2010-03-07

உலக பெண்கள் தினம், அம்மாவின் பிறந்த நாளில் பட்டம் பெறுவதும் மகிழ்ச்சியே

உலக பெண்கள் தினமும் ,அம்மாவின் பிறந்த நாளும், பட்டம் பெறும் நாளும்

வருடா வருடம் மார்ச் 8 உலக பெண்கள் தினம் கொண்டாடப்படுகின்றது.
பெண்கள் பற்றி பலர் பல விதமான கருத்துகளையும், விதண்டாவாதங்களையும் வைத்து இருந்தாலும், பெண்கள் பற்றி நான் சொல்ல விரும்புவது, "ஆவதும் அழிவதும் பெண்ணாலே".

அன்பு, அமைதி, ஆசைக் காதல், துன்பம் தீர்ப்பது, சூரப் பிள்ளைகளைப் பெறுவது, தனது முலைப் பாலால் வலிமை சேர்ப்பது, மானஞ்சேர்க்கும் வார்த்தைகள், கலி அழிப்பது, கைகள் கோர்த்துக் களித்து நிற்பது! எங்கெங்கு காணினும் சக்தியடா! என்ற பாரதி கூறியது போல சக்தி வடிவாய்த் திகழ்வது பெண்மை.

எங்கள் நாட்டில் வீர மிகு பெண்களினை பல வடிவங்களில் கண்டு வியந்தும் உள்ளோம்.


இந்த நாள் ( மார்ச் 8) எங்கள் வீட்டில் சிறப்பாக கொண்டாடப்படும் நாள். அதுதான் எங்கள் அம்மாவின் பிறந்த நாள். ஒவ்வொருவருக்கும் அம்மா என்றால் சும்மாவா. இந்த உலகுக்கு படைத்தது , எங்களையெல்லாம் ஒரு மனிதனாக உருவாக்கிய பெருமை அவளுக்கு உண்டு.


( பல படங்களில் அம்மாவின் பாடல்கள் இருந்தாலும் இந்த பாட்டு எல்லாருக்கும் பிடித்து இருக்கும், இந்த பாடல் அம்மாவுக்கும் பிடிக்கும் ஏனென்றால் அவ keyboard நன்றாகவே வாசிப்பா.. நான் முந்தி அவவிட்ட சொல்லுறது .. இந்த பாட்டை அடுத்த முறை வாசிச்சு காட்டுங்கோ என்று .. அடுத்த வாரம் சொன்ன படி எங்கள் வீட்டில் ஒரு இசை விருந்து நடக்கும்... நீண்ட நாட்களுக்கு பின்னர் நான் வீட்ட போன போது நான் சொல்லி வைத்திருந்த பாட்டுகள் எல்லாமே keyboard இல் வாசித்து காட்டின பெருமையும் இருக்கு.)

எங்கள் அம்மா பற்றி நானே சொல்லக்கூடாது . இருந்தாலும் அவ ஒரு ரோல் மாடல் தான். எங்களுக்கு அம்மாவாகவும் அப்பாவாகவும் கடந்த இருபது வருடங்களுக்கு மேல் செய்யும் ரோல் பற்றி சொல்லி முடிக்க ஏலாது. ஏறத்தாழ 25 வருடங்களுக்கு முன்னர் வவுனியாவில் வாகன விபத்தில் தனது ஒரு கையில் ஏற்பட்ட காயம் , அந்த கையின் பாவனையை குறைத்து இருந்தாலும் , தளராது தனது ஆசிரியர் தொழிலில் இன்று வரை சேவையாற்றி வருவதும், எங்களை இப்படி எல்லாம் ஆளாக்கி வளர்த்து விட்ட பெருமையும் அம்மாவையே சாரும். மன உறுதி , கடவுள் பக்தி, கடும் உழைப்பு இது தான் நான் அவவில் கண்டு வியர்ந்த முக்கியவை. இதை விட குறிப்பாக சொல்ல போனால் எங்களுக்கு எல்லாம் அம்மா என்றால் சரியான பயம் . ஸ்ஹாபாஆஆஆ என்னதான் பம்பலாக இருந்தாலும் அம்மா என்றால் எல்லாமே கப் சிப் என்று இருப்போம். அவ்வளவு பயம், மரியாதை. இன்று கூட நாங்கள் எவ்வளவு பெரிசா படிச்சு வந்தாலும் அம்மாவோட தொலைபேசியில் சரி இணையமூடாக கதைக்கும் போது சரி, நேர சரி , நாங்கள் வலு மரியாதை தான். ஆனால் நாங்கள் என்ன பிரச்சினை என்றாலும் வடிவா கதைப்பம். எங்களுக்கு நீண்ட பெயர்கள் அதால .. வீட்டில எங்களை வேற பெயரால் தான் கூப்பிடுறது.. என்னை ப்ரியா( வெளியில் ஒரு boy கூட இருக்கும் ) என்றும் எனது தங்கையை shanny ( வெளியில் ஒரு girl கூட வரும்) என்றும் தான் கூப்பிடுவா. :)

அம்மாவிடம் படித்தவர்களுக்கு தெரியும் அவவை பற்றி :)


இந்த வருடம் அவவின் பிறந்த நாளை வீடடில் நின்று கொண்டாட வேண்டும் என்றுதான் இருந்தேன். ஆனால் உயர் கல்வி நிமித்தம் வந்த எனக்கு அவவின் பிறந்த தினத்தில்
முதுமாணி பட்டம் ( M. Sc.) பெற இருப்பதால் இந்த முறையும் மிஸ் பண்ணிட்டன். இருந்தாலும் அம்மாவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். கொஞ்சம் பொறுங்கள் அம்மா .. வந்துடுவான் சிங்கம் பழைய படி ..........


கஜா கஜானந்தாவின் லீலைகள் :

இந்த கஜானந்தாவின் ( இது என்ன புதுப்பெயர் என்று யோசிக்காதையுங்க .. ஒரு பொதுப்பெயர் வைச்சேன்) லீலைகள் பற்றிய கதைகள் என்னும் முடிந்ததாக இல்லை. இப்போது இணையம் முழுக்க முழு நீள வர்ணனையுடன் அவர் ரஞ்சிதா லீலைகள் நிறைந்த காணொளி உலாவுவதாக இணையத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கஜானந்தாவால் நண்பி ஒருத்தியுடன் ஏற்பட்ட வாக்கு வாதம் கடைசியில் நண்பியையும் இழந்து விடுற அளவுக்கு கஜ கஜானந்தா இருந்திருக்கிறார் என்றால்.. அவருக்குள்ள ஒரு மகா சக்தி இருக்கு....( ஒரு ஞாபகம் வருது .. உந்த கஜானந்தாவே லேகியம் குடிச்சு தானம் பெவோர்ம் பண்ணுறார் என்று நேற்று இணைய அரட்டையில் ஒரு நண்பன் சொல்லி இருந்தான், என்ன கொடுமை .. விட்டால் உந்த இருபது நிமிஷ காணொளியை வைச்சு ஒரு டிகிரி முடிச்சாலும் முடிப்பாங்க போல.....). மேலும் சொல்ல மறந்துட்டன் அந்த நண்பி ஒரு பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் துறையில் அடியேன் சார்ந்த துறையில் டிகிரி முடிச்சவா... பாருங்கவோன் இவையே இப்படி என்றால் இந்த பாமரை கூட்டம் எப்படி திருந்தும்.. பல கஜானந்தாக்கள் உருவாவார்கள் எதிர்காலத்தில் என்பதில் ஐயமே இல்லை.. வாழ்க நண்பி...வாழ்க கஜானந்தா...:)


விண்ணைத்தாண்டி வருவாயா..

நேற்றுத்தான் நான் படம் பார்த்தேன். கெளதம் இன் முதல் படம் மின்னலே யை பேராதெனியவில் தமிழ் திரைப்படவிழாவில் எங்கள் பீடம் சார்பாக போட்ட போது , எனது நண்பன் சொன்னது, இது என்ர கதையடா.. இப்படித்தான் இங்கவும் ஒருத்தன்( ஒருத்தியாகவும் இருக்கலாம்) சொல்லி கேட்டது .. இது என்ர கதை போல .:) எல்லாருக்கும் படம் தயாரிக்கும் கெளதம் எனக்கு எப்ப தயாரிப்பார் என்று கொண்டு கடுங்குளிரையும் பொருட்படுத்தாது வீடு வந்து சேர்ந்தேன்..:)
நன்றே ...பிடிச்ச படம்.. த்ரிஷவிலும் கொஞ்சம் முக பாவனை கூடிய வேறு நடிகையை தெரிவு செய்து இருக்கலாமே .. என்று மட்டும் ஒரு கவலை..


பெயர் மாற்றம்
இறுதியாக எனது வலையின் பெயரினை மாற்ற தீர்மானித்து இருக்கின்றேன். ப்ரியா பக்கங்கள் நல்லாத்தான் இருக்கு.. இருந்தாலும் எதாவது பெயர் இருந்தால் சொல்லுங்கள்.. கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...