
முதல் முதல் எனது உயர்கல்வி படிப்புக்காக ௨007 ஆம் ஆண்டு மேற்குலகம் நோக்கிய பயணத்தை தொடங்கிய போது நம் நாட்டில் இருந்து நேரடி விமானம் மூலம் இந்த விமான நிலையத்தை சென்று அடைந்தேன்.
மிகவும் நீண்ட ஒரு பயணம், விமானத்துக்குள் தொடர் தாக்குதல் ( உண்ட உணவை சொன்னேன்) களைப்பு, பாட்டு கேட்ட களைப்பு ( இதை விட நம்மளுக்கு யாருமே talk போட இல்லை, இதனால் வழமை போல நம்ம I-Pod & Phone Games தான்,) என்று ஒரு தொகை களைப்புகளுடன் ஒரு மாதிரி ஜேர்மன் மண்ணை தொட்டேன். என்னை விட எல்லாருமே ஜேர்மன் நாட்டவர் தான் இருந்த தால் பொழுதும் போகல )

விமானம் நிறுத்த பட்ட பின் ஜேர்மன் மொழியில் எல்லோருக்கும் அறிவித்தல் வழங்க பட்டது, இது வழமையான ஒன்று தானே என்று நினைத்து விட்டு, நானும் எனது பட்டிகளுடன் விமானத்தை விட்டு இறங்கலாம் எண்டு வெளிய வர, அந்த நாட்டு விமான நிலைய போலீசார் நிற்று கொண்டு எல்லாரினதும் Passport பார்த்து கொண்டு நின்றனர், ஆனால் என்னுடைய passport என் Bag இக்குள். என்ன செய்ய அதை எடுப்பம் என்று நினைக்க முதல் அவங்கள் என்னை பிடித்து வெருட்டி நீ எங்க வந்தனீ என்று எல்லாம் போட்டு ஒரு சல்லடை செய்தே போட்டார்கள். இதை விட ஏற்றி கொண்டு போய் அவர்களின் அறைக்குள் வைத்து விசாரிக்கிறார்கள், எனக்கு நிஜமா , இல்லை கனவா இல்லை வேற ஏதுமா என்று கூட தெரியாமல் நிக்குறன்.
விசாரணை நடந்தது , இதில் என்ன சோகமென்றால் அவன் ஜேர்மன் பாசையில் கதைக்கிறான் நான் ஆங்கிலத்தில் பதில், கேவலம் அரை மணி நேரம் கதைச்சு ஒரு முடிவிக்கு வந்தோம். நான் கொண்டு போன பல்கலை அனுமதி பத்திரம், விசா, மற்றும் எனது சொந்த தொழில் அடையாள அட்டை எல்லாமே பொய் என்றும், நீ சும்மா ஏறி வந்திட்டாய் என்றும் தான் வாதம், இதை விட , அவர்கள் சொன்னது , நீ அயல் நாடுக்கு போக வேண்டும் என்றால் ஏன் இங்கே இறங்கினாய் என்று, அதுவும் உண்மை தான், ஆனால் இந்த விமான ஒழுங்கை நான் செய்ய வில்லை, எனக்கு Netherlands Fellowships தந்த அந்த Organization ai தான் கேட்க வேனும்.

ஒரு மாதிரி அழுதும், உண்மைகளை சொல்லியும் , எனது கல்லூரி பத்திரங்கள் , பல்கலை மானியங்களால் வழங்கப்பட கல்வி சார் விடுமுறை பத்திரங்களையும் ( விரிவுரையாளர்களுக்கு வழமையாக வழங்கும் ஒன்று - குறிப்பாக அது ஆங்கிலத்தில் தயாரிக்க பட்டதால் எனது பெயர், தொழில் எல்லாமே தெளிவாக இருந்ததால் ) காட்டி ஒரு மாதிரி இவங்களால் விடு பட்டேன்.
எனது வாழ்க்கையில் மறக்க முடியாத இந்த விமான நிலையத்தில் அந்த போலீஸ் காரருடன் ஒரு புகைப்படமும் எடுத்து கொண்டேன்.

பிறகு அவர்களுடன் ஒரு கோப்பி அருந்திய பின் வழமை போல் சுங்க பிரிவினூடாக வெளிய நிம்மதியாக வந்தேன். (அழுததால் வந்த வினை போலும் )
என்ன செய்வது இரவு நேரம் நான் போகவேண்டிய அயல் நாட்டுக்கு என்னை அழைத்து செல்ல வந்தவரையும் தேடி அலைந்து ஒரு மாதிரி 1 மணி நேர வேட்டைக்கு பின் நமக்கு போக வேண்டிய இடத்துக்கு ஆன பயணத்தை ஆரம்பித்தேன்.
இதையெல்லாம் எங்கள் வீட்டுக்கு சொல்லி அம்மா வை மேலும் Tensionஆக்காமல் விட்டே விட்டேன், ஆனாலும் அந்த வலி எனக்கு இன்னும் இருக்கு .
ஜேர்மன் நாட்டவர்கள் தங்கள் மொழி தவிர்ந்த வேறு எந்த மொழியையும் கதைக்க விரும்புவது இல்லை.
ஆனாலும் இந்த விமான நிலையம் ஒரு Transit விமான நிலையம் ஒரு தொகை வெளிநாட்டவர்கள் வந்து போகும் இடம்.
எப்படித்தான் அவர்கள் சமாளிக்கிறார்களோ...:)

இதை விட நாம் இருக்கும் நாடு(NL) காய் கறி கடையில இருக்கிற அக்காவில இருந்து பிச்சை காரன் வரைக்கும் சரி , இல்லை உயர் பதவி உள்ளவர்கள் சரி ஆங்கிலத்தில் சராமரியாக பேசுவார்கள். நமக்கு அது போதும்.
எத்தினையோ ஐரோப்பா நாடுகள் சென்று வந்துள்ள போதும் , பிரான்சு, ஜேர்மன் நாட்டில் மொழியால் பெற்ற அனுபவங்கள் தான் அதிகம், குறிப்பாக நம் புலம் பெயர் உறவுகள் இந்த நாட்டில் தான் அதிகம் உள்ளனர். அவர்கள் புலம் பெயர்ந்து வந்த பின் இந்த நாட்டு பாஷைகளை வலிய படித்தவர்கள் தான்
இது இவ்வாறு இருக்க அண்மையில் கிழக்கு நோக்கிய பயணத்தில் இதே விமான நிலையம் ஊடாக தான் எனக்கு போகும் படியும் cheap ticket இருக்கு என்றும் சொல்லி போட்டார்கள். எனக்கு ஒருக்கா heart attack வந்த பீலிங் இருந்தது.
சரி இம்முறை எப்படியாவது இவர்களை துவம்சம் செய்யாமல் போவது இல்லை என்று நினைத்து கொண்டு போனால் பாது காப்பு நடைமுறைகளால் கெடு பிடிகள் மிகவும் அதிகம். நானும் பொறுமையா எல்லாம் தூக்கி காட்டி கொண்டு ஒரு மாதிரி போய் சேர்ந்தேன்.
திரும்பி வரும் போது கொஞ்சம் பயமாய் தான் இருந்தது, என்னுடன் எங்கள் உறவும் வந்ததால் வந்த இடமும் தெரியல , வீடு வந்ததும் தெரியல
No comments:
Post a Comment