இருந்த ஊர்களில் எந்த ஊரை சொந்த ஊர் என்று போடுறது. பிறந்த இடத்தை தான் போடுறது வழமை . இருந்தாலும் பிறந்த ஊரில் நான் ஒரு அல்லது இரண்டு வருடம் தான் இருந்தேன். வவுனியாவில் எட்டு வருடங்கள் , சுன்னாகத்தில் ஒரு வருடம் , யாழ்ப்பாணத்தில் எட்டு வருடங்கள், கொழும்பில் பதினான்கு வருடங்கள் ( இதுக்க கண்டியில் ஐந்து வருடங்கள் , நெதர்லாந்தில் மூன்று வருடங்கள் , வேலை செய்யும் ஊர் ஐந்து வருடங்கள் உள்ளடக்கம்).
விதானை என்னுடைய கதையை கேட்டால் தலை சுத்தி விழுந்தாலும் விழுந்திடுவா. ( அம்மையார் தான் விதானை) . தொழிலை விட்டுட்டு போனாலும் போயிடுவா. ஹா ஹா :)
பிறந்த ஊர், இருந்த ஊர், புகுந்த ஊர், புலம்பெயர்ந்த ஊர் , படித்த ஊர், வேலை செய்யும் ஊர், எத்தனை ஊரையா எம்மளுக்கு ?? நம்மளுக்கு எங்கு இருந்தாலும் எல்லாம் ஒன்று தான்.
இந்த ஊர் கதை சொல்லும் போது எனக்கு பிடித்த கண்ணதாசனின் வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றது.
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா?
இருந்த ஊரை சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா?
மிகவும் பழைய பாடல் ..கேட்டு ரசித்து பாருங்கள்..