2010-07-15

மனதை விட்டு நீங்காத ரெட்டைக்கிளிகள் பாடல்

கடந்த நாட்களில் பல்கலைக்கழகம் மூடப்பட்டு இருந்தாலும், என்னதான் காரணம் என்று கேட்காமலே சொல்லலாம். வேற என்ன ஐந்து சிரேஷ்ட மாணவர்களை பல்கலைப்படிப்பில் இருந்து நீக்கியது தான். இது ஒரு வருஷமா, அல்லது நிரந்தரமாய் என்றா எனக்கு தெரியாது. இப்போது உள்ள கடும் சட்ட திட்டங்களுக்கு, (நாங்கள் படிக்கும் காலங்களில் இருந்தது போல் அல்ல ) யாரவது பகிடிவதையில் ஈடு பட்டால் , ஈடுபடுவோர் எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பும் உரிமை உபவேந்தருக்கு இருக்கு. அப்படித்தான் எங்க கழகத்திலும் நடந்திட்டு.
விடுவாங்களா நம்ம பசங்க , உடனே போராட்டம் தான். போராடுறவன் போராடட்டும் என்று போட்டு , மிச்ச சொச்சம் எல்லாம் வீடுகளுக்கு படை எடுத்திட்டு. ஒரு சிலதுகள் (வீட்டை போயும் வேலை இல்லை என்று சொல்லுறதுகளை சொல்லுறன் ) இங்கயும் அங்கயும் அலைந்து திரியுதுகள். வழமை போல ஜோடிகளுக்கு வசந்த காலம். எதுவித அழுத்தங்களும், தடைகளும் இல்லாமல் தங்கள் இனிய மாலை, இரவுப் பொழுதுகளை "போக்கி" கொண்டு இருக்குதுகள்.
நம்மளை யாரும் கேட்பாரில்லை.. :( எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ். வெளியிடவேண்டிய கணணி சார்ந்த வெளியீடுகளை தயாரித்து கொண்டு இருக்கின்றேன்.
வழமை போல பின்னணி இசை இசைக்க, அடியேன் வேலை செய்து கொண்டு இருக்கும் போது, இணைய வானொலியில் , வந்திச்சு அந்த பாட்டு..
ரொம்பவே நல்ல இருந்திச்சு ஐயா யேசுதாசின் குரலும், சித்ரா அம்மாவின் குரலும் கலந்தொலிக்க ரெட்டை கிளிகள் அன்றாடம் பேசும் ...கட்டில் கதைகள்:) பலதடவை கேட்டு கேட்டு .. களைத்து போயிட்டன். ராஜாவின் இசை ......என்னப்பா .. வார்த்தைகள் இல்லை .. சொல்ல..


எங்கட பல்கலைக்கழகத்துக்கு கொஞ்சம் முன்னால் .. எப்புடி குளிரு ...

நீங்களும் கேட்டு பாருங்களேன்..(situation song pa.... யாருக்கு .. அதுவும் .. இந்த ஜோடிகளுக்கு தான் ) கேட்டு போட்டு சொல்லுங்க.. மாப்பு எப்படி உங்கலால மட்டும் என்று மட்டும் கேட்டு நோகடிச்சுடாதையுங்க..:(

பாடல்: ரெட்டைக்கிளிகள்
திரைப்படம்: ஒரே ஒரு கிராமத்திலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & சித்ரா

ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்
இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும் எட்டுத்திசைகள்
தண்ணீர் மேகம் பன்னீர் தூவும் பன்னீர் துளியும் வெந்நீராகும்
இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ
ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்


RetthaiKiligal by svpriyan

ஈர பூக்களில் தேன் இதழ்களில் விழ
நான் எடுத்தேன்...நான் எடுத்தேன்

ஓர பார்வையில் உன் உணர்ச்சிகள் வர
நான் படித்தேன்...நான் படித்தேன்

இதயத்தை திறந்தாய் நீ இடையினில் விழுந்தேன் நான்
எனக்கென பிறந்தாய் நீ இருப்பதை கொடுத்தேன் நான்
நெஞ்சை தழுவி என் தோளில் சாயும் வெள்ளி அருவி
கண்ணில் எழுதி உன் பேரை பாடும் வண்ண குருவி
சங்கீதம்தான்...சந்தோஷம்தான்
நம் உறவினில் பல சுரங்களும் லயங்களும் எழ


ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்
இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும் எட்டுத்திசைகள்
தண்ணீர் மேகம் பன்னீர் தூவும் பன்னீர் துளியும் வெந்நீராகும்
இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ
ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்

நேற்று ராத்திரி என் உடல் நனைந்திட
நான் விழித்தேன்...நான் விழித்தேன்

காதல் நாயகன் உன் கனவினில் வந்து
நான் கலந்தேன்...நான் கலந்தேன்

இருட்டினில் வரலாமா இருபுறம் தொடலாமா
இலக்கியம் இதுதானே இலக்கணம் கெடலாமா
விட்டுக்கொடுத்தால் கண்ணா உன் வேகம் கட்டுப்படுமா
தொட்டுப்பிடித்தால் கண்ணே உன் பார்வை சுட்டுவிடுமா
அம்மாடி நான் பெண் பாவைதான்
உன் விரல்களும் தொட தலைமுதல் அடிவரை சுட


ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்
இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும் எட்டுத்திசைகள்
தண்ணீர் மேகம் பன்னீர் தூவும் பன்னீர் துளியும் வெந்நீராகும்
இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ
லல்ல லல்லலா லல்லாலா லாலா லல்ல லல்லலா

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...