2009-07-08

அறுவையும் வறுவல்களும்- Part I

அறுவையும் வறுவல்களும்
Share
Yesterday at 11:51 | Edit note | Delete
அண்மையில் எனது நண்பர் தனது வானொலி நிகழ்ச்சியில் "தாய் நாட்டில் இருந்து வெளி நாடு சென்று மீண்டும் ஒரு சிறு இல்லாட்டி பெரிய கால இடைவெளியின் பின் வெளி நாட்டில் இருந்து வருவோர் செய்யும் ஜொள்ளுகள் லொள்ளுகள் பற்றி நிகழ்ச்சி நடத்தி இருந்தார்.

அதை ஆவேசமாய் ரசித்தேன் , அந்த நிகழ்ச்சியில் பலர் தங்களது கருத்துகளை வாரி வழங்கினார்கள்.

அதில் எனக்கு பிடித்தவையும் நான் பெரும்பாலும் கண்டவையும்

1-
வெளிநாட்டில் ஆக கூட மூன்று மாதம் நின்று போட்டு வந்தாலும் வெள்ளவத்தை இல traffic ai கண்டவுடன் இப்படி Dubai இல இல்லை , Saudi இல இல்லை, இல்லாட்டி London City இல இல்லை , ஏனென்றால் நாங்க அங்க Motor way இல தான் போறது.எனக்கு ஒரே தடு மாற்றம் இது என்ன ஒழுங்கை மாதிரி காலி வீதி கிடக்கு என்று பெரிய Build up கொடுக்கிறது
( தாங்க அங்கேயே பிறந்து வளர்நது போட்டு இங்கே வந்த மாதிரி ஒரு எண்ணம் )
(குறிப்பாக இவங்க வீட்டுக்கு ஒழுங்கான பாதையால போகாma குச்சி ஒழுங்கைக்கால போய் வேலி ஏறி பாய்ஞ்சு போய் தான் இருப்பான் முந்தி )

2-எதுக்கு எடுத்தாலும் தாங்க போன இடம், நின்ற ஊர், இல்லாட்டி போன கடற்கரை எதாவது ஒன்றையும் இங்கை ஒன்றையும் Compare பண்ணுறது. முடிவாக தாங்க போன இடம் தான் நல்லம் என்று சொல்றது .

3-எதுக்கு எடுத்தாலும் ஆட்டோ, Cab இல்லாட்டி van பிடிப்போம் என்றது. முந்தி கொழும்பில இருக்கும் போது வெள்ளவத்தை பாலத்தில இருந்து பம்பலபிட்டிய சந்தி வரைக்கும் நடந்து போய் இருப்பான். அந்த 3 ரூபாய் Bus காசை யும் சேமிச்சு கொண்டு

4-Swimming செய்யாம தாங்கள் Dinner எடுக்கிறது இல்லை என்று பெரிசா சொல்லுவினம்- கேவலம் இங்க இருக்கும் போது பாவி குளிச்சானா தெரியாது ஒரு கிழமைக்கு !!!

5- எதுக்கு எடுத்தாலும் Shoes ம 3/4 m போட்டு கொண்டு அதுக்கும் மேலால Cooling Glass அடிச்சு கொண்டு போய் Royal bakery இல பாண் வேண்டுறது.
நிச்சயமா பொடியன் தான் பள்ளி கூடம் போகும் போது bata செருப்பு போட்டு கொண்டு தான் போய் இருப்பான்

6- இதை விட எல்லாரும் தமிழ் பசங்களா தான் இருப்பாங்கள் இவரு மட்டும் அதுக்குள்ளே ஆங்கிலம் கதைப்பராம். உவனுக்கு உண்மையாவே பள்ளி கூடத்தில ஆறு வருஷாமாய் ஆங்கிலம் படிபிச்ச வாத்தியார் யார் என்று தெரிஞ்சே இருக்காது மவனே

7- புது புது Mobile Phone ai வைச்சு கொண்டு பாட்டு போடுவாராம், வீடியோ எடுப்பாராம், படம் எடுப்பாராம், எல்லாத்துக்கும் மேலால Email இம் செய்து போடுவாராம்.

8- இதை விட இந்த கலர் கலராய் தலை மயிருக்கு கலர் போடுவாராம். ஊரில இருக்கும் போது தமிழ் வாத்தியார் அடிச்சு துரத்தி இருப்பார் போய் தலை மயிர் வெட்டிட்டு வாடா, இல்லாட்டி நாளைக்கு உன்னை வகுப்பினுள் விட மாட்டன் என்று

9-நண்பர் கூட்டமாய் party போடுவம் என்று போய் இருந்தால், உடனே waiter இட்ட கேட்பாராம் வெளி நாட்டு சரக்கு ஏதும் இருக்கா என்று. இல்லாட்டி இப்படி ஒரு வறுவல், அப்படி ஒரு வறுவல் என்று பக்க வாத்தியம் கேட்பாராம்.
நீங்கள் எல்லாம் முந்தி உண்மையிலேயே கள்ளு கொட்டிலில் நின்று கள்ளமாய் கள்ளு குடிச்சிட்டு வெத்திலை பாக்கும் போட்டு கொண்டு வீட்ட போன பரம்பரையாய் தான் இருக்கும்.. ஹா ஹா

அறுவையும் வறுவல்களும் தொடரும் ...

இந்த குறிப்பு யாரையும் புண் படுத்த வேணும் என்று எழுதப்படவில்லை.
நானும் வெளி நாட்டில் தான் நிக்குறன் என்பதையும் நினைத்து கொள்ளவும்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...