இனிய வாசகர்கள்,அன்பர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்..
இது எல்லாம் ஒரு கற்பனை.. யாரவது உணர்ச்சி வசப்பட்டு அவசர முடிவில் என்னை ஏதும் செய்து போடாதையுங்க.. நான் ரொம்ப நல்லவன்... கடந்த இரண்டு நாட்களாக வெள்ளவத்தை டிராபிக் பொலிசாருக்கு செம வேலை.. என்றுமில்லாத அளவுக்கு டிராபிக் புல்லோக். கிறிஸ்மஸ் விடுதலை, வருட இறுதி விடுதலை என்று வீடுகளுக்கு செல்லுவோர் ஒரு புறம், பொருட்கள் வாங்க கொழும்பு வந்தோர் என்று ஒரு புறம், பேருந்துகள், ஆட்டோக்கள் என்று மறுபுறம்.. எல்லாத்தையும்.. சமாளிக்க வேண்டிய பொறுப்பு இந்த வெள்ளவத்தை பொலிசாருக்கு வந்து சேர்ந்தது..
புகைப்படம்- எனது I-Phone
அதுதான், வழமை போல காலி வீதியில்.. ரோச்சி திரை கூடத்துக்கு முன்னால் ஏற்பட்ட பாதை வெடிப்பு. மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்னரும் அதே இடத்தில்.. கொஞ்சம் பாதை அருகாமையில் வெடித்தது.. இந்த முறை தேஹிவல போகும் திசையில் உள்ள பாதையை கவர் பண்ணி வெடித்துள்ளது. இதற்குரிய காரணங்கள் என்னவென்று தெரியவில்லை என்று தான் முதலில் சொன்னார்கள்.. பிறகு ஒவ்வொரு காரணங்களை மீடியாவும், மாநகர அலுவலர்களும், எஞ்சினீயர் மார்களும் சொல்லி கொண்டாலும், யாரும் முடிவான காரணத்தை இதுவரை சொல்லவில்லை என்பது உண்மை... புகைப்படம்- எனது I-Phone
இது இவ்வாறு இருக்க.. இன்று காலை நான் , உடல் பயிற்சி செய்யும் பொருட்டு..காலி வீதியால் நடந்து செல்லும் போது உண்மையான காரணத்தை கண்டு பிடித்தேன். இதுக்கு எல்லாம் ஒரு இந்திய சினிமாக்கரரின் திரைப்படமே.. காரணமாமியிருக்கும் என்று எனது வாதம்.. டேய் கண்ணுகளா அது விஜய் படமில்லை.. அவக படம் என்னும் வரலை.. (அவக பட சூட்டிங்காலே மீனுகள் எல்லாம் செத்து மடிஞ்ச கதை .. பழசு.. அது இங்கே.மெரீனா சோகம் ) இது அவக அண்ணாவின்(நமக்கு மாமா முறை ) படம் தான்.. கொஞ்சம் கீழே பாருங்க,,, கண்ணா.. ..............................
.
புகைப்படம்- எனது I-Phone
சத்தியமா இது ஒரு கற்பனை !!! கடவுளே ,... எங்கட அங்கிள் ரசிகர்கள் ,.. படை எடுத்து கொண்டு வாரங்களோ தெரியல.. :(