2009-10-31

எனக்கு பிடிச்ச சினி திரையில் வராத பைலா பாடல்கள்பல பாடல்களை கேட்டும் பார்த்தும் உள்ளேன் .. இருந்தாலும் மனதை கொள்ளை கொண்ட பாடல்கள்.

ரசித்து பாருங்கள் ..


1. ஏய் மாமா ..

2. வேம்படியில என் குருவி ( அம்மாடி அது அந்த குருவி இல்ல .... சபார் .. எனக்கு அடிக்கடி இந்த குருவி மட்டர் கிராஸ் பண்ணுது .... )
நன்றி - மெல்போர்ன் கமல் ( வரிகளை சுட்டேன்)

குரல்: ‘என்ரை மனுசி சண்டை போட்டால் சாரயம் கேட்குதடா. அந்தச் சாரயம் உள்ள போனால் பைலா கேட்குதடா....


குரல் 02: ஊத்தடா......மச்சான்.. சுதியேத்தினது போதும்டா..டேய்.... பாடடா....தோடா...


பாடல்:
வேம்படியிலை என் குருவி ஏ. எல் படிச்சவா
தாவடியிலை என் மனசை கொள்ளை அடிச்சவா
சில்லாலை கிழக்காலை தையல் படிச்சவா-ஒரு
சொல்லாலை தெல்லிப்பளை லூசர் அடிச்சவா

‘’ஏ...கந்சாமி கானா... கேளு கரவெட்டி மைனா’
நாவாந்துறை மீனு என்கிட்ட ஆட்டாதே வாலு!
(வேம்படியிலை என் குருவி...)


( கலவை பொருத்தம் இல்லை இருந்தாலும். பாட்டை ....ரசியுங்கள் ...)


சுன்னாகம் சந்தைக்கு நான் அன்றாடம் போகையிலே
பன்னாகம் பஸ்ஸுக்குள்ளே பார்த்துச் சிரிச்சவளே
வட்டுக்கோட்டை மேஸ்திரியார் கட்டினது கந்தர்மடம்
காங்கேசன் சீமெந்திலை கட்டினேண்ட்டி காதல் மடம்
சுண்டுக்குளி வந்ததுமே நெஞ்சுக்குளி நோவுதடி..
நாவற்குழி அண்டங் காகம் நாவறண்டு பாடுதடி.....
கந்சாமி உனக்கு காதல் கண்றாவி எதற்கு
நெஞ்சோடு சோகம் தீரும்... அண்ணாந்து ஊத்து
((வேம்படியிலை என் குருவி...)உண்ணாமல் உறங்காமல் உடுப்பிட்டி பஸ்ஸெடுத்து
அச்சுவேலி, ஆவரங்கால் புத்தூரில் நான் தவிக்க
இணுவில் மாம்பழத்தை, கோண்டாவில் கொய்யாவை
கொக்குவில் அணில் பார்த்துக் கொட்டாவி விட்ட கதை
நல்லூர் கந்தனுக்கு நாநூறு பழத் தேங்காய்
கீரிமலை வேந்தனுக்கு கேணி ஏறித் தீர்த்தம் வைத்தேன்
கந்சாமி உனக்கு காதல் கண்றாவி எதற்கு
நெஞ்சோடு சோகம் தீரும்... அண்ணாந்து ஊத்து
((வேம்படியிலை என் குருவி...)


அரியாலை ஊருக்குள்ளே மரியாதை உள்ளவனை
சரசாலைத் தவறணையில் குடிகாரன் ஆக்கிவிட்டாய்
கொட்டடியில் கோட்டை வைச்ச வெள்ளையனைக் கலைச்சது போல்
நாயன்மார்க்கட்டில் வைச்சு நாயே என்று கலைச்சு விட்டாய்
நவாலிப் புலவனுக்கு மீசாலைத் தாடியடி
கிளாலிக் கடலுக்குள்ளை பலாலி ஆமியடி.....
கந்சாமி உனக்கு காதல் கண்றாவி எதற்கு
நெஞ்சோடு சோகம் தீரும்... அண்ணாந்து ஊத்து
((வேம்படியிலை என் குருவி...)3. இப்போது பிரபல்யமாகி வரும் யாழ் தேவி பாடல் ..


4.. போனால் போகுது நம்மட SL Night :)
எத்தனையோ தாங்குறீங்க இதையும் சேர்த்துகுங்க

2009-10-27

தொடரும் மிட் நைட் மசாலா

நண்பிகளின் ஆசைக்கு /வேண்டுதலுக்கு ஏற்ப, நான் என்ன மிட் நைட் மசாலாவில் அடுத்து என்ன பாட்டு. என்று கேட்டதிற்கு, ( முதல் பாட்டு நடந்து அடுத்த பாட்டிற்கு இடையில் விளம்பரம் வந்ததால் அவர்கள் விடைபெற்று சென்றார்கள்.. அதால எல்லாருக்கும் சேர்த்து ....பதில்..

கதவடியில் சென்று வழியனுப்பி போட்டு வந்து பார்த்தால் .. தொடரும் மிட் நைட் மசாலாவில் ..

வள்ளி படத்தில் இருந்து.. என்னுள்ளே என்னுள்ளே .. ஆகா நல்ல பாடல்.. என்னுடைய favorite ..

பாட்டை கேட்க முதல் ஒரு பொழிப்பு:

பெண்ணின் போராட்டம் பற்றி ரஜனி எழுதி தயாரித்த இந்த வள்ளி படம்.. பார்க்க தவறியோர் பாருங்கள். இதில் இருக்கும் வடிவேலுக்கும் இப்போதைய வடிவேலுக்கும் ஆயிரம் வேறுபாடுகள்..
சாரம்சம் :
ஒரு பெண்ணை காதலித்து, அவளை கர்ப்பிணியாக்கிவிட்டு தலைமறைவாகிறான் ஓர் இளைஞன்.அவன் அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பாவிப் பெண்களை ஏமாற்றுவது என்பது அவனுக்கு பொழுதுபோக்கு. ஆனால் அந்தப் பெண் உண்ணாவிரதம் இருந்து தங்கள் காதலை ஊருக்கே தெரிய வைத்து அவனை பணிய வைக்கிறாள். துரோகியான காதலன், கணவனான மறுநிமிடமே அவனை கத்தியால் குத்திச் சாய்க்கிறாள், கதாநாயகி பிரியாராமன். இந்த `வள்ளி' படத்தில்தான் பிரியாராமன் அறிமுகம் . புரட்சிகரமான கதை அமைப்பைக் கொண்ட இந்தப் படத்தை, கே.நட்ராஜ்( சிலோன் நடராஜா ) டைரக்ட் செய்தார். . "அன்புள்ள ரஜினிகாந்த்'' படத்தை டைரக்ட் செய்தவர் என்றும் முன்னர் ஒருமுறை சொல்லி இருந்தேன்.
இளையராஜா இசையமைத்தார். பெறும் வெற்றியை தராத போதும்( பாருங்க உண்மையை சொல்லுறன் - தீவிர ரஜனி ரசிகனாய் இருந்தும், இப்படி மற்றையோரும் இருங்களேன்..டண்டனக்கா..டண்டா...)குடும்பமாய் பார்க்க கூடிய கதையம்சமான படம்.
தனது மனைவி இதை செய்யவில்லை.. ஆனாலும் இன்னொருத்தி சாதித்து காட்டி விட்டாள் என்று கதையை முடித்து இருக்கார் சூப்பர் ஸ்டார்.

நீ விரும்பிறதிலும் பார்க்க உன்னை விரும்பிறவளை கட்டி கிட்டா வாழ்க்கை நல்லா இருக்கும் என்ற ஒரு punch dialog ஐ சொல்லி நம்ம இளையோரின் மனசை திருடி சென்றார் நம்ம சூப்பர் ஸ்டார் :)


"என்னுள்ளே என்னுள்ளே'', "வள்ளி வரப்போறா'', "கூக்குவென கூவும் குயிலக்கா'', "என்னென்ன கனவு கண்டாயோ'' என அத்தனை பாடல்களும் சிறப்பாக அமைந்தன.

கே.நட்ராஜ் இக்கு உதவி இயக்குனர்களாக பணியாற்றிய ஹரி (தற்போது சூர்யாவின் சிங்கம் தயாரிக்கிறார் . இதை விட சாமி , நயன்தாராவை உலகுக்கு கொண்டு வந்த ஐயா , சூரியாவின் வேல், ஆறு எல்லாமே சூப்பர் படம்.), மணிபாரதி இருவரும் உச்சத்தில் இப்பொது.

படத்தில் இந்த பாடலை பாடியவர் : ஸ்வர்ணலதா ,ராஜா அனுபவித்து பாடியுள்ளனர்.. .. என்ன ஒரு அற்புதமான பாடகி ஸ்வர்ணலதா .. இப்போது சான்ஸ் இல்லாமல் ..:(


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்ன ல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிளிட்டதேன்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்ன ல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற
காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போலே இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்கமே தான்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்


High Quality- Film Video Song

இதையும் பாருங்க ..வள்ளி வர போறா பாடல்

இந்த பாட்டு எனது கல்லூரி காலத்தில் ஒரு தமிழ் தின விழாவில்( பெரும்பாலும் 1993 இல் ) எங்கள் கல்லூரி அண்ணா மார் பாடி கலாய்த்து இருந்தனர்.
குக்கூ கூ கூ கூவும் குயிலை பார்

டிங்கு டாங்கு ரப்பபோ ..
விறு விறுப்பான காட்சியான " அவளது ஆசையை தீர்த்தல் "

ராஜா அங்கிள் பாடின " என்ன என்ன கனவு கண்டாயோ .. வாழ்க்கை ஒரு கனவு தானையா .."பாடல்இந்த பாட்டோட்டு அடியேனும் உறக்கம் கொண்டதால்... மிட் நைட் மசாலா முற்றும்.

2009-10-25

பேய்களின் உலகம் - Halloween Day- Oct 31stமேற்குலகில் பிரசித்தி பெற்ற விசேட தினங்களில் கலோவின் பண்டிகையும் (Halloween festival) முக்கியம் பெறுகிறது...!October 31 திகதியை பேய்கள் (Halloween)தினம் அது புனித ஆத்மாக்கள் தினம், (எங்கடை ஆடி அமாவாசை மாதிரி) அது கால போக்கிலை இப்ப பேய் மாதிரி உடுப்பு போட்டு தண்ணியடிச்சு ஆடுற தினமாக்கிட்டாங்கள் வியாபார விற்பன்னர்கள்.வருடம் ஒன்றில் ஒளி தந்த காலப்பகுதியில் (சமர் -summer) இருந்து இருள் சூழும் காலப்பகுதியுள் உலகம் செல்லும் போது (Winter - வின்ரர் ஆரம்பிக்கும் காலம்)
பூவுலகுக்கும் விண்ணுலகுக்கும் இடையே உள்ள தடைகள் தற்காலிகமாக விலக அக்காலப்பகுதியில் பேய்களின் பூவுலக ஊடுருவல்களும் செயற்பாடுகளும் உச்சம் பெறுகின்றனவாம்...அதனாலேயே காத்திகை முதலாம் (November 1 ) திகதியை பேய்கள் உச்சம் பெறும் நாளாகக் கருதி பேய்களைப் போல வேடம் இட்டு தீ மூட்டி
இப்பண்டிகையை கொண்டாடுகிறார்களாம்...! தீ மூட்டி வெளிச்சம் தந்து பேய்களை விரட்டுவதாக நம்பியே இவ்வாறு செய்கின்றார்களாம்...!என்ன பூசணிக்காய் இக்கு படு கிராக்கி .. Barn BUddy , Farm VIlle இல் தோட்டம் செய்யும் அன்பர்களே கொஞ்சம் பூசணிக்காய் விதையுங்க .. நல்லா உழைக்கலாம்..


விதம் விதமான செதுக்கல்கள்

இதை விட ஆவிகளை போல தங்களை அலங்கரித்து கொண்டு night club , music COncert போய் தண்ணி அடித்து கலாய்ச்சிட்டு வருதல் .. தான் நடக்கும் வழமை..எனக்கு தெரிந்த விறு விறுப்பான பேய் கதைகள்

பேய்கள் உருவாகின பற்றி கதைகள் பல இருக்கின்றன. இறக்கும் உயிர்கள் (ஆத்மா) ஒழுங்காக இந்த உலகத்தை விட்டு பிரியாது இருப்பது தான் காரணம் , அவர்கள் முன்னர் நடமாடிய இடங்களை சுத்தி சுத்தி வருதல் , அவர்களின் நண்பர்களின் வீடுக்கு சென்று கதவை தட்டல், தொலைபேசியில் உரையாடல், என்று எல்லாம் விறு விறுப்பான கதைகள் இருக்கு. இதுக்காக தான் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வது வழக்கம். இந்த இடத்தில சென்று மன அமைதியாக நின்று பிரார்த்தனை செய்யாதவர்கள் வீட்டுக்கே அந்த பேய்கள் செல்வதாக கூறுபவர்களும் உண்டு. கவனம் எனிமேலாவது கொஞ்சம் பார்த்து...

இரவு வேளையில் சுடு காடு உள்ள வீதி , இருட்டான பாதை , ஆற்றங்கரை , புளியமரம் , போன்ற இடங்களில் உலாவி திரிந்த ஆட்களிடம் சுருட்டுக்கு நெருப்புக் கேட்ட பேயிடம் இருந்து தப்பித்து வந்து காய்ச்சலில் படுத்த ஆட்கள் கூட இருக்கிறதாக கதைகள். இதை விட யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் அடிக்கடி இந்த பேய் கதைகள் கேட்டு உள்ளேன்.

வீட்டிலிருந்து பிணத்தைச் சுடுகாட்டுக்குத் தூக்கிட்டுப் போகும்பொழுது வழிமுழுக்கப் பூக்கள் சிதறிக் கிடக்கும். அவற்றை மிதித்தால் கூடப் பேய்கள் பிடித்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையும் இருந்தது. இறுதி ஊர்வலத்தில் வழிமுழுக்கக் கடுகைத் தூவிக்கிட்டே வரணும். அப்பத்தான் சுடுகாட்டில் இருந்து வீட்டுக்குப் பேயாக வர்ற ஆவி, ஒவ்வொரு கடுகாகப் பொறுக்கிவிட்டு வருவதற்குள் பொழுது விடிச்சிடும்; பேயும் பொழுதானால் ஓடிப் போயிடும். சுடுகாட்டில் இருந்து திரும்ப வருகிற ஆட்கள் வாசலில் கிடத்தப்பட்டிருக்கும் உலக்கையைத் தாண்டித்தான் வீட்டுக்குள்ள வரவேண்டும். இல்லாவிடில் பேயும் வீட்டுக்குள்ளே வந்துவிடும்.


விதம் விதமான செதுக்கல்கள்

இருந்தாலும் நம்மில் பலருக்கு பேய் நம்பிக்கை இருக்கின்றது என்பதற்கு ஒரு சில சான்றுகள்

-தாயத்துக்கட்டுதல், விபூதி பூசுதல்( தூங்கும் போது விசேடமாக), சிலுவை அணிதல், வாசலில் எலுமிச்சை-காய்ந்தமிளகாய் -உப்பு கட்டுதல், சாந்தி செய்தல்

- இதை விட பிரமாதம் நாடெங்கும் தோன்றியுள்ள சுவாமிகள் மார் (எந்த மதத்துக்கும் பொருந்தும் ) -- ( பெயரை குறிப்பிடாமல்) பேயை விரட்டுகின்றேன், ஆவியை ஓட்டுகின்றேன் என்று ஒருபக்கத்தில் வேறு…இதற்கு எடுக்கும் பணமோ ரொம்ப அதிகம் (10 000/--20000/-)

இப்படியெல்லாம் இருக்க இவர்கள் ஏன் பேயுடன் விளையாடுகின்றனர்? நாம் பேயை விரட்ட படாத பாடுபட்டுக்கொண்டிருக்கும் போது, இவர்கள் பேயை பிடித்து வீட்டில் வைத்து கொண்டாடுகின்றனர்!???

எனக்கும் ஒரு நாள் ஆசை அவரை / அவவை பார்க்க ... விளைவுகள் என்னாகுமோ..

சரி பேயை பார்த்தவர்கள் / பேய் நம்பிக்கை இருப்பின் இந்த கேள்விகளுக்கு விடை தாங்க..

1- எப்புடி பார்த்தீங்க , கதைதீங்களா, என்ன உருவம், அழகானதா( நம்ம நடிகைகளை விடவா ?) , காலை பார்த்தீர்களா?
2- என்ன காரணம் பேய்கள் குளியலறை , சமையலறை, கிணற்றடி , புளியமரம் போன்ற இடங்களுக்கு தான் வருமா.. ஏன் கட்டில் , படுக்கை அறை, இருக்கை அறை , இடங்களுக்கு வாறதில்லை.


சின்ன புள்ள தனமாய் கேட்க வில்லை .. உண்மையா ஒரு ஆர்வத்தில்தான்....

பேய்கள் பற்றி எழுதிய வலைப்பதிவுகள்

  1. http://loshan-loshan.blogspot.com/2009/03/blog-post_05.html
  2. பேய்களும், பேயர்களும், பேய்க்காட்டுதல்களும் http://chummaah.blogspot.com/2009/07/blog-post_08.html
  3. பேய்களும், பேயர்களும், பேய்க்காட்டுதல்களும் II http://chummaah.blogspot.com/2009/07/ii.html

Hollywood திரை படங்களில் சூப்பர் கிட் ஆன படங்கள் ;
1-Drag Me to Hell -2009
2-Evil Dead- 1987
ஒரு முறை பாருங்கள் .. சவுண்ட் system நல்லா இருந்தா தூள் பறக்கும்.. இந்த இரண்டு படங்களையும் Sam Raimi என்ற பிரபல்யமான இயக்குனர் (Spider Man I, II,III) இயக்கி இருக்கின்றார்.

Drag Me to Hell -2009- Trailer...

எனக்கு தெரிந்த அளவில் தமிழ் திரை யில் ஆங்கில படங்கள் போன்ற விறு விறுப்பான பேய் அம்சமான படங்கள் இல்லை , இருந்தாலும் ரஜனியின் சந்திரமுகி கொஞ்சம் விறு விறுப்பாக இருக்கும்.


பேய் இருக்கா இல்லையா - சந்திரமுகி காமெடிரா ரா பாடல்


நண்பி சொல்லுறா எங்கட நடிகைகளை முகத்துக்கு cream போடாமல் நடிக்க விட்டா பேயையும் பார்த்தா இருக்குமாம் .. காமெடியாவும் இருக்குமாம்..
இன்னொருத்தி சொல்லுறா நீங்க வீட்லையே பேயை பார்க்கலாமே; எப்புடி .. அதுதான் உங்க மனைவிக்கு சொல்லுங்க இன்றைக்கு என்னால சமைக்க , தோய்க்க , கடைக்கு போக ஏலாது என்று .........:) ஆஹா அப்புறம் நான் ஓவர் டைம் வேலை செய்து குசினி பாத்திரங்கள் எல்லாம் வாங்கணும் .. ஹா .,..:)

இதையும் ஒருக்கா...


2009-10-24

மீண்டும் மீண்டும் வா -Mid Night Masala..

என்ன தலைப்பே சரி இல்லை என்று யோசிக்காதையுங்க....
நேற்று ராத்திரி ( ஆஹா .. திரும்பவும்... ) சூரன் போர் முடித்து விட்டு வீடு வந்து சேரும் போது, நள்ளிரவு ஒரு மணி. உடல் சலிப்பு , களைப்பு என்று போட்டு என்னுடன் வேலை செய்யும் நண்பிகளும் ( எல்லாமே அயல் வீடுகள் தான் ) சூரன் போர் முடிச்சு வந்ததால் அவர்களும் என்னுடன் தேநீர் அருந்த ஆரம்பிக்கும்போது தொலைக்காட்சி பெட்டியை முறுக்கினால் அடுத்த நிகழ்ச்சியாக மிட் நைட் மசாலா ஆரம்பம் ஆக இருப்பதாக... விளம்பரம் .. இந்த நிகழ்ச்சியை நான் பார்த்து கூட இல்லை. உண்மையை சொன்னால் உந்த நேரம் யாரவது போய் மினக்கெட்டு பார்த்திட்டு இருப்பானோ... சரி போனால் போகுது என்று ஒன்று இரண்டு பாட்டை பார்ப்போம் என்று கொஞ்சம் பொறுமையுடன் இருந்தால், அதுக்குள்ளே ஒருத்தி சொல்லுறா " பிரியன் நீங்க எல்லாம் இதையா...", அப்புறம் நான் கேட்டேன் " பின்ன எதை ???" உடனே அவை " அதுதானே உங்க ஸ்டோர் இல் இருக்குமே... இருக்குமே..அதுகளை ..." ஐயோ அம்மா நீங்க எல்லாம் சின்ன புள்ள தனமா இருக்கீங்க என்று சொல்லி மாறி மாறி கலாச்சிட்டு இருக்கும் போது
ஆரம்பிச்சிட்டு நிகழ்ச்சி .. முதலாவது பாடல் விக்ரம் படத்தில் " மீண்டும் மீண்டும் வா.. " ... .. பாட்டு மட்டும் இல்லை படமே சூப்பர் படம்..

எனக்கு ஏற்கனவே இந்த பாடலை அடிக்கடி கேட்டு/ பார்த்து இருக்கேன்.. இருந்தாலும் இது எல்லாம் மிட் நைட் மசாலா பாடல்கள் ... என்னும் போது ...ம்ம்..


பயந்திடாதையுங்க...பாச முத்தம் மகள் ஸ்ருதிக்கு :)

விக்ரம் படம் பற்றிய தகவல்கள்

1986 ஆம் ஆண்டு வெளிவந்த விக்ரம் படம் அந்த காலத்தில் ஆங்கில படங்களுக்கு சவால் விடும் விதத்தில் பிரமாண்டமாக எடுக்க பட்ட படமும் சக்கை போட்டு ஓடிய படமும் என்று சொல்லலாம். இந்த படத்தை நான் வவுனியா வசந்தி திரையரங்கில் 1987 களில் பார்த்து இருக்கின்றேன்.. இளையராஜா வும் மிகவும் அழகாக இசையமைத்திருப்பார்
கமல் எடுக்கும் சிரமமான கதாபாத்திரத்துக்கு இந்த படமும் ஒரு சான்று..
உலங்கு வானூர்தியில் ஒரு சண்டை காட்சி என்று நினைக்கின்றேன் .. டூப் இல்லாமல் எடுத்ததாக ஒரு பேட்டியில் சொல்லி இருக்கின்றார் :)

மேலதீக தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Vikram_(film)

ஒருக்கா நீங்களும் அந்த பாட்டை .. பாருங்களேன்...
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி
பாவையோ ஓர் மாதிரி
அழகு ஏராளம்
அதிலும் தாராளம்
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா

ஆண்மையென்னும் வார்த்தை கேட்க
தோற்றம் நீ தானா
தேக்கு மரத்தில் ஆக்கிவைத்த
தேகம் இதுதானா


செந்நிறம் பசும்பொண்ணிறம்
தேவதை வம்சமம்
தேய்பிறை விரல் தீண்டினால்
சந்திரன் அம்சமம்

தொடங்க

மெல்லத்தொடங்க

வழங்க

அள்ளி வழங்க

இன்பப்போதைதான்
இந்த கீதைதான் அம்மம்மாஆஆஆஆ


மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா

விரகம் போலே உயிரை வாட்டும்
நரகம் வேறேது
சரச கலையை பழகிப்பார்த்தால்
விரசம் கிடையாது
Quality Good

தேன் தரும் தங்கப்பாத்திரம்
நீ தொட மாத்திரம்
ராத்திரி மறு????? பார்க்குமோ பாத்திரம்

கவிதை

குட்டிக்கவிதை

எழுது

அந்திப்பொழுது


கொஞ்சம் பாடல் தான்
கொஞ்சம் ஊடல் தான் அம்மம்மாஆஆஆஆ ஹாவ்

மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா


மீண்டும் மீண்டும் வ்வா
வேண்டும் வேண்டும் வா

பால் நிலா ராத்திரி
பாவையோ ஓர் மாதிரி


அழகு ஏராளம்
அதிலும் தாராளம்


அழகு ஏராளம்
அதிலும் தாராளம்இதை விட ஜேசுதாஸ் ஐயா பாடிய சிப்பிக்குள் ஒரு முத்து மலர்ந்தது இன்னுமொரு கிட் பாடல்


அன்றைய இளசுகளின் (இன்றைய பழசுகளின்) கனவு கன்னி .. அம்பிகாவுடன்
வனிதாமணி பாடல்
இன்னொரு பாட்டு என் ஜோடி மஞ்ச குருவி ; அந்த காலத்தில் வந்த ஒரு ஆட்டமான பாட்டு...

2009-10-22

குறிஞ்சியில் சூரன் போர் ஒரு சிறப்பு பார்வை

வருடாவருடம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் கந்த சஷ்டி விரதம் தொடங்கப்பட்டு ஆறு நாட்கள் ஆறுமுகப்பெருமானை வழிபடப்படுகின்றது. அந்த வகையில் இம்மாதம் 19ம் திகதி தொடக்கம் இம்மாதம் 24ம் திகதி சனிக்கிழமை வரை கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது


போரிட முன் சூரனின் விநாயாகர் வழிபாடுஇறுதி நாளான சனிக்கிழமை, மாலை சூரன் போர் பெரும்பாலும் எல்லா கோவில்களிலும் களை கட்டும். குறிப்பாக முருகன் கோவில்களில் மக்கள் அலை மோத முருகன் சூரனுடன் போராடுவார்.வரலாறு

அசுரகுல நாயகனாக இருந்த தொல்லைகள் அளவுக்கு மீறிய சமயத்தில், அவனுடைய ஆணவத்தை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று தேவர்கள் முருகப் பெருமானிடம் வேண்டுகோள் வைத்ததாகவும், முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கடற்கரையில், சூரபத்மனுடன் முருகப் பெருமான் போரிட்டு சூரனை வென்றதாகவும், முருகப்பெருமான் சூரபத்மனுடன் போரிட்டு வென்றதை கந்த சஷ்டி விரதமாக பக்தர்கள் மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபடுவதாகவும், சூரசம்ஹாரம் முடிந்ததும் விரதத்தை நிறைவேற்றியதாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.இது இவ்வாறு இருக்க .. எனக்கு தெரிந்த முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் பார்த்து இருந்தாலும், குறிப்பாக எனது பல்கலை காலங்களில் கண்ட மன்னிக்கவும் செய்த கலந்து கொண்டு உடல் பயிற்சி செய்த தை நினைத்தால் எப்படா கெதியா தாயகம் சென்று மீண்டும் களத்தில் இறங்க வேண்டும் என்ற அவாவில் இருக்கின்றேன்.


எங்கள் அனுபவங்கள் ஒரு சில கதையம்சமும் , புகைப்பட தொகுப்பும் நிறைந்ததாக இங்கே வலம் வருகின்றது

எங்கள் சூரன் சுமார் 4 அடி உயரம், பிதுங்கும் விழி, கையில் அம்பு வில்’ நீல நிறத்தில் ,அச்சுறுத்தும் பார்வையுடன் இருப்பார்.
தினமும் நாங்கள் முருகனை தூக்கி தூக்கி தோளில் வைத்து வீதி உலா வரும் இளம் சிங்கங்கள் அன்று மட்டும் எதிரியின் பக்கம்
சூரனை வழிப்படுத்தி முருகனுடன் போரிட செய்தல் எங்களின் கடமை.
மாலை நான்கு மணிக்கு சனம் வர தொடங்கும், பல்கலை மாணவர்கள் தவிர ஊரார் , விரதம் பிடிப்போர் என்று சனம் நிரம்பி வழியும்.


ஆரம்பமே அமர்க்களம் ..

சரியாக நான்கு மணி பிள்ளையார் பூசையுடன் சூரன் தன் படையணிகளுடன் தயாரகி விடுவான். எனக்கு தெரிந்த அளவில் தளபதிகள், பிராந்திய தளபதிகள், கட்டளை தளபதிகள் எல்லாம் முதலே திட்டங்களுடன் இருப்பதால் , இலகுவில் காலாட்படை , உளவறியும் படை, கிளைமோர் வைக்கும் படை என்று எல்லாம் பெயர் வைத்து இருக்கும் ஆட்களை வைத்து கொண்டு சூரன் போரை முன் நடத்த கூடி இருக்கும்.

ஒரு முறை உணர்ச்சி வசம் கொண்ட தோழர்கள்கள் வசந்த மண்டபத்துக்குள்ளேயே புகுந்து விட்டார்கள் சூரனுடன் . கோவில் குருக்களே பயந்து ஈடாடி போனார் :)பெரும்பாலும் விரதம் பிடிப்போர், தொந்திகளுக்கு தொல்லை குடுக்காமல் இருப்போர் முருகனுடனையே நின்று கொள்ளவர்,

குறிப்பாக இந்தச் சூரன் சிங்கத்தலை,யானைத்தலை,எருமைத்தலை என பல தலைமாற்றங்கள்.

சூரன் ஆரம்பத்தில் யானை முகத்துடன் வந்து செய்யும் அட்டகாசமான நகர்வுகளை முருகன் நக்கலாக ;" என்ன சின்ன பிள்ளை தனமாய் இருக்கு என்று " பார்த்தாலும் , தொடரும் விறு விறுப்பான தாக்குதல் மூலம் முருகன் மட்டும் இல்லை பார்க்க வந்தவர்கள் சரி, குருக்கள் சரி திணறிபோடுவார்கள்.முன்னுக்கு கொம்பு பிடிக்கும் என்னை போன்ற கொஞ்சம் உடம்பு மிக்கவர்கள் தங்கள் சாதுரியத்தை பாவித்து வேகமாக வந்து குதி அடிக்கும் ப்ரேக் சூரனை காவுறவர்கள் திக்கு முக்காடி போகும் அளவுக்கு அப்படி ஒரு கால் பிரேக். சட புட என்று அடிக்கும் வட்டம் , கீழே மேல என்று சடம் புடாம் என்று தூக்கி போட்டு கொண்டு பின்னுக்கு போகுதல் ,முன்னுக்கு வரல் , சடார் என்று எல்லாத்தையும் போட்டுட்டு ஓடி போதல் , எல்லாம் வியக்கும் ஆரம்பங்களே. இதிலும் இன்னொன்று ஒரு முறை கொம்பு பிடித்த நான் என்னை மீறி கொம்பு சென்றாதால் அருகில் உள்ள ரோஜா தோட்டத்துக்குள் தூக்கி எறியப்பட்ட சோகமான சம்பவங்களும் நடந்துள்ளது. எனக்கு மட்டும் இல்லை பலர் அப்படி மாட்டி உள்ளார்கள்.

களைப்பு என்பதற்கு இடமே இல்லை . போரை தோய்ய விடாமல் மாறி மாறி படையணிகளை சூரனுடன் அனுப்பி போரிடுதல் தான் எங்களை போன்ற மூத்த உறுப்பினர்களின் கடமை. ஆரம்பத்தில் ஒருக்கா களைத்தாலும் , பிறகு பழகி போடும்.

களைக்கும் தோழர்களுக்கு விசேடமாக குளிர் பானங்கள்,தேநீர், கோப்பி, வடை , பிஸ்கட் என்று சாராமாரியாக குடுத்து உற்சாக படுத்த எங்களின் சமையல் படையணி , பின் புலத்தில் இயங்கும்.


எல்லாத்திலும் பாராட்ட வேண்டிய ஒருவர் சூரனை இப்படி எல்லாம் நாங்கள் வதை செய்யும் போது சூரனின் தலையை ஆட்டும் மகான் , படும் அவலமோ சொல்ல முடியாது. இருந்தாலும் அவரின் வல்லமையால் எல்லாம் சமாளிப்பது( களத்தில்), அடுத்த நாள் அவருக்கு அதன் பலன் தெரியும் என்று நினைக்கின்றேன்:)

ஏறத்தாள ஒரு மணி கடும் போருக்கு மத்தியில் பிள்ளையாரடியில் முதலாவது தலை விழும்.
விசேடமாக தவில் பிடித்து அடிக்க வைப்பது எங்களை போன்றோருக்கு ஒரு ஆசை.
மேளம் சரி இல்லாட்டி போர் சூடு பிடிக்காது. தவில் அடிக்கும் அடியில் பொடியன்கள் சிறப்பாக செயல்படுவான்கள்.

கந்த சஸ்டி கூட ஒரு fast track அடிதான்.
நாங்கள் சினிமா பாடல்களுக்கு தடை அதனால் எல்லாமே முருகன் பாட்டு தான். அதுவும் ஒரு கிக்கு தான்வீதி எங்கும் சனம் நிரம்பி வழிய அவர்களுக்கும் சூரன் சென்று பிரேக் போடுவதும் அவர்களை ஒருக்கா கத்த செய்வதும் சூரன் செய்யும் ரீங்கார சேஷ்டைகள். அதுவும் மழை பெய்யும். எங்களுக்கு சொல்லியா குடுக்கணும் அடிக்கும் பிரேக் சேறு எல்லாம் கொண்டே எல்லாரிலும் பிரள செய்து பார்த்து கொண்டு நிற்பவர்கள் எல்லாம் களத்தில் இறக்குவதே நோக்கம்.
இதை விட பொடியல் எல்லாம் வேட்டியும் சால்வையுமா நிக்கும் போது, பெண்கள் யார் எல்லாம் கட்டுடம்பு பொடியல் என்று என்று ஒரு ஓரக்கனாலே பார்ப்பதும் இந்த சூரன் போர் இல் தான்.சிங்க தலையுடன் திரியும் சூரன் காட்டும் வித்தைகள் பல, சாரமாரியான வித்தைகள். விறு விறுப்பானது சூரனை தாங்கியவாறு முழங்காலில் நடப்பது , கடினமான ஒன்றாயினும் அந்த நேரம் எல்லாம் போர் மயமாய் இருக்கும் போது செய்துபோடுவார்கள்.


இதை விட ஹலோவீன் ஸ்டைல் இல் வெளிக்கிட்டு வந்த காட்டும் மாஜா ஜாலங்கள் பல. எல்லாமே புதுசா இருக்கும்.

இறுதியாக உள் வீதியில் நடக்கும் பாரிய முறியடிப்பு தாக்குதால் தான் நெருப்புடன் வந்து தாக்குதல். இது முதன் முறை செய்யும் போது முருகனை தூக்கி கொண்டு முன்னுக்கு நிண்ட விடலை பசங்கள் எல்லாருமே ஓடியே போட்டாங்கள் நெருப்புக்கு பயத்தில. இதில இருந்தே தெரியும் யார் எல்லாம் முருகன் பக்கம் இருப்பாங்கள் என்று. வாயுக்குள் மண்ணெண்ணெய் நிரப்பி பந்தத்துக்கு ஊதி நெருப்பால் முருகனை வெருட்டல். உண்மையில் அதை செய்த நம்மட நண்பன் துளசிக்கு வாழ்த்துக்கள். உண்மையாவே அதை செய்வது கடினம் அந்த டென்ஷன் இல் நெருப்பு பரவி வர வேணும். வியக்கும் வித்தைகள்..


108 தடவைகள் சூரனை தூக்கி எறிந்து பிடித்தல், தோளில் நண்பர்களை ஏற்றியவாறு அவர்களின் மேல் சூரன் ஓடி திரிதல், இன்னும் என்னை வியக்கசெய்தவை.

இடும் கட்டளைகளை செவ்வனே நிறைவேற்றும் தோழர்கள். நினைக்கவே மெய் மறக்குது.மூலஸ்தானத்துக்கு முன்பாக கோபுர வாசலில் நடை பெறும், மலைக்குள் இருந்து பதுங்கி தாக்குதல், சேவல் , மயில் எல்லாம் இல்லாடியும் எல்லாம் கொடிகளே. இருக்கும். இருந்தாலும் விறு விறுப்பாக செய்து வைப்பதில் முருக அடியார்கள்.

வெளி வீதியில் நடக்கும் போரில் முதலில் மாமரக்கிளையுடனும் வருவார். அந்தக் கிளையில் தொங்கும் மாங்காய்க்கு நாங்கள் அலையா விட்டாலும் அந்த மாங்காய்க்கு, திருமணமான பெண்களிடமும், பலகாலம் குழந்தைப் பாக்கியமில்லாப் பெண்களிடமும் கேட்டால் சொல்வார்கள் இந்த மாங்காய் சாப்பிட்டால் குழந்தைப் பாக்கியம் கிட்டுமென்பது நம்பிக்கை.அது நடந்ததாகக் கூடப் பலர் கூறக் கேட்டுள்ளேன்

அதற்கு பிறகு நடை பெறும் இறுதி யுத்தத்தில் 108 தடவைகள் வட்டம் அடித்தல் சொல்லி முடிக்க்க இயலாது, முடியும் கையேடு மாறி மாறி மூன்று தடைவைகள் அடிக்கும் வட்டம், கீழே மேலே தூக்கி போட்டவாறு ஓடி திரிதல் தண்ணி விசிறியவாறு அங்கேயும் இங்கேயும் ஓடுதல், என்று பல வித்தைகளை காட்டி இறுதியாக முருகனின் காலில் இரவு 9 மணியளவில் சரண். ஆறு மணி நேரம் நடந்த உக்கிர சண்டை முற்றும்பெறும்.
இதற்குள் இவ்வளவு நடந்தும் தொடர்ந்து விஷேட அபிஷேகம் அன்று சொல்லி இரவு 11.30 மணி செல்லும்.


அதிகாலையில் பாறணை சமையல் (2002)
இடம் இருந்து வலம் தேவர், பிரியன், பத்மநிருபன், அரவிந்தன்

இதிலும் சுவரஷியம் என்னவென்றால், பலர் இரவு கோவிலில் தங்கி அதிகாலை நடை பெறும் பாறணை பூசையில் கலந்து கொள்வார்கள். இரவு முழுக்க இருந்து அடிக்கும் அரட்டை அதிகாலை 3 மணிக்கு நிறைவுக்கு வரும். நீராடி போட்டு சமையலில் ஈடுபட்டு காலை 6 மணிக்கு பாறணை தயார். பிறகு அந்த பூசைக்கு பின் விரதம் முறிப்பவர்கள், முறிக்க எங்களை போன்றவர்கள் நல்லா ஒரு பிடி பிடித்து போட்டு தூக்கம் கொள்ள சரி. பகல் மீண்டும் திருக்கல்யாண தயார் படுத்தல்கள். அது இன்னொரு பெரிய கதை. எல்லாம் முடிய இரவு போய் அறையில் படுத்தால் சொர்க்கம் தெரியும், முந்த நாள் போட்ட ப்ரேக், சுழட்டி அடிச்ச வட்டம், தூக்கி எறிந்த ஏறி, கும்மியாட்டம் எல்லாவற்றின் பின் விளைவுகள் பல,


முதல் நாள் அடிச்ச ப்ரேக் அடையாளங்கள்

எல்லாம் நன்மைக்கே என்று போட்டு பனடோல் தேவையாயின் அதனையும் போட்டு போட்டு பல்கலை சென்ற வரலாறுகளும் இருக்கு.


இங்கே பகிரப்பட்ட படங்கள் என்னிடம் இருந்தவை, பலர் எங்களை போல செய்தார்கள், செய்கிறார்கள்,செய்வார்கள் அவர்களுக்கு எல்லாம் குறிஞ்சிக்குமரன் அருள் கட்டாயம் கிடைக்கும் என்று சொல்லி எனது அனுபவங்களை நிறைவு செய்கிறேன்.

மகா கும்பாபிஷேக தினத்தில் ....


கதிரை மலை சிவன் கோவில்

எங்கள் ஊர் சுன்னாகம், சுன்னாகத்தை பற்றி ரொம்ப சொல்ல வர வில்லை . இரண்டு பிரபல்யம் ஒன்று சந்தை , இரண்டாவது பவர் ஸ்டேஷன்.இதை விட வழமையான ஒன்று தான் கோவில்கள். எங்கள் வீட்டுக்கு முன்னால் , உள்ளது கதிரை மலை சிவன் கோவில். இந்த கோவில் எங்கள் மூதாதையர்களின் வழியில் வந்த கோவில். எங்களுக்கும் உரிமையான கோவில்.


சுவர்னாம்பிகா தேவிபொன்னம்பல வானேஸ்வரர் பெருமான்

சமய ஈடுபாடுகள் கடுமையாக வரவும் இந்த ஆலயம் தான் எனக்கு basement. சிறு வயதில் வேறு மாவட்டங்களில் இருந்ததால் திருவிழா என்றால் வரிஞ்சு கட்டி கொண்டு ஊர் வந்து விடுவோம். குறிப்பாக இந்த ஆலயம் வருடத்திற்கு மூன்று தடைவகள் கொடியேற்றம் . ஒன்று சிவன் வாசல், அம்மன் வாசல் மற்றது திருவெம்பாவை. கால போக்கில் இரண்டாக மாறியது. திருவெம்பாவை காலத்தில் சகடையில் தேர் அமைத்து இழுத்து வருதல் வழமை.

இப்படியான ஆலயத்தில் எனக்கு தெரிந்த 3 கும்பாபிஷேகங்கள் நான் கலந்து கொண்டேன். ஒன்று 1984 களில் இரண்டாவ்து, 1998 இல், மற்றையத்டு 2005 இல்.
கடைசி இரண்டிலும் எனது பங்களிப்பு மிக்க அதிகம்.இதன் அனுபவங்களை எழுதினால் நீண்ட நேரம் எழுத வேண்டி இருப்பாதால், குறிப்பாக கும்பாபிஷேகம் தினத்தில் நடை பெறும் பூசைகள் பற்றிய விளக்கத்தை தந்து விடுகிறேன். இவை யாவும் ஒரு நூலில் இருந்து பெறப்பட்டவை.

மந்திரங்கள் பல உறைந்து நிறைந்து உள்ள இறைவனின் உறைவிடம் அது என்பதால், நமக்கு பிரச்னை தீர நல்வழி காட்டுகிறது. அதோடு, அக்கோயிலில் சரியான உச்சரிப்புடன் மந்திரங்களைச் சொல்லி உருவேற்றிய யந்திரங்கள் ஸ்தாபிதம் செய்யப்பட்டிருப்பதும் ஒரு காரணம்.


மந்திரம் என்பதற்கு, ‘சொல்பவனைக் காப்பது’ என்று பொருள். அந்த மந்திரங்களை ஒருங்கிணையச் செய்து, ஒன்றாகக் குவியச் செய்து, இறைவனின் கருவறையில் அதன் சக்தியை நிலைபெறச் செய்வதற்கு, குடமுழுக்கு என்று பெயர். வைணவத்தில் சம்ப்ரோட்சணம் என்றும்; சைவத்தில் கும்பாபிஷேகம் என்றும் சொல்லப்படும் இந்த தெய்வப் பிரதிஷ்டை எப்படி நடத்தப்படுகிறது? இதன் உள்ளர்த்தங்கள் என்ன?கும்பாபிஷேகத்திற்கான விதிகளை, வாமதேவர் என்கிற வடமொழி நூலாசிரியர், தான் எழுதிய வாமதேவ பத்ததியில், சிவபெருமான் முருகனுக்குக் கூறுவதாக எழுதி இருக்கிறார்.

அதைப்படித்து அறிந்து கொண்டால், குடமுழுக்கு விழாவினை நேரில் தரிசித்த புண்ணியம் கிட்டும் என்பது ஐதிகம்.
கும்பாபிஷேக வகைகள்

ஆவர்த்தம்: இயற்கைச் சீற்றங்களால் சிதிலமடைந்துவிட்ட ஆலய மூர்த்தங்களை சரிசெய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு, இப்பெயர்.


சர்வேஸ்வரக்குருக்கள்


அநாவர்த்தம்: தவசிகள், ரிஷிகள், முனிவர்களால், மலைப்பகுதிகளிலிருந்து கல் கொண்டுவரப்பட்டு தெய்வச்சிலை செய்து வழிபடுவது.

அந்தரிதம்: பாவிகள், திருடர்கள், உலோபிகளால் சேதப்படுத்தப்பட்ட கோயிலைப் புதிதாக்கி கும்பாபிஷேகத்தை நடத்துவது இந்த வகை.
குடமுழுக்கு என்னும் கும்பாபிஷேகம் தொடங்குவதற்கு முன்பு, மகாகணபதியைப் பிரார்த்திக்க வேண்டும்.

விக்னேஸ்வர பூஜை: கும்பாபிஷேக நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுவதிலிருந்து பூர்த்தியாகும் வரையில் எந்தவிதமான இடர்களும் வராமல் இருக்க, மஞ்சள் பொடியால் பிள்ளையார் பிடித்து பூஜை செய்வதே விக்னேஸ்வர பூஜை.


புண்யாக வாசனம்: வருணபகவானை இடம் சுத்தமடைய வேண்டுவதே புண்யாக வாசனம். புண்யாகம் என்றால் புனிதம், வாசனம் என்றால் மங்களகரமான வாக்கியங்கள் என்றும் பொருள்.
பஞ்சகவ்ய பூஜை: அனைத்து தெய்வங்களும் உறைந்திருப்பதாகக் கருதப்படுகிற பசுவிடத்திலிருந்து கிடைக்கப் பெறும் ஐவகைப் பொருட்களாகிய சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகியவற்றை தனித்தனியாக பூஜித்து மந்திரார்த்தமாக ஒன்றாய்க்கலந்து பஞ்சகவ்யமாக்கி அதை யக்ஞத்தில் கலந்து விடுவர்.


கணபதி ஹோமம்


கணபதி ஹோமம்: பூதகணங்களால் இடையூறுகள், தாக்குதல்கள் ஏற்படாதவாறு கணங்களின் தலைவனாகிய மகாகணபதியை நினைத்து அவருக்குப் பிரியமான பொருளை அக்னியில் சமர்ப்பிக்கும் வேள்விதான் மகாகணபதி ஹோமம்.

நவகிரஹ ஹோமம்: கிரகங்கள் நன்மையே செய்யவேண்டி ஒன்பது கிரகங்களுக்குமுரிய ரத்தினம், வஸ்திரம், தான்யம் ஆகியவற்றை அதற்குரிய திசைகளில் வைத்து மூல மந்திரங்களைச் சொல்லி ஹோமம் செய்தல்.

மகாசங்கல்பம்: எல்லாவிதமான தெய்வ கார்யங்களும் ஒரு குறிக்கோளோடுதான் செய்யப்படுகிறது. அப்படி, ‘இந்தக் கும்பாபிஷேகம் நடைபெறுவதால், பக்தர்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும். மனதிலுள்ள விருப்பங்கள் நிறைவேறட்டும். அதற்கு இறைவனுடைய திருவருள் துணைபுரியட்டும்’ என்று நல் வாக்கியம் சொல்வதே மகாசங்கல்பம் எனப்படுகிறது.

தனபூஜை: கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காகச் செலவிடப்படுகின்ற பணத்தினை சுத்தமான இடத்தில் வைத்து, மகாலட்சுமியை நினைத்து பூஜை செய்வது வழக்கம். இந்த தன பூஜையைப் பார்ப்பதால், வீட்டில் தனம் சேரும்.

கோபூஜை: சகல தெய்வங்களும் உறையும் கோமாதா என்று போற்றப்படுகிற பசுவை அலங்கரித்து இந்த பூஜையைச் செய்வதால், தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும்.

ஆலயக்கதவுகள் திறப்பு: புனரமைக்கப்பட்ட கோயிலின் கதவினை நல்ல முகூர்த்த வேளையில்தான் திறக்க வேண்டும். கணபதி பூஜை, நவகிரக பூஜை செய்த பிறகு, மங்கள வாத்யம், வேத கோஷங்கள் முழங்கிட, பக்தர்கள் இறைவன் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டிருக்க, கோயில் கதவுகள் திறக்கப்பட வேண்டும். முதலில் கோயிலுக்குள் கன்றுடன் பசுவும், மங்களப் பொருட்களும், தீபங்களை ஏந்திய பெண்களும், அர்ச்சகர்கள், வேதவிற்பன்னர்கள், பக்தர்கள் ஆகியோரும் பிரவேசித்து, பிராகாரத்தில் வலம் வந்து, கருவறையை அடைந்து நமஸ்கரிப்பர்.

வாஸ்து சாந்தி: வாஸ்து என்கிற சொல்லுக்கு, வசிக்கும் இடம் என்றும், பூமி, நிலம் என்றும் பொருள் ஆகிறது. அந்தகன் என்கிற அசுரன், சம்காரம் செய்யப்பட்ட காலத்தில், சிவபெருமானின் நெற்றியிலிருந்து விழுந்த வியர்வைத் துளி பூமியில் விழுந்து மீண்டும் ஓர் அசுரனாக மாறி பூமியை விழுங்க முற்பட்டபோது, சிவபெருமான், வீரபத்திரரை அனுப்பி அந்த அசுரனை கீழே தள்ளச்செய்து, அவன் மீது பிரம்மன் முதலான ஐம்பத்து மூன்று தேவதைகளை வசிக்கும்படி பணித்தார். அவனது கோரப்பசி தீர்வதற்காக, உலக வடிவமான பூசணிக்காயை உணவாகக் கொடுத்தார். அந்த அரக்கன்தான் வாஸ்து புருஷன். வாஸ்து புருஷனை எழுப்பி பூஜை செய்து அவருக்கு விருப்பமான பூசணிக்காயை பலியிடுவது முறையாகும்.

ரட்சோக்ண ஹோமம்: ரட்சோ _ அரக்கர்கள். க்ணம்_ஒடுக்குதல். அரக்கர்கள் தீங்கு செய்யாமல் இருக்கும் பொருட்டு கலசங்கள் மேல் ஐந்து வகையான அஸ்திர மந்திரங்களையும் அரிவாள், சுத்தி ஆகியவற்றில் ரட்சோக்ண தேவதைகள், தேங்காயில் _ ருத்ரன் இவர்களை ஆவாகனம் செய்து பூஜித்து ஆலயத்தை வலம் வரச் செய்து, ஹோமம் முடிந்ததும் மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வரவேண்டும்.

பிரவேச பலி: ஓரிடத்தில் கோயில் எழுப்பப்பட்டிருக்கும்போது, சுற்றியுள்ள எட்டுத் திசைகளிலும் உள்ள துர்தேவதைகளை பூஜித்து ப்ரீதி செய்த பிறகு எண் திசைக் காவலர்களான இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலானவர்களை அவரவர்களுக்குரிய திசைகளில் வரவழைத்து வழிபட்டு, ஆலயத்தைக் காத்திடும்படி வேண்டுவதற்கு பிரவேச பலி என்று பெயராகும்.

ஸ்ரீசூக்த ஹோமம்: மகாலக்ஷ்மியைக் குறித்து செய்யப்படுகின்ற இந்த யக்ஞத்தை, ரிக்வேதத்திலுள்ள ஸ்ரீ சூக்த மந்திரங்களைச் சொல்லி, திருமகளின் கருணை வேண்டி வழிபடல் வேண்டும். இதனால் கும்பாபிஷேகப் பணிகளில் ஈடுபட்டிருப்போரின் வீடுகளில் லக்ஷ்மி கடாட்சம் ஏற்படுமென்பது ஐதிகம்.

சாந்தி ஹோமம்: அமைக்கப்பட்டுள்ள யாக குண்டங்களில் பாசுபதாஸ்திர மந்திரங்களைக் கூறி, கலசத்திலும் ஆவாகனம் செய்து, அஸ்திர மந்திரங்களால் ஹோமம் செய்து, கலச நீரை அஸ்திர தேவருக்கு அபிஷேகம் செய்து, ஆலயக்கட்டுமானப் பணிகளில் குறைகள் ஏதும் இருப்பின், அவற்றிற்குப் பரிகாரமாக செய்வது சாந்தி ஹோமம். அடுத்ததாக கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக எழுந்தருளும் தெய்வ பிம்பங்களுக்கு சக்தியூட்டும் விதமாக ஹோமம் செய்வது, மூர்த்தி ஹோமம் எனப்படுகிறது.

சம்ஹிதா ஹோமம்: சிவபெருமானுக்குரிய பெருமைகளைக் கூறி நடத்தும் இந்த யக்ஞம், இது பரிகார யக்ஞம் ஆகிறது.

மிருத்சங்கிரணம்: யாக சாலையில் முளைப் பயிர் இடுவதற்காக பூமிதேவியை பூஜித்து, அனுமதி பெற்று மண் எடுத்து முளை பயிரிடுதல் என்கிற அங்குரார்ப்பணம் நடத்துவது முறை.

மிருத் என்றால் மண்; சங்கிரணம் _ எடுத்தல்; அங்குரம் என்பது முளைக்கின்ற விதை; அர்ப்பணம் என்றால் போடுவது என்று பொருள். யாக பூஜைகள் நல்ல பலன்கள் அளிக்கும் பொருட்டு, முளைப்பயிரை இட்டு, இந்த யாக சாலையில் பூஜைகள் நன்கு செய்யப்பட்டுள்ளதா என்று பயிர்கள் வளர்வதைக் கொண்டு அறிந்து கொள்ளப்படுகிறது.

ஆசார்ய ரட்சாபந்தனம்: கும்பாபிஷேகத்தில் பங்கு பெறுகின்ற சிவாச்சார்யர்கள், பட்டாச்சார்யர்கள் இந்த சுபவைபவம் நிறைவு பெறும் வரை வேறு செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும், இடையூறுகள் நேராத வண்ணம் தங்களைக் காத்துக் கொள்ளவும் காப்பினைக் கட்டிக் கொள்ளுதல் அவசியம். இதை மந்திர வேலி என்றும் சொல்லலாம்.

பூதசுத்தி: இறைவனுக்கு பூஜை செய்யும் முன்பு மந்திரார்த்தமாக இந்தப் பூத உடலைச் சுத்தம் செய்தல் வேண்டும். இதைச் சுத்தமாக்குவதற்குரிய மந்திரங்களைக் கூறி வழிபடுதலையே பூதசுத்தி என்பர்.

ஸ்தான சுத்திக்கு இடத் தூய்மை என்றும்; பூஜா திரவிய சுத்திக்கு பொருட் தூய்மை என்றும்; மந்திர சுத்தி என்பதற்கு எச்சில் வருகின்ற வாய் சொல்லும் மந்திரத்தை எண்ணத்தினால் தூய்மைப் படுத்துதல் என்றும்; கலசத் தூய்மை என்றும் பலவித சுத்திகள் உண்டு.


கும்ப அலங்காரம்: மூலஸ்தான விக்ரஹத்தில் உறைந்துள்ள இறை சக்தியை வேள்விச் சாலையில் வைத்து யாகம் மற்றும் பூஜைகள் நிகழ்த்த வேண்டும். அதற்கு, கலசங்கள் மந்திரார்த்தமாக வர்ணனை செய்யப்பட்டபிறகு இறைவனுடைய உருவம் போல பாவனை செய்யப்படுகிறது. அதாவது கலசத்தின்மேல் சுற்றப்படும் துணி சதை ஆகவும், வாசனை நீர் உதிரமாகவும், தர்ப்பையால் செய்யப்படும் கூர்ச்சம் எலும்பாகவும், நூல் சுற்றியிருத்தல் நரம்பாகவும் சொல்லப்படும். மந்திரம் உயிர்போலவும் பாவிக்கப்பட்டு வாசனை மலர்கள், சந்தனம், குங்குமத்தால் அழகூட்டப்படுவதற்கு கும்ப அலங்காரம் என்று பெயர். அடுத்ததாக கலாகர்ஷணம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். பதினாறு கலைகள் இறைவனுடைய திருமேனியில் இருப்பதால், வேள்விச் சாலையில் எழுந்தருளச் செய்யும்போது, மீண்டும் அந்தக் கலைகள் வடிவைக் கலசத்தில் வர்ணிப்பதற்குக் கலா ஆகர்ஷணம் செய்யப்படுகிறது.

மூலஸ்தானத்திலிருந்து இறைவனின் திருவடிவம் வேள்விச் சாலைக்குச் சென்று இடையூறுகள் இல்லாமல் நல்லவிதமாகத் திரும்ப, தெய்வங்களையும், நவகிரஹ தேவதைகளையும் எண்ணி யாத்திரை தானம் செய்து, யாகசாலைக்குள் கலசங்களைக் கொண்டு சென்று ஆகம விதியின்படி வைத்து தீப ஆராதனை செய்வர். இந்நிகழ்விற்கு யாகசாலைப் பிரவேசம் என்று பெயர்.

யாக பூஜைகள்: ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட யாகசாலைப் பகுதிகளான மேடைகள், தூண்கள், கயிற்றுக் கட்டுகள், மேற்கட்டிகள், அலங்காரங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு உபதேவதையின் வடிவினைக் குறிக்கிறது. அதோடு அஷ்டமங்களங்கள் எனப்படுகிற கொடி, கண்ணாடி, சக்தி, கதை, தண்டம், ஸ்வஸ்திகம், ஸ்ரீவத்ஸம், தீபம் ஆகியவற்றைப் பலகையில் வரைந்து வைப்பது வழக்கம்.

யாக சாலையில் அமைக்கப்பட்ட தெய்வ மூர்த்தங்களுக்கேற்ப, தோரண பூஜை, பஞ்ச ஆசனபூஜை, பஞ்சம ஆவர்ண பூஜை ஆகியன நடத்தப்பட்டு, ஹோம குண்டத்தில் அதற்கான மூல மந்திரம் கூறி, ஹோமப் பொருட்களை இட்டு யாகம் நடத்தி பூரண ஆகுதி செய்து வாழ்த்துரைகள் சொல்லுவர். இந்த யாக வேள்விகள், திட்டமிட்டபடி ஆறு காலம், நான்கு, இரண்டு காலங்கள் என்று நடத்தலாம். யாகம் நடத்துகின்ற உபகரணங்களுக்கு, ஸ்ருக் ஸ்ருவம் என்று பெயர். யாகம் நடத்தும் காலங்களில், வேதபாராயணம், தேவாரம் திருமுறை தெய்வத் திருக்கதைகள் நடத்தப்படுவது மரபு.

ஆசார்ய விசேஷ சந்தி: காலங்கள் இரண்டும் (இரவு பகல்) ஒன்று சேர்வதையே சந்தி என்கிறோம். இந்த வேளைகளில் காப்பிட்டுக் கொண்டவர்கள் அக்காலத்திற்குரிய தர்ப்பணங்கள், ஜபங்கள் செய்து தேவர்கள், பித்ருக்கள், ரிஷிகளின் அருளாசியைப் பெறுவர். இந்த நிகழ்ச்சிக்கு விசேஷ சந்தி என்று பெயர்.

தெய்வங்களுக்கு யந்திர ஸ்தாபனம்: கருவறையில் எழுந்தருளும் தெய்வங்களை விக்ரகங்களாக அமைக்கிறோம். அதன் உயிர் என்பது தாமிரத் தகட்டில் எழுதப்படுகிற மூலமந்திர வாசகங்களும், அதற்கு உரியதான வரைவுக் கோடுகளும்தான். இந்த யந்திர வடிவை விதிப்படி எழுதி, உரிய மரியாதைகள் செய்து, ஈர்ப்புத் தன்மையுடைய செப்புத் தகட்டில் பதித்து, அதனை சுவாமியின் ஆதார பீடத்தில் பதித்து, பஞ்சலோகம் காசுகளைப் போட்டு, எண்வகை மருந்துக் கலவையான அஷ்டபந்தனம் என்ற மருந்தைத் தயார்படுத்தி பீடத்தைச் சுற்றிலும் அதைக் காப்பாக இடுதல்.

யந்திரத்தை வைத்து மருந்து சாற்றியபிறகு அஷ்டா தசக்ரியை எனப்படுகிற பதினெட்டு வகைக் கிரியைகளுக்கு தெய்வ உருக்கள் உட்படுத்தப்படுவதுண்டு. முக்கியமாக கண்திறப்பு என்கிற நேத்ரோன்மீலனம் நடத்தப்படும்போது, மங்களப் பொருட்களை ஏந்திய பெண்களை ஆலய வலம்வரச் செய்து, தெய்வ பிம்பங்களைச் செய்த சிற்பி கண்களைத் திறக்கும் வைபவத்தை நடத்துவார். அடுத்ததாக நீர், மண், வாசனை மலர், மரப் பட்டைகள், வாசனைத் திரவியங்களைக் கலந்து பூஜை செய்து ஆலயம் முழுவதும் தெளித்து சுத்தப்படுத்துவர். இப்படிச் செய்வதற்கு பிம்பசுத்தி என்று பெயர். இந்த நேரத்தில் சிலைகளுக்கு கைப்பகுதியில் மஞ்சள் கயிற்றைச் சாற்றுவர்.

உயிர்ப்பித்தல்: யாகங்கள் நடத்தப்பட்ட இடத்தில், முறைப்படி பூஜிக்கப்பட்ட தெய்வ சக்திகளைப் பட்டுக் கயிறு, தர்ப்பைகளின் வழியாக மூலஸ்தான சிலைக்குக் கொண்டு செல்லுதலை உயிர்தருதல் (நாடி சந்தானம்) என்பர். அதுசமயம் ஒரு கலசத்தையும், நெய் நிரப்பிய ஹோமக்கரண்டியையும் யாகசாலையிலிருந்து மூலமூர்த்தி இருப்பிடம்வரை மூன்று முறை எடுத்துச் சென்று வருவார்கள்.

மகாகும்பாபிஷேகம்: கலச பூஜை செய்து முடிந்ததும், பூரண ஆகுதி(யாக நிறைவு) செய்யப்பட்டு, கலசங்கள் புறப்படுவதற்கான யாத்திரை, தானம் என்ற ப்ரீதி பூஜை செய்தபின், யாக பூஜைகள் செய்த பட்டர்கள், சிவாச்சாரியார்கள் மங்கள வாத்யம், வேத கோஷங்கள் முழங்க ஆலயத்தில் வலம் வந்து விமானம் என்று அழைக்கப்படும் கருவறை கோபுரத்தில் ஏறி, முறையான தெய்வ பீஜ மந்திரங்களால் கோபுர கலசத்திற்கு அர்ச்சனை செய்து பூஜை நடத்தியபிறகு கலச நீரை கோபுரக் கலசத்தின் மீது மூல மந்திரங்கள் கூறியபடி அபிஷேகம் செய்வர். பின்னர் கலசத்திற்கு தர்ப்பை, கொடி, வஸ்திரம், மாலை சாற்றித் திலகமிட்டு தேங்காய், பழம், தாம்பூலம், நிவேதனம் செய்து ஆரத்தி செய்வார்கள். புனிதக் கலசநீர் ஊற்றுவதைக் கண்களால் காண்பவர்களுக்கும் பன்னிரண்டு ஆண்டுகள் தலயாத்திரை, ஆலய தரிசனம் செய்த புண்ணியத்தைப் பெறுவதாக ஆகம சாஸ்திரம் தெரிவிக்கிறது.

மகா அபிஷேகம் _ முதல் திருநீராட்டல்: மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டதும், கருவறையிலுள்ள தெய்வச் சிலைக்கு யாக சாலையில் வைக்கப்பட்ட உபகலசங்களாகிய வர்த்தனி கலசங்களிலுள்ள புனித நீரை ஊற்றுவர். அதன் பிறகு முதல் திருநீராட்டல் என்னும் மகா அபிஷேகம் நடத்தப்படுகிறது.

அதற்குப்பிறகு சுவாமிக்கு 48 நாட்கள் மண்டல பூஜை நடத்துவர். நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்துகிற ஆலயத்தின் கும்பாபிஷேகம் எங்கு நடந்தாலும் சென்று தரிசித்து பிறவிப் பயனை அடைவோமாக!


மண்டல பூஜை -1

ஓம் நமசிவாய! ஓம் நாராயணாய நம:

2009-10-18

(புலம்பெயர் நாடுகள் + தமிழர்கள் ) இரசிக்கக்கூடிய அனுபவங்கள்

அண்மையில் நண்பர் ஒருவர் தனது வலையில் "தமிழ் " பற்றி எழுதி இருந்தார்.
கிடுகு வேலி:-வெல்லத்தமிழ் இனி மெல்லச்சாகுமா?

அதை தொடர்ந்து எனக்கும் ஒரு ஆர்வம் அதே தமிழ் பற்றி எழுதினால் என்ன ; கொஞ்சம் வித்தியாசமாய் ஐரோப்பிய புலம்பெயர் நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களுடன் ஒரு அனுபவம் பற்றி எழுதினால் என்ன என்று ஒரு ஆர்வம் , ஆனால் அவர்களை நான் வடிவாக பார்க்க சந்தர்ப்பம் இல்லை. அவ்வாறு தெரிந்த ஓரிரண்டு குடும்பங்களும் வெவ்வேறு நாடுகளில். இருந்தாலும் இரண்டு சந்தர்ப்பங்கள். கோவில் இல்லை போனால் தியட்டர் .!!!ஊர்வலங்களில் , கவரும் ஒன்று கூடல்களில் இது எல்லாம் ஆகாது !!!


எம்மை போன்ற இளைஞர்களுக்கும் புதிய திரைப்படம் அன்று தான் புலம்பெயர் ஈழத்து தமிழரை ( பெரும்பாலும் பெண்களை ) காண முடியும் . வாயால் சொல்ல முடியாத நிலை, இப்படியா என்ன சரவணன் சார் இது என்று கையை நாடியில் வைச்சு சொல்லும் அளவுக்கு அவர்கள்!!!அவர்கள் எங்கயோ போட்டார்கள் ~~~கலாச்சாரம் சரி, உடை நடை பாவனை சரி.. என்ன செய்யுறது அவர்கள் இங்கே பிறந்து வளருவதால் வேற்று மொழி, கலாச்சாரம் , மாறும் காலநிலைகள் என்று எல்லாம் அவர்களின் விதி, இது பொதுவாகவே புலம்பெயர் ஈழத்தமிழரின் விதி.

இதைவிட ஊரில் இருந்து இங்கே திருமணம் செய்ய வந்தவர்கள் பலரும் தங்களை ஐரோப்பிய கலாச்சாரத்துக்கு மாற்றி ஏதோ தாங்கள் தமிழர்கள் இல்லை என்பதால் போலவும் இருக்கிறார்கள். :)

இருந்தாலும் அதுக்குள்ளே ஒன்று இரண்டு பேர் (சிறு பிள்ளைகள்) தமிழில் கதைக்கும் போது உணர்ச்சி உச்சந்தலையில் அடிச்ச மாதிரி இருக்கும். என்ன மாதிரி கதைக்கிறார்கள் என்று. கொழும்பில் பிழங்கும் ஒருவகை தமிழிலும் மேலாக நன்றாக கதைத்தார்கள் என்ற பெருமை இவர்களுக்கு இருக்கு. அது அவர்களின் பெற்றோர்கள் உணர்ந்து படிப்பித்து இருக்கிறார்கள் என்று பொருள் படும்.

இதை விட ஒரு சிலர் கதைத்ததை கேட்டும் இருக்கேன், அவர்கள் தமிழை கொன்றே கதைப்பார்கள், அது வேணும் என்று இல்லை , அவர்களுக்கு சொல்லி கொடுக்க அல்லது போனால் தமிழை பயில பயிற்சி கல்லூரிகள் பெரிதாக இல்லை . அவர்களுக்கு வேற்று மொழி கட்டாயம் பயில வேண்டும் அதனால் அவர்களுக்கு நேரமும் இல்லை மேலதிகமாக தமிழை படிக்க. அதை கொஞ்சம் சொல்லி குடுக்க அவர்கள் பெற்றோர்கள் முன்வருவதும் இல்லை. ஊக்கம் இல்லை என்றே சொல்லலாம்.

இனியென்ன நாங்கள் இங்கால வந்துட்டம் . இனியேன் தமிழ் என்று இருக்கிற சனத்தையும் பார்த்து உள்ளேன். :(

இங்குள்ள பல இளையோர் என்றால் நேரடியா ஈழத்தில் இருந்து வந்தவர்கள். அவர்கள் பிரச்சினை இல்லை. அவர்கள் வழமை போல கதைக்கிறார்கள்.

ஒரு முறை நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்று இருந்தேன். நீண்ட நேரம் உரையாடி கொண்டு இருக்கும் போது அவர்கள் பிள்ளைகள் வந்தார்கள் . எட்டு, பத்து வயசில் பிள்ளைகள். தமிழே தெரியுமா என்று கேட்டேன். " கொஞ்சம் கொஞ்சம் தெரியும் " என்று சொன்னார்கள். அந்த நேரம் எனக்கு ஞாபகம் வந்தது 95 இல் யாழ்ப்பாணம் அரசாங்க கட்டுப்பாட்டில் வந்த போது அங்கு நின்ற சீருடையினர் எங்களை போன்றோரிடம் கதைக்கும் போது கேட்பது "கொஞ்சம் கொஞ்சம் சிங்களம் தெரியுமா " என்று.. நாங்களும் " கொஞ்சம் கொஞ்சம் தெரியும்" என்று போட்டு அப்பி யனவா ( இது எங்கட பௌதீகவியல்- ரவி ஆசான் குப்பியில் சொல்லி தந்த ஒன்று) என்று சொல்லி கொண்டு போறது .. அதே மாதிரி மாறி போச்சு .. இப்போ.. இங்கே ..:(

மனசில் இப்பவும் நிக்குற கசப்பான சம்பவங்களில் இதுவும் ஒன்று:-
கொழும்பில் அனுபவம் ":-இரண்டு தமிழ் நண்பிகள் மாதிரி எனக்கு முதலில் பட்டிச்சு. மட்டக்குளிய 155 பஸ் வண்டிக்குள் , தமிழே வராது மாதிரி , ஆங்கிலத்தில் விக்கி தக்கி கதைப்பார்களாம், ஏனிப்படி ??? ஒன்றில் தமிழை பாவிக்க பயப்பிடலாம் அல்லது ஆங்கிலத்தில் புலமை தேவை என்பதற்காக ஒரு முயற்சி என்று தான் நினைத்தேன். பிறகு கொஞ்சம் காதை கொடுத்து பார்த்தால் அவர்கள் இருவரும் தங்கள் MC போய் செய்ய இருக்கும் ஷாப்பிங் பற்றி பேசுறாங்கள் ஆங்கிலத்தில். இதை விட கொடுமை அவர்கள் ஒரு குடும்பத்தை சேர்ந்த அக்கா தங்கை மார். இதை மருதானையில் வண்டியை மறித்து அடையாள அட்டை பார்க்கும் போது எனக்கு பின்னுக்கு நின்றார்கள் என்பதால் அறிந்து கொண்டேன். இதை விட நம்பர் ஒன்று காமெடி என்ன வென்றால் ஓடுற பஸ்வண்டி தமிழில் பாட்டு போட்டு கொண்டு ஓடுது. அப்ப ஏனிந்த பில்ட் டப் ?? நான் பக்கத்தில இருக்கேன் என்றதுக்காக வா ?? சீ சீ .. இது இப்போ ஒரு கலாச்சாரமாய் வந்து கொண்டு இருக்கு. நான் ஆத்திரப்படவில்லை. கதைக்கலாம், குறை சொல்ல வில்லை , இது எல்லாம் ஒரு கலர்ஸ் இக்கு செய்யுற வேலை. அதாவது தங்களுக்கும் ஆங்கிலம் தெரியும் என்பதற்காக ..:)புரட்டாதி சனியில் எள்ளு எண்ணெய் எரிக்கும் அடியார்கள். புலம்பெயந்தால் போல சமய நடவடிக்கைகளை மறக்கவில்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டல்.கொழும்பில் இப்போது எல்லாம் கற்பூரம் தடை. சூழல் மாசடைவதை காரணம் சொல்ல்கிறார்கள் .. ஆனால் எமது கலாச்சாரத்தில் அது அன்று தொட்டே கற்பூர தீபம் மூலம் பூசை செய்வது வழமை, அதனையே இங்கேயும் செய்கிறார்கள், பார்க்க பிரமிக்க வைக்கின்றது. இங்கு சூழல் மாசடைய வில்லையா ???


சிவ சுப்பிர மணியார் கோவில் நெதெர்லாந்து

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் முருகன் கோவில் செல்வது வழக்கம், அங்கே பார்த்தால் தான் தெரியும் , எப்படி எங்கள் சமூகம் எவ்வாறு கலாச்சாரம் பேணுகிறார்கள் என்று. பெண்கள், கலாசார உடை என்று சொல்லப்படக்கூடிய, சேலை அணிந்து,( வயது வந்தோர்), சிறுமிகள் சுடிதார் போட்டு,பொட்டு வைத்து கொண்டு வந்து இருப்பார்கள்.( வருத்தம்- இதை கொழும்பில் உள்ள ஆலயங்களில் காண முடியவில்லை.முக்கிய குறிப்பாக பேராதனையில் உள்ள குறிஞ்சிக்குமரனில் பெண்கள் என்றுமே கலாசார ஆடை அணிந்தே வருவார்கள். ) சுவாமி தூக்கும் போது வேட்டி அணிய வேணும் என்று ஒரு வழமை இருக்கு. கொழும்பில் அவ்வாறு செய்வதை நான் காணவே இல்லை. வேட்டி வாங்க வசதி இல்லை என்று நினைக்க வேண்டாம்.. இது எல்லாம் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டியது. சரி நீங்க வேட்டி கட்டாவிட்டால் ஒதுங்கி இருங்க. அதுவே உத்தமம், யாரோ ஒருத்தன் உணர்ந்து வேட்டி கட்டி கொண்டு முன்னுக்கு வருவான். நிச்சயம் அது நடக்கும்.


சிவசுப்பிரமணியார் கோவில் நெதெர்லாந்து - அடியேன்


ஜுரிச் முருகன் ஆலயம்

நெதர்லாந்தில் உள்ள முருகன் கோவில் ஒன்றில், பூசைகளை தொடர்ந்து நடை பெறும் பஜனைகளை பெண்களே நடத்தி வைப்பார்கள். முறையாக சங்கீதம் பயில பயிற்சி பாசறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆலயத்திலும் அது அமைக்கப்பட்டுள்ளது. புலம் பெயர் தமிழர்களும் இன்று வரை தங்கள் கலாச்சாரத்தை , தங்கள் வரலாறுகளை பேணி பாதுகாத்து வருகிறார்கள் என்று எனக்கு உறுதிப்படுத்தப்பட்டது அண்மையில் சூரிச் சென்று இருந்த போது ஏற்பட்ட அனுபவங்கள் தான். அங்கே முருகன் மற்றும் சிவன் ஆலயங்கள் சென்றேன். அதை விட தமிழர் வாழும் பிரதேசங்களுக்கும் சென்று வந்தேன். அவர்கள் நூலகம்,தமிழ் மன்றம், சங்கீதசபை, விவேகானந்தர் சபை, திருவள்ளுவர் மன்றம், நடன சபை, திருமண சேவை எல்லாம் அமைத்து கலாசாரங்களை பேணியும் புலம்பெயர் சமூகங்களுக்கு புகட்டியும் வருகிறார்கள்.அவர்களுக்கு உரிய ஆர்வம் நாட்டில் இருக்கும் எங்களிடம் இல்லை என்றே சொல்லலாம்.


ஜுரிச் முருகன் கோவில்; சு .பி : ச்விச்ஸ் பிரான்க் )


அங்கே ஒரு சில சிறுவர்களுடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களிடம் கேட்டேன் , யாழ்ப்பாணம் தெரியுமா ? நல்லூர் தெரியுமா ? திருகோணமலை தெரியுமா என்று? தெரியாது என்று பதில் வந்தது. சேர்ந்து யாழ்ப்பாணத்தில் இந்த தமிழரசன் ஆட்சி செய்தான் என்று பதிலை கூட சொல்லி முடித்தார்கள். கேட்கும் போது எனக்கே ஒரு அவமானம் மாதிரி. எத்தினை பேருக்கு பதில்தெரியும்? இப்படி எல்லாம் எங்கள் வரலாறுகளை படித்து இருகின்றார்கள் என்று கேட்கும் போது பிரமிக்க வைக்கின்றது.

சிவன் கோவில் - Zurich

சிங்கிலா சிங்கம்

இவ்வாறு இவர்களின் முயற்சிக்கு யார்தான் காரணம்; ஒன்று பெற்றோர்கள். மற்றது புலம்பெயர் நாடுகளில் ஈழத்து கலாசாரங்களை பேணி பாதுகாத்து வரும் விதத்தில்,பிரபல்யமான புலம்பெயர் பதிவுகளாக புலம்பெயர் சஞ்சிகைகள் விளங்குகின்றன. இவற்றில் ,கலை இலக்கியம் சார்ந்தனவே அதிகம். அவை கவிதை, சிறுகதை, தொடர்கதை, நூல் மதிப்பீடு, நூல் அறிமுகம், விமர்சனம், கட்டுரை, வாசகர் கருத்து, அரசியல், மாற்றுக்கருத்து, எதிர்வினை, ஆகியவற்றை பிரதானமாகவும் வேறும் சில விடயங்களை உபபிரிவுகளாகவும் கொண்டு வெளி வருகின்றன.
உண்மையாகவே குடுத்து வாங்கும் விலைக்கு ஏற்ற அளவு அவை தகவல்களை பகிர்கின்றன என்பது உறுதி.

எனக்கு வாங்கி படிக்க சந்தர்ப்பம் கிடைத்தவை.
உறவுகள்,தமிழ் முரசு, தமிழ்த் தென்றல், தாயகம், தேடல், பள்ளம், பாரிஸ் ஈழநாடு,தமிழ் ஏடு,சுவடுகள்,செய்திக்கதிர்.

இதை விட நாடுகளில் நல்ல பதிவர்களும் உருவாகி வருகிறார்கள், இணைய வசதிதானே இங்கே பிரச்சனை இல்லை அதனால் தேடியும் பயில கூடிய வசதி இருக்கு. இவற்றை எல்லாம் இந்த சமூகத்தில் இப்போது இருக்கின்ற நம்மை போன்றோர் வழி நடத்தினால் தான் எதிர் காலத்தில் தமிழை மட்டும் அல்ல எங்கள் கலாச்சாரத்தையும் சேர்த்து பாதுகாக்க முடியும் என்பதில் ஐயம் இல்லை.

மேலதிகமாக ஊடகத்துறை ; தமிழ் தனியார் ஊடகங்கள் பல இப்போது உலகெங்கும் பல உருவெடுத்து வருகின்றது. அவை பல சினிமாவை வைத்துதான் இயங்குகின்றன. சினிமா மூலம் தான் இயங்கலாம். உண்மை . இருந்தாலும் அறிவியல் , மொழி, கலாச்சாரம் சம்மந்தமாக கொஞ்சம் கூடுதலாக ரசிகர்களிடையே பகிரலாம் என்று நான் நினைக்கின்றேன்.

இறுதியாக, அண்மையில் நடைபெற்ற ஒரு கலாச்சார நிகழ்ச்சிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அங்கே நடை பெற்ற நிகழ்ச்சிகளில் கலாச்சாரத்தை கட்டி காக்கும் கூத்து, நடன நிகழ்ச்சி, இசையமுதம் என்னையே மறந்து போய் இருந்து ரசிக்கும் விதத்தில் இருந்தது.

குறிப்பாக, நாட்டு கூத்தும் , கீழைத்தேய இசையமுதமும் பெண்களே செய்தார்கள். நன்றாகவே இருந்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் ( பல்கலைக்காலத்துக்கு பின்னர் என்றே சொல்லலாம்) நல்ல ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன் ரசித்தேன்.

ஒரு புறம் இப்படி இருக்க....மறு புறம் ...மிகவும் கொடுமையான கலாச்சார சீரழிவுகளில் ( நைட் கிளப், மது பாவனை, புகைப்பிடித்தல் , அறம் புறம்பான தகாத உறவுகள் ) புலம்பெயர் நாடுகளில் எமது பெண்களே கொண்டு இருக்கிறார்கள் (இதுக்கேன் இங்கே வரணும் இப்போ தமிழர் வாழும் கொழும்பிலையே அரங்கேறி வருவதாகவும் ) நண்பர்கள் கூற கேட்டு உள்ளேன்.

நாங்கள் தான் எதிர்கால சந்ததியினர்; எதிர் காலத்தை உருவாக்கும் சந்ததியினர். நாங்கள் ஒவ்வொருவரும் எடுக்கும் ஆர்வம் தான் எங்களின் பின் எங்கள் மொழி எங்கள் கலாச்சாரம் எல்லாவற்றையும் பாதுகாக்கும் என்பது உறுதி.

கொஞ்சம் சிந்தியுங்கள் தோழர்களே. இனியாவது களத்தில் இறங்குங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...