2010-01-22

பொங்கல் செய்வது எப்புடி.. டமிள் பொங்கள்..!

பொங்கல முடிஞ்சு ஒரு வாரமாகிட்டு. என்னடா இவன் இப்போ பொங்கல் பற்றி சொல்லுறானே .. ஆமா.. நமீதா பொங்கல் ..
சன் டிவி நடத்திய எப்படி பொங்கல் செய்வது நிகழ்ச்சியில் நமீதா கண்ணுக்கு பொங்கல் செய்து காட்டி குடுத்தார்கள் ..

நமீதா ரசிகர்கள் அம்மணி ஓரளவுக்கு முழு ஆடையில் வந்து இருந்ததால் பொங்கல் தினம் ............ தினமா கொண்டாடினதாக சொல்லப்படுகின்றது.

நமீதாவுக்கு பொங்கலென்றால் என்ன ? என்றுகேட்க .டமக்கு என்று வந்த பதில் சாப்பிட தானே.. ..சபாஷ் ... :)


இப்படி எல்லாம் அறிவு படைத்த நமீதா தான் பொங்கல் விருந்தாளி ?? பொங்கலின் வரலாறு கூட தெரியாது. பொங்கல் ஆறு கோடி தமிழர்களின் பெரும் விழா . தமிழ் புத்தாண்டு. தமிழில் கதைக்க தெரிந்த ஒருவரை கூட்ட்டிடு வந்து பொங்கல் விழாவை செய்து இருக்கலாம் .முந்தி எல்லாம் யாரவது ஒரு தமிழ் நடிகர் / நடிகை வீட்டுக்கு சென்று அங்கே நடக்கும் பொங்கல் நிகழ்ச்சியை தான் ஒளி பரப்பி வந்தார்கள். இப்போது இவர்கள் சொல்லி கொள்வது தமிழ் வளர்ப்போம் என்று அரசியலுக்கு மட்டும் .. செய்வது முழுக்க கேவலமான செயல்கள்.
உலகிலே இருக்க கூடிய மகா கொடுமை இந்த நிகழ்சிகளை நம்மவர்கள் நாக்கை தொங்க போட்டு கொண்டு பார்ப்பதுதான். :)

பொங்கலில் சேர்ப்பதற்கு diet ghee இல்லையா என்ற நமீதாவின் கேள்வியில் அதிர்ந்து போனார் சமையல் காரர் . மயக்கம் போடாத குறையாக அப்படி ஒன்றை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறி ஒருவழியாகச் சமாளித்தார்.
சமைக்க வந்தவர் பொங்கல் பற்றி தானே கதைக்கனும். அவரும் நமீதாவின் உடல் பராமரிப்பு , என்ன இது போடு வீங்க, எப்படிபோடுவீங்க என்று தான் கேட்டு கொண்டு இருப்பார்..


பொங்கலுக்கு ஒரு பெயர் வைச்சாங்க பாரு : "பொங்கல் மச்சான் பொங்கல்", நான் நினைக்கிறன் இப்ப இந்த menu வும் இந்தியாவில் உணவகங்களில் வந்து இருக்கும் என்று நினைக்கிறன்.. எங்க நிலவரம் இப்பிடி ..

விளம்பர இடை வேளை ஆரம்பம்

நண்பன் சொன்னது , நமீதா அடுத்த முறை சிக்கென் செய்வது எப்படி நிகழ்ச்சியில் வந்தால் , நமீதா சிக்கென் என்று பெயரும் வைச்சு ஒரு மெனு வந்தாலும் வரும்.. சாமியுங்கோ .. :) இது மட்டுமா.. நமீதா பாயாசம்.. நமீதா வடை எல்லாமே வந்தாலும் வரும்...

விளம்பர இடை வேளை முடிவு

ஒருவழியாகப் பொங்கல் வைத்து முடித்தவுடன் அதை ஸ்பூனில் எடுத்து அனைவரும் சியர்ஸ் சொல்லிச் சாப்பிட்டார்கள். என்ன கொடுமை என்ன இது கள்ளு கொட்டிலா அல்லது music பார் ஆ ?? சியர்ஸ் சொல்ல??நிகழ்ச்சியின் முடிவில் தன்னைத் திருமணம் செய்துகொள்ள propose செய்யுமாறு தமிழ்நாட்டின் அனைத்து இளைஞர்களுக்கும் நமீதா விடுத்த அழைப்பு இருக்கே .. இதனால் உங்க கன பேருக்கு தபால் சிலவு வந்து இருக்கும். இப்படி எல்லாம் நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள் என்ன கொடுமை.. :)

குறிப்பு: பொங்கல் மச்சான் பொங்கல் எல்லாரையும் ட்ரை பண்ண சொல்லி இருக்காங்க..

நமீதா வாழ்க! டமிள் பொங்கல் வாழ்க! .. டமிள் வாழ்க ..!

ஒம்க்ரீம் நமீதா நமக
நமீதா சரணம்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...