என்னமோ தெரியல கொஞ்ச நாளா ப்லோக், பேப்பர், வீடியோ என்று எல்லாம் ஓடோடி கொண்டு இருக்குது உந்த விஜய் என்ற ஒரு கிறுக்கு நடிகனால(??)
எதோ ஒரு காலத்தில் ஒரு இரு நல்ல படம் குடுத்த மூலம் ரசிகர்களை தன்னகத்தே வசப்படுதிக்கொண்டதால அவர் பெரிய நடிகரோ .. என்னத்தை நடிச்சவர் .. பெரிசா கிளிச்சவர் ....
சும்மா போட்டு இருக்கிற shirt இண்ட காலரை தூக்கி பிடிச்சு சிங்கம் என்றா பெரிய நடிப்பா ?? திருநீறை நெற்றியில பூசி போட்டு அருவா கத்திய தூக்கினா பெரிய நடிகனா ? இல்லாட்டி போனா பெரிய வில்லனோ ?
எடுக்கிற படம் முழுக்க சொதப்பல் படம் , கொஞ்ச நாளா தொடர் தோல்வி படத்துக்கு பிறகு கில்லி இல கிட் ஆனதால வந்த திடீர் கொழுப்பு என்னும் குறையல போல கிடக்கு.
எனக்கும் ஒரு சந்தேகம் கில்லியில பிரகாஷ் ராஜ் யோட ஓட தொடங்கினது இப்போ வில்லு வரைக்கும் ஓடிட்டே ( ஓட்டிட்டே ) இருக்கான்.
சரி அதைத்தான் விடுவம் .. இசை அமைச்ச பாடல்கள் தான் சொந்தமாய் இசை அமைச்சதா என்று பார்த்தா .. கேவலம் தெலுங்கில் இருந்து நேரடியா Copy அடிச்சதுதான்
Over all ஆ எதாவது புதுசா முயற்சி செய்து பார்க்கலாம் , அதை விட்டுட்டு காசு குடுத்து பார்த்த சனத்தை போய் பேசின .....ஒரு லூசு பயலா இருப்பான் போல ...சரியான டென்ஷன் பார்ட்டி போல ..lol
இப்பவே கண்ணை கட்டுதே.. சப சப...சப...
நம்ம தலை ரஜினி யும் குசேலன், பாபா படம் தோல்வியலா கலங்கி போனாரா ,,?? இல்லையே ..அவரை மாதிரி இருக்க வேணுமுங்கோ ..
இல்லை நம்ம விஜ்யகாந்துதான் எதாவது ...செய்தாரா ..lol (வடிவேலுடன் தான் செய்தார் தவிர )
சரி சரி நான் இதுக்கு மேல டென்ஷன் ஆனால் கூடாது BP ஏறிடும் .. நிப்பாட்டுறன் இங்க ..
இவ்வளவு நேரம் வாசிச்சனியல் ஒரிஜினல் தெலுங்கு பாடல்களை பார்த்து விட்டு போகவும் .. அந்த இசையமைப்பாளருக்கு வாழ்த்துக்கள் .. உங்க பாட்டுக்கு ..
1- Sa Ri Ga Ma Pa Da Ni Sa Arey Karo Karo Zara Jalsa
http://www.youtube.com/watch?v=zJJSpuuOydo
2- Shankar Dada Zindabad - Akalesthe ... Telugu item song [High Quality] -.Daddy Mummy
http://www.youtube.com/watch?v=w9BV1CH04KE
3- ------மிக விரைவில் Link போடுறன்
4- ------மிக விரைவில் Link போடுறன்
5- ------மிக விரைவில் Link போடுறன்
நம்முடைய வறு வல்களும் ; சிந்தனைகள் , மனதில செய்ய நினைத்தவை , செய்தவை ,நல்லதாக பார்த்து சுட்டவை ,சுடாமல் சொந்தமாய் தயாரிச்ச தலைப்புக்கள் என்று ஒரு மொக்கை போடும் இடம்
2009-03-18
2009-03-14
தூக்கத்தில் வாடா மாப்பிளை பாட்டு செய்த வேலை
Vaaranam Aayiram -ஓம் சாந்தி பாடல் சிறிதுகாலமாக எனக்கும் பிடித்த படியால் Phone Ringing tone ஆ வைத்துக்கொண்டு, இதுவரை காலமும் எனது கைத்தொலைபேசியில் Ringing Tone aaa இருந்த வில்லு வாடா மாப்பிளை பாடலை நான் நித்திரையால் எழுப்பும் Ringing tone ஆ மாற்றி வைத்து விட்டேன். பிறகு கேட்க வேணாம் ஏன் சாந்தி பாடல் உமக்கு நல்லா பிடிக்கும் என்று
அழுதிடுவன்
நேற்று வியாழன் நாள் முழுக்க வேலை செய்யும் இடத்தில் கடும் வேலை, அயல் நாட்டுக்கு மாலையில் திடீர் பயணம் என்று ஒரே அலுத்து போய்( Facebook இக்கு கூட வடிவா வர முடியவில்லை ), இரவு உணவும் உண்ணவில்லை ( Romba Feeling), வீடு வந்து சேரும் போது நள்ளிரவு 12 மணி. கைத்தொலை பேசியில் இன்டர்நெட் இருந்த படியால் நாள் முழுக்க என்னால் ஏதோ முடியுமான அளவு வாழ முடிஞ்சது. களைப்பால் உடனேயே தூக்கம் போட்டு விட்டேன். ( Alarm மை காலை 4 மணிக்கு வைத்து போட்டு, சிறு வயதில் இருந்து அதிகாலை 3-4 மணிக்கெல்லாம் எழும்பிய பழக்க தோஷம் தினமும் இன்று வரை அதையே பின் பற்றுகிறேன். )
சரி கதைக்கு வருவம். phone எனக்கு பக்கத்தில் வைத்து விட்டு தூக்கம் கொள்வது வழமை, இரவு phone வைத்த இடம் கூட தெரியாது. அவ்வளவு தூக்கம்.
எனது ரூமில் குறிப்பிட்ட இணைய வானொலி 24 மணி நேர - நேரடி ஒலி பரப்புச்சேவை, நான் இருக்கிறனோ இல்லையோ எனது அறையில் அது தனது சேவையை தொடர்ந்து செய்யும். எனது அறைக்கு வந்து போனவைக்கு தெரியும் எப்படி சத்தத்தில் இது வேலை செய்வது என்று!!!
இன்று அந்த வானொலியில் வழமை போல எனது நண்பர் Loshan காலையில் விடியல் நிகழ்ச்சியை தனது பாணியில் செய்து கொண்டு இருந்தார்.
என்னுடைய காலம் அவர் காலை 7.30 மணிக்கு(இலங்கை நேரப்படி)(எனது ஊரில் அதி காலை 3.00.மணி) வாடா மாப்பிளை பாடலை ஒலி பரப்பினார். நான் நித்திரையில் இருந்ததால் Alarm அடிக்குது என்று திடீர் என்று நித்திரையால் எழும்பி தூக்கத்தில் phone ஐ தேடி ஒருமாதிரி , நிற்பாட்டி போட்டு திரும்பி படுத்திட்டன். திருப்பியும் அது தொடர்ந்து அடிக்கிற மாதிரி ஒரு feeling ,சரி திருப்பியும் Alarm ai நிற்பாட்டி போட்டு தூங்கிட்டன்,( இதிலிருந்தே விளங்க வேணும் அவ்வளவு தூக்கமும் , களைப்பும் ) அது தொடர்ந்தே பாடிட்டே இருக்கு, என்ன கொடுமை இது என்று ஒரே ஆத்திரத்தில் நித்திரையில் phone னை உண்மையிலே தூக்கி எறிந்தே விட்டேன் , அது போய் எனது Cupboard இல அடி பட்டதால் வந்த சத்தத்தில் தான் உண்மையிலேயே நித்திரை கலைந்து எழுந்து பார்க்கும் போது , வாடா மாப்பிளை வானொலியில போகுது என்று தெரிய வந்தது . **#&(#.
என்ன Force இல நான் எறிஞ்சு இருக்க வேணும் என்று ஒருக்கா கற்பனை பண்ணி பார்க்கவும் - இதுதான்யா மொக்கன் Throw
சுதாகரித்து கொண்டு ஓடிப்போய் phone னை பார்த்தா சும்மா நினைத்த அளவு சேதாரம் இல்லாட்டியும் ஓரளவுக்கு Casing போய்ட்டு மாதிரிதான் , ஆனால் இன்னும் phone வேலை செய்யுது. phone புதுசு தம்பி புதுசு - E71.. ஆனாலும் பெரிசா வருத்தபடவில்லை ஏனென்றால் ஏற்கனவே Insurance செய்த படியால் கொண்டு போய் மாற்றி விடலாம் என்றபடியால் தான்.
வாடா மாப்பிளை என்று விடியவே யார்தான் என்னை கூப்பிட்டார்கள் என்று இப்போ புரியுது தானே ....ha ha...:)

2009-03-09
Frankfurt Airport
முதல் முதல் எனது உயர்கல்வி படிப்புக்காக ௨007 ஆம் ஆண்டு மேற்குலகம் நோக்கிய பயணத்தை தொடங்கிய போது நம் நாட்டில் இருந்து நேரடி விமானம் மூலம் இந்த விமான நிலையத்தை சென்று அடைந்தேன்.
மிகவும் நீண்ட ஒரு பயணம், விமானத்துக்குள் தொடர் தாக்குதல் ( உண்ட உணவை சொன்னேன்) களைப்பு, பாட்டு கேட்ட களைப்பு ( இதை விட நம்மளுக்கு யாருமே talk போட இல்லை, இதனால் வழமை போல நம்ம I-Pod & Phone Games தான்,) என்று ஒரு தொகை களைப்புகளுடன் ஒரு மாதிரி ஜேர்மன் மண்ணை தொட்டேன். என்னை விட எல்லாருமே ஜேர்மன் நாட்டவர் தான் இருந்த தால் பொழுதும் போகல )
விமானம் நிறுத்த பட்ட பின் ஜேர்மன் மொழியில் எல்லோருக்கும் அறிவித்தல் வழங்க பட்டது, இது வழமையான ஒன்று தானே என்று நினைத்து விட்டு, நானும் எனது பட்டிகளுடன் விமானத்தை விட்டு இறங்கலாம் எண்டு வெளிய வர, அந்த நாட்டு விமான நிலைய போலீசார் நிற்று கொண்டு எல்லாரினதும் Passport பார்த்து கொண்டு நின்றனர், ஆனால் என்னுடைய passport என் Bag இக்குள். என்ன செய்ய அதை எடுப்பம் என்று நினைக்க முதல் அவங்கள் என்னை பிடித்து வெருட்டி நீ எங்க வந்தனீ என்று எல்லாம் போட்டு ஒரு சல்லடை செய்தே போட்டார்கள். இதை விட ஏற்றி கொண்டு போய் அவர்களின் அறைக்குள் வைத்து விசாரிக்கிறார்கள், எனக்கு நிஜமா , இல்லை கனவா இல்லை வேற ஏதுமா என்று கூட தெரியாமல் நிக்குறன்.
விசாரணை நடந்தது , இதில் என்ன சோகமென்றால் அவன் ஜேர்மன் பாசையில் கதைக்கிறான் நான் ஆங்கிலத்தில் பதில், கேவலம் அரை மணி நேரம் கதைச்சு ஒரு முடிவிக்கு வந்தோம். நான் கொண்டு போன பல்கலை அனுமதி பத்திரம், விசா, மற்றும் எனது சொந்த தொழில் அடையாள அட்டை எல்லாமே பொய் என்றும், நீ சும்மா ஏறி வந்திட்டாய் என்றும் தான் வாதம், இதை விட , அவர்கள் சொன்னது , நீ அயல் நாடுக்கு போக வேண்டும் என்றால் ஏன் இங்கே இறங்கினாய் என்று, அதுவும் உண்மை தான், ஆனால் இந்த விமான ஒழுங்கை நான் செய்ய வில்லை, எனக்கு Netherlands Fellowships தந்த அந்த Organization ai தான் கேட்க வேனும்.
ஒரு மாதிரி அழுதும், உண்மைகளை சொல்லியும் , எனது கல்லூரி பத்திரங்கள் , பல்கலை மானியங்களால் வழங்கப்பட கல்வி சார் விடுமுறை பத்திரங்களையும் ( விரிவுரையாளர்களுக்கு வழமையாக வழங்கும் ஒன்று - குறிப்பாக அது ஆங்கிலத்தில் தயாரிக்க பட்டதால் எனது பெயர், தொழில் எல்லாமே தெளிவாக இருந்ததால் ) காட்டி ஒரு மாதிரி இவங்களால் விடு பட்டேன்.
எனது வாழ்க்கையில் மறக்க முடியாத இந்த விமான நிலையத்தில் அந்த போலீஸ் காரருடன் ஒரு புகைப்படமும் எடுத்து கொண்டேன்.
பிறகு அவர்களுடன் ஒரு கோப்பி அருந்திய பின் வழமை போல் சுங்க பிரிவினூடாக வெளிய நிம்மதியாக வந்தேன். (அழுததால் வந்த வினை போலும் )
என்ன செய்வது இரவு நேரம் நான் போகவேண்டிய அயல் நாட்டுக்கு என்னை அழைத்து செல்ல வந்தவரையும் தேடி அலைந்து ஒரு மாதிரி 1 மணி நேர வேட்டைக்கு பின் நமக்கு போக வேண்டிய இடத்துக்கு ஆன பயணத்தை ஆரம்பித்தேன்.
இதையெல்லாம் எங்கள் வீட்டுக்கு சொல்லி அம்மா வை மேலும் Tensionஆக்காமல் விட்டே விட்டேன், ஆனாலும் அந்த வலி எனக்கு இன்னும் இருக்கு .
ஜேர்மன் நாட்டவர்கள் தங்கள் மொழி தவிர்ந்த வேறு எந்த மொழியையும் கதைக்க விரும்புவது இல்லை.
ஆனாலும் இந்த விமான நிலையம் ஒரு Transit விமான நிலையம் ஒரு தொகை வெளிநாட்டவர்கள் வந்து போகும் இடம்.
எப்படித்தான் அவர்கள் சமாளிக்கிறார்களோ...:)
இதை விட நாம் இருக்கும் நாடு(NL) காய் கறி கடையில இருக்கிற அக்காவில இருந்து பிச்சை காரன் வரைக்கும் சரி , இல்லை உயர் பதவி உள்ளவர்கள் சரி ஆங்கிலத்தில் சராமரியாக பேசுவார்கள். நமக்கு அது போதும்.
எத்தினையோ ஐரோப்பா நாடுகள் சென்று வந்துள்ள போதும் , பிரான்சு, ஜேர்மன் நாட்டில் மொழியால் பெற்ற அனுபவங்கள் தான் அதிகம், குறிப்பாக நம் புலம் பெயர் உறவுகள் இந்த நாட்டில் தான் அதிகம் உள்ளனர். அவர்கள் புலம் பெயர்ந்து வந்த பின் இந்த நாட்டு பாஷைகளை வலிய படித்தவர்கள் தான்
இது இவ்வாறு இருக்க அண்மையில் கிழக்கு நோக்கிய பயணத்தில் இதே விமான நிலையம் ஊடாக தான் எனக்கு போகும் படியும் cheap ticket இருக்கு என்றும் சொல்லி போட்டார்கள். எனக்கு ஒருக்கா heart attack வந்த பீலிங் இருந்தது.
சரி இம்முறை எப்படியாவது இவர்களை துவம்சம் செய்யாமல் போவது இல்லை என்று நினைத்து கொண்டு போனால் பாது காப்பு நடைமுறைகளால் கெடு பிடிகள் மிகவும் அதிகம். நானும் பொறுமையா எல்லாம் தூக்கி காட்டி கொண்டு ஒரு மாதிரி போய் சேர்ந்தேன்.
திரும்பி வரும் போது கொஞ்சம் பயமாய் தான் இருந்தது, என்னுடன் எங்கள் உறவும் வந்ததால் வந்த இடமும் தெரியல , வீடு வந்ததும் தெரியல
Subscribe to:
Posts (Atom)