2009-06-13

அம்மாவும் நானும் Alarm மும்

தினமும் எனது Alarm செய்யும் தொல்லை
சற்று காலமாய் புதுவிதமான மாற்றம்
அதுக்கு இன்னுமொரு காரணம் இருக்கு , பிறகு சொல்லுறன்

அம்மா இம்முறை இங்கு வந்து மூன்று வாரங்கள் நின்றவ .
தினமும் அவவுக்கு என்னுடைய Alarm செய்யும் தொல்லையோ தொல்லை
சொல்லி முடியாது
குறிப்பாக எனக்கு படுக்கும் நேரம் என்பது define பண்ண இல்லை , விரும்பிய நேரம் படுப்பன் , எழும்புவன் மீண்டும் படுப்பன். எந்த வித நேர அட்டவனை இல்லை.
அறையில் இருக்கிற மூன்று Alarmமும் அடிக்கிறது பத்தாது என்று பார்த்தா எனது Mobile செய்யும் தொல்லையோ பெரும் தொல்லை
அடிக்கடி வரும் SMS சத்தம் வேற, ??????????????

அதிகாலையில் ( 2:00 AM , 3.00 AM, 4 A.M )எனதுAlarm நல்லூர் கோவில் மணி மாதிரி அடிக்கும்.

இதுக்கு மேலால Mobile 3 A.M என்றால் காணும் தானும் சேர்ந்து ஓசை எழுப்பும்
இங்கு வந்த அம்மா இரண்டு நாள் பொறுத்து பார்த்தா பொடியன் எதாவது செய்வானா என்று, ஒரு முன்னேற்றமும் இல்லை. அதனால தானா சொன்னா தம்பி நீ உதுகளை நிப்பாட்டி போட்டு படும். எதுவும் உமக்கு கேட்குது இல்லை
உதுகளோட உம்மட ரேடியோ , டிவி, லைட் எல்லாமே 24 மணி நேர சேவை

அப்படி எங்க தாண்டா உந்த பழக்கம் பழகினி??

நான் சொன்னன் 2003 இல இருந்தே இதுதான் செய்யுறம் என்று . என்னுடன் என்றுமே வேலை செய்யும் இடத்துக்கு அம்மா வந்ததே இல்லை , ஒருக்கா வந்து பார்த்து இருந்தா இங்க இந்த பீலிங் வந்து இருக்காது ha ha.

இந்த எல்லா சத்தங்களுக்குள் அம்மாவை வெறுப்பு அடைய செய்தது எனது Mobile Alarm இக்கு வைத்த பாட்டு தான்
கொஞ்சம் கேளுங்க

ஹே வெற்றி வேலா
நம்ம ஆட்டம் தான் எகிறுது தோழா
ஏயி அடி ஜோரா
நாம எப்பவும் ஜெயிக்கணும் தோழா
பள்ளி கூடம் போகமலே First கிளாசில பாசான கூட்டம் இது

இது ஒருக்கா இரண்டு தடவை என்றால் பரவாய் இல்லை . நான் நிப்பாட்டும் மட்டும் அடிக்கும் ..
என்ன கொடுமை இது என்று அவவுக்கே பொறுக்க முடியல
என்னதான் நினைத்தாவோ தெரியாது ha ha..

அவ்வளவு பாசமான அம்மா தான் என்னுடைய அம்மா
இந்த அம்மா ஸ்பெஷல் ஆக்கமாய் இதை வெளி விடுகிறன்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...