2010-02-23

எனக்கு பிடித்த சொக்குதே மனம்

தென் இந்திய தமிழ் தொலைக்காட்சிகள் பெரும்பாலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளையே கொண்டு தான் காலத்தை ஓட்டி கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு தொலைக்காட்சியும் வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்கு பெயர் போனது.

சில இருக்கிற எல்லா சீரியல்களையும் போட்டு காலத்தை ஒட்டி கொண்டு இருக்கின்றன . அந்த சேனல்களை நான் இங்கே கருத வில்லை. அதே போல் சினிமா, டாப் டென் பாடல்கள், திரை விமர்சனம், டாப் டென் திரைப்படங்கள், சமையல் சமையல் ( இது கடுப்பு ஏத்தும் நிகழ்ச்சி ) இவையும் இங்கே நான் கருத வில்லை.

சன் டிவி யில் பெரும்பாலும் அசத்தபோவது யாரு, தயாரித்து வழங்கும் காமெடி டைம் எல்லாரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகள்.

ஜெயா டிவி யில் வரும் ராக மாலிகா, என்னோடு பாட்டு பாடுங்கள் ( இது இப்போது இல்லை) போன்றவையும் ,

அதே போல் கலைஞர் டிவி யில் , பாட்டுக்கு பாட்டு , மானாட மயிலாட போன்றவை பிர பல்யமானவை. ( வேறு ஏதும் இருந்த மன்னியுங்கப்பா)

எனக்கு தெரிந்த நண்பர்களிடம் நான் கேட்பது அடிக்கடி யாரவது சொக்குதே மனம் என்ற இசை நிகழ்ச்சி நடப்பது தெரியுமா என்று ?? யாருமே அதை பார்ப்பதாக சொல்லவுமில்லை. சிலர் அப்படி ஒன்று இருக்கா என்று கூட கேட்டார்கள்.

இதுக்காக எல்லாருக்காகவும் சேர்த்து ஒரு சிறு தொகுப்பை தருகின்றேன்.

சொக்குதே மனம்
இரவு ஒன்பதரை மணி முதல் பத்து மணி முதல் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் இந்தவித்தியாசமான நிகழ்ச்சியில் மனதைக் கரைக்கும் அருமையான பழைய ஹிட்பாடல்களை ரீமிக்ஸ் செய்து பாடிக் காட்டி அசத்துகிறார்கள்.

http://www.jayanetwork.in/PgView.asp?ref=௰௪௭

ராத்திரியாச்சுன்னா, மிட் நைட் மசலாக்களைப் பார்த்து விட்டு தூங்கப் போகும் சகலமகா ஜனங்களுக்களையும் நல்ல திசையில் திருப்பும் வகையில், சொக்குதே மனம் என்ற ஒரு அருமையான வித்தியாசமான நிகழ்ச்சியைப் போட்டு வித்தியாசமான விருந்தைப்படைத்து வருகிறது ஜெயா டிவி.



ப்ரியா சுப்ரமணியன்

தொகுத்து வழங்குவதிலும் பார்க்க, பூத்து குலுங்கும்புன்னகை , இனிமையான குரல், அணிந்து இருக்கும் ஆபரணங்கள் , விதம் விதமான சேலைகள் என்று சொல்லி எல்லாரையும் ஆட்டம் காண வைக்கின்றார் பிரியா சுப்ரமணியன்.

மேடையமைப்பு : கலர் கலரான மின்குமிழ்கள், அழாகான ஓவியங்கள், பிரமிக்க வைக்கும் சிற்ப வேலைப்பாடுகள் என்று நீட்டி கொண்டே போகலாம்.


sokuthegthr
Geüpload door facetamil. - Het hele seizoen en gehele afleveringen online.

பாடகர்கள்: யார் குரலிலும் பாடும் வல்லமை கொண்ட பாடகர்கள் , பாடகிகள். அதுவும் பழைய ஆண் குரல்களான ராஜா, சௌந்தராஜன் ,ஸ்ரீநிவாஸ், பிறகு ஜேசுதாஸ் , பாலா , இளையராஜா , ஜெயச்சந்திரன் ,வாசுதேவன் என்று எல்லா குரல்களும் இருக்கும். அதே போல பெண் குரல்களான ஜானகி, ,சுஷீலா என்று நீட்டி கொண்டே போகலாம்.

இசைக்குழு: தரமான குழு , ஒரு இசை நிகழ்ச்சி நடத்த தேவையான எல்லா விதமான இசைக்கருவிகளும் , வித்துவான்கள் போன்ற கலைஞர்களும் இருப்பார்கள்.


Sokkuthe Manam - 28-09-08 - Part-1 - Free videos are just a click away


இந்தியாவில் இந்த நிகழ்ச்சி பெரும் கிட். பழசுகள் சரி, புதுசுகள் சரி விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி.

திரைப்பட வீடியோ கலவையுடன் தரமான ஒலி, ஒளியமைப்புடன் ஞாயிறு இரவில் சொக்குதே மனம் ரசிகர்களை சொக்க வைத்து விட்டு செல்கின்றது. நான் இந்த நிகழ்ச்சியை நீண்ட நாட்களாக பார்த்து ரசித்து வருகின்றேன்.
அதிலும் குறிப்பாக இறுதியாக ஒரு சூப்பர் கிட் இளையராஜாவின் இசையில் வந்த சூப்பர் கிட் பாட்டை பாடி எல்லாரின் மனதையும் திருடியது மட்டும் இல்லாமல்
வசிகரீத்தும் செல்வார் சிரிப்பழகி ப்ரியா .



Sokkuthe Manam - 19-10-08 - Part-1 - These bloopers are hilarious

ஒரு சில காணொளிகளை இங்கே இணைத்தும் உள்ளேன். உங்கள் மனங்களை இது சொக்கி இருந்தால் எனக்கும் சந்தோசம்.

இறுதியாக வசீகரா ரீலு :




தொகுப்புக்கு செல்ல :
http://www.thamil.org/teledramas/?id=113&programme=Sokkuthe%20Manam

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...