2010-07-28

அரசாங்கத்துக்கு தலை இடி தர இருக்கும் பல்கலை விரிவுரையாளர்கள் வேலை நிறுத்தம்

நேற்று வரை வேலை நிறுத்தம் என்றால் , வேலை நிறுத்தம் செய்யுறவனை திட்டாத திட்டு இல்லை. இன்று அது நமக்கே வந்திட்டு.
யாவரும் அறிந்த ஒன்றே, இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலை நிறுத்தம். நண்பன் ஒருத்தன் தொலை பேசியில் பேசும் போது சொன்னான் " டேய் , நீ உன்ற அலுவலகத்தில் இருக்கிற பழசுகளோட வீதியில் இறங்கி நின்று போஸ்டர் பிடி , அப்பதான் உன்னையும் சேர்த்து வீடியோ எடுத்து டிவி இல போடுவாங்கள் என்று." அதுக்கு நான் சொன்ன பதில் " இப்போதைக்கு நாங்கள் எல்லாம் வீதியில் இறங்கி போராட தேவை இல்லை, கதிரையில் இருந்தவாறே போராடுவோம், தேவை ஏற்படின் இறங்குவோம் என்று"

இதை எல்லாம் விட்டுட்டு விஷயத்துக்கு வருவம்

இலங்கையில் உள்ள பதினைந்து பல்கலைக் கழகங்களின் விரிவுரையாளர்கள் ( நிரந்தர விரிவுரையாளர்கள் மட்டுமே , போதானசிரியர்கள் அல்ல ), தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கடந்த வருடம் , பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் , மாண்பு மிகு அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ , மற்றும் நாட்டின் ஜனாதிபதி அவர்களையும் கேட்டுக்கொண்டனர் . அந்த நேரத்தில் தேர்தல் நடை பெற இருப்பதால் , பல்கலை சமூகத்தையும் உள்ளடக்கி , தேர்தலில் வெற்றி பெற வேண்டி இருந்ததால் , கேட்ட கோரிக்கைகள் அனைத்தும் ஆமோதிக்க பட்டன போல் இருந்தது.


அதுக்கு ஒரு படி மேல் போய் உடனடியாக ருபாய் 2500/= அல்லோவன்செஸ் குடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. என்ன சோகம் என்றால் அதுகூட இத்தனை மாதமாகியும் இன்னும் தர வில்லை .

இவற்றையெல்லாம் பொறுமையோடும் , அமைதியோடும் பார்த்து கொண்டு இருந்த விரிவுரையாளர்கள் சமூகம் , இந்த மாதம் முதல் வாரம் ஒரு குண்டை தூக்கி போட்டது , நாங்கள் வருகின்ற 27 ம் திகதி நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் செய்கின்றோம் என்று.
அதற்கு உடனே பதிலடியாக உயர் கல்வி அமைச்சராக இருக்கின்ற மாண்பு மிகு அமைச்சர் எஸ் பி அவர்கள் , சம்பளம் மூன்று மடங்கு உயர்த்தப்படும் என்று அறை கூவி , அரசாங்கத்தை சங்கடத்துக்குள் மாட்டி விட்டார்.


இப்பொது விரிவுரையாளர்கள் சமூகம் தங்கள் கோரிக்கைகளை கடுமையாக முன் வைத்து போராட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

கோரிக்கை ஒன்று :
2010 பட்ஜெட் இல் சேர்ப்பதாக இருந்த சம்பள அதிகரிப்பை உடனடியாக 2011 பட்ஜெட்டில் சேர்க்கும் உறுதி மொழியை தர வேண்டும்.
கோரிக்கை இரண்டு :
2011 பட்ஜெட் வரைக்கும் 50% ஆலோவன்செஸ் அதிகரிப்பை வழங்க வேண்டும்

கோரிக்கை மூன்று :
இன்று வரை கல்வி சாரா ஊழியர்கள் வரிசையில் அதி உயர் பதவி வகிக்கும், பதிவாளர், காசாளர் போன்றோர் , இதுவரை விரிவுரையாளர்களை விட உயர்ந்தவர்களாக போற்றப்டுகின்றார்கள். இதை உடனடியாக மாற்றியமைக்குமாறும் ( விரிவுரையாளர்களுக்கு பின்னர் தான் இந்த பதவிகள் )


போராட ஆரம்பித்து இருக்கின்றார்கள்.

எந்தளவில் போய் முடியுமோ தெரியாது.

இருந்தாலும் கொஞ்சம் சொல்ல வேண்டி இருப்பது

எப்படி விரிவுரையாளர்கள் ஆகின்றார்கள் ? அவர்கள் எப்படி நிதி பற்றாக்குறைக்கு ஆளாகிறார்கள் என்று பாருங்களேன். ஆங்கில வடிவம் ( யாவருக்கும் ஆங்கிலம் தெரியும் தானே :) )

1. you graduate with bachelors at age 24
2. join uni as an Lecturer for a salary of 15000
3. stay in the uni for at least one year until you get a postgraduate scholarship
4. study for PhD for about 4-6 yrs with a stipend just enough to cover the expenses
5. now you are 29/30, with a PhD and with small amount of savings
6. you return home, join a uni as a junior lecturer for a salary of 35000/=

7. If you want to go up (like to become an associate prof or prof), you need to publish conference papers (at least couple a year) which require registration fees, air ticket fees etc....

Now could somebody please tell me is 35000 justifiable? People have needs, you need to build a house, raise a family while you are conducting lectures.

As far as i can remember, the salary scales of uni lecturers hasn't been updated for a long time. isn't a little pay hike justifiable?இதைவிட மேலதிகாமாக ஒன்று :

வெளிநாட்டு விரிவுரையாளர்களுடன் ஒப்பிடும் போது நாங்கள் மிகவும் குறைந்த சம்பளம் வாங்கும் கூட்டம் தான்.
அதிலும் இலங்கையில் விரிவுரையாளர் ஆகுவது என்பது மிகவும் கஷ்டம், சிரேஷ்ட விரிவுரையாளர் பிறகு பேராசிரியர் என்று எல்லாம் இருக்கும் பதவிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும் . ( அதாவது பதிவுகள் , படைப்புகள் , புத்தகங்கள் , சமூக சேவை என்று ஒரு நீண்ட பட்டியல் ). இவற்றுக்கு வழங்கப்படும் புள்ளி அடிப்படையில் தரங்கள் உயர்ந்து செல்லும். அண்மையில் பேராசிரியர் ஆவதற்க்கு , கடுமையான சட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இவற்றை எல்லாம் உடலை மூளையை வருத்தி செய்யும்போது , ஏன் எங்களின் சம்பளங்கள் தான் அதிகரிக்க முடியாது. வெளி நாட்டுடன் ஒப்பிடுங்கள் , நாங்களும் அவர்களும் ஒரே அளவில் தான் படித்து பட்டம் பெற்றுள்ளோம், நாங்கள் கொஞ்சம் சம்பளம் பெறுகின்றோம் , அவர்கள் போதுமான அளவு பெறுகின்றார்கள்.

நேற்று பொதுமக்கள் , மற்றும் ஊடகங்களுக்கு அறிவிக்கபட்டுள்ளது.
எனக்கு தெரிந்தளவில்,
ஆகஸ்ட் 10 இற்கு முன்னர் தீர்வு இல்லை என்றால் பெரும்பாலும் அரசாங்கம் பெறும் நெருக்கடிக்குள் போகும் போல் தெரிகின்றது.

ஏனெனில், அதி உயர் பதவிகளில் இருக்கின்ற விரிவுரையாளர்கள் , பீடாதிபதி, துறைத்தலைவர்கள் , போன்றோர் பதவிகளை ராஜினமா செய்வார்கள் போல் இருக்கு ,
அத்துடன் உயர்தரம் வினாத்தாள்கள் திருத்தும் பணியை கூட புறக்கணிக்க போறார்கள் போல இருக்கு. மேலும் பலகலைகழக மட்டத்தில் நடக்கும் பரீட்சைகள் கூட நடக்காமல் போகும்.
எதிவரும் வாரங்கள் பல்கலைக்கழகங்களில் என்னதான் நடக்க போகுது என்று இருந்துதான் பார்ப்போமே.

விஷேட செய்தி: கிடைத்த தகவல்களின் படி , நேற்று புறக்கணிப்பில் ஈடுபட்ட அனைத்து விரிவுரையாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை குறைக்குமாறு பல்கலை மானியங்கள் அறிவிப்பு :)

சபாஷ் எப்பிடி அரசியல் நடக்குது என்று பாருங்கோவன்..

1 comment:

Statistics said...

temp.lecturers மற்றும் demonstrators களின் நிலை என்ன?

Related Posts Plugin for WordPress, Blogger...