2010-03-03

சாமிமார்களுக்கு எதிரான விழிப்புணர்வு தேவை ;

இந்த நாள் ஒரு விழிப்புணர்வு நாளாக அமையட்டும். நம் நாட்டில் அரசியல் களை கட்டி கொண்டு இருக்கின்றது. சம்பந்தனோ , சிவாஜியோ , இல்லை அரசாங்கமோ , போடா ரணிலோ என்று பேசிக்கொண்டு இருக்கும்போது இந்த சாமியார்களின் லீலைகள் பிரச்சினை அதை எல்லாம் தாண்டி மேலோங்கி வந்துட்டுது. ஒரு சாரார் நக்கீரனில் மாத சந்தா கட்டி முழு நீள காணொளியை தரையிறக்கம் செய்து விட்டதாக கூட சொன்னார்கள். என்ன கொடுமை இது:)

சரி விஷயத்துக்கு வருவோம்.
எல்லாம் நாங்கள் விடும் அடிப்படை பிழைகள் தான். முதலில் யார்தான் இவர்களை உருவாக்கினார்கள். நாங்கள் ஒவ்வொருவரும் தான். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஒருத்தன் வந்து எனக்கு ஏதோ சக்தி இருக்கு உங்களுக்கு மோதிரம் எடுக்கிறன், கம்பி எடுக்கிறன், கல்லு எடுக்கிறன் என்று சொன்னால் எல்லாரும் பின்னாலே ஓடிச்சென்று வேடிக்கை பார்ப்பதுவும், பின்னால் ஒரு சங்கம் அல்லாட்டி ஓர் அமைப்பு அமைத்து அவர்களை வாழ வைப்பதுவும் நடந்து கொண்டே தான் இருக்கு. இதுக்கு ஒரு விதத்தில் ஊடகங்களும் துணை போகின்றன. இந்த சாமியார் புகழை பரப்பியதில் இந்தியாவின் பிரதான தொலைக்காட்சியின் தமிழ்ப்பிரிவு தொலைக்காட்சியும் , தமிழ் நாட்டு வார இதழும் முன்னணி வகிக்கின்றன.


மாதா , பிதா , குரு, தெய்வம் இவை நான்கும் ஒருத்தன் வாழ்க்கையில் முக்கியமான பதங்கள். முதலில் உன்னை பெற்ற அன்னையை வழிபடுங்கள். அவள் உங்களுக்கு செய்ததை நினைத்து பாருங்கள். உங்களை கருவில் சுமந்து , பின்னர் உங்களை ஒரு மனிதராக இந்த உலகுக்கு படைத்தது , இன்னும் அவளாலான கடமைகளை செய்கின்றாள். காலையில் எழுந்தவுடன் தொடக்கம் மீண்டும் உறங்க போகும் வரை உங்களுக்கு தேவையான எல்லா விதமான தேவைகளையும் பூர்த்தி செய்கிறாள்.
பிதா அடுத்தவர். அவர் உங்களை வழி நடத்துவதிலும், தன்னாலான விதத்தில் ஒரு குடும்பத்தை ஒட்டி செல்கிறார்.

குரு செய்வன பற்றி சொல்லி தெரிய தேவை இல்லை. குரு சிஷ்ய உறவு என்பது கடவுள் - பக்தன் உறவை விட புனிதமானது.

தெய்வம் என்னும் போது, ஒவ்வொருவனும் ஒரு சமயத்தை சார்ந்தவனாய் இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம். தெய்வ நம்பிக்கை என்பது மன நிறைவை தர கடவுளை வழிபடுதல் என்று நண்பர்கள் சொல்லி நான் அதுக்கும் வாதாடிய காலம் இருக்கு.:)

தாய், சுட்டிக் காட்டுகிறார் தந்தையை! தந்தை விரல் நீட்டுகிறார் குருவை நோக்கி. குரு பரம்பொருளான மகா சக்தியை சுட்டிக்காட்டுவதோடு மட்டுமின்றி, அதை நெருங்கவும் அடையவும் ஞானமார்க்கம் காட்டுகிறார். அன்பின் எல்லையைத் தொட என்னவொரு அழகான சுழற்சி! என்று முந்தி எங்கட சமய ஆசான் சொல்லி தந்தது ஞாபகம் வருகின்றது.


இந்து சமயம் சரி , கிறிஸ்தவம் சரி , இஸ்லாம் சரி, புத்த சமயம் சரி தத்தமது போதனைகளை செய்கின்றன.

மேலும் தாயில் சிறந்த கோவிலுமில்லை என்று முன்னோர் பாடி வைத்தனர். நான் மேலே சொன்ன நான்கையும், மாதா, பிதா , குரு, தெய்வம் என்று வரிசைப்படுத்தி தெய்வத்தை விட, குருவை விட , பிதாவை விட, மாதாவை முன்னணியில் வைத்தனர். அப்படிப்பட்ட அந்த அம்மாவை வணங்கி, ஆசி பெற்றாலே கிடைக்க வேண்டிய எல்லாமே கிடைத்து விடும். அதைத்தானே நாங்கள் செய்ய தவறுகின்றோம். இந்த நான்கு பேரின் போதனைகளே போதிய அளவில் எங்கள் வாழ்க்கையை நல்வழிப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.


ஆனால் இவர்கள்( இந்த ஒரு தொகுதி மக்கள் ), இந்த சாமியார்கள் என்று சென்று போதனை அவர்களிடம் பெறக்காரணம் என்னதானோ ? வறுமையின் நிமித்தம் , ஏதாவது ஒன்றை இந்த சாமியார்களிடம் இருந்து பெறலாம் என்றுதான் செல்வதாக நான் வாசித்து அறிந்து கொண்டேன். இந்த சாமியார்களும் ஆரம்பத்தில் இலவச சேவை , பின்னர் பணம் , பின்னர் அந்த நிவர்த்தி இந்த நிவர்த்தி என்று அடாவடியாக பணம் அறவிடலும் வழமை, அத்தோடு வரும் ஓன்று இரண்டு சகோதரிகள் சரி, ஆண்டி மார் சரி இப்படி சாமியாரை அல்லது சாமியார் வளைச்சு போட்டு பாலியல் இன்பம் கான்பதுவுமே வரலாறு. மேலும் இந்த அறிவு முடக்கமைந்த ( brainwash) மக்களை கண்டு எதாவது சாமியார் பற்றி ஏடா குடமாய் சொன்னாலும் அதனை அவர்கள் ஏற்று கொள்வதாகவும் இருக்க மாட்டார்கள். அவ்வளவு புத்தி கேட்டு போய் இருப்பார்கள். இந்த வாழ்க்கையில் சுவாமிஜி தான் கடவுள் என்ற அளவுக்கு போதிக்கப்பட்டு( எப்புடி தானோ தெரியல) இருப்பார்கள்

இதிலயும் சிறப்பாக இந்திய சாமிமார்கள் மாட்டி கொள்வதும் பின்னர் சிறையில் இருப்பதுவும் முக்கியமான ஒன்றே.

இவ்வளவும் அறிந்தும் இன்னும் அங்கே சென்று கொண்டு இருக்கும் பக்த கோடிகள் பற்றி நினைக்க சிரிப்புதான் வருது.


ஒரு காலத்தில் எங்கள் ஊரில் , சுவாமி பிரேமானந்தாவின் செருப்பை வைத்து பால் ஊத்தி கும்பிட்டு கொண்டு இருந்ததை நான் கேள்வி பட்டேன். அப்போது அவர் கம்பி எண்ணிக்கொண்டு இருந்த காலம். இந்த பிரேமானந்த பக்தர்களில் ஒருவரை சந்தித்து கேட்டேன். இப்படி சாமியார் கம்பி எண்ணுராரே நீங்கள் இப்பவும் நம்பலையா என்று. அதுக்கு அந்த அம்மணி சொன்ன பதில், தங்கள் சார்பில் ஒரு அம்மணி இந்தியா சென்று வந்ததாகவும் அவர் சிறையில் கூட சிவபூஜை செய்வதாகவும் , மக்களை தொடர்ந்து தன்னை , தான் விட்டு போனவற்றை தொடர்ந்து வழிபடுமாறும் சொன்னதாக பதிலை தந்தார், இந்த அம்மணிகளை என்னதான் செய்யலாம். கட்டின புருஷன் மாருக்கு பனை மட்டையால அடிக்கனும்போல இருந்திச்சு. நானும் வாதாடி களைத்து போனேன். பிடிச்ச காலுக்கு மூன்று கால் என்றால் என்ன செய்யலாம்.

இதை விட நான் எந்த வித சாமியாரையும் கேள்வி பட்டதா இல்லை. கொழும்பு வந்த போது அடிக்கடி ஏதோ சாமியார் பற்றி எங்கள் தொடர் மாடியில் பேசியதை அறிந்தேன்.நான் அந்த வழி இல்லை என்ற படியால் இவற்றை கண்டு கொள்ள வில்லை.

நான் வாசித்த பக்கங்களில் அம்மா பகவான் என்று ஒருவர் அண்மையில் தோன்றி என்ன வெல்லாம் செய்கின்றார் என்று சொல்லி இருந்தார்கள். எனது நண்பன் ஒருவன் தனது வலையில் போட்ட விளம்பரத்தை பார்த்து திகைத்தே போனேன். அதாவது அவர் இப்போது skype மூலம் அருள் வழங்குவாராம். என்ன கொடுமை இது. அதுக்கு விஷேட கட்டணமும் இருக்காம். இதை எல்லாம் பொறுக்க முடியவில்லை. என்றோ ஒரு நாள் இந்த படு பாவி சனங்களுக்கு அவரின் திரை மறைவுகள் தெரிய வரும் என்று போட்டு போய் விட்டேன்.

இன்று நித்தியானந்தா சுவாமியார் கம்பி நீட்டி விட்டார். இவரை நம்பி பின்னால் திரிந்த கம்மனாட்டிகள் என்னாவது. அவரு நான் ரொம்ப நல்லவர், கடவுள் என்று சொல்ல வல்லவர் என்ன்று இந்த கம்மனாட்டிகள் சொன்னதுவும் ..இந்த கம்மனாட்டிகளின் புருஷன் மார் வீட்டில் சமைச்சு வைக்க இந்த கம்மனாட்டிகள் சாமியின் காம அருள் கிடைக்க அலைந்து திரிவதுவும் சகஜமே.
இன்று எல்லாரும் அந்த சாமியார் fraud என்று காறி துப்பினா நல்லது. அது நடக்குதோ தெரியல.

ஏனென்றால் இன்று சாமியார் சார்பான தளங்களை நான் முற்றுகையிட்டு வாசித்தேன். அடியார்களில் பலர் பெண்கள். அவர்களின் ஒரு சில கருத்துக்கள் இங்கே பதிக்கப்படுகின்றன.பாருங்கோவன் இவையின்ற கொழுப்பை.

சாமியாரின் தளங்கள்


இடைவேளை ஆரம்பம்


அது சரி யார் இந்த ரஞ்சிதா என்றால் அவ இவதான்.இடைவேளை முடிவு

நண்பர் ஒருவர் சொல்லி இருந்தார் :

"
கமராவும் டிவியில் இல்லாத காலத்தில் எத்தனை கம்முனாட்டி சாமிகள் லீலை செய்து பின் யாருக்கும் அந்தரங்கம் தெரியாமல் கிழமாகி மாண்டிருக்கும்? "

நம்மலாலா முடிஞ்சது :

ரூமில ஒரு சாமி,
அவர் கூட ஒரு மாமி,
ஆச்சுதுடா ஒரு சுனாமி,...
பப்பி shame பப்பி shame :)

ஊருக்க மாமியார் தொல்லை இருக்கோ இல்லையோ
கம்பி நீட்டும் சாமியார் தொல்லை குறையுது இல்லை
கம்மனாட்டிகளே உங்க புருஷன்களை கவனியுங்கள்


ரன் படத்தில் வந்த பாவாடை சாமியார்
மணியாட்டி சாமிகள்


இணையத்தில் வந்த சில comments :

  • ஹ்ம்ம்... நடிகர் விவேக் சொல்லற மாதிரி 1000 பெரியார் வந்தாலும் இவனுங்கள திருத்தவே முடியாது... தப்பு மக்கள் மேல... எல்லா சாமியாருங்களும் இப்படி தான். நாட்டுல உழைச்சு முன்னேற வக்கில்லாதவங்க தான் இவங்க மாதிரி ஆளுங்கள தேடி போறாங்க...
  • அட அரசியல்ல இது எல்லாம் சாதாரணம் பா. போய் வேலைய பாருங்க யா . நாளைக்கு அவருடைய சிஷ்யர்களின் வீடியோவை எதிர்பார்க்கவும் . நன்றி
  • அவனை சொல்லி குத்தம் இல்ல அவன உழுந்து உழுந்து கும்பிடற கம்முனாட்டிங்களுக்கு இது ஒரு செருப்படி...............
  • இன்னும் இந்த பங்காரு அடிகளார் தான் பாக்கி.அவர் எந்த டிவி இல் வரபோரரோ ??? #நித்தியானந்த

மக்களே விழிப்பாக இருங்கள். இன்னும் ஏமாறும் உள்ளங்கள் எத்தனையோ. நேரடியாக சொல்கின்றேன். நீங்கள் ஏமாற இருக்கும் காலம் வெகு விரைவில்.இருக்குற சிக்கல் : யாரும் ஒரு பெண் போய் அது நான்தான் என்று வழக்கு போட்டால் தான் சாமியாரை கம்பி எண்ண வைக்கலாம். இல்லாட்டி காலம் கழிய சாமியாரின் லீலைகள் தொடரும்.. கம்மனாட்டிகளும் விரும்பி போவார்கள் . பின்னர் சன் டிவி யும் நக்கீரனும் தொடர்ந்து போட்டு கலாய்ப்பார்கள். இது சாமியார்களின் ஒரு வாழ்க்கை வட்டம்.இனி எந்த சாமியாரின் அறைக்குள் கமேரவோ தெரியல... நக்கீரனையும் , சன் டிவி யையும் தான் கேட்கணும்.
கவனம் சாமிமார்களே , கம்மனாட்டிகளே ..

நண்பன் சொன்னது :
அதோட ப்ரியனந்த சுவாமிகள் படுக்கேக்க அறைக்க எதவாது அங்க இங்க இருக்கா என்று பார்த்திட்டு படுங்க .. அடுத்தது உங்களின்றையோ தெரியாது.. :)


1 comment:

வானம்பாடி said...

ஒரு டபுட் அண்ணா, சுவாமி குருவுக்கு முன்னா? or தெய்வத்துக்கு முன்னா? இந்த மாதா பிதா குரு தெய்வம் ஒழுங்கில்.. கம்மனாட்டிகள் பற்றி புலம்புற நீங்கள் ஏன் கம்மனாடிகளுக்க்கு சுவாமியை அறிமுகம் செய்த வல்லூறுகளை சொல்லவில்லை?

Related Posts Plugin for WordPress, Blogger...