப்படி என்றால் அதற்கு விரைவில் பதில் வரும் !!

அப்புறம் இன்னொரு நண்பன், பின்னூட்டலில் நீங்க சுவாமி பிரேமானந்தாவுக்கு தொடர்பாமே என்று கேட்டார். இப்படி எல்லாம் கற்பனை.. ????

இந்த பெயர் ஒரு கவர்ச்சிதானே... அதுதான் வேறொன்றும் இல்லை. !!!

சரி விஷயத்துக்கு வருவோம் . அப்படி என்னதான் அனுப்பி வைத்தவன் என்று பார்க்கிறீர்களா ? இந்தா நம்ம ஷில்பா ஷெட்டி(ரெட்டி என்றால் அவள் என் நண்பி) தான் ஏற்கனவே பல சர்ச்சைகள்,, இப்பொது மீண்டும்..??????


முத்தம் இட போகும் சுவாமியார்


முத்த மிடும் சுவாமியார்
சுவாமியார் ஒரு இறுக்கி பிடி பிடிச்சு இருக்காராமே??


எனக்கு இந்த பிடியில் ஒரு சந்தேகம் ??? ஆண்டவன் திருவடியில் என்னதான் நடக்குமோ ???
(சுவாமியாரின் பார்வையும் சரி இல்லை )

இந்த உடம்புக்கு இது எல்லாம் ஆகாது என்ற முனகலும் இங்கே கேட்டது !!!!

என்றாலும் குடுத்து வைச்ச சுவாமியார் !!!!
இந்த காட்சியுடன் எத்தனை சுவாமிகளின் அவதாரம் ??? எல்லாம் அவனுக்குத்தான் வெளிச்சம் !!!!

யாழ் தேவி பயணமும் யாழ் புகையிரத நிலையமும்

எனது சிறு வயதில் இருந்தே இந்த யாழ் புகையிரத நிலையமும் அதன் சுற்றாடலும் அடிக்கடி தரிசிக்கும் இடமாக இருந்து வந்தது.


யாழ் புகையிரத நிலையம்

அம்மா வவுனியாவில் 7 வருடங்கள் சேவை செய்த காலம் அது !!!

குறிப்பாக 1984 ன் நடுப்பகுதியில் இருந்து 1989 ன் இறுதிவரை நாங்கள் வவுனியாவில் குடி கொண்டு இருந்த சமயம். யாழ் தேவி மூலம் பயணம் செய்யும் போது. ( நீண்ட காலம், பஸ் வண்டியில் தான் சென்ற ஞாபகம் இருகின்றது,).


யாழ் புகையிரத நிலையம்


இந்திய இராணுவம் வருகை இன் போது தடைப்பட்டு இருந்தது . ( 1988 நடுப்பகுதி வரை )
பாதை பூர்த்தி செய்யாமல் இருந்ததாக நம்புகிறேன்.
பிறகு சரி வந்த ஞாபகம் , இந்த வரலாறுகள் எனக்கு தெரியாது எனினும் யாரும் தெரிந்தால் சொல்லவும்!!!


யாழ் புகையிரத நிலையம்


ஆனையிறவில் நீண்ட தூரம் காத்து நிக்கும் சரக்கு லாரிகள்

ஆனையிறவில் ஏற்படும் நீண்ட வரிசையை குறைக்க மக்கள் யாழ் தேவியை பயன்படுத்தியதாக முந்தி ஊரார் பேசினதாக ஞாபகம் இருக்கு !!

இந்த தாண்டிக்குளம் என்ற புகையிரத நிலையம் நான் நினைகின்றேன் 1992 களின் பிற்பகுதியில் தான் உருவெடுத்தது , முன்னர் அவ்வாறு இருக்கவில்லை.

நாங்கள் வவுனியாவில் இருந்து யாழ் தேவியில் செல்லும் போது , முதலில் அகப்படும் பெரிய பாலம் அந்த நொச்சி மோட்டை என்னும் இடத்தில இருக்கும் பாலம் தான், அந்த பாலம் அந்த ஊரில் ஏற்படும் வெள்ளங்களை சமாளிப்பதற்காக பிரமாண்டமாய் அமைக்கப்பட்ட ஒன்று. அந்த பாதை ஊடாக சென்று வருவோர் பெரும்பாலும் அதை கண்டு இருப்பர். குறிப்பாக இந்த சமாதானம் வர முன் போய் வந்தோர் எனின் இலகுவில் அடையாளம் கண்டு கொள்வர். அந்த பாலத்துக்கு அண்மையில் வைத்து தான் இராணுவத்தின் இறுதி காவல் அரண் , வன்னிக்குள் நுழைவதற்கு!!!காங்கேசன்துறை புகையிரத நிலையம் (பின்புறம் )

இந்த பாலத்தில் யாழ் தேவி செல்லும் போது தங்கள் உயிரை மாய்த்தவர்கள் பலர். இதை அடிக்கடி செய்திகளில் பார்த்த ஞாபகம். எனி பாலம் இல்லை என்று போட்டு வவுனியா தாண்டியதும் தலையை வெளியே ( சற்று உடம்பையும்) கூத்து போடும் இளைஞர் கூட்டம் எப்படியும் அகப்படும்.


காங்கேசன்துறை புகையிரத நிலையம்


இப்படியே வன்னிப் பிரதேசம் எல்லாம் கடந்து யாழ் செல்லும் போது இயற்கை காட்சியும், சரியான வெட்கையும் இருக்கும். ஆரஞ்சு பார்லி சத்தம் தான் யாழ் தேவி முழுக்க கேட்கும். குறிப்பாக, ஆசனங்களில் அமருவோரை தவிர பனையோலை பாய் போட்டு இருந்து கும்மாளம் அடிச்சு கொண்டு இருக்கும் வயதானவர்கள் ஒரு புறம்; முரசொலி, ஈழநாடு , உதயன் வாசிப்போர் ஒரு புறம், என்று ஒரே கல கலப்பு தான். இதை விட குடும்ப கதை , கொழும்பு சென்று வந்த கதை என்று ஒரே திருவிழா மாதிரி சத்தமாய் இருக்கும்!!!
கச்சான் கடலை விற்போரின் தொல்லையோ மகா தொல்லை. இடைக்கிடை எங்கட Ticket Checker தனது தலையையும் காட்டி கொண்டு இருப்பர்.


பிரண்டு கிடக்கும் யாழ் தேவி பெட்டிகள்

நாங்கள் அடிக்கடி போய் வருவாதால் இந்த கலகலப்பு இல்லை, எப்படா வீடு வந்து சேரும் என்று போட்டு இவர்களின் ஜொள்ளுகளை பார்த்து கொண்டு இருப்பம்.

கிளிநொச்சியில் நீண்ட நேரம் தரித்து நின்று போட்டு செல்லும். இன்றும் ஞாபகம் இருக்கிறது ( யாழில் இருந்து வரும் யாழ் தேவியை வழிவிட என்று நினைக்கிறன்)


உப்பளம்அப்புறம் ஆனையிறவு உப்பளம் புகை வண்டியில் இருந்து பார்க்கும் போது அருமையாக இருக்கும்.

காற்றை கிழித்து கொண்டு செல்லும் போது ஏற்படும் சத்தம் ,கக்கும் புகை இதுதான் யாழ்தேவி வருகிறது என்பதற்கு ஆதாரம்.


உப்பளம்


யாழை வரவேற்கும் தென்னை மரங்கள்

வன்னியில் தொடர்ந்து பார்த்த காட்டு மரங்கள் முடிய தென்னை மரங்களின் வருகை ஆகா சுப்பெரோ சூப்பர்


நாவற்குளி பாலம்


நாவற்குளி பாலம்


நாவற்குளி பாலம்


இப்படியே நாவற்குளி வந்தால் அங்கே இருக்கும் அடுத்த பாலம்.
இன்றும் ஞபகம் இருக்கிறது இடம் பெயர்வின் போது அந்த பாலத்துக்கு அண்மையாக நடந்து சென்றது. அப்புறம் றால் பண்ணை எல்லாமே நல்ல காட்சிகள் தான்!!!


சரக்கு எஞ்சின்


பிறகு யாழ் தேவி யாழ் சென்று நீண்ட நேரம் தரிசிக்கும். பெரும்பாலும் எல்லாரும் இறங்கினாலும், கொக்குவில் கோண்டாவில் சுன்னாகம் மல்லாகம் என்று நீண்ட பட்டியல் இருப்பதால் இறங்காமல் இருப்போர் அதிகம் !!!

எங்கள் வாசஸ்தலம் சுன்னாகம் ஆதலால் நாங்கள் பொறுமையாக யாழ் தேவியில் யாழ் புகையிரத்தில் நின்ற ஞாபகங்கள் இன்றும் மறக்க முடியாது.


சரக்கு இழுக்கும் இழுவைகள் !!!


அனுராதபுரம் பிறகு பெரிய அளவில் இருக்கும் புகையிரத நிலையம் என்றால் யாழ் புகையிரத நிலையம் தான். பிரமாண்ட சுவர்கள் , கட்டிடம் என்று . KKS இல் கூட அவ்வளவு பெரிதாக இல்லை, அங்கே ( சரக்கு மற்றும் சாதரண )புகைவண்டிகள் சற்று அதிகம்.


(நன்றி கு.பார்த்தீபன் )

யுத்த சூழ்நிலைகளால் புகைவண்டி சேவை எல்லாம் அற்ற காலத்தில் நான் பல தடவைகள் தாண்டி சென்று இருகின்றேன், இடம்பெயர் மக்களை தன்னகத்தே கொண்டு இருந்ததை யாவரும் அறிவர். (அநேகமான புகையிரத நிலையங்கள் )

1995 இன் பிறகு அது ஒரு பயணிகள் ஒன்று சேரும் இடமாக மாறியது கூட உங்களுக்கு தெரிந்து இருக்கும் !!! (யாழ் கொழும்பு விமான சேவை காரணமாக- 1999 வரையும் இருக்கலாம் ??? )!!! தற்போது இல்லை என்று நினைக்கிறன் !!!!காங்கேசனில் உள்ள எண்ணெய் குதங்கள்


(நன்றி கு.பார்த்தீபன் )

யாழ் தேவியை இழுத்து வரும் " உட வளவை" எஞ்சின் இன்னும் ஞாபகத்தில்!!!

மீண்டும் அண்மையில் சென்று வந்த போது தூர நோக்கு புகைப்படம் ஒன்றில் அந்த கட்டிடங்களை பார்த்த போது ஒரு கவலை தான். ஆனால் என்ன செய்வது!!!
என்றோ ஒரு நாள் அது மீண்டும் மிளிரும் என்ற நம்பிக்கை!!!

2009-08-28

பம்பர கண்ணாலே செய்தி சொன்னாளே

என்னடவா இது.. எல்லாருக்கும் இது தெரிந்த தலைப்பு தான்.
ஆமாம் முன்னரும் இந்த பம்பர கண்ணாலே பாடல்கள் பல விதமான ரிதங்களில் வந்துள்ளது.
அதிலும் எனக்கு இந்த கந்தசாமி பம்பர கண்ணாலே பாடல் , கந்தசாமி ஆடியோ பாடல்கள் இணையத்தில் உலா வர தொடங்கிய காலத்தில் இருந்து , என்னமோ அந்த மெட்டுகள் பிடித்து கொண்டன. மிகவும் ஆவலாக இருந்தேன் எப்போது இதன் வீடியோ வடிவம் வரும் என்று.
ஒருநாள் இணையத்தில் வலம் வரும் போது என்னிடம் சிக்கி கொண்டது. எதிர் பார்த்தே இருக்க வில்லை . இப்படி ஒரு item song இது என்று.

இருந்தாலும் ஒரு கிளாமராக எடுக்கப்பட்டுள்ளதால் எங்களை மாதிரி இளைஞர் களின் மனதில் ஒரு மோகம் தான்.

இப்படியே தினமும் ஒரு தடவை இரவில் இந்த பாடலை எனது லேப்டாப் இலே பார்த்து விட்டு தூக்கம் கொள்வேன். எப்ப அந்த திரைப்படம் வரும் என்று இருந்த வேளை கடந்த வாரம் ஒரு மாதிரி புலம் பெயர் நாடுகள் எல்லாவற்றிலும் அமோக வரவேற்புடன் திரைக்கு வந்தது.


கடந்த மூன்று மாதங்களாக எந்த திரைப்படமும் திரைக்கு வராத நிலையில் , ( தாய் நாட்டில் நடை பெற்ற பாதகமான சூழ்நிலைகள் காரணமாக, புலம் பெயர் மக்கள் ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் , எழுச்சி நிகழ்வுகள் என்று நடத்தி வந்த காரணம் தான் . ) இதை பார்க்க ஏராளமானோர் வருகை தந்து இருந்தனர்.தொடக்கமே ஒரே விசில், கூ, என்று களை கட்டி இருந்தது. எல்லாம் நம்ம விக்ரமுக்காக அல்ல. நம்ம ஷிரேயா தான் எல்லாம், கொஞ்சம் வடிவேலுக்கும் சாரும்.
ஆரம்பமே விசில், கூ என்று இருந்த ஜனங்களுக்கு ஒரே சப் என்று போய் விட்டது.

வித்தியாசமான சேவல் அறிமுகம் ஏமாற்றம் தான் அதுவும் ஏறத்தாள 15 நிமிடம் ரொம்ப ஓவர் !!!

ரஜனி, கமல் , இல்லை போனால் போகுது நம்ம அஜித் விஜெய் என்றாலும் இப்படி ஒரு ஆரம்பம் வைச்சால் எவ்வளவு தீவிர ரசிகர்கள் என்றாலும் கல்லே எறிவார்கள் :)

இங்கும் இதுதான் நடந்தது. எங்கள் முன்னாடி இருந்த ஸ்ரேயா அன்பர், நீண்ட நேரமாக ஸ்ரேயா தோன்றாததால் திரையை நோக்கி தனது சோடா போத்தலை எறிந்த காட்சியும் அதற்குள் ஒரு பரபரப்பு !!!

நான் திரை விமர்சனம் சொல்ல வரவில்லை, ஆனாலும் சண்டை காட்சிகள் இங்கே நேரத்தை நீட்டி கொண்டே போகின்றன. மிகவும் ஓவராவே இருந்திச்சு. எனக்கு பக்கத்தில் இருந்த நண்பரின் முனுமுனுப்பு " டோய் விக்கி, இதெல்லாம் உனக்கு ஓவர்டா " ஹா ஹா

சும்மா சொல்ல கூடாது குடுத்த காசுக்கு ஸ்ரேயா வின் வருகையும், தோன்றும் காட்சிகளும் ரசிகர் மத்தியில் அமோகமான வரவேற்பு. அதுவும் பறக்கும் விமானத்தில் நடை பெற்ற காட்சியில் என்ன பேசினார்கள் என்று கூட கேட்க முடியவில்லை அந்த அளவு விசில், கூ ..ஆராவாரம். !!!ஸ்ரேயாவின் காட்சியை பதிவு செய்த கமர மென் வாழ்க !!!
ஸ்ரேயாவுக்கு உடுப்பு தைத்தவன் வாழ்க !!!!

இன்னுமொன்று அத்தனை பாடல் காட்சிகளும் சுப்பர். யாரோ எல்லாமே item song என்று கூட சொல்லி கேட்டிச்சு. அப்படியே பார்த்திட்டு இருக்கலாம் .
மன்னிக்கவும் ( திரும்ப திரும்ப )!!!!

மியாவ் மியாவ் பூனைக்குட்டி பாடல்- ஸ்ரேயா துவாய் உடன் ஆடும் காட்சி வரும் போது உண்மையாவே எனக்கு திரை தெரியவே இல்லை. எல்லாரும் எழும்பி ஆட தொடங்கியாச்சு. அப்புறம் என்ன திரையரங்கு முழுதும் விசில் கூச்சல், தான் !!!

பாடல் :-http://www.youtube.com/watch?v=wNL0ErHG59g

வடிவேலுவின் காமடியும் அவ்வளவு இல்லாவிட்டலும் சுப்பர்.

இறுதியாக நான் எதிர் பார்த்து இருந்த பாடல் பம்பர கண்ணாலே .. எங்கேடா வருது வருது என்று ஒரு மாதிரி படம் முடியும்நிலை. வந்திச்சு பாருங்க, நானாகவே விசில் அடிச்சே போட்டேன். அப்படி ஒரு ரிதம். ( காட்சியும் சும்மா பரவாய் இல்லை).

பாடல் :- http://www.youtube.com/watch?v=AKvTMBnRKJA

விக்கரம் வரும் காட்சியில் உள்ள பாடல் வரி இதுதான்
கேட்டு பாருங்களேன்

Show!
Oh my girl, rock it away ..
Pepsi'o, shake it away ..
Move your body tracking away ..
Gala, gala, freakin away

Shakalakka makka you say ...
Everybody pushing away ...
Oh my baby squeez it away...
Baby get him away ..

ஒன்று மட்டும் தெரிந்தது.. நீண்ட நாள் வீனடிப்புக்கு ஏற்ற லாபம் இருக்காது.
மற்றது ஷிரேயா தோன்றும் காட்சிகளை பார்த்த சென்சார் போர்டு கூட திக்கி முக்காடி போயிட்டு போல. அப்படி தணிக்கை செய்தும் இந்த ஓவர் என்றால், தணிக்கைக்கு முன்.. அம்மாடி கந்த சாமியோவ் .. மியாவ் !!!மியாவ் !!!

சிவாஜியில் ஸ்ரேயா கவர்ச்சி என்ற என் நண்பனின் கருத்துக்கு , அப்படி இல்லைங்க என்று நண்பனுக்கு கால் எடுத்து சொன்ன கடுப்பும் எனக்குஇருக்கு.
In Balcony :)

ஒட்டு மொத்தத்தில் கந்தசாமி = சிவாஜி +அந்நியன்+ ரமணா ஆகியவற்றின் கலவை .. நீங்களே தீர்மானியுங்கள் சென்று பார்ப்பதா இல்லையா என்று !!

(இந்த வசனத்தை எழுதி கொண்டு இருக்கும் போது ,நண்பி பக்கத்தில் இருந்து சொன்னாள் உந்த குருவிய கூட பார்த்த....தானே அதை விட இது நல்லதுங்க என்று , சத்தியமா நான் சொல்லல ). அப்புறம் விஜய் ரசிகர் மன்றம் ...எனக்கு மான நஷ்ட வழக்கு எல்லாம் போடாதீங்க. நான் ஒரு அப்பாவி குடும்பஸ்தன் !!!

Excuse Me, ஒரு காப்பி குடிக்க வாறீங்களா!!!LOL
இது நண்பியின் முனுமுப்பு படம் பார்த்த tocuh என்னும் விடவில்லை போல ,!!!

2009-08-27

திருமணம்
பத்து பொருத்தம் பார்த்து
ஒன்பது கிரகமும் நேர் நிலையில இருக்கேக்க
எட்டு திசையில் இருக்கும் தெய்வமும் ஆசிர்வதிச்சு
கணவனும் மனைவியும் ஏழு அடி எடுத்து வச்சு
அறு சுவையில சமைச்சு
பஞ்ச பூதங்களும் ஆசிர்வதிச்சு
அறம், பொருள், இன்பம், வீடு, என்ற நாலையும் உணர்ந்து
மூன்று முடிச்சு போட்டு
இரு மனம் ஒன்றாக கலப்பதுஇப்படிதான் திருமணம் செய்வது என்று வாசித்தேன். இதில் எத்தனையை எனது திருமண சடங்கில் பார்த்தேன் என்று கணக்கு போட்டு கொண்டு இருக்கிறேன்...

ரோமென்ஸ் கணக்குSmart man + smart woman = romance

Smart man + dumb woman = affair

Dumb man + smart woman = marriage

Dumb man + dumb woman = pregnancy

யாருக்குச்சொல்ல

தன் காதல் /காதலி பற்றிய தவிர்ப்பில் அவன் குறிப்பில் எழுதி கொண்டது..என் நண்பனின் குறிப்பில் இருந்து............

" அவள் - என் Google talk இல இருக்கா, yahoo இல இருக்கா , MSN இல இருக்கா ,Skype இல இருக்கா, இறுதியாக என் heart இலே m இருக்கா , But அவ Heart இல எவனோ இருக்கான்."

இது சத்தியம் பண்ணினாலும் நான் அவன் இல்லைங்க , ஏனெனில் நான் திருமணம் முடித்து குடும்பகாறனாய் இருக்கேன் !!!! Lol

Ring tone செய்யும் மாயா ஜாலங்கள்

கொஞ்ச நாளா எனக்கும் இந்த Ring TOne இக்கும் ஏதோ பூர்வீக தொடர்பு இருக்கு
கடைசியா அம்மா விடம் நல்லா வாங்கி கட்டினது.

இப்போ நம்ம Project Supervisor கிட்ட முறையாக மாட்டி கொண்டேன்.
என்னமோ தெரியாது இந்த வில்லு பட Tones தான் எனக்கு ஆப்பு வைக்கிறது என்று ஒரு முடிவோட இருக்கு போல.
இதுதான் Flash back.செவ்வாய் தோறும் Company சென்று வருவது வழக்கம். வழமை போல இன்றும் சென்று வேலை பார்த்து விட்டு மாலை ஒரு Presentation தயார் படுத்தி கொண்டு இருக்கும் போது என்னுடன் எனது Supervisor , எனது Company Supervisor மற்றும் ஒரு Dutch அம்மையார் im உரையாடி கொண்டு இருந்தனர்.
நான் silent mode இல தான் எனது கையடக்க தொலைபேசியை வைப்பது வழமை. ஆனாலும் இன்று ஏதோ ஒரு யோசனையில் மறந்து போட்டேன்.
யோசனைகளை வர ரொம்ப காரணங்கள் உண்டு. அம்மாவின் பயணம், மனைவியின் ஊரிலிருந்தான பயணம் என்று பல யோசனைகளால் மறந்து போச்சு இந்த மாப்பு !!!
வினை அங்க தான் வந்து சேர்ந்தது.
நான் போட்டு இருந்த Ring tone, ஒருக்கா ரிங் பண்ணினதால , எனது supervisor மட்டும் இல்லை, என்னை சுற்றி நின்ற எல்லாரும் ஒருக்கா என் மீது கடைக் கண்ணால் பார்த்தாங்க பாருங்க.
அதை நான் என்னென்று சொல்லுறது.
எனக்கு ஏதோ இன்று தான் கடைசி நாள் மாதிரி இருந்திச்சு.

அப்படி என்ன தான் அந்த ring tone என்று ஒருக்கா பாருங்களேன்

Ring Tone இல உள்ளடக்கப்பட்ட பாடல் வரிகள் இவ்வளவும் தான்


Lyrics :

Are You Crazy
You Useless Illiterate Fool
Do You Have A Brain?
How Dare You
I Will Kill You
You Country Brute
I Will Slap You
I Will Make You Stand In Shoes
Unnai Thunu Thunda Vettiduven //தமிழில வந்ததால தப்பிச்சேன் மாமோய்
Unnai Gun Ah Vechu Suttuduven //தமிழில வந்ததால தப்பிச்சேன் மாமோய்
Never Ever Come Next To Me
You Understand
Go To Hell
You Loser….!!


video is here :

இந்த கானொளியில் கொஞ்சம் கதை வசனமாய் நீண்டு கொண்டு போகிறது

http://www.youtube.com/watch?v=jRxn3TIsLFMஏதோ இதுவரைக்கும் எனக்கு Email ஏதும் வர வில்லை , எதுக்கும் காலையில் போய் உண்மையை சொல்லிடுவம். அப்புறம் நாங்க தப்பினோம் பிழைச்சோம் ஆகிடலாம் !!!Lol

2009-08-26

மறக்க முடியாத லூட்டி அடித்த இன்னுமொரு நாள்

இன்று ஏதோ எங்கள் ஆபீஸில்( நெதர்லாந்து) எங்கள் குழுமத் தலைவர் வருகை தராததால் ஒரே கொண்டாட்டம். எங்கள் அறையில் இரண்டு நம்ம தென் நாட்டு பொண்ணுகளும் நானும் தான். அதுகளும் நன்றே தமிழில் பேசுவதால் என்றுமே எங்கள் லூட்டிகளுக்கு குறை இல்லை.

ஏதாவது பற்றி, இல்லை போனால் யாரையாவது பற்றி பேசிக்கொள்வது வழக்கம் . இன்று சற்று வேற மாதிரி ( பயப்பட வேண்டாம்) கதைத்து கொண்டு இருக்கும் போது ஒரு சக்கை போடு போட்ட ஜோக்கை நம்ம பொண்ணு ஒருத்தி அவிழ்த்து விட்டாள்.
அதுவும் A1 ஜோக் தான் !!

ஒரு பேராசிரியரும் அவர் பால் வேலை செய்யும் மாணவனும் சந்தித்து கொள்கின்றனர். ( எங்கே என்று எல்லாம் கேட்க கூடாது ,நான் சூடாகிடுவன்)

அப்போது அந்த பேராசிரியர் அந்த மாணவனிடம் ஒரு கேள்வி கேட்டார்.
இதுதான் அந்த கேள்வியின் சாராம்சம்.

அதாவது ஒரு புகை வண்டி 40 km/h வேகத்தில ஒரு தண்டவாளத்தில் ஓடி கொண்டு இருக்கிறது. ஒரு பையன் அந்த தண்ட வாளத்தில் விழுந்து கிடக்குறான். ( ரொம்ப யோசிக்க வேணாம், புகை வண்டி அடிக்குமா , அடிக்காத என்று வடிவேலு மாதிரி கேட்டார் என்று அதுதான் இல்லை ).

கேட்டார் ஒரு கேள்வி , அப்படியே கண்ணை கட்டின மாதிரி இருந்திச்சு.
என்ன தெரியுமா " தண்டவாளத்தின் குறுக்கே படுத்து இருக்கும் பையனின் வயசு என்ன "
சொல்லுவியளோ ஹா ஹா.
மாணவன் பயப்பிடாமல் சொன்னான், ஒரு 20 இருக்கும் என்று.
இதை பார்த்து கொண்டு இருந்த பேராசிரியரின் துணைவியார் அறிவு கேட்டு விழுந்து போனார்.
பிறகு அவருக்கு வைத்தியம் எல்லாம் செய்து, எழுப்பி விட அந்த பையனின் காதுக்குளே கேட்டாவாம், தம்பி நீர் என்னென்று 20 என்று சரியா சொல்ல முடிஞ்சது என்று.
அதுக்கு மாணவன் சொன்னான் " ஒரு நாற்பது வயசு முழு லூசு கேள்வி கேட்குது அதை பார்த்திட்டு விடை சொல்லுது எப்படியும் ஒரு அரை லூசா தானே இருக்க்கும், அதாலே அது இருபது வயசு பையன் என்று மொக்கையா சொன்னதும், எழும்பியிருந்த அந்த பேராசிரியரின் மனைவி மீண்டும் மயங்கி போனாளாம்,

தினமும் இப்படி எத்தனை பேராசிரியரின் மனைவி மார் மயங்கி மயங்கி விழுந்து எழுதல் நடக்குது என்று ஒருக்கா பார்க்கணும் போல இருக்கு !!!

எந்த பேராசிரியரையும் கடிக்க எழுதவில்லை , சிலவேளைகளில் உண்மையும் தான்!!!

2009-08-25

Nokia வின் தொலைபேசிகள்

என்ன கொடுமை இதுவா .. உண்மை எத்தனை விதமான கையடக்க தொலைபேசிகள்..இதை விட இன்னும் பலஇப்பவே கண்ணை கட்டுதா இல்லை இன்னும் இருக்கு. முடியல !!!!
அவசரம் எனின் கீழுள்ள இணைய தளத்திற்கு செல்லவும்
http://www.typhone.nl/gsm/3/nokia

ஐரோப்பிய நாடுகளில் இந்த இணைய தளம் மிகவும் பிரசித்தம். இணையம் மூலமாக கைத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் போது விளையும் குறைவு. நேரமும் கொஞ்சம். வீட்டிலையே பொருளை கொண்டு வந்து தருதல், இதை விட ஆறுதல் ~~~

2009-08-24

உலகிலேயே மிகப்பயங்கரமான நீச்சல் தடாகம்

என்ன என்று யோசிகிறீர்களா , உண்மை தான்.டெவில்ஸ்( Devils Pool) நீச்சல் தடாகம் தான் சிம்பாவே நாட்டில் உள்ளது. 128 அடி ஆழம் கொண்ட ஒரு நீர்வீழ்ச்சியின் உச்சி தான் அது. அதன் விளிம்பில் ஒரு நீச்சல் தடாகம். நீந்த தகுந்த காலங்கள், நீரின் நிலை குறைவாக உள்ள காலங்கள்.

இங்கு எல்லாம் போய் நீந்த வேணுமா ? என்றே தோன்றும். ஆமாம் இதுக்கென்று சென்று வருகிறார்கள் பல உல்லாச பயணிகள் !!!இந்த தொகுப்பை பார்த்த பல்கலை நண்பன் ஒருத்தன் சொன்னான். எங்கட கம்பசில இருக்கிற அந்த 50 மீற்றர் குளத்திலையே நாங்கள் இறங்கி பத்து அடி ஆழமான பகுதிக்கு செல்வது இல்லை. இது என்ன கொடுமை சார். உண்மையும் தான். நான் பல்கலையில் படிக்கும் காலத்திலும் சரி, விரிவுரையாளர் ஆக இருகின்ற காலத்திலும் சரி நீச்சல் அடிக்க போவதுதான். அங்கே அருமையான நண்பிகள்(சகோதர மொழி) உடன் நீச்சலில் ஒரு அரட்டை போட்டு விட்டு வருவது வழமை. அதுவும் 5 அடி ஆழம் மட்டும் நீந்தி சென்று ஐயோ அம்மாடி என்று ஓடி வந்து விடுவேன்.
இங்கே பர்ருங்களேன் இந்த இளசுகள், பழசுகளின் சேட்டைகளை !!!


இதன் காணொளிகளை இங்கே பார்வையிடலாம்

http://www.youtube.com/watch?v=4hlhidk7KgM"

போனால் போகட்டும் வந்தனீங்கள் இதையும் பார்த்து விட்டு செல்லுங்கள் !!!

ஒரு நல்ல சமாச்சாரம் இந்த அசின் பெயரில் நீச்சல் தடாகம். ( உண்மையாகவே இந்த அசின் இல்லை)
http://www.fabulousphilippines.com/asin-hot-springs.html

பிலிப்பைன்ஸ் நாட்டிலாமே . நல்லவேளை இது நம்ம ரசிகர் மன்றங்களுக்கு தெரியாது ,
தெரிந்தால் அப்புறம் நயன் நீச்சல் தடாகம், ஷ்ரேயா நீச்சல் தடாகம், அப்புறம் நம்ம ஜூனியர் தமன்னா நீச்சல் தடாகம், நம்ம சீனியர் த்ரிஷா நீச்சல் அரண்மனை , போனா போகுது நம்ம சுப்பர் சீனியர் நமீதா நீச்சல் தடாகம், நம்ம குரு மாவளிகா நீச்சல் தடாகம் என்று எல்லாம் கட்டி ஒரே நீச்சல் தான் கடைசியில்.

யாருக்கும் என் அறிவுரையை கேட்டு கட்ட போறது என்றால் எனக்கும் ஒரு சிறு லஞ்சம் தந்து போடுங்கள். பகவானே நமக !!!


சுவாமியே!!!! ஏன் நீங்கள் நம்ம ஷ்ரேயா, நமீதா, நயன் குளிக்கிற நீச்சல் தடாகம் பற்றி ??? சொல்லுகிறீர்கள் எங்கே அவர்கள் என்ற எனது பக்கத்து அறை நண்பனின் முனு முனுப்பு காரணமாக இந்தா ஒரு கிளைமாக்ஸ் காட்சியில் !!!!


Related Posts Plugin for WordPress, Blogger...