2010-04-04

ஓசை - ஒரு பாடல் நான் கேட்டேன்

இந்த பாடல் எஸ் பி பாலா வும் வாணி ஜெயராமும் ஓசை படத்துக்காக பாடியது.
இது ஒரு டூயட் பாடல். சோகப்பாட்டும் இருக்கு அதை பிறகு போட்டு விடுகிறேன்.


பெண் : ம்.. ம்.. ம்.. ம்....
ஒரு பாடல் நான் கேட்டேன்....
உன் பாசம் அதில் பார்த்தேன் ,
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதை ஆகும்

லா ல லா ல லா லா லா

நான் பார்க்கும் இடம் எல்லாம்
கண்ணில் நீ இன்றி வேறில்லை
என் வாழ்க்கையின் ஆதாரம்
எந்த நாளிலும் நீயாகும்
நீ அன்பெனும் ஜீவநதி
என் ஆலய தீபம் நீ

ஆண் : வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதையாகும்

நீ பாயும் நதி ஆனாய்
உன்னை தாங்கும் கரை ஆனேன்
என் வாழ்க்கையில் நீ பாதி
உன் வாழ்க்கையில் நான் பாதி

என் கண்களில் சமுத்திரங்கள்
அதில் காண்பது நம்பிக்கைகள்
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதை ஆகும்..



என் கண்கள் உறங்காது
உன் பூமுகம் காணாது
பெண்: நான் வாழ்வதும் உன்னாலே
ஆண்: நீ காத்திடும் அன்பாலே
பெண்:என் ஆயிரம் ஜென்மங்களும்

ஆண் : உன் அன்பினை நான் கேட்பேன்


Oru Paadal Naan Keten by svpriyan


பெண்: வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதையாகும்

இருவரும் :ஒரு பாடல் நான் கேட்டேன்
உன் பாசம் அதில் பார்த்தேன்..
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதையாகும்
ஒரு பாடல் நான் கேட்டேன்.................

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...