2010-02-25

இதமான இரவில் நிறைந்த சுமைகளை இறக்கி வைத்து விட்டு கேட்க கூடிய பாடல்கள் II

குறுகிய பயணமாய் ஊருக்கு வந்த நான் மீண்டும் ஒரு மேற்குலக ஊர்ருக்கு நாளை பயணமாக இருக்கின்றேன். அதுக்கான தயாரிப்புகள், நண்பர்களின் வருகை என்று இரவு ஒன்பது மணி கடந்து விட்டது. சாப்பிட்டு அம்மாவுடன் கடந்த கால கசப்பான அனுபவங்களை உரையாடி விட்டு , ராத்திரி பத்து மணி , வீட்டில் பாயை ( இவ்வளவு காலமும் ஐரோப்பாவில் என்ன buildup எல்லாம் குடுத்து தான் படுத்து எழும்பிறது ) விரித்துப் போட்டு படுக்கும்போது, எனது இணைய வானொலி இதமான இரவில் நிறைந்த சுமைகளை இறக்கி வைத்து விட்டு கேளுங்கள் என்ற தனது வழமையான சேவையை ஆரம்பித்தது.

============விளம்பர இடை வேளை================
கட்டிலில் படுத்தால் உருண்டு புரள ,விழ உடம்பு விடாதாம் என்று அடிக்கடி என்ற ரூமா சொல்லி, கம்பசில படிக்கிற காலத்தில என்னை விட எல்லாருமே பாய் தான் :)
காரணமா :=============>
கட்டாந்தறையில் ஒரு துண்டை விரித்தேன்
கண்ணில் தூக்கம் சொக்குமே அந்து அந்த காலமே
மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லே அது இந்த காலமே
<============================== சொல்லுவினம் .. ரொம்பவே ஓவர் தான் .. :) உண்மையில உடம்பு கூடின ரூமா நான்தான் ..:) இருந்தாலும் எனக்கும் பாய் தான் விருப்பம் .. இவங்கலால double பெட் இல் கடைசியா நான் தான் படுக்கிறது.

============விளம்பர இடை வேளை================


(இந்த பாயிலையும் பனையோலைப்பாய்,.. தான் நல்லமாமே )

தினமும் நள்ளிரவை கடந்த வேளைகளில் ஒலிக்கும் இதமான பாடல்களை இந்த அலைவரிசையில் கேட்பதுவும் அதில் எனக்கு பிடித்த பாடல்களை ஆங்காங்கே தேடிப்பிடித்து போடுவதும் எனது கடந்த கால அனுபவங்கள். இன்றைய நாளில் வந்த பாடல்களில் முத்தான மூன்று பாடல்கள் நான் ஒரு சில தடவைகள் கேட்டு உள்ளேன்...இருந்தாலும் என்னமோ நீண்ட நாட்களுக்கு பின் கேட்கும்போது அதுவும் எங்கட வீட்டில் இருந்து கேட்கும் போது வரும் ஆனந்தம் என்றுமே மிகையாகாது. அம்மாவின் வழமையான ஒடர் : தம்பியவை உதுகளுக்கு கிட்ட படுக்காதையும் , நாங்களும் சொல்லுறது தூரத்தில தான் படுத்து இருக்கேன்,,, என்று.. :) உண்மையாவே ஐரோப்பாவில் இருந்த போது பக்கத்தில தான் பாட்டு பெட்டியும் , லேப்டாப் இம் . தூங்கிட்டே இருக்கும்போது இடைக்கிடை எழும்பி யாருக்காவது அழைப்பு செய்வதும், இல்லாட்டி farmville விளையாடுவதும் ஒரு வழமையான ஒன்றே,சரி இந்தாங்க இன்றைய பாட்டுகள் :

1) நீ பௌர்ணமி ... ஜேசுதாஸ் ஐயா பாடின மெகா கிட்டான பாடல்:
2) ஆலமரம் மெல்ல வரும்
3) மீரா படத்தில் வந்த ஜேசுதாஸ் பாடின - புது ரோட்டில தான்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...