2010-03-01

"பா " படமும் இளையராஜாவின் இனிமையான மெட்டும்
நீண்ட நாட்களுக்கு பின் ஒரு படம் பார்க்கலாம் என்று போட்டு கணனி முன்னால் இருந்து எந்த படத்தை பார்க்கலாம் என்று தேடினால் .. தமிழில் தல படம் திரையரங்கு நிறைந்த கூட்டத்துடன் பார்த்தாச்சு. தீராத விளையாட்டு பிள்ளை , தமிழ்ப்படம் எல்லாமே இணையத்தில் வலம் வருகின்றன .. அவையும் பார்த்தாச்சு போன வாரம்.

"பா" படம் நல்ல படம் என்று யாரோ எல்லாம் சொல்லி இருந்தாங்க... சரி போய் இணையமூடகவே DVD தரத்தில் இருக்கின்ற இந்த படத்தை பார்த்தேன்.
ஆரம்பத்தில் எழுத்து ஓட்டத்தை skip பண்ணி போட்டு பார்த்து கொண்டு இருக்கும்போது எனக்கு கொஞ்சம் பிடிச்ச படமாய் தோன்றியது.

மகன் அபிஷேக் பட்சானின் நான் பார்த்த இரண்டாவது படம் இது.முதல் படம் குரு. அப்பா ( அந்த மேக்கப் செய்த விதம் குறித்து எனக்கு ஒருமின்னஞ்சல் வந்தது .. எங்கையோ விட்டுடன் ....), மகன் இருவரின் நடிப்பும் எனக்கு பிடிச்சு கொண்டுது.
இப்படியே படம் பார்த்து கொண்டு இருக்கும்போது இருந்தால் போல ஒரு பாட்டு
இந்த பாட்டை கேட்டவுடனே எனக்கு இது இளையராஜா மெட்டாச்சே.. அவருக்கு பிடித்த மெட்டு இது என்று எனக்கு தெரியும்... அவர் அதை ஒரு நிகழ்ச்சியில் கூட சொல்லி இருந்தார். பின்னோக்கி உடனே போய் மிஸ் பண்ணின எழுத்தோட்டத்தில் பார்த்தால் அடே கொக்கா மக்கா எங்கட ராஜா சார் தானே இசை ..சுப்பரா இருக்கே .. உடனே என்னுடையே தேடல் ஆரம்பம் :

இது இளையராஜா வைத்த One Man Show இல் இருந்து :
இந்த மெட்டை கொண்டு ..... அவர் இசை வரலாற்றில் சூப்பர் கிட் ஆன பாடல்கள்.


மூலப்பாடல் தும்பி வா என்ற பாடல் ஓலங்கள் என்ற மலையாளம் படத்தில் 1982 இல் வெளி வந்தது.இந்த தும்பி வாவும் நன்றாகவே இருக்கு
தெலுங்கில் இதே மெட்டில்:இந்த மெட்டை கொண்டு , தமிழ் படமான ஆட்டோ ராஜா வில் ( திரைக்கு வந்த ஆண்டு - 1982)இதை விட என்னால் கண்டு பிடிக்க முடியாமல் போன பாடல்

கண்ணே கலை மானே என்ற படத்தில் வந்த " நீர்வீழ்ச்சி தீமூட்டுதே ...தீ கூட குளிர் காயுதே " ஒளி வடிவம் இல்லாட்டி என்ன இரசிக்க ஒலி வடிவம் இருக்கு .. .. கேட்டு இரசியுங்கள்...


சரி வந்தனீங்க இந்த பொண்ணு போடும் இசையையும் பார்த்திட்டு போங்கஇத்தனை வருடங்கள் (28 வருடங்கள் ) ஆகியும் அந்த மெட்டும் அதே இசையும் இன்றும் என்றும் மக்கள் மனதில் வாழ்கின்றதுக்கு இது ஒரு உதாரணம்...

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...