அழுதிடுவன்
நேற்று வியாழன் நாள் முழுக்க வேலை செய்யும் இடத்தில் கடும் வேலை, அயல் நாட்டுக்கு மாலையில் திடீர் பயணம் என்று ஒரே அலுத்து போய்( Facebook இக்கு கூட வடிவா வர முடியவில்லை ), இரவு உணவும் உண்ணவில்லை ( Romba Feeling), வீடு வந்து சேரும் போது நள்ளிரவு 12 மணி. கைத்தொலை பேசியில் இன்டர்நெட் இருந்த படியால் நாள் முழுக்க என்னால் ஏதோ முடியுமான அளவு வாழ முடிஞ்சது. களைப்பால் உடனேயே தூக்கம் போட்டு விட்டேன். ( Alarm மை காலை 4 மணிக்கு வைத்து போட்டு, சிறு வயதில் இருந்து அதிகாலை 3-4 மணிக்கெல்லாம் எழும்பிய பழக்க தோஷம் தினமும் இன்று வரை அதையே பின் பற்றுகிறேன். )

சரி கதைக்கு வருவம். phone எனக்கு பக்கத்தில் வைத்து விட்டு தூக்கம் கொள்வது வழமை, இரவு phone வைத்த இடம் கூட தெரியாது. அவ்வளவு தூக்கம்.
எனது ரூமில் குறிப்பிட்ட இணைய வானொலி 24 மணி நேர - நேரடி ஒலி பரப்புச்சேவை, நான் இருக்கிறனோ இல்லையோ எனது அறையில் அது தனது சேவையை தொடர்ந்து செய்யும். எனது அறைக்கு வந்து போனவைக்கு தெரியும் எப்படி சத்தத்தில் இது வேலை செய்வது என்று!!!
இன்று அந்த வானொலியில் வழமை போல எனது நண்பர் Loshan காலையில் விடியல் நிகழ்ச்சியை தனது பாணியில் செய்து கொண்டு இருந்தார்.
என்னுடைய காலம் அவர் காலை 7.30 மணிக்கு(இலங்கை நேரப்படி)(எனது ஊரில் அதி காலை 3.00.மணி) வாடா மாப்பிளை பாடலை ஒலி பரப்பினார். நான் நித்திரையில் இருந்ததால் Alarm அடிக்குது என்று திடீர் என்று நித்திரையால் எழும்பி தூக்கத்தில் phone ஐ தேடி ஒருமாதிரி , நிற்பாட்டி போட்டு திரும்பி படுத்திட்டன். திருப்பியும் அது தொடர்ந்து அடிக்கிற மாதிரி ஒரு feeling ,சரி திருப்பியும் Alarm ai நிற்பாட்டி போட்டு தூங்கிட்டன்,( இதிலிருந்தே விளங்க வேணும் அவ்வளவு தூக்கமும் , களைப்பும் ) அது தொடர்ந்தே பாடிட்டே இருக்கு, என்ன கொடுமை இது என்று ஒரே ஆத்திரத்தில் நித்திரையில் phone னை உண்மையிலே தூக்கி எறிந்தே விட்டேன் , அது போய் எனது Cupboard இல அடி பட்டதால் வந்த சத்தத்தில் தான் உண்மையிலேயே நித்திரை கலைந்து எழுந்து பார்க்கும் போது , வாடா மாப்பிளை வானொலியில போகுது என்று தெரிய வந்தது . *&#*#&(#.

என்ன Force இல நான் எறிஞ்சு இருக்க வேணும் என்று ஒருக்கா கற்பனை பண்ணி பார்க்கவும் - இதுதான்யா மொக்கன் Throw
சுதாகரித்து கொண்டு ஓடிப்போய் phone னை பார்த்தா சும்மா நினைத்த அளவு சேதாரம் இல்லாட்டியும் ஓரளவுக்கு Casing போய்ட்டு மாதிரிதான் , ஆனால் இன்னும் phone வேலை செய்யுது. phone புதுசு தம்பி புதுசு - E71.. ஆனாலும் பெரிசா வருத்தபடவில்லை ஏனென்றால் ஏற்கனவே Insurance செய்த படியால் கொண்டு போய் மாற்றி விடலாம் என்றபடியால் தான்.
வாடா மாப்பிளை என்று விடியவே யார்தான் என்னை கூப்பிட்டார்கள் என்று இப்போ புரியுது தானே ....ha ha...:)
No comments:
Post a Comment