2010-04-24

கொழும்பு வர வேற்(ர்க்)கிறது

நீண்ட நாட்களுக்கு பின் தாயகம் திரும்பி இருக்கிறம். போன அலுவல்களை கச்சிதமாய் முடித்து விட்டு, போன இடத்து பழக்க வழக்கங்கள் , கலாச்சாரங்கள் ..இன்னும் பலவற்றை கற்று , பார்த்து தெளிந்து போட்டு , முன்னர் பலர் சொல்லும் குறள் "இருந்தாலும், இறந்தாலும் நம்ம ஊரில் தான் என்று சொன்னது சரி என்று கொண்டு , கடந்த சில நாட்களுக்கு முன் ஐரோப்பாவுக்கு ஒரு போட்டு வாறன் சொல்லி போட்டு வந்துட்டேன் .:)
ஊருக்கு நிம்மதியா வாறதுக்கு கூட ஒழுங்காக குடுத்து வைக்கல. வேறென்ன லண்டன் ஊடாக போட்டு தந்த டிக்கட்டு தான். அதுவும் குறுக்கால போன விமானம் ஓடாத படியால் .. ஒரு நாலு நாள் லண்டனில் தஞ்சம்.
பிரிட்டிஷ் விமானம் மூலம் லண்டன் வரும் போது, நெதர்லாந்தில் வைச்சு என்னுடைய பட்டிகளில் பாதியை எறிஞ்சே போட்டேன்.( பட்டி என்றது ; குளிருக்கு போடும் கவசங்கள் ... அதுவே ஒரு ஐந்து கிலோ போலும் .. யோசித்து பார்த்தேன் , நம்ம ஊரில எவன்தான் உதெல்லாம் போடுவான் . சரி ஒருக்கா இரண்டு தரம் போட்டால், சொல்லுவாங்கள் இவரு இப்பதான் வந்தவரு அங்கே இருந்து , கலர்ஸ் காட்டுறாரு என்று.. வேணமையா..... வீண் வம்பு.. வந்த செலவோடு இதுவும் போகட்டும் .. என்று குப்பை தொட்டியில் போட்டு விட்டு எறிட்டன்)



என்னுடைய கஷ்ட காலம், லண்டனில் இருந்து கொழும்பு செல்லும் விமானம் அன்று ஓட வில்லை. தங்க இடம் குடுத்தார்கள். அடுத்த விமானம் இன்னும் இரண்டு நாளில் போகுமாம் ,அதிலை தான் இடம் இருக்காம் என்று.. குறுக்கால போனவங்கள் என்று போட்டு, திட்டி திட்டி நின்றது தான். இரண்டு நாள் பின்னர் .. நாலு நாள் வரை போனதை நினைச்சா.... கடுப்பா தான் இருக்கு.. என்னமோ ஒரு மாதிரி கொழும்பு வந்து சேர்ந்தேன்..

அந்த மாதிரி குளிருக்க குடும்பம் நடத்தி போட்டு நம்ம ஊருக்கு வரும் போது.. உடம்பே வேர்த்து போச்சு. காலை ஏழு மணி கொழும்பில் காலடி எடுத்து வைத்தேன். போட்டு கொண்டு வந்த உடுப்பு , உடம்பு எல்லாமே வியர்வையில் மிதந்தன..
என்னமா வெட்கை, புழுதி, வாகன இரைச்சல், இராணுவ சோதனை காவலரண்கள் என்று எல்லாவற்றையும் கேட்டும், பார்த்தும், வியந்தும் கொண்டு வீடு வந்தேன்.
வந்த நேரம் கொஞ்சம் விறு விறுப்பான காலம் அன்றைய நாளை விட்டால் தொடர்ந்து 14 நாட்களுக்கு விடுமுறை என்ற படியால், உடனையே தொழில் செய்யும் இடம் நோக்கி சென்று தொழிலுக்கு வந்து விடேன் என்று உறுதி செய்து போட்டு வந்தேன்.

ஐரோப்பாவில் வெளிய போகணும் என்றால் உடுப்பு போட்டு வெளிக்கிடுறது பெரிய பில்ட் அப். உள்ளாடைகள் , அதுக்கு பிறகு குளிருக்கு warmer , பிறகு shirt, பிறகு sweater, பிறகு ஜாக்கெட்;; உதெல்லாம் போட்டு விட்டு பிறகு கைக்கு கையுறை , தலைக்கு கம்பளி தொப்பி , பிறகு கழுத்துக்கு சால்வையை விட மிக நீண்ட துண்டால் ஒரு சுத்து கட்டு , சப்பாத்து , ஒரு headphone தலைக்கு, இதெல்லாம் தேவையா. நிம்மதியா நம்ம ஊரில் ஒரு சாரம், ஒரு ஷர்ட் இது காணும் முன் கடையில போய் பேப்பர் வாங்க , பாண் வாங்க .
அதுதான் சொல்லுறன் " சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா" புரிஞ்சு கொள்ளுங்க நண்பர்களே ..

நேற்று ஆபிசில் இருந்து கொழும்பு நோக்கி வெளிக்கிடும் போது கடும் வெயில், கொழும்பு வர கடும் மழை , மின்னல், இடி முழக்கம், வாகன நெரிசல்.. என்ன கொடுமை. திட்டி திட்டி ஓடோடி வந்து சேர்ந்தேன் . ஐரோப்பாவில் இருந்த காலத்தில் எங்கையும் போறதென்றால், காலநிலையை பார்த்து போட்டு தான் போறது. இவங்கள் இங்க சொல்லுற காலநிலை பற்றி நான் கருத்து எதுவும் கூற விரும்ப வில்லை.


கொட்டும் மழை ; வாகன நெரிசல் ...

சனி, ஞாயிறு மாலையில்Marine Drive ( இராமக்க்ரிஷ்ணாவில் தொடங்கி பம்பல பிட்டிய மஜெஸ்டிக் சிட்டி வரை ) இல் நடக்கும் தொழில் ; உடம்புக்கும் உத்தமமான தொழில் ; நடக்கும் பழசுகளை போட்டி மாதிரி முந்தி நடக்கும் போது உள்ளத்தில் என்ன கிளு கிளுப்பு .. நாங்களும் யாரையோ முந்துரோம்ள:) என்று தான் :) என்னோடு இன்னும் சில எஞ்சினியர் மாரும் நடக்கினம் .... :) அவை தங்கட எதிர்கால மனைவி மாரை தெரிவு செய்யும்பொருட்டு உடம்பை 16 வயது மாதிரி வைத்து இருக்க வேணுமாம் என்று விரும்பினம். :)

2 comments:

கன்கொன் || Kangon said...

:)))

தலைப்பே அருமை... :)
பயங்கர வெக்கை. எங்களுக்கே இப்பிடியெண்டா அங்க இருந்து வந்தா உப்பிடித்தான் இருக்கும்...

ப்ரியா பக்கங்கள் said...

நன்றி உங்கள் வருகைக்கு ; கொஞ்சம் பிந்தி போனேன்
தலைப்பு நீண்ட நாளாய் மனசுக்குள் இருந்தது .. எழுதினம் கடைசியாய்

Related Posts Plugin for WordPress, Blogger...