2011-04-14

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்:((

ஐயே .. ஏதும் கம்பி எண்ணுறானோ என்று.. யோசிச்சிட வேணாம்.. 

தமிழ் பாடகி சித்ராவின் குரலில் புன்னகை மன்னன் படத்தில் வந்த "ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்" என்ற அருமையான பாடலில் வரும் வரி தான் இது. 

இந்த பாடல் சித்ராவுக்கு ரெம்பவே பிடிக்கும் என்று அடிக்கடி பல மேடை ,  வானொலி, மற்றும் தொலைக்காட்சி நிகழ்சிகளில் சொல்லி இருந்தார்.  இது மட்டுமில்லாமல், இந்த பாட்டை அடிக்கடி பாடியும் கண்பித்து இருக்கின்றார். அவர் தனது குழந்தைக்கும் அடிக்கடி பாடி காட்டும் பாடலாக இருந்தும் வந்துள்ளதை ஒரு தடவை நிகழ்ச்சியில் சொன்னதை கேட்டும் பார்த்தும் உள்ளேன். 

இன்று அவர் பாட கேட்கும் அளவுக்கு அந்த எட்டு வயது குழந்தை இல்லை.. அந்த குழந்தை,  அவரிடமிருந்து பிரிந்து இவ்வுலகை விட்டு நீங்கி சென்று விட்டது. அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.


இந்த பாடல் எனக்கு ரொம்பவே பிடிக்கும் !!! இந்த பாட்டை ஒரு மேடை நிகழ்ச்சியில் சித்திராவே பாடி இருக்கின்றார். பாருங்கள்.. எப்புடி... என்று.. 
சூப்பர் ..கிட்டு.. !!!
 இதோ அந்த பாடல் உங்களுக்காக ( வரிகளுடன் )

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் 
உன் கையில் என்னைக் கொடுத்தேன் 
நீதானே புன்னகை மன்னன்
உன் ராணி நானேபண்பாடும் 
பாடகன் நீயே உன் ராகம் நானே

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனைப் பார்ப்பதால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்
 
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
கதை என்ன கூறு பூவும் நானும் வேறு
 



குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா
கை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா
நீயே அணைக்க வா தீயை அணைக்க வா
நீ பார்க்கும் போது பனியாகிறேன்
 
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன் 
எது வந்த போதும் இந்த அன்பு போதும்



தொடர்பு பட்ட செய்தி : http://www.emirates247.com/news/ks-chitra-s-daughter-reportedly-drowned-in-emirates-hills-pool-2011-04-14-1.381037


Related Posts Plugin for WordPress, Blogger...