2010-06-24

கால்பந்து 2010 உலகக்கோப்பையின் வரவிருக்கும் போட்டிகள் - ஒரு அலசல்

கால்பந்து போட்டிகளின் பெரும்பாலான போட்டிகள் முடிந்து விடுகின்ற நேரத்தில், அடுத்த சுற்றுக்கு செல்ல இருக்கும் அணிகள் ஓரளவுக்கு தெரிவாகி இருக்கின்றன.

நேற்றிரவு நடந்த போட்டியில் இங்கிலாந்தும் கோல் ஒன்றை போட்டு தனது இருப்பை தக்க வைத்து கொண்டது. இருந்தாலும் அடுத்த சுற்றில் இங்கிலாந்து ஜேர்மனியுடன் விளையாட வேண்டி இருப்பதால், அந்த போட்டியும் கூட ஒரு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இதை விட, நாளை வெள்ளிக்கிழமை நடை பெற இருக்கும், ரசிகர்களுக்கு விருந்தாக அமைய இருக்கும் பிரேசில் - போர்த்துக்கல் இடையான போட்டி இலங்கை நேரப்படி 7.30 மணிக்கு இடம்பெறும்.


மேலும் நெதர்லாந்து , போர்த்துக்கல் , ஸ்பெயின், பிரேசில் , சில்லி, பரகுவே அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகி இருந்தாலும், அவற்றின் குழுமத்துக்குள் நிலைகள் (Individual Group Rankings) இன்னும் தீர்மானிக்கப்படாததால் யார் யாருடன் மோதுவார்கள் என்று முடிவாகவில்லை. நெதர்லாந்து, பரகுவே அணியுடனும், பிரேசில், ஸ்பெயின் அல்லது சில்லி அணியுடனும் மோதலாம். இன்றும் நாளையும் நடக்கும் போட்டிகளில் பல திருப்பங்கள் நடக்கலாம்.
திருப்பங்களில் ஒன்று:
பிரேசில் தனது கால் இறுதி போட்டிக்கு செல்வதற்கு ஸ்பெயின் அணியுடன் மோத வேண்டி இருக்கும். பிரேசில் தப்பிக்க ஒரே ஒரு வழி இருக்கிறது : போர்த்துக்கல் அணியுடன் விளையாடி திட்டமிட்டு தோற்று, சில்லி அணியுடன் விளையாடி அடுத்த கட்டத்துக்கு செல்லலாம். அதே போல் , போர்த்துக்கல் அணி கூட இதே விளையாட்டை செய்து அடுத்த கட்டத்துக்கு முன்னேறலாம்.


சிலவேளைகளில் இரண்டு அணிகளும் முன்னணி வீரர்களை நாளை நடை பெற இருக்கும் போட்டிக்கு இறக்காமல் விளையாடி, தங்கள் இருப்புக்களை மாற்றிக்கொள்ளலாம்.

ஸ்பெயின் அணிக்கு தலையிடி :
என்னதான் விளையாடினாலும் , போர்த்துக்கல் அல்லது பிரேசில் அணியுடன் தான் விளையாட வேண்டும் என்று விதி. விதியை எப்படி ஸ்பெயின் அணி சமாளிக்க போறார்கள் என்று பார்ப்போம்.



இன்னும் இருக்கும் போட்டிகள்

2010-06-02

இசைஞானி இற்கு பிறந்த நாள் வாழ்த்து : வாழ்க பல்லாண்டு புகழோடும் இசையோடும்

ஒரு தாயின் தாலாட்டை கேட்டது குழந்தை பருவத்தில், அந்த தாலாட்டு நினைவில் திரும்பி வருவதில்லை,ஆனால் ஒவ்வொருவருடைய தாயின் தாலாட்டு இப்படித்தான் இருக்கும் என்று காட்டிய இசையின் இசையே , எனது உள்ளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். தொடரட்டும் உமது இசைப் பயணம், உன் நிழலும் இசை பாட நாங்கள் ரசித்திருப்போம்.



இசைஞானி இசையில் வந்த எந்த பாடலும் எனக்கு பிடிக்கும். எத்தனை என்று போடுறது அதால என்னை கவர்ந்த கொஞ்சம் வித்தியாசமாய் எனது தெரிவுகள் :



ராகங்களின்றி சங்கீதமில்லை .... காதலோவியம் பாட்டு ..



ரேவதியின் மற்றுமொரு காவியம் - புன்னகை மன்னன்




அடி ராக்கம்மா கையத்தட்டு ....



கடைசியா நூறு வருஷம் வாழ்த்தி ...


Related Posts Plugin for WordPress, Blogger...