2010-03-24

மலரே நலமா ... மலர்களுடன் ஒரு நாள்

கடந்த வாரம் நெதர்லாந்தில் உள்ள பூக்களினால் பூத்து குலுங்க தொடங்கி இருக்கும் Keukonof ( Tulips Garden ) சென்றோம். இப்பூங்கா Amsterdam விமான நிலையத்துக்கு ( ஓடு பாதை )பின்னால் உள்ளது.

ஏற்கனவே நான் ஒரு தொகை சுடு சுடுன்னு சுட்ட படங்களை முக வலையில் போட்டு இருக்கேன். முக வலை நண்பர்கள் பார்த்து இருப்பார்கள். மேலதிக தொகுப்புகள் எனது தனிப்பட்ட இணையத்தில் இனைக்கப்படும்.
அங்கே எடுத்த படங்களில் ஒரு சில இங்கே .










பேராதனையில் நான் படிக்கும் காலத்தில் பல தடவையும் , படிக்க வர முன் ஒரு சில தடவைகளும் , படிச்சு முடிச்ச பிறகு கூட அந்த பச்சை பசேலென இருக்கும் மரங்களை பூக்களை பூங்காவில் பார்த்து ரசித்து வந்தேன். இப்படி பூக்கள் மரங்கள் என்றால் ரசிப்பது என் வேலை ..:)

அந்நியன் படத்தில் ஷங்கர் குமாரி பாடலுக்கு நெதர்லாந்தின் இரண்டு பிரபல்யமான இடத்தில் ஷூட்டிங் செய்து இருந்தார்.

அதில் ஒன்று தான் Keukonof என்று சொல்லப்படும் இந்த பூங்கா..

நெதர்லாந்துக்கு உயர் கல்வி நிமித்தம் வந்த போது முதலில் சென்று பார்க்க வேண்டிய இடமாக Amasterdam இம் ( ஏனென்று சின்ன பிள்ளை தனமா கேட்க கூடாது) அடுத்ததாக இந்த பூந்தோட்டமும் பிறகு Wind Mills ( காற்றாலைகளும் ) பிறகு Cheese இற்கு பிரபல்யமான Alkmar நகரத்தையும் பார்த்தே தீரனும் என்று இருந்தேன்.

பூந்தோட்டம் Spring இல் தான் திறந்து விடப்படும். கடந்த ஆண்டும் ஒரு தடவை சென்று பார்த்தேன். இந்த முறையும் தவறாமல் சென்று பார்த்தேன்.
உண்மையில் இந்த tulips பூக்கள் நெதர்லாந்து இற்கு சொந்தமானவை அல்ல. பெரும்பாலானவை துருக்கி மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து கொண்டு வந்து இங்கே வைத்து இருப்பதுவும் அதை செவ்வனே பாதுகாத்துவருவதும் உல்லாச பயணிகளை கவர எடுத்த ஒரு நட வடிக்கை தான்.

சிகப்பு விளக்குகளுக்கு மேலாக இந்த பூக்களை ரசிக்க வரும் உல்லாசப்பயணிகள் ஏராளம். ஐரோப்பா காலநிலையும் நன்றாகவே இருக்கும்( இந்த முறை கஷ்ட காலம் நாங்க நல்ல மழைக்குள் மாட்டி விட்டோம்).

அந்நியன் படப்பாடல்

http://www.youtube.com/watch?v=fuLc6Z4ID1U


இந்த பாட்டில் , சதா பூவை போல பளிச்சென்றும், அத்துடன் சதவைப்பார்த்ததும் ஏதோ ஒரு மின்னல் என்னிதையத்தை வந்து ஓங்கி தாக்கின மாதிரியும் இருந்திச்சு.

கொஞ்சம் மேலதிகமான தொகுப்புகள்:





இந்த பிரதேசத்துக்கு கூடுமானவரை மக்களை அனுமதிப்பது குறைவு. சங்கரின் ஒரு கோடியாவது படக்குழுவை அனுமதித்து இருக்கும். :)



பரந்து விரிந்து கிடக்கும் தோட்டம்.

இந்த பாட்டில் 4 .45 நிமிடத்துக்கு பின்னர் எடுக்கப்பட்ட காட்சி பழைய காற்றாலைகள் இருக்கிற கிண்டேர்டிஜ்க் என்னுமிடத்தில் எடுக்கப்பட்டது.


வாசல் பகுதி



தள அமைப்பு

காற்றாலைகளில் ஒரு பகுதி

ஐரோப்பிய ( லண்டன் தவிர்ந்த நாடுகள் ) நண்பர்கள், இப்படியான பிரபல்யமான இடங்களை தன்னகத்தே கொண்ட நெதர்லாந்தை வந்து பாருங்கள். உங்களுக்கு விசா பிரச்சினை இல்லை. மற்றவர்கள் உங்கள் பிரயாணத்தை ஒரு ஸ்ப்ரிங் இல் செய்தால் பலதை பார்த்து ரசிக்கலாம்.

மேலதிகமாக ஒரு தகவல் : நெதர்லாந்தில் இவை எதற்கும் தடை இல்லை
  1. ஓரினச்சேர்க்கை
  2. மது
  3. கஞ்சா குடு போன்ற போதை வஸ்து பாவனை
  4. விபச்சாரம்



இதுக்கு மேல வேற என்னவாம் தேவை .. :)
ஸ்ஹப்ஹாஆஆஆஆஆஆஅ இத்தனை சுதந்திரமும் இருக்கிறதால தான் உல்லாச பிரயாணிகள் வருகை கூட.. மேலதிகமாய் ஒன்று .. நாங்களும் புலன்களை அடக்கி கொண்டு படித்து முடிச்சோம்ல......:) இது எப்புடி ..







2010-03-19

பேய்களும் தவிர்ப்புகளும்

கடந்த வாரம் புற நாட்டுக்கு விஜயம் செய்து ஒரு வாரம் கழித்து வழமை போல எனது வீட்டுக்கு வந்து சேர்ந்த போது நள்ளிரவை தாண்டி விட்டது. ஊரென்றால் நாய்களாவது சத்தம் போட்டு ஊரையே எழுப்பும். இங்க அப்படி ஒன்றுமே இல்லை. வழமை போல வந்து கதவை திறக்க திறப்பை போட்ட போது .. ஏதோ டச் பாசையில் பொலிசிடம் இருந்து வந்த நோட்டீஸ் கதவில் ஒட்டி கிடந்தது. அதை உரித்து எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தேன். எனக்கு தெரிந்த டச்சில் அதை வாசித்தால் ஏதோ விளக்கம் கோரி இருப்பதை அறிந்து கொண்டேன். ஆனால் எழுவாய் பயனிலை செயற்படுபொருள் தெரியாமல் இருப்பதால் உடனடியாகவே வீட்டில் ஸ்கான் செய்து அதை டச் நண்பனிடம் மின்னஞ்சலில் அனுப்பி வைத்து விட்டேன். அவனது பதில் வரட்டும் என்று போட்டு வீட்டை துப்பரவு செய்து போட்டு குசுனியில் தேநீர் அருந்த தயார் ஆன போது வெளியில வாகன சத்தம் கேட்டது. பக்கத்து வீட்டு காரர் யாரவது இரவில் பயணம் போய் வந்தால் டாக்ஸி பிடிச்சு கொண்டு தான் வாறது. குளிருக்க இரவில் நடக்க கஷ்டம் தான் காரணம்.
அப்படி தான் என்று போட்டு பாட்டையும் போட்டு கொண்டு சன் டிவியில் இரவு நேர நிகழ்ச்சிகளையும் பார்த்து பார்த்து தேநீர் தயாரிக்க தொடங்கினேன். வந்த வாகனத்தில் இருந்த பலர் பொலிசு சப்பாத்து சத்தம் மாதிரி பரபரப்பு சத்தம். உடனே நான் வெளி விறாந்தை மின் விளக்குகளை போட்டு விட்டு முன் ஜன்னலால் பார்த்தேன். பொலிசு வந்திருக்கு .. ஒரு வாகனம் என்றால் பரவாய் இல்லை . மூன்று நாலு வாகனம். எல்லாம் ஆயுதங்களோட வந்து நிக்கினம். அப்போ எனக்கு விளங்கிச்சு யாரையோ அல்லது ஏதோ களவு பிடி பட்டுட்டு போல. திடீர் என்று பார்த்தால் எனது முன் கதவை தட்ட நான் உண்மையாகவே பயந்து போனேன். உடனே கைத்தொலைபேசி மூலம் அயலவர்களுக்கு அழைப்பை செய்தால் நண்பர்கள் எல்லாம் நித்திரை. இனி என்ன கதவை திறப்பம் என்று போட்டு ( ஞாபகம் வருது சுவாமி நித்தியானந்தாவின் " கதவை திற காத்து வரட்டும்", எனக்கு பொலிசு தான் வந்தது).
வந்தவங்க சும்மாவா எல்லாம் படு அலெர்ட் நான் கதவை திறந்து முடிக்க முதலே அவங்க சுடுற மாதிரி நின்றாங்கள் பாருங்க .. ஒரு ஹார்ட் அட்டாக் வந்து இரண்டாவதும் வரும் போல கிடந்திச்சு. ஆடியே போனேன்.
உடனை என்னை அறியாமல் கையை தூக்கி போட்டேன்.. ( முன் அனுபவம் பல இருக்கு..) பிறகு என்னை வீட்டுக்கு வெளியே வர சொல்லி போட்டு கதவை சாத்தி போட்டு கேள்விகள் கேட்க தொடங்கினார்கள்.

நான் சொன்ன ஒரே ஒரு வசனம் .."" Sir, I just came from Copenhagen". i have no idea about these incidents". அவர்களுக்கு நம்பிக்கை இல்லை, போய் வந்த பத்திரங்கள், தங்கிய ஹோட்டல் துண்டுகள் எல்லாம் காட்டி அவர்களை திருப்தி படுத்தினேன். இத்தனைக்கும் அடியேன் கையை தூக்கின படி தான்.. ஹஹா .. மறக்க முடியுமா..

இதுதான் நடந்ததாம்
நான் ஒரு வியாழன் இரவு பயணமாகியதால் எனக்கு நடந்தது எல்லாம் தெரியாது.
எனக்கு பக்கத்து அறையில் ஒரு இளம் வயது பையன் குடி இருந்தான். நான் முன் பின் தெரியாததால் பெரிசா கதைப்பது இல்லை. நினைவு கூட இல்லை. தினமும் அவனுக்கு வரும் நண்பர்கள் நண்பிகளுடன் இரவில் படிப்பதும் பிறகு விடிய விடிய குடித்து கும்மாளம் போடுவதும் வழமை. அப்படி தான் அன்றும் நடந்து இருக்கலாம். இரவு குடித்து போட்டு கும்மாளம் போடும் போது பையன் மீது அடி அல்லது தவறுதாலாக எதாவது விழுந்து அல்லது வேணுமெண்டே கொலை செய்து அறைக்குள் போட்டு விட்டு வந்தவர்கள் எல்லாம் தலை மறைவாகி விட்டார்களாம். ஆனால் யார் கொலை செய்தார்கள் என்று இன்னமும் பிடிக்க வில்லை. ஒரு விசாரணை கமிசன் வைக்க சொல்லி பரிந்துரை செய்யலாம். பல விதமான கையடையாளங்கள் இருந்ததாம். இருந்தும் யார்தான் செய்தார்கள் என்று தெரியாதாம். அதுபோக நான் பொலிசிடம் கேட்ட கேள்வி .. உங்களுக்கு எப்புடி தெரியும் என்று. அதை அவர்கள் சொல்ல மறுத்து விட்டார்கள். கொலை செய்தவர்கள் பலர் என்பது மட்டும் உண்மை. கொலை செய்த அடையாளங்கள் எனது வீட்டின் முன் கதவுக்கு அருகாமையில் கூட இருக்கு .. என்று சொன்னார்கள். இதனால நான் ஏதும் அல்லது எனக்கு தெரிய வாய்ப்பு இருக்கலாம் தானே என்று தான் வந்தார்களாம்..


எங்கள் வீட்டு தொகுதி விறாந்தை ... :)

அது சரி, பொலிசு கூட ஒரு அரை மணி நேரம் கதைத்து போட்டு போய் கதவை சாத்த பயம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை விறைக்க வைச்சு போட்டுது .. என்னாது சிரிப்பு .. அடியேன் இரவில் நித்திரை கொள்ள கூட பயம்.. பக்கத்து வீட்டு காரன் பொலிசு பேயாய் வந்து கதவை தட்டினால் என்னாவது ??
இதை விட பேய்கள் என்றால் எனக்கு பயமில்லை என்று அறுத்து உறுத்து சொல்லவும் மாட்டேன். இதை விட நேற்றில் இருந்து விறாந்தை விளக்கும் இரவென்றால் வேலை செய்து இல்லை. பேய் தான் நிப்பாட்டி போட்டுதோ.. ஸ்ஹபாஆஆஆ ..
வேர்க்குது ..

சினிமா பாடல்கள் எல்லாம் பாடி கொண்டிருந்த வானொலிப்பெட்டி இப்ப இறை பக்தி பாடல்கள் தான் பாடுது. அதுவும் சத்தமாய் .. வாற பேய்க்கு விளங்கனும் இங்க யாரோ இருக்கினம் என்று.. அதை விட விறாந்தை curtain எல்லாம் திறந்து விட்டாச்சு.. வீட்டில் backup உடன் கூடிய லைட் எல்லாம் 24 x7 சேவையை ஆரம்பிச்சிட்டு. அடியேனுக்கு பேய் என்றால் பயத்திலும் பார்க்க .. இது எப்புடி நடந்தது என்று அறியத்தான் ஆவல். ஏனென்றால் , சில நாட்களாக இரவில் முனகல் சத்தம் அல்லது நடந்து அல்லது ஓடி திரியும் சத்தங்களை கேட்டு இருக்கேன். யார் என்று கதவை திறந்து பார்க்க அவ்வளவு ஆசை இல்லை. தேவையும் இல்லை. இருந்தாலும் இப்போ ஆவல். இப்ப எல்லாம் அந்த சத்தம் இல்லை. அதால கடந்த இரண்டு நாட்களாக என்கூட இன்னொரு நண்பனும் இருந்தோம்.
எங்களிடம் டார்ச் லைட், தடி பொல்லு கூட ( வீட்டான் தும்பு தடியை உடைத்து ) வைத்து போட்டு இரவானதும் வெளியே வந்து நடமாடி திரிவதும் பிறகு போவதுமாய் இருந்தோம். எங்களுக்கு காலம் நல்லது,. நேற்று இரவு நாங்கள் வெளி இடம் சென்று போட்டு வந்ததால், வரும் போது எங்கள் வீட்டுக்கு கிட்டே ஒரு கார் வந்து நின்றதை கண்டதும் நாங்கள் உடனையே போலிசுக்கு போட்டு குடுத்து விட்டு( என்னிடம் அந்த நம்பர் தந்தவை) பொலிசு வரும் வரைக்கும் பாதையில் தயாராக இருந்தோம். கார் நம்பர் எடுத்தாச்சு.. இனி இது யாரோ என்று தெரியாது.. உண்மையாகவே யாரும் நண்பர்கள் எங்கள் வீட்டு தொகுதிக்கு வந்தாலும் இதிலை நிறுத்த சந்தர்ப்பம் இருக்கு. இருந்தாலும் பொலிசு வந்திட்டு.. நாங்கள் போய் சொன்னோம் இந்த காரையும் உரிமையாளரையும் கண்டு பிடியுங்க என்று.
அவர்கள் உடனயே கார் பற்றிய தகவல்களை எடுக்க தொடங்கினார்கள். பத்து நிமிடங்கள் போயின. நான் சொன்னேன் நான் வீட்ட போறேன் என்று, போலிசும் என்னுடன் எனக்கு முன்னால் வந்து அந்த வீட்டை அவர்களிடம் இருந்த திறப்பால் திறந்த போது திடிக்கிடும் அளவுக்கு ஏங்கியே போனார்கள். அங்கே ஒரு பெண் மது அருந்தி கொண்டு இருந்தாளாம். அவள், கதவை திறக்க போத்தலினால் கதவை நோக்கி வீசினாளாம். உடனே பொலிசு teaser துவக்கு மூலம் சுட்டது.. நான் வீட்டுக்க நின்றனான் பயந்தே போனேன். பிறகு அவளை தூக்கி கொண்டு போவதை தான் பார்த்தேன்.
இன்று பத்திரிகைகள் எல்லாம் எங்கள் பெயர்தான் பிரபல்யம்.. என்ன தெரியுமா..
அந்த பெண் அந்த இறந்த மாணவனின் காதலியாம் .. அவனை அன்று கொலை செய்து போட்டு தப்பி போய் இருக்காளாம். அது மட்டுமில்லை அவளுக்கு தெரியாது பொலிசு வந்து உடலை மீட்டது. அவள் இன்று வாகனம் கொண்டு வந்து உடலை மீட்டு செல்ல வந்திருக்கலாம் என்று பொலிசு சொன்னதாக பத்திரிக்கை செய்தி.. ஸ்ஹபாஆஆஆஆஆஅ
இப்ப நாங்க famous ஆகிட்டம். நாங்க அலெர்ட் த்தான்.. அவள் வந்தாள் என்றால் அடுத்தது நான்தான்.. ஆனால் வழக்கு முடிச்சு அவள் வாறதுக்க நான் ஊர் போய்டுவன்.. இது எப்புடி..
இப்ப எனக்கு என்ன தெரியுமா.. சந்தேகம் "காதலன் பேயாய் உலாவுவான் தானே, தன் காதலியை காட்டி குடுத்த கோவமிருந்தால் அடியேனுக்கு ஆப்பு.."ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இப்ப எனக்கு சந்தேகம் .....பேய்கள் இருக்கே, அது உண்மையா??? யாரும் சொல்லுங்கவேன்,,,,

தமிழகத்தில் வெளிவரும் ஒரு பத்திரிக்கையில் பேய்கள் பற்றி பார்த்த போது



இனி பழைய பேய்க்கதை ஒன்று.

93 என்று நினைக்கின்றேன், யாழ்ப்பாணத்தில் இருந்த போது. எங்கள் உறவினர் ஒருவரின் மறைவுக்கு நானும் எனது வீதி நண்பன் பிரேமும் ( எங்கள் வகுப்பும் கூட) கைதடி சென்றோம். செல்லும் போதே மாலை நான்கு மணி..
இறுதிக்கிரிகைகள் முடிந்த பிறகு சுடலை சென்று பிறகு வீடு சென்று கதைத்து விட்டு வெளியேறும் போது இரவு பத்து மணி. எங்களுக்கு செம்மணி என்றால் நெருப்பு பயம். இரண்டு பேரும் தீர்மானித்தோம்.. வாற போக்குவரத்து கழகம் பஸ்ஸில் யாழ் செல்லுவோம் என்று போட்டு கைதடி சந்தியில் நின்றால் இரவு பதினொரு மணி ஒரு பஸ்சும் இல்லை .. சனம் தான் போய் வருது .சரி நாங்கள் ஒரு குடும்பம் சைக்கிளில் போக அவர்களை பின் தொடர்ந்தோம். டைனமோ லைட் இல்லை. இருளில் இடைக்கிடை A9 வீதியால் போய் வரும் வாகனம் தான் எங்களுக்கு வெளிச்சம் . கைதடி முதியோர் இல்லம் , பிறகு நாவற்குழி இறால் பண்ணை , நாவற்குழி பாலம் என்று போய்ட்டு இருக்கு எனக்கு வந்திட்டு, வர வேண்டியது. நான் சொன்னேன் மச்சான் பிரேம் எனக்கு ஒருக்கா போகனும் போல இருக்கு . அவன் சொன்னான் , பொறு மச்சான் செம்மணி போகட்டும் போவோம் என்று. நாங்கள் தொடர்ந்த சனம் இடையில் கால வாரி விட்டுதுகள். நாங்க இரண்டு பேரும் தான் இப்போ பயணத்தில். எங்களுக்கு செம்மணி எங்கே வருது என்று தெரியாது. நீண்ட தூரம் சைக்கிள் மிதிச்ச மாதிரி ஒரு பீளிங்க்சு.பிரேம் சொன்னான் மச்சான் எனக்கும் வருது .. என்று ,, சரிடா அதில ஏதோ மரம் மாதிரி தெரியுது, அதில நிற்ப்பாட்டுவம் என்று வலு கலாதியாய் சைக்கிளை நிப்பாட்டி போட்டு மரத்துக்கு கிட்ட போய் இரண்டு பேரும் ஒவ்வொரு திசையில் நிண்டு கொண்டு, செய்யவேண்டியதை செய்யும் போது, A9 வீதியில் தூரத்தில் போக்குவரத்து கழகம் பஸ் வந்தது அது பாச்சின வெளிச்சத்தில் தெரிந்தது. நான் பிரேமை அப்பதான் பார்த்தேன். அந்த வெளிச்சம் பக்கத்தில் இருந்த மரம் .. எங்கள் கண்ணுக்கே தெரியாமல் இருந்த ஒரு கட்டிடம் என்று எல்லாத்தையும் வெளிச்சம் போட்டு காட்டினது.
மச்சான் டேய் இதுதாண்டா செம்மணி .. என்றதுதான் பிறகு நாங்க எப்படி கல்வியங்காட்டு சந்தி மட்டும் வந்தம் என்று தெரியாது.. ஓட்டமோ ஓட்டம் .. எனக்கு மன்னிக்கவும் எங்களுக்கு அப்படி ஒரு ஷக்தி .. அதுவும் முடிக்க வேண்டியது கூட முடிக்காமல் ( பிறகென்ன சிப் எல்லாம் போடாமலா என்று நக்கலாக கேட்பது தெரியுது .. situation கண்ணா situation ) .
நல்லூரடியால் தான் போய் பிறகு திருநெல்வேலி அம்மன் சிவன் கோவிலடியால் போய் பிறகு பரமேஸ்வரா சந்தி பிறகு குமாரசாமி வீதிக்கு போகணும்., சிவன் கோவிலடியில் நான் பிரேமிட்ட சொன்னேன் மச்சான் வீபுதி பூசினால் பேய் வராதாம் என்று .. சரி போய் வாசிலில் நின்று பூசிப்போட்டு ( இப்பவும் பேய் பயத்தில் நெஞ்சு இடிக்குது, இப்ப என்றது அப்போ lol & lollu ) சிவனே என்று வர, உங்க யாரடா என்று டார்ச் அடிச்சு கொண்டு யாரோ ஓடி வர எடுத்தம் ஓட்டம் .. எங்கட வீட்டு படலை மட்டும் ஓட்டம் தான் . வீட்டில அதுகள் கமிட்டி மீட்டிங் போட்டு முடிவு எடுத்தாச்சு போன பொடி இண்டைக்கு வராது. நான் போய் படலையை திறக்க அதுகள் ஓடி வந்து பேச்சோ பேச்சு .. இரவில் எல்லாம் தனிய வந்தநீயா .. என்று,,, பிறகு என்னடா செத்த வீட்டுக்கு போட்டு வரேக்க வீபுதி எல்லாம் பூசி கொண்டு வாறாய் என்று.. நான் நடந்ததை எல்லாம் சொல்லி முடிய அதிகாலை இரண்டு மணி. பிறகு போய் தோய்ந்து போட்டு வந்து அதுக்குள்ளே அம்மா சமைத்த புட்டும் முட்டை பொரியலையும் சாப்பிட்டு போட்டு படுப்பம் என்றால் அறைக்க தனிய படுக்க பயம். விராந்தையில் படுத்து கொஞ்ச நேரத்திலையே நித்திரை. விடிய( காலை பதினொரு மணி இருக்கும் ) சைக்கிள் தொடக்கம் செருப்பு எல்லாம் மாறி மாறி கழுவினது .. பேய் ஏதும் தொத்தி வந்திருந்தாலும் என்று தான்.
இப்படி பேயால் பட்ட தவிர்ப்புகள் பல.. இன்னும் இருக்கு ...
பிறகு வரும்...

அண்மையில் வெளி வந்த சூப்பர் கிட் பேய் படமான drag me to hell பாருங்கள்..
பேயின் அட்டகாசங்கள் எப்புடி இருக்கும் என்று தெரிய வரும்..



2010-03-11

திரைப்படங்களில் மேடைகளில் இசைக்கச்சேரி போல் பாடி அல்லது நாட்டியமாடி பிரபல்யமான பாடல்கள்

கடந்த ஒரிரு நாட்களாக , ஊருக்கு போகணுமே .. என்று ஒரே வேலை , அதற்கு இடையில் ஒரு குறுகிய பயணமாய் வேறு ஊரில் தற்போது நிற்கின்ற போதும், எப்பிடியாவது , சினி திரைகளில் வந்த பாடல்களில் , ஒரு மேடையில் மட்டுமே பாடி ஆடி அசத்திய பாடல்களின் தொகுப்பை போட்டே தீரனும் என்று ஒரு முடிவுடன்................


பொதுவாக கர்நாடக இசைக் கச்சேரி மேடைகளில் பாடப்படும் கீர்த்தனைகள் சரி , கதாநாயகிகள் மேடைகளில் ஆடும் நாட்டிய பாடல்கள் சரி திரைப்படங்களில் இடம்பெறும்போது, அவை நிஜ மேடைகளில் எந்த ராகத்தில் இசைக்கப் படுகிறதோ அல்லது எப்படி ஆடப்படுகிறதோ அதே மாதிரி தான் சினிமா படங்களிலும் இடம் பெறுகின்றது.

ஒரு காலத்தில் மேடை அமைத்து அதில் நாயகி சரி நாயகன் சரி ஒரு பாட்டு பாடும் போது அதை சபையோர் இருந்து ரசித்தல்(இதில் நாயகனோ நாயகியோ சபையில் இருந்து ரசிக்கலாம் , இதுவும் உள்ளடக்கம் ), அல்லது நாயகியும் நாயகனும் போட்டிக்கு பாடுதல் போன்றவையே ஒரு காலத்தில் டூயட் , அல்லது காதல் வளர்க்கும் , காதல் தோல்வி பாடல் காட்சிகளாக வந்து ரசிகர்கள் மனதில் பிரபல்யம் அடைந்தது.

இந்த வகை இன்று அருகி விட்டது . இன்று கதாநாயகியும் நாயகனும் வீட்டில் சந்தித்து அல்லது எங்கையாவது தோட்டத்தில் , ஆற்றில் குளிக்கும் போது , அல்லது படிக்கும் கூடத்தில் , வகுப்பறையில் சந்தித்து கதைத்தால், உடனே வரும் டூயட் பாடல் அமெரிக்காவிலோ , அல்லது வேறு எந்த ஒரு நாட்டிலையோ எடுத்து விட்டு அதன் மூலம் ரசிகர்களையும், வசூலையும் அள்ளி கொள்வார்கள் இந்த சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்.



முதல் வகையில் எனக்கு

பிடித்த பல பாடல்கள் இருந்தாலும் , மிகவும் பிடித்த பாடல்களை இங்கே தருகின்றேன். உங்களுக்கும் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

1-முதலாவது மற்றும் இரண்டாவது பாடல்கள் , சிந்து பைரவியில் இடம்பெற்ற கலைவாணியே( யேசுதாஸ்) மற்றும் பாடறியேன் படிப்பறியேன்(சித்திரா ) பாடல்கள். இவை எந்த நேரத்திலும் கேட்டு ரசிக்க கூடியவை .


கலைவாணியே




பாடறியேன் படிப்பறியேன்
இது மேடை நிகழ்ச்சியில் சித்ரா பாடியது இதைப்பாருங்கள்



2- ஆடல் கலையே தேவன் தந்தது.. ரஜனியின் 100 ஆவது படம் : ஸ்ரீ ராகவேந்திரா
அதில் அம்பிகா ஆட, ரஜனி பாட ( உண்மையில் ஜேசுதாசின் அந்த இனிமையான குரல்தான் இந்த பாட்டை பிர பல்யப்படுத்தி விட்டது) சபையோர் ரசிப்பதை பார்த்தால் என்ன ஒரு சுகம்...:)



3- சங்கீதம் பாட ஞானம் உள்ளவர்கள் வேண்டும்.. இந்த பாட்டை என்னவோ தெரியவில்லை எனக்கு ரொம்பவே பிடிக்கும்..
அதுவும் ஷோபனா படத்தில் தூள் நடிப்பு..காமெடி .. இந்த படத்தில் சூப்பர் கிட் பாடல்கள் இன்னும் இருக்கு... பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் பாருங்கள்.. இளம் வயது சிவமணி ட்ரம்ஸ் வாசிச்சு கலக்கி இருக்கார். இசை ஒரு பெருங்கடல் அதை ஞானத்தால் பாடுவதா அல்லது கேள்வி ஞானம் போதுமா என்று பாலா வும் வாணி ஜெயராமும் வரிந்து கட்டி கொண்டு பாடுவதை பார்த்தால் உண்மையிலே புல்லரிக்குது...:)




4- சலங்கை ஒலி படம் இருபது வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் விடாத ஒரு மாபெரும் பிரமிப்பு. எத்தனை முறை பார்த்திருப்பேன் என்பதற்கு கணக்கே இல்லை. இசைஞானிக்கு தேசிய விருதை வாங்கித் தந்த படம்!
கமல்ஜெயப்பிரதா .. நடிப்பு.. நாட்டியம் பற்றி சொல்லி முடிக்க ஏலாது. ,

எஸ் .பிசைலஜாவின் அருமையான நாட்டியம்.. சொல்ல முடியாத வார்த்தைகள்.. பாடல் மட்டுமாபாடுவேன் .. ஆடவும் தெரியும் என்று ஆடிக்காட்டி படத்தையே அசத்தியவர் இவர்.


இந்த படத்தில் வந்த எல்லா பாடல்களும் ரொம்பவே பிடிக்கும். ஆனால் இங்கே நான் மேடையில் ஆடிய பாடல்கள் வரிசையில் இந்த பாட்டை மட்டும் தரு கின்றேன்.



சலங்கையின் ஒலி என் காதுகளில் இன்னும் பல வருடங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும்!


சலங்கை ஒலியை தொடர்ந்து சலங்கையிட்டாள் ஒரு மாதுவும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். :)


6- சங்கீத ஜாதி முல்லை ... என்ன படமையா.. காதல் ஓவியம்.. இப்படி என்னொரு படம் இப்ப எடுத்தால் நான் முதல் ஷோ பார்க்க முதல் நாள் இரவே போய் நிற்பேன் ..

பிடித்த வைரவரிகள் .. எஸ் பியின் பழைய குரல்...

விழி இல்லை என்னும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்



பூவில் ஒரு வண்டு, வெள்ளிச்சலைங்கைகள், நதியில் ஆடும் பாடல்கள் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை...

7- தில்லான மோகனாம்பாள் - பத்மினி .. ஸ்ஹபாஆஆ என்ன வென்று எல்லாம் சொல்லுறது. நலந்தானாவைப்பாருங்கள் .. ரசியுங்கள்





8- கங்கைக்கரை மன்னனடி- வருஷம் 16 . குஷ்புவின் அறிமுகம்.. படத்தில் மேடையில் ஆடி அசத்தும் அருமையான பாடல் .. ஜேசுதாஸ் குரலில்.. இனிமைதான்:)




ஆமா எனக்கு ஒரு சந்தேகம் .. இப்ப நடிக்கிற நடிகைகளுக்கு இந்த பரத நாட்டியம் தெரியாதாமே .. அல்லாட்டி ஒரு பரத நாட்டியம் ஆடின கட்சியை அங்கே இங்க .... வைத்து இருக்கலாமே ,... :)

எப்புடி இருந்தாலும் எங்கட ஜோதிகா அசத்திய ரா ரா நாட்டியம் இன்றைக்கும் வியக்க வைக்கும் ஒன்றே எனக்கு ..

2010-03-07

உலக பெண்கள் தினம், அம்மாவின் பிறந்த நாளில் பட்டம் பெறுவதும் மகிழ்ச்சியே

உலக பெண்கள் தினமும் ,அம்மாவின் பிறந்த நாளும், பட்டம் பெறும் நாளும்

வருடா வருடம் மார்ச் 8 உலக பெண்கள் தினம் கொண்டாடப்படுகின்றது.
பெண்கள் பற்றி பலர் பல விதமான கருத்துகளையும், விதண்டாவாதங்களையும் வைத்து இருந்தாலும், பெண்கள் பற்றி நான் சொல்ல விரும்புவது, "ஆவதும் அழிவதும் பெண்ணாலே".

அன்பு, அமைதி, ஆசைக் காதல், துன்பம் தீர்ப்பது, சூரப் பிள்ளைகளைப் பெறுவது, தனது முலைப் பாலால் வலிமை சேர்ப்பது, மானஞ்சேர்க்கும் வார்த்தைகள், கலி அழிப்பது, கைகள் கோர்த்துக் களித்து நிற்பது! எங்கெங்கு காணினும் சக்தியடா! என்ற பாரதி கூறியது போல சக்தி வடிவாய்த் திகழ்வது பெண்மை.

எங்கள் நாட்டில் வீர மிகு பெண்களினை பல வடிவங்களில் கண்டு வியந்தும் உள்ளோம்.


இந்த நாள் ( மார்ச் 8) எங்கள் வீட்டில் சிறப்பாக கொண்டாடப்படும் நாள். அதுதான் எங்கள் அம்மாவின் பிறந்த நாள். ஒவ்வொருவருக்கும் அம்மா என்றால் சும்மாவா. இந்த உலகுக்கு படைத்தது , எங்களையெல்லாம் ஒரு மனிதனாக உருவாக்கிய பெருமை அவளுக்கு உண்டு.


( பல படங்களில் அம்மாவின் பாடல்கள் இருந்தாலும் இந்த பாட்டு எல்லாருக்கும் பிடித்து இருக்கும், இந்த பாடல் அம்மாவுக்கும் பிடிக்கும் ஏனென்றால் அவ keyboard நன்றாகவே வாசிப்பா.. நான் முந்தி அவவிட்ட சொல்லுறது .. இந்த பாட்டை அடுத்த முறை வாசிச்சு காட்டுங்கோ என்று .. அடுத்த வாரம் சொன்ன படி எங்கள் வீட்டில் ஒரு இசை விருந்து நடக்கும்... நீண்ட நாட்களுக்கு பின்னர் நான் வீட்ட போன போது நான் சொல்லி வைத்திருந்த பாட்டுகள் எல்லாமே keyboard இல் வாசித்து காட்டின பெருமையும் இருக்கு.)

எங்கள் அம்மா பற்றி நானே சொல்லக்கூடாது . இருந்தாலும் அவ ஒரு ரோல் மாடல் தான். எங்களுக்கு அம்மாவாகவும் அப்பாவாகவும் கடந்த இருபது வருடங்களுக்கு மேல் செய்யும் ரோல் பற்றி சொல்லி முடிக்க ஏலாது. ஏறத்தாழ 25 வருடங்களுக்கு முன்னர் வவுனியாவில் வாகன விபத்தில் தனது ஒரு கையில் ஏற்பட்ட காயம் , அந்த கையின் பாவனையை குறைத்து இருந்தாலும் , தளராது தனது ஆசிரியர் தொழிலில் இன்று வரை சேவையாற்றி வருவதும், எங்களை இப்படி எல்லாம் ஆளாக்கி வளர்த்து விட்ட பெருமையும் அம்மாவையே சாரும். மன உறுதி , கடவுள் பக்தி, கடும் உழைப்பு இது தான் நான் அவவில் கண்டு வியர்ந்த முக்கியவை. இதை விட குறிப்பாக சொல்ல போனால் எங்களுக்கு எல்லாம் அம்மா என்றால் சரியான பயம் . ஸ்ஹாபாஆஆஆ என்னதான் பம்பலாக இருந்தாலும் அம்மா என்றால் எல்லாமே கப் சிப் என்று இருப்போம். அவ்வளவு பயம், மரியாதை. இன்று கூட நாங்கள் எவ்வளவு பெரிசா படிச்சு வந்தாலும் அம்மாவோட தொலைபேசியில் சரி இணையமூடாக கதைக்கும் போது சரி, நேர சரி , நாங்கள் வலு மரியாதை தான். ஆனால் நாங்கள் என்ன பிரச்சினை என்றாலும் வடிவா கதைப்பம். எங்களுக்கு நீண்ட பெயர்கள் அதால .. வீட்டில எங்களை வேற பெயரால் தான் கூப்பிடுறது.. என்னை ப்ரியா( வெளியில் ஒரு boy கூட இருக்கும் ) என்றும் எனது தங்கையை shanny ( வெளியில் ஒரு girl கூட வரும்) என்றும் தான் கூப்பிடுவா. :)

அம்மாவிடம் படித்தவர்களுக்கு தெரியும் அவவை பற்றி :)


இந்த வருடம் அவவின் பிறந்த நாளை வீடடில் நின்று கொண்டாட வேண்டும் என்றுதான் இருந்தேன். ஆனால் உயர் கல்வி நிமித்தம் வந்த எனக்கு அவவின் பிறந்த தினத்தில்
முதுமாணி பட்டம் ( M. Sc.) பெற இருப்பதால் இந்த முறையும் மிஸ் பண்ணிட்டன். இருந்தாலும் அம்மாவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். கொஞ்சம் பொறுங்கள் அம்மா .. வந்துடுவான் சிங்கம் பழைய படி ..........


கஜா கஜானந்தாவின் லீலைகள் :

இந்த கஜானந்தாவின் ( இது என்ன புதுப்பெயர் என்று யோசிக்காதையுங்க .. ஒரு பொதுப்பெயர் வைச்சேன்) லீலைகள் பற்றிய கதைகள் என்னும் முடிந்ததாக இல்லை. இப்போது இணையம் முழுக்க முழு நீள வர்ணனையுடன் அவர் ரஞ்சிதா லீலைகள் நிறைந்த காணொளி உலாவுவதாக இணையத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கஜானந்தாவால் நண்பி ஒருத்தியுடன் ஏற்பட்ட வாக்கு வாதம் கடைசியில் நண்பியையும் இழந்து விடுற அளவுக்கு கஜ கஜானந்தா இருந்திருக்கிறார் என்றால்.. அவருக்குள்ள ஒரு மகா சக்தி இருக்கு....( ஒரு ஞாபகம் வருது .. உந்த கஜானந்தாவே லேகியம் குடிச்சு தானம் பெவோர்ம் பண்ணுறார் என்று நேற்று இணைய அரட்டையில் ஒரு நண்பன் சொல்லி இருந்தான், என்ன கொடுமை .. விட்டால் உந்த இருபது நிமிஷ காணொளியை வைச்சு ஒரு டிகிரி முடிச்சாலும் முடிப்பாங்க போல.....). மேலும் சொல்ல மறந்துட்டன் அந்த நண்பி ஒரு பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் துறையில் அடியேன் சார்ந்த துறையில் டிகிரி முடிச்சவா... பாருங்கவோன் இவையே இப்படி என்றால் இந்த பாமரை கூட்டம் எப்படி திருந்தும்.. பல கஜானந்தாக்கள் உருவாவார்கள் எதிர்காலத்தில் என்பதில் ஐயமே இல்லை.. வாழ்க நண்பி...வாழ்க கஜானந்தா...:)


விண்ணைத்தாண்டி வருவாயா..

நேற்றுத்தான் நான் படம் பார்த்தேன். கெளதம் இன் முதல் படம் மின்னலே யை பேராதெனியவில் தமிழ் திரைப்படவிழாவில் எங்கள் பீடம் சார்பாக போட்ட போது , எனது நண்பன் சொன்னது, இது என்ர கதையடா.. இப்படித்தான் இங்கவும் ஒருத்தன்( ஒருத்தியாகவும் இருக்கலாம்) சொல்லி கேட்டது .. இது என்ர கதை போல .:) எல்லாருக்கும் படம் தயாரிக்கும் கெளதம் எனக்கு எப்ப தயாரிப்பார் என்று கொண்டு கடுங்குளிரையும் பொருட்படுத்தாது வீடு வந்து சேர்ந்தேன்..:)
நன்றே ...பிடிச்ச படம்.. த்ரிஷவிலும் கொஞ்சம் முக பாவனை கூடிய வேறு நடிகையை தெரிவு செய்து இருக்கலாமே .. என்று மட்டும் ஒரு கவலை..


பெயர் மாற்றம்
இறுதியாக எனது வலையின் பெயரினை மாற்ற தீர்மானித்து இருக்கின்றேன். ப்ரியா பக்கங்கள் நல்லாத்தான் இருக்கு.. இருந்தாலும் எதாவது பெயர் இருந்தால் சொல்லுங்கள்.. கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

2010-03-03

சாமிமார்களுக்கு எதிரான விழிப்புணர்வு தேவை ;

இந்த நாள் ஒரு விழிப்புணர்வு நாளாக அமையட்டும். நம் நாட்டில் அரசியல் களை கட்டி கொண்டு இருக்கின்றது. சம்பந்தனோ , சிவாஜியோ , இல்லை அரசாங்கமோ , போடா ரணிலோ என்று பேசிக்கொண்டு இருக்கும்போது இந்த சாமியார்களின் லீலைகள் பிரச்சினை அதை எல்லாம் தாண்டி மேலோங்கி வந்துட்டுது. ஒரு சாரார் நக்கீரனில் மாத சந்தா கட்டி முழு நீள காணொளியை தரையிறக்கம் செய்து விட்டதாக கூட சொன்னார்கள். என்ன கொடுமை இது:)

சரி விஷயத்துக்கு வருவோம்.
எல்லாம் நாங்கள் விடும் அடிப்படை பிழைகள் தான். முதலில் யார்தான் இவர்களை உருவாக்கினார்கள். நாங்கள் ஒவ்வொருவரும் தான். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஒருத்தன் வந்து எனக்கு ஏதோ சக்தி இருக்கு உங்களுக்கு மோதிரம் எடுக்கிறன், கம்பி எடுக்கிறன், கல்லு எடுக்கிறன் என்று சொன்னால் எல்லாரும் பின்னாலே ஓடிச்சென்று வேடிக்கை பார்ப்பதுவும், பின்னால் ஒரு சங்கம் அல்லாட்டி ஓர் அமைப்பு அமைத்து அவர்களை வாழ வைப்பதுவும் நடந்து கொண்டே தான் இருக்கு. இதுக்கு ஒரு விதத்தில் ஊடகங்களும் துணை போகின்றன. இந்த சாமியார் புகழை பரப்பியதில் இந்தியாவின் பிரதான தொலைக்காட்சியின் தமிழ்ப்பிரிவு தொலைக்காட்சியும் , தமிழ் நாட்டு வார இதழும் முன்னணி வகிக்கின்றன.


மாதா , பிதா , குரு, தெய்வம் இவை நான்கும் ஒருத்தன் வாழ்க்கையில் முக்கியமான பதங்கள். முதலில் உன்னை பெற்ற அன்னையை வழிபடுங்கள். அவள் உங்களுக்கு செய்ததை நினைத்து பாருங்கள். உங்களை கருவில் சுமந்து , பின்னர் உங்களை ஒரு மனிதராக இந்த உலகுக்கு படைத்தது , இன்னும் அவளாலான கடமைகளை செய்கின்றாள். காலையில் எழுந்தவுடன் தொடக்கம் மீண்டும் உறங்க போகும் வரை உங்களுக்கு தேவையான எல்லா விதமான தேவைகளையும் பூர்த்தி செய்கிறாள்.
பிதா அடுத்தவர். அவர் உங்களை வழி நடத்துவதிலும், தன்னாலான விதத்தில் ஒரு குடும்பத்தை ஒட்டி செல்கிறார்.

குரு செய்வன பற்றி சொல்லி தெரிய தேவை இல்லை. குரு சிஷ்ய உறவு என்பது கடவுள் - பக்தன் உறவை விட புனிதமானது.

தெய்வம் என்னும் போது, ஒவ்வொருவனும் ஒரு சமயத்தை சார்ந்தவனாய் இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம். தெய்வ நம்பிக்கை என்பது மன நிறைவை தர கடவுளை வழிபடுதல் என்று நண்பர்கள் சொல்லி நான் அதுக்கும் வாதாடிய காலம் இருக்கு.:)

தாய், சுட்டிக் காட்டுகிறார் தந்தையை! தந்தை விரல் நீட்டுகிறார் குருவை நோக்கி. குரு பரம்பொருளான மகா சக்தியை சுட்டிக்காட்டுவதோடு மட்டுமின்றி, அதை நெருங்கவும் அடையவும் ஞானமார்க்கம் காட்டுகிறார். அன்பின் எல்லையைத் தொட என்னவொரு அழகான சுழற்சி! என்று முந்தி எங்கட சமய ஆசான் சொல்லி தந்தது ஞாபகம் வருகின்றது.


இந்து சமயம் சரி , கிறிஸ்தவம் சரி , இஸ்லாம் சரி, புத்த சமயம் சரி தத்தமது போதனைகளை செய்கின்றன.

மேலும் தாயில் சிறந்த கோவிலுமில்லை என்று முன்னோர் பாடி வைத்தனர். நான் மேலே சொன்ன நான்கையும், மாதா, பிதா , குரு, தெய்வம் என்று வரிசைப்படுத்தி தெய்வத்தை விட, குருவை விட , பிதாவை விட, மாதாவை முன்னணியில் வைத்தனர். அப்படிப்பட்ட அந்த அம்மாவை வணங்கி, ஆசி பெற்றாலே கிடைக்க வேண்டிய எல்லாமே கிடைத்து விடும். அதைத்தானே நாங்கள் செய்ய தவறுகின்றோம். இந்த நான்கு பேரின் போதனைகளே போதிய அளவில் எங்கள் வாழ்க்கையை நல்வழிப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.


ஆனால் இவர்கள்( இந்த ஒரு தொகுதி மக்கள் ), இந்த சாமியார்கள் என்று சென்று போதனை அவர்களிடம் பெறக்காரணம் என்னதானோ ? வறுமையின் நிமித்தம் , ஏதாவது ஒன்றை இந்த சாமியார்களிடம் இருந்து பெறலாம் என்றுதான் செல்வதாக நான் வாசித்து அறிந்து கொண்டேன். இந்த சாமியார்களும் ஆரம்பத்தில் இலவச சேவை , பின்னர் பணம் , பின்னர் அந்த நிவர்த்தி இந்த நிவர்த்தி என்று அடாவடியாக பணம் அறவிடலும் வழமை, அத்தோடு வரும் ஓன்று இரண்டு சகோதரிகள் சரி, ஆண்டி மார் சரி இப்படி சாமியாரை அல்லது சாமியார் வளைச்சு போட்டு பாலியல் இன்பம் கான்பதுவுமே வரலாறு. மேலும் இந்த அறிவு முடக்கமைந்த ( brainwash) மக்களை கண்டு எதாவது சாமியார் பற்றி ஏடா குடமாய் சொன்னாலும் அதனை அவர்கள் ஏற்று கொள்வதாகவும் இருக்க மாட்டார்கள். அவ்வளவு புத்தி கேட்டு போய் இருப்பார்கள். இந்த வாழ்க்கையில் சுவாமிஜி தான் கடவுள் என்ற அளவுக்கு போதிக்கப்பட்டு( எப்புடி தானோ தெரியல) இருப்பார்கள்

இதிலயும் சிறப்பாக இந்திய சாமிமார்கள் மாட்டி கொள்வதும் பின்னர் சிறையில் இருப்பதுவும் முக்கியமான ஒன்றே.

இவ்வளவும் அறிந்தும் இன்னும் அங்கே சென்று கொண்டு இருக்கும் பக்த கோடிகள் பற்றி நினைக்க சிரிப்புதான் வருது.


ஒரு காலத்தில் எங்கள் ஊரில் , சுவாமி பிரேமானந்தாவின் செருப்பை வைத்து பால் ஊத்தி கும்பிட்டு கொண்டு இருந்ததை நான் கேள்வி பட்டேன். அப்போது அவர் கம்பி எண்ணிக்கொண்டு இருந்த காலம். இந்த பிரேமானந்த பக்தர்களில் ஒருவரை சந்தித்து கேட்டேன். இப்படி சாமியார் கம்பி எண்ணுராரே நீங்கள் இப்பவும் நம்பலையா என்று. அதுக்கு அந்த அம்மணி சொன்ன பதில், தங்கள் சார்பில் ஒரு அம்மணி இந்தியா சென்று வந்ததாகவும் அவர் சிறையில் கூட சிவபூஜை செய்வதாகவும் , மக்களை தொடர்ந்து தன்னை , தான் விட்டு போனவற்றை தொடர்ந்து வழிபடுமாறும் சொன்னதாக பதிலை தந்தார், இந்த அம்மணிகளை என்னதான் செய்யலாம். கட்டின புருஷன் மாருக்கு பனை மட்டையால அடிக்கனும்போல இருந்திச்சு. நானும் வாதாடி களைத்து போனேன். பிடிச்ச காலுக்கு மூன்று கால் என்றால் என்ன செய்யலாம்.

இதை விட நான் எந்த வித சாமியாரையும் கேள்வி பட்டதா இல்லை. கொழும்பு வந்த போது அடிக்கடி ஏதோ சாமியார் பற்றி எங்கள் தொடர் மாடியில் பேசியதை அறிந்தேன்.நான் அந்த வழி இல்லை என்ற படியால் இவற்றை கண்டு கொள்ள வில்லை.

நான் வாசித்த பக்கங்களில் அம்மா பகவான் என்று ஒருவர் அண்மையில் தோன்றி என்ன வெல்லாம் செய்கின்றார் என்று சொல்லி இருந்தார்கள். எனது நண்பன் ஒருவன் தனது வலையில் போட்ட விளம்பரத்தை பார்த்து திகைத்தே போனேன். அதாவது அவர் இப்போது skype மூலம் அருள் வழங்குவாராம். என்ன கொடுமை இது. அதுக்கு விஷேட கட்டணமும் இருக்காம். இதை எல்லாம் பொறுக்க முடியவில்லை. என்றோ ஒரு நாள் இந்த படு பாவி சனங்களுக்கு அவரின் திரை மறைவுகள் தெரிய வரும் என்று போட்டு போய் விட்டேன்.

இன்று நித்தியானந்தா சுவாமியார் கம்பி நீட்டி விட்டார். இவரை நம்பி பின்னால் திரிந்த கம்மனாட்டிகள் என்னாவது. அவரு நான் ரொம்ப நல்லவர், கடவுள் என்று சொல்ல வல்லவர் என்ன்று இந்த கம்மனாட்டிகள் சொன்னதுவும் ..இந்த கம்மனாட்டிகளின் புருஷன் மார் வீட்டில் சமைச்சு வைக்க இந்த கம்மனாட்டிகள் சாமியின் காம அருள் கிடைக்க அலைந்து திரிவதுவும் சகஜமே.
இன்று எல்லாரும் அந்த சாமியார் fraud என்று காறி துப்பினா நல்லது. அது நடக்குதோ தெரியல.

ஏனென்றால் இன்று சாமியார் சார்பான தளங்களை நான் முற்றுகையிட்டு வாசித்தேன். அடியார்களில் பலர் பெண்கள். அவர்களின் ஒரு சில கருத்துக்கள் இங்கே பதிக்கப்படுகின்றன.



பாருங்கோவன் இவையின்ற கொழுப்பை.

சாமியாரின் தளங்கள்


இடைவேளை ஆரம்பம்


அது சரி யார் இந்த ரஞ்சிதா என்றால் அவ இவதான்.



இடைவேளை முடிவு

நண்பர் ஒருவர் சொல்லி இருந்தார் :

"
கமராவும் டிவியில் இல்லாத காலத்தில் எத்தனை கம்முனாட்டி சாமிகள் லீலை செய்து பின் யாருக்கும் அந்தரங்கம் தெரியாமல் கிழமாகி மாண்டிருக்கும்? "

நம்மலாலா முடிஞ்சது :

ரூமில ஒரு சாமி,
அவர் கூட ஒரு மாமி,
ஆச்சுதுடா ஒரு சுனாமி,...
பப்பி shame பப்பி shame :)

ஊருக்க மாமியார் தொல்லை இருக்கோ இல்லையோ
கம்பி நீட்டும் சாமியார் தொல்லை குறையுது இல்லை
கம்மனாட்டிகளே உங்க புருஷன்களை கவனியுங்கள்


ரன் படத்தில் வந்த பாவாடை சாமியார்




மணியாட்டி சாமிகள்


இணையத்தில் வந்த சில comments :

  • ஹ்ம்ம்... நடிகர் விவேக் சொல்லற மாதிரி 1000 பெரியார் வந்தாலும் இவனுங்கள திருத்தவே முடியாது... தப்பு மக்கள் மேல... எல்லா சாமியாருங்களும் இப்படி தான். நாட்டுல உழைச்சு முன்னேற வக்கில்லாதவங்க தான் இவங்க மாதிரி ஆளுங்கள தேடி போறாங்க...
  • அட அரசியல்ல இது எல்லாம் சாதாரணம் பா. போய் வேலைய பாருங்க யா . நாளைக்கு அவருடைய சிஷ்யர்களின் வீடியோவை எதிர்பார்க்கவும் . நன்றி
  • அவனை சொல்லி குத்தம் இல்ல அவன உழுந்து உழுந்து கும்பிடற கம்முனாட்டிங்களுக்கு இது ஒரு செருப்படி...............
  • இன்னும் இந்த பங்காரு அடிகளார் தான் பாக்கி.அவர் எந்த டிவி இல் வரபோரரோ ??? #நித்தியானந்த

மக்களே விழிப்பாக இருங்கள். இன்னும் ஏமாறும் உள்ளங்கள் எத்தனையோ. நேரடியாக சொல்கின்றேன். நீங்கள் ஏமாற இருக்கும் காலம் வெகு விரைவில்.



இருக்குற சிக்கல் : யாரும் ஒரு பெண் போய் அது நான்தான் என்று வழக்கு போட்டால் தான் சாமியாரை கம்பி எண்ண வைக்கலாம். இல்லாட்டி காலம் கழிய சாமியாரின் லீலைகள் தொடரும்.. கம்மனாட்டிகளும் விரும்பி போவார்கள் . பின்னர் சன் டிவி யும் நக்கீரனும் தொடர்ந்து போட்டு கலாய்ப்பார்கள். இது சாமியார்களின் ஒரு வாழ்க்கை வட்டம்.



இனி எந்த சாமியாரின் அறைக்குள் கமேரவோ தெரியல... நக்கீரனையும் , சன் டிவி யையும் தான் கேட்கணும்.
கவனம் சாமிமார்களே , கம்மனாட்டிகளே ..

நண்பன் சொன்னது :
அதோட ப்ரியனந்த சுவாமிகள் படுக்கேக்க அறைக்க எதவாது அங்க இங்க இருக்கா என்று பார்த்திட்டு படுங்க .. அடுத்தது உங்களின்றையோ தெரியாது.. :)


Related Posts Plugin for WordPress, Blogger...