2010-04-24

கொழும்பு வர வேற்(ர்க்)கிறது

நீண்ட நாட்களுக்கு பின் தாயகம் திரும்பி இருக்கிறம். போன அலுவல்களை கச்சிதமாய் முடித்து விட்டு, போன இடத்து பழக்க வழக்கங்கள் , கலாச்சாரங்கள் ..இன்னும் பலவற்றை கற்று , பார்த்து தெளிந்து போட்டு , முன்னர் பலர் சொல்லும் குறள் "இருந்தாலும், இறந்தாலும் நம்ம ஊரில் தான் என்று சொன்னது சரி என்று கொண்டு , கடந்த சில நாட்களுக்கு முன் ஐரோப்பாவுக்கு ஒரு போட்டு வாறன் சொல்லி போட்டு வந்துட்டேன் .:)
ஊருக்கு நிம்மதியா வாறதுக்கு கூட ஒழுங்காக குடுத்து வைக்கல. வேறென்ன லண்டன் ஊடாக போட்டு தந்த டிக்கட்டு தான். அதுவும் குறுக்கால போன விமானம் ஓடாத படியால் .. ஒரு நாலு நாள் லண்டனில் தஞ்சம்.
பிரிட்டிஷ் விமானம் மூலம் லண்டன் வரும் போது, நெதர்லாந்தில் வைச்சு என்னுடைய பட்டிகளில் பாதியை எறிஞ்சே போட்டேன்.( பட்டி என்றது ; குளிருக்கு போடும் கவசங்கள் ... அதுவே ஒரு ஐந்து கிலோ போலும் .. யோசித்து பார்த்தேன் , நம்ம ஊரில எவன்தான் உதெல்லாம் போடுவான் . சரி ஒருக்கா இரண்டு தரம் போட்டால், சொல்லுவாங்கள் இவரு இப்பதான் வந்தவரு அங்கே இருந்து , கலர்ஸ் காட்டுறாரு என்று.. வேணமையா..... வீண் வம்பு.. வந்த செலவோடு இதுவும் போகட்டும் .. என்று குப்பை தொட்டியில் போட்டு விட்டு எறிட்டன்)



என்னுடைய கஷ்ட காலம், லண்டனில் இருந்து கொழும்பு செல்லும் விமானம் அன்று ஓட வில்லை. தங்க இடம் குடுத்தார்கள். அடுத்த விமானம் இன்னும் இரண்டு நாளில் போகுமாம் ,அதிலை தான் இடம் இருக்காம் என்று.. குறுக்கால போனவங்கள் என்று போட்டு, திட்டி திட்டி நின்றது தான். இரண்டு நாள் பின்னர் .. நாலு நாள் வரை போனதை நினைச்சா.... கடுப்பா தான் இருக்கு.. என்னமோ ஒரு மாதிரி கொழும்பு வந்து சேர்ந்தேன்..

அந்த மாதிரி குளிருக்க குடும்பம் நடத்தி போட்டு நம்ம ஊருக்கு வரும் போது.. உடம்பே வேர்த்து போச்சு. காலை ஏழு மணி கொழும்பில் காலடி எடுத்து வைத்தேன். போட்டு கொண்டு வந்த உடுப்பு , உடம்பு எல்லாமே வியர்வையில் மிதந்தன..
என்னமா வெட்கை, புழுதி, வாகன இரைச்சல், இராணுவ சோதனை காவலரண்கள் என்று எல்லாவற்றையும் கேட்டும், பார்த்தும், வியந்தும் கொண்டு வீடு வந்தேன்.
வந்த நேரம் கொஞ்சம் விறு விறுப்பான காலம் அன்றைய நாளை விட்டால் தொடர்ந்து 14 நாட்களுக்கு விடுமுறை என்ற படியால், உடனையே தொழில் செய்யும் இடம் நோக்கி சென்று தொழிலுக்கு வந்து விடேன் என்று உறுதி செய்து போட்டு வந்தேன்.

ஐரோப்பாவில் வெளிய போகணும் என்றால் உடுப்பு போட்டு வெளிக்கிடுறது பெரிய பில்ட் அப். உள்ளாடைகள் , அதுக்கு பிறகு குளிருக்கு warmer , பிறகு shirt, பிறகு sweater, பிறகு ஜாக்கெட்;; உதெல்லாம் போட்டு விட்டு பிறகு கைக்கு கையுறை , தலைக்கு கம்பளி தொப்பி , பிறகு கழுத்துக்கு சால்வையை விட மிக நீண்ட துண்டால் ஒரு சுத்து கட்டு , சப்பாத்து , ஒரு headphone தலைக்கு, இதெல்லாம் தேவையா. நிம்மதியா நம்ம ஊரில் ஒரு சாரம், ஒரு ஷர்ட் இது காணும் முன் கடையில போய் பேப்பர் வாங்க , பாண் வாங்க .
அதுதான் சொல்லுறன் " சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா" புரிஞ்சு கொள்ளுங்க நண்பர்களே ..

நேற்று ஆபிசில் இருந்து கொழும்பு நோக்கி வெளிக்கிடும் போது கடும் வெயில், கொழும்பு வர கடும் மழை , மின்னல், இடி முழக்கம், வாகன நெரிசல்.. என்ன கொடுமை. திட்டி திட்டி ஓடோடி வந்து சேர்ந்தேன் . ஐரோப்பாவில் இருந்த காலத்தில் எங்கையும் போறதென்றால், காலநிலையை பார்த்து போட்டு தான் போறது. இவங்கள் இங்க சொல்லுற காலநிலை பற்றி நான் கருத்து எதுவும் கூற விரும்ப வில்லை.


கொட்டும் மழை ; வாகன நெரிசல் ...

சனி, ஞாயிறு மாலையில்Marine Drive ( இராமக்க்ரிஷ்ணாவில் தொடங்கி பம்பல பிட்டிய மஜெஸ்டிக் சிட்டி வரை ) இல் நடக்கும் தொழில் ; உடம்புக்கும் உத்தமமான தொழில் ; நடக்கும் பழசுகளை போட்டி மாதிரி முந்தி நடக்கும் போது உள்ளத்தில் என்ன கிளு கிளுப்பு .. நாங்களும் யாரையோ முந்துரோம்ள:) என்று தான் :) என்னோடு இன்னும் சில எஞ்சினியர் மாரும் நடக்கினம் .... :) அவை தங்கட எதிர்கால மனைவி மாரை தெரிவு செய்யும்பொருட்டு உடம்பை 16 வயது மாதிரி வைத்து இருக்க வேணுமாம் என்று விரும்பினம். :)

கொழும்பு வர வேரக் வேர்க் கிறது

2010-04-08

குத்தீட்டு வந்து இருப்பீங்க ???

இன்று இலங்கை பாராளுமன்ற தேர்தல், நான் என்றுமே அரசியல் எழுதுறது இல்லை. இங்கவும் அதே தான்.
வாக்களிப்பது கடமை.. கட்டாயம் வாக்களித்து இருப்பீர்கள் . நாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து செயல்பட்டு இருப்பீர்கள் .
வடிவேல் காமெடி போல "தனித்து செயல் படாதையடா ...தனித்து செயல் படாதையடா ... என்று எத்தனை வாட்டி சொல்லுறது என்றதை நினைத்து பார்த்தேன்..:)


நான் பார்த்து ரசித்த தேர்தல் காமெடிகள் சில.. நீங்களும் ரசியுங்கள்..

1- குறள் அமுதம்

"அடிச்சு சொல்லுறன்... இப்படி நடக்காட்டி பாருங்கோவன் ..
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தந்து மகிந்த சிந்தனையை வெற்றியடைய செய்த எல்லோருக்கும் நான் உங்களின் தலைவன் என்ற ரீதியில் நன்றி சொல்லக்கடமைப்பட்டுளேன்"


2 - நண்பியின் மூஞ்சி புத்தகத்தில்

கொழக்கட்டையோ மோதகமோ எதுவெண்டாலும் உள்ளுக்க இருக்கிறது ஒண்டுதான். புள்ளடியை பாத்து குத்துங்கப்பா..!


3- வடிவேல் காமெடி




4- விவேக் காமெடி




5- சத்தியராஜ் காமெடி

2010-04-04

பையா - பாடல் - துளி துளி மழையாய் வந்தாளே

எனக்கு பிடித்த பாடல், எனது கைத்தொலைபேசி ரிங் டோன் பாடல் ...என்னுடைய பிடித்த நடிகை தமனாவின் பாடல் ..இப்படியே சொல்லி கொண்டுபோகலாம் .. இதோ உங்களுக்காக( பாட்டு பாதியில் நிக்குறதுக்கு நான் பொறுப்பில்லை)


துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்,
பூபோல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்....

செல் செல் அவளுடன் செல்
என்றே காள்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொள்ளுதடா...
அழகாய் மனதை பறித்து விட்டாளே.......

துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...


தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூமுகம் காணவே
ஆயுள்தான் போதுமோ!
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டுத்தான்
பூக்களும் பூக்குமோ!

நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும், பார்வை ஆளை தூக்கும்...
கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும்...
பாதம் ரெண்டும் பார்க்கும்போது கொலுசாய் மாறதோன்றும்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே....



செல் செல் அவளுடன் செல் என்றே காள்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொள்ளுதடா...

சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன்
தோழ்களில் சாயுவேன்..
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிபோய் ஏந்துவேன்,
நெஞ்சிலே தாங்குவேன்,





காணும்போதே கண்ணால் என்னை கட்டிபோட்டாள்,
காயமின்றி வெட்டி போட்டாள்..
உயிரை ஏதோ செய்தாள்...
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டு கேட்டாள்...
கனவில் கூச்சல் போட்டாள்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே...

செல் செல் அவளுடன் செல்
என்றே காள்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொள்ளுதடா...

துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...




முன்னைய பதிவில் : எனக்கும் பிடிக்கும் தமனாவை http://svpriyan.blogspot.com/2009/12/blog-post_05.html

ஓசை - ஒரு பாடல் நான் கேட்டேன்

இந்த பாடல் எஸ் பி பாலா வும் வாணி ஜெயராமும் ஓசை படத்துக்காக பாடியது.
இது ஒரு டூயட் பாடல். சோகப்பாட்டும் இருக்கு அதை பிறகு போட்டு விடுகிறேன்.


பெண் : ம்.. ம்.. ம்.. ம்....
ஒரு பாடல் நான் கேட்டேன்....
உன் பாசம் அதில் பார்த்தேன் ,
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதை ஆகும்

லா ல லா ல லா லா லா

நான் பார்க்கும் இடம் எல்லாம்
கண்ணில் நீ இன்றி வேறில்லை
என் வாழ்க்கையின் ஆதாரம்
எந்த நாளிலும் நீயாகும்
நீ அன்பெனும் ஜீவநதி
என் ஆலய தீபம் நீ

ஆண் : வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதையாகும்

நீ பாயும் நதி ஆனாய்
உன்னை தாங்கும் கரை ஆனேன்
என் வாழ்க்கையில் நீ பாதி
உன் வாழ்க்கையில் நான் பாதி

என் கண்களில் சமுத்திரங்கள்
அதில் காண்பது நம்பிக்கைகள்
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதை ஆகும்..



என் கண்கள் உறங்காது
உன் பூமுகம் காணாது
பெண்: நான் வாழ்வதும் உன்னாலே
ஆண்: நீ காத்திடும் அன்பாலே
பெண்:என் ஆயிரம் ஜென்மங்களும்

ஆண் : உன் அன்பினை நான் கேட்பேன்


Oru Paadal Naan Keten by svpriyan


பெண்: வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதையாகும்

இருவரும் :ஒரு பாடல் நான் கேட்டேன்
உன் பாசம் அதில் பார்த்தேன்..
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதையாகும்
ஒரு பாடல் நான் கேட்டேன்.................

2010-04-02

ஆரோமலே - விண்ணைத்தாண்டி வருவாயா

விண்ணைத்தாண்டி வருவாயா பாட்டு வந்த காலத்தில் இருந்து எனக்கு இந்த பாட்டும் மெட்டும் ரொம்பவே பிடிச்சு போச்சு..
நேற்று இந்த பாட்டை பாடிய அல்போன்சு நேரடியாக ஒரு நிகழ்ச்சியில் பாடியதை பார்த்து உள்ளம் உருகி விட்டது.

உங்களுக்கும் இந்த பாட்டு பிடிக்கும் என்று நினைகின்றேன்.





மாமலை ஏறி வரும் தென்னல்
புது மணவாளன் தென்னல் , ...
பள்ளி மேடையே தொட்டு தலோடி குருசில் தொழுது வரும்போல்,
வரவேல்பினு மலையாளகர மனசம்மதம் சொரியும் ,

ஆரோமலே.. , ஆரோமலே....... , ஆரோமலே.. , ஆரோமலே .......
ஆரோமலே............. , ஆரோமலே....... ,

ஸ்வஸ்தி ஸ்வஸ்தி சுகுமுஹுர்தம் ,
சுமங்கலி பவ , மணவாட்டி
ஸ்வஸ்தி ஸ்வஸ்தி சுகுமுஹுர்தம் ,
சுமங்கலி பவ , மணவாட்டி

ஷ்யாம ராத்திரி தன் அரமனையில் ,
மாரி நில்கயோ தாரகமே ,
புலரி மன்சில்லே கதிரொளியாய் ,
அகலே நில்கயோ பெண்மனமே,

சஞ்சு நிலக்கும சில்லையில் நீ , சில சிலம்பியோ பூங்குயிலே
மன்சிரகிலே , மரயோலியே தேடியதியோ பூரனகள்

ஆரோமலே............. , ஆரோமலே.......(பின்னணியில் )

ஸ்வஸ்தி ஸ்வஸ்தி சுகுமுஹுர்தம் ,
சுமங்கலி பவ , மணவாட்டி

ஆரோமலே............. , ஆரோமலே.......


கடலினே , கரயோடினியும் படான் ஷ்நேஹம் உண்டோ...... ?
மேழுகுதுரிகலாய் உருகான் இனியும் ப்ரணயம் மனசில் உண்டோ........ ?

ஆரோமலே ........... ஆரோமலே.................. .. ஆரோமலே..................
ஆரோமலே .. ஓஓ . ஹோ............ !


ஸ்வஸ்தி ஸ்வஸ்தி சுகுமுஹுர்தம் ,
சுமங்கலி பவ , மணவாட்டி
ஸ்வஸ்தி ஸ்வஸ்தி சுகுமுஹுர்தம் ,
சுமங்கலி பவ , மணவாட்டி


ஷ்யாம ராத்திரி தன் அரமனையில் ,
மாரி நில்கயோ தாரகமே ,
புலரி மன்சில்லே கதிரொளியாய் ,
அகலே நில்கயோ பெண்மனமே,


சாயு நில்குமா சில்லையில் நீ , சில் சிலம்பியோ பூங்குயிலே
மஞ்சிராகிலே! , மரயோலியே தேடியதியோ பூரணங்கள்...





ஆரோமலே............. , ஆரோமலே.......(பின்னணியில் )

ஸ்வஸ்தி ஸ்வஸ்தி சுகுமுஹுர்தம் ,
சுமங்கலி பவ , மணவாட்டி

ஆரோமலே............. , ஆரோமலே....... ஓஓஓஒ ...
Related Posts Plugin for WordPress, Blogger...