தமிழ் சினிமாவில் தோன்றி மறையும் நடிகைகள் தான் அதிகம் .. நயன்தாரா , அசின் , த்ரிஷா என்று பலர் .. வந்தாலும் .. தமன்னா வின் அறிமுகம் எங்களை போன்ற இளம் வாலிபர்களுக்கு புது விருந்து .
புதிய தமிழ் படங்கள் வரும் போது அப்பப்பவே பார்த்து விடுதல் வழமை.கல்லூரி என்னும் படம் வந்த போது, படத்தின் பெயரை பார்த்தாலே .. என்னமோ சரி இல்லை .. இந்த படம் இப்போ வேணாம் என்று பின் தள்ளி போட்டே விட்டேன். கேடி , வியாபாரி .. நடிகர்கள் பெயரால் பார்க்கவில்லை .. :(
கடந்த ஆண்டு ஒரு முறை ஜெர்மனி நண்பர்களின் வீட்டுக்கு சென்றிந்த போது, அங்கே ஐரோப்பிய சன் டிவியில் தான் உன் பார்வையில் ஓர் ஆயிரம் பாடல் ( நீங்கள் நினைக்கிற பாடல் இல்லை -)அதே விஜயகாந்த் படப்பாடலை
அம்மன் கோவில் கிழக்காலே:- ராதா- விஜயகாந்து
இங்கே தமன்னா என்னும் குடும்பப்பாங்கான ஒரு அழகி பாடுகிறாள். எனக்கு கடுப்பு ஆனது .. அந்த அழகான காட்சியில் அவள் ஒருத்தி பாடுறாள் ஒரு சாம்பிராணி எழும்பி போகுது.. வந்த கடுப்புக்கு பேசியே இருப்பன் ,.. கிட்ட இருந்து இருந்தால்..
அம்மன் கோவில் கிழக்காலே:- ராதா- விஜயகாந்து
இங்கே தமன்னா என்னும் குடும்பப்பாங்கான ஒரு அழகி பாடுகிறாள். எனக்கு கடுப்பு ஆனது .. அந்த அழகான காட்சியில் அவள் ஒருத்தி பாடுறாள் ஒரு சாம்பிராணி எழும்பி போகுது.. வந்த கடுப்புக்கு பேசியே இருப்பன் ,.. கிட்ட இருந்து இருந்தால்..
கல்லூரி படத்தில் - தமன்னா
அப்பவே ஒரு முடிவோட நண்பனிடம் சொன்னேன் மச்சான் இது யாரு : எங்கள் list இல இல்லாத நடிகை ; என்று சொல்ல நண்பனின் தங்கை உடனே , இந்த படம் தன்னிடம் DVD இல இருக்கு copy பண்ணுங்க,, என்றதும் ஒரே சந்தோசம்,, train இல் திரும்பி வரும் போது பார்த்திட்டு வரலாம் தானே. இரவு கடும் மழை, குளிர் வேற , Hamberg மாநிலத்தில் இருந்து எங்கள் வீட்டை நோக்கிய பயணத்தில் பார்க்க தொடங்கியாச்சு. படம் எவ்வளவு சரி இல்லையோ இந்த அழகியை பார்த்து விடல் வேண்டும் என்ற நோக்கில் முழுப்படமும் பார்ப்பதாக முடிவு.
எனக்கு முதலில அந்த பாட்டு கேட்கணும் என்று போட்டு forward பண்ணி பண்ணி கொண்டு வந்தால் இந்த பிடித்த பாட்டு மாட்டிச்சு:
நல்ல காட்சியமைப்பு .. இசை என்று பிடிச்சுபோச்சு.. மாறி மாறி இந்த பாட்டையே ஒரு ஐந்து ஆறு தரம் கேட்டு இருப்பன். :)
ஒரு அரை மனதோடு கேட்க வேண்டிய பாட்டையும் கேட்டேன். நல்ல வடிவா இருக்கே என்று ஒரு கலகலப்பு.. எதோ எனக்கு பார்த்த பொண்ணு மாதிரி ..:)
ஒரு அரை மனதோடு கேட்க வேண்டிய பாட்டையும் கேட்டேன். நல்ல வடிவா இருக்கே என்று ஒரு கலகலப்பு.. எதோ எனக்கு பார்த்த பொண்ணு மாதிரி ..:)
இதுக்கு மேலாக வந்த பாட்டு தான் : சரியா தவறா .. என்ன கொடுமை எனக்கு பிடித்த பாட்டு .. எப்புடி நான் miss பண்ணினேன் .. அவ்வளவு வருத்தத்தில் .. படம் பார்க்க வெளிக்கிட்டால் .. எனது laptop battery charge 15%. என்ன கொடுமை ராஜா இது .. என்று எனது ஆசனத்துக்கு எதிரே இருந்த அம்மணியிடம் அனுமதியுடன் இடம் மாறி அமர்ந்து கொண்டு( அவவுக்கு கிட்ட தான் plug இருந்திச்சு ) charge பண்ணின படி படம் பார்த்தேன். என்ன சரவணா இந்த படம் இந்த சோகத்தில் ... மனமே சரி இல்லை ..
இந்த காலத்தில் இப்படி ஒரு படத்தை எடுத்து சோகத்தில் முடிப்பார்கள் என்று யார்தான் எதிர்பார்த்தது. இன்றைய ரசிகர்களுக்கு படம் நல்ல முடிவா இருக்கணும்.. இல்லாட்டி படம் கிட் இல்லை.. இது எப்புடி .. ஒரு நல்ல அழகான , குளிர்மையான நடிகையின் எதிர்காலத்தை வீனாக்கிடுவான்களோ என்று புலம்பல்.. :(
ஒரு மாதிரி அதிகாலை வீடு வந்தாச்சு.. உடனே தமன்னா என்று இணையம் முழுக்க தேடு தேடி .. அந்த நடிகை விவரம் , என்ன படம் எல்லாம் நடிச்சது .. என்று எல்லாம் ,, ஒரே தகவல் எடுத்தாச்சு.. இனி என்ன அவ்வளவு படத்தையும் இறக்கி பார்க்கிறது தானே..
இப்படி எனது மனதுக்குள் புகுந்த பிடித்த நடிகையின் படிக்காதவன் படம் நெதர்லாந்தில் வெளியிடபட்டது. அப்போது நான் எப்புடியும் போய் டிகேட் வாங்கி முன்னுக்கு இருந்து( balcony இல் ) பார்க்கணும் என்று முடிவோட. இருந்தாச்சு. அன்று எதோ விடுமுறை நாள். அதால் சனமும் வரவில்லை. 400 பேர் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் இருபது பேர்.. அளவில்.. எனக்கு எதோ VIP show போட்ட மாதிரி ஒரு கற்பனை .. எப்படா தமன்னா வருவாள் என்று இருக்க வந்தாள் பாருங்க .. என்னை மறந்து விசில் அடிச்சாச்சு.. :) அப்படி ஒரு ஆரவாரம்..
இந்த பாட்டு முழுக்க அடிச்ச விசில்.. நினைக்க ஏலாது.. :)
தனுஷ் பற்றி கவலை இல்லை , தமன்னா வரும் காட்சி எல்லாமே , ரசிச்சு பார்த்தேன்,.. என்னமோ தெரியல பிடிச்சு போச்சு.. :)
பி கு : இப்போ எல்லா dvd யும் இருக்கு :)
தனுஷ் பற்றி கவலை இல்லை , தமன்னா வரும் காட்சி எல்லாமே , ரசிச்சு பார்த்தேன்,.. என்னமோ தெரியல பிடிச்சு போச்சு.. :)
பி கு : இப்போ எல்லா dvd யும் இருக்கு :)
ஒரு மாதிரி தமன்னா ரசிகனாக மாறியாச்சு.. :) பதிவுலகத்தில் பலர் தமன்னாவை புகழ்ந்து கட்டியும் ஒரு சிலர் தாழ்த்தியும் எழுதி இருந்தனர், தாழ்த்தி எழுதியோருக்கு இட்ட பின்னூட்டங்கள் .. எனக்கு மறக்க முடியாது ....இப்பவும் ஞாபகம் இருக்கு.. எனது நண்பர் ஒருத்தர் வாங்கின அறுவை ..
அப்பா அம்மா விளையாட்டு .. - படிக்காதவன்
நேற்று இன்று நாளை படபிடிப்பு பற்றி தமன்னா கூறியவை :
ஒரு செய்திக்குறிப்பில் வாசித்து மகிழ்ந்தது "அசின், த்ரிஷா உள்ளிட்ட கதாநாயகிகள் வேறு மொழிப்படங்களே கதியென்று கிளம்பி போய் விட்டதாலும், நயன்தாரா பிரபுதேவா காதல் வலையில் இருந்து இன்னும் மீளாததாலும் தமிழ் சினிமா இளம் ஹீரோக்களின் சாய்ஸ் தமன்னாவாகத் தான் இருக்கிறது." "தம்மனாவின் காட்டில் காசுமழை..."
எனக்கு இந்த படம் ( நேற்று இன்று நாளை ) அவ்வளவு பிடிக்காமல் இருந்தாலும் பின்னால் வந்த சூப்பர் கிட் சூர்யாவின் அயன் ..யாவ் .. என்ன கொடுமை .. ஐந்து தடவைகள் பார்த்தேன்.. இறுதியாக இலங்கையில் நின்ற போதும் பார்த்தேன்.. :) இப்பவும் எப்பவும் பார்க்கலாம்.. ஒரு romance படம் ... நல்ல நடிப்பு .. கவர்ச்சி .. இளமையான சிறு பிள்ளைத்தனமான .. நடிப்பு நல்லாவே இருந்திச்சு..
விழி மூடி யோசித்தால் ..
நெஞ்சே .. நெஞ்சே..
Oyaayiye Yaayiye
கல்லில் ஆடும்-- ஆனந்த தாண்டவம்
ஆனந்த தாண்டவம்: மதுமிதாவாய் தமன்னா.. படம் பற்றி பிழையான கருத்துக்கள் .. இருந்தாலும் பாடல்கள் எனக்கு பிடிக்கும். படமா முக்கியம் .. தமன்னா தானே முக்கியம்.. :)
கண்டேன் காதலை-வெகுநாட்கள் கழித்து தமிழில் கச்சிதமான ஒரு குடும்பப்படம்.
கண்டேன் காதலை - ஒரு நாள் இரவில் -- என்ன பாடல் ... போட்டுட்டு ஆடிட்டே இருக்கலாம் .. என்ன இசை
ஒரு பதிவில் நான் வாசித்த சுவாரஸ்யமான எழுத்துக்கள் "சில ஃபிகர்களை பார்த்ததுமே உள்ளங்காலில் முத்தமிட வேண்டும் என்று எனக்கு தோன்றும். உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? ‘கண்டேன் காதலை’ தமன்னாவைப் பார்த்ததுமே இவ்வுணர்வு தோன்றுகிறது." என்னை போல இன்னொரு தீவிர ரசிகன் இருக்கான் என்று சொல்லலாம் ..
நக்கீரனில் இருந்து :’’தினத்தந்தி குருவியார் பதிலில் தமன்னா இடுப்பில் கிள்ளினால் என்னவாகும்? என்று கேட்டு இருக்கிறார். அதற்கு பதில், ``அந்த இடம் சிவப்பாகி விடும்'' என்று இருந்தது. எந்தஇடம் என்று குருவியார்சொல்லவில்லை. தமன்னாவின் இடுப்பாஅல்லது கிள்ளியவரின் கன்னமா? என்று தெரியவில்லை.
வியாபாரி படத்தில் வந்த ஜூலை மாதத்தில் பாடலும் கொஞ்சம் அளவான கவர்ச்சி தான்:கண்டேன் காதலை - ஒரு நாள் இரவில் -- என்ன பாடல் ... போட்டுட்டு ஆடிட்டே இருக்கலாம் .. என்ன இசை
ஒரு பதிவில் நான் வாசித்த சுவாரஸ்யமான எழுத்துக்கள் "சில ஃபிகர்களை பார்த்ததுமே உள்ளங்காலில் முத்தமிட வேண்டும் என்று எனக்கு தோன்றும். உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? ‘கண்டேன் காதலை’ தமன்னாவைப் பார்த்ததுமே இவ்வுணர்வு தோன்றுகிறது." என்னை போல இன்னொரு தீவிர ரசிகன் இருக்கான் என்று சொல்லலாம் ..
நக்கீரனில் இருந்து :’’தினத்தந்தி குருவியார் பதிலில் தமன்னா இடுப்பில் கிள்ளினால் என்னவாகும்? என்று கேட்டு இருக்கிறார். அதற்கு பதில், ``அந்த இடம் சிவப்பாகி விடும்'' என்று இருந்தது. எந்தஇடம் என்று குருவியார்சொல்லவில்லை. தமன்னாவின் இடுப்பாஅல்லது கிள்ளியவரின் கன்னமா? என்று தெரியவில்லை.
இது எல்லாம் போகட்டும் வர இருக்கும் கார்த்தியின் ( சூர்யாவின் தம்பி ) பையா பாடல்களும் சுப்பரா இருக்கு .. http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.12319/
பொங்கலுக்கு வரட்டும் ஒரு கை பார்ப்போம் என்று இருக்கேன் ...:)
பொங்கலுக்கு வரட்டும் ஒரு கை பார்ப்போம் என்று இருக்கேன் ...:)
இப்படியாக தான் எனது விருப்புக்குரிய நடிகையாக தமன்னா வின் வருகை .. இடம்பெற்றது .. உங்களுக்கும் தமன்னாவை பிடிக்கும் நாள் வெகு தூரம் இல்லை .. :)
PS: விஜயின் ஐம்பதாவது படத்தில் தமன்னா என்று சொல்லபடுகின்றது.. இதுக்கு நான் எந்தவிதமான கருத்துக்களும் கூற விரும்ப வில்லை . படம் கட்டாயம் பார்ப்பேன் .. கடைசி தமன்னாவுக்காக வேண்டி....
நண்பர் ஒருவரின் கனவில் இப்படி தானாம் மந்திரம் வருது :-
நயநமே ஸ்வாகா
ஓம் க்ரீம் அசின் னாய நமக
ஓம் க்ரீம் தமனாவாக
ஓம் க்ரீம் ஸ்ரேயவாக
ஓம் க்ரீம் நமீ தேவதா நமக
நயநமே ஸ்வாகா!!!
ஓம் க்ரீம் அசின் னாய நமக
ஓம் க்ரீம் தமனாவாக
ஓம் க்ரீம் ஸ்ரேயவாக
ஓம் க்ரீம் நமீ தேவதா நமக
நயநமே ஸ்வாகா!!!
2 comments:
//தமன்னா வின் அறிமுகம் எங்களை போன்ற இளம் வாலிபர்களுக்கு புது விருந்து .//
ஐயோ ஐயோ!!!
K.Guruparan said...
ஐயோ ஐயோ!!!///
ha ha ha h aha..
உண்மையை சொன்னேன் .. என்ன 3G ( இப்போ எல்லாமே G இல் தானே சொல்லுறது ) வயசு இளம் வாலிப வயசு தானே !!
Post a Comment