2011-02-26

எனக்கும் பிடிக்கும் மலேசியா வாசுதேவனை !!!

எனக்கு பிடித்த தமிழ் பாடகர்களில், மலேசியாவில் இருந்து தமிழ் நாடு வந்து தனது குரல் மற்றும் நடிப்பு திறமையால் தென் இந்திய திரையுலகத்தில் தனக்கென்று ஒரு இடத்தை பெற்று கொண்ட, மலேசியா வாசுதேவன் கடந்த இருபதாம் திகதி இவ்வுலகத்தை விட்டு நீங்கி  சென்றார். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அவரின் ரசிகன் சார்பில் பிரார்த்திக்கின்றேன் !!


நான்  சிறு வயது தொடக்கமே ரஜனி ரசிகன் என்பதால், ரஜனி  படங்களில்  மலேசியா வாசுதேவன் குரலில் ஓன்று அல்லது இரண்டு பாட்டாவது இருக்கும். 

அருணாச்சலம் படத்தில் கூட சிங்கம் ஒன்று புறப்பட்டதே..என்ற சூப்பர் கிட் பாடலை  பாடி இருந்தார். ஊர்க்காவலன் படத்தில் மலேசியா வாசுதேவனின் நடிப்பு சுப்பர்.


நம்ம விஜயின் பத்ரி படத்தில், விஜயின்  காதலியின்(அதுதான் நம்ம கம்பஸ் காலத்தில் பலரின் இரவு தூக்கத்தை கலைத்து சென்ற பூமிக்காவின்   ) தந்தையாராக கூட நடித்து அசத்தியிருந்தார்  !!!

2002 ஆம் ஆண்டில் என்று தான் நினைக்கின்றேன், சூரியன் எப் எம் கண்டியில்  நடத்திய பாபா பூம்பா நிகழ்ச்சியில், கலந்து கொண்டு பலவிதமான பாடல்களை அந்த இரவு வேளையில் பாடி அசத்தி இருந்தார். அவரது ரசிகர் என்ற விதத்தில் அன்றைய இரவை அவரின் நேரடி நிகழ்ச்சியை அவரின் இலங்கை  ரசிகர்களுடன் இருந்து பார்த்து மகிழ்ந்தது இன்றும் ஞாபகம் இருக்கின்றது.

இவரது பல பாடல்கள் ரிமிச்சு செய்து அவரின் அழகான குரலை கெடுத்து வைச்சு இருக்கும் ரிமிச்சு ராஜாக்களுக்கு கடுமையான கண்டனங்கள் !!!


மலேசிய வாசுதேவன் குரலில் வந்த பாடல்களில் எனக்கு பிடித்த ஒரு சில மெட்டுக்கள் !!!

 ரஜனியின் தர்மயுத்தம்

ஒரு  தங்க  ரத்தத்தில் 





ஆகாய கங்கை 



மெகா கிட்... பாடல்  ஆசை நூறுவகை 



மிஸ்டர் பாரத் - என் தாயின் மீது ஆணை 





மாப்ளை-- என்னோட ராசி நல்ல ராசி 





மாவீரன் படத்தில் - நீ கொடுத்ததை ..




படிக்காதவன் படத்தில்-- ஒரு கூட்டு கிளியாக




சிவாஜியின்  முதல் மரியாதை -- இன்றும் இசைப்பிரியர்கள் அடிக்கடி கேட்கும் பாடல் !!




அடி ஆத்தாடி - கடலோர கவிதைகள் 

http://123musiq.com/SOURCE/SPECIAL%20SONGS/Malaysia%20Vasudevan/Adi%20Aathadi%20%20-%20Kadalora%20Kavithaigal.mp3


நிறம் மாறாத பூக்கள் -- ஆயிரம் மலர்களே ..



மண்வாசனையில்  -- ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் 



வேதம் புதிது படத்தில்--- மாடு வண்டி சாலையிலே.. 
(மிக விரைவில் - இறுவெட்டில் இருந்து  தரையேற்றம் செய்கின்றேன்..)

கமலின் படங்களில் இருந்து

கல்யாணராமன் - காதல் வந்திரிச்சி..



No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...