2009-11-19

மறக்க முடியாத " பாபா " படம் பார்த்த அனுபவம் ..

தெரிஞ்சது கையளவு தெரியாதது உலகளவு.
அப்போது நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடம் முடியும் வேளை. பல்கலை வாழ்க்கையை ரொம்பவே ரசித்திட்டு இருந்த காலம். போடுற படங்கள், நிகழ்ச்சிகள், ஒன்று கூடல்கள், உள்ளூர் பிரயாணங்கள் என்று மிகவும் களை கட்டி கொண்டு இருந்த நேரம் தான் இந்த துன்பியல் சம்பவம் இடம் பெற்றது.

ஏற்கனவே பல்கலை மட்டத்தில் தமிழ் மாணவர்களுக்கு இடையில் ஓரளவுக்கு என்னை தெரிந்து இருந்தாலும் ; குறிப்பாக நான் ரஜனி ரசிகன் மன்னிக்கவும் "தீவிர ரசிகன்" என்று சொல்லும் அளவுக்கு தெரிந்து இருக்கவில்லை.

என்னுடைய நண்பர்களுக்கு தெரியும். அடிக்கடி ரஜனி பஞ்ச் வைத்து கதைத்தல், ரஜனி போஸ்டர்களை எல்லாம் அறையில் ஒட்டி வைத்து இருத்தல்( வீட்டில் இப்பவும் அண்ணாமலை , தளபதி , பாஷா ,சிவாஜி போஸ்டர்கள் சுவருடன் பதிக்கபட்டுள்ளது). அப்படி ஒரு ரசிகன். அடிக்கடி ரஜனி படங்களை பார்ப்பதும் பாடல்களை தான் கேட்பதாலும் எனது அறை நண்பர்கள் என்னில் அப்படி ஒரு வெறுப்பு. ஏதும் கதைத்தால் ரஜனி ஸ்டைலில் சொல்லி கலாயித்து விடுதல் வழமையான ஒன்று என்பதால் காலப்போக்கில் அவர்களே கண்டு கொள்ளுற இல்லை. இதை விட ரஜனி ரசிகன் என்பதிற்கு introduction தேவை இல்லை:)
அவரது பிறந்த தினத்தில் நாங்கள் ( என்னுடன் இன்னும் தீவிரமான மூன்று பேர் இருக்காங்கள்) ஏழைகளுக்கு உணவு கொடுத்து உதவுதல் வழமை. இது கடந்த எட்டு ஒன்பது வருடங்களாக நடக்கும் உண்மை.

நீண்ட நாட்கள் படங்கள் ஏதும் நடிக்காமையால் நாங்களும் வருத்தம் தான். இப்படியாக இருக்கும் போது தான் பாபா படம் எடுக்கபோறதாக வெளியில கதை பரவவே ..எனக்கு வீட்டில் இணைய வசதி(வார இறுதி நாட்களில் ); ஏற்கனவே பல்கலையில் கணணி விஷேட துறை அதால இரவு எட்டு மணி வரை எங்களுக்கு என்று விசேடமாக ஒதுக்கபட்ட lab இல் இருந்து தேடுதல் வேட்டை தான். அப்பப்போ வரும் செய்திகளை நண்பர்களுக்கு SMS, ஈமெயில் ஓடு நிண்டு விடாமல் எங்கள் தீவிர ரசிகர்களுக்கு call பண்ணி கூட சொன்னதுண்டு. அவர்கள் கூட சில வேலைகளில் call பண்ணி எனக்கு தகவல் சொல்லி இருக்கார்கள்.அப்படி ஒரு நெட்வொர்க்.
இப்பவும் இயந்திரன் பற்றி கதைத்து கொண்டு தான் இருக்கோம்.தமிழ் நாடு தமிழ் நாடு என் உயிர் நாடு


பாபா இசைத்தட்டு வந்தவுடன் ஓடி திரிந்து ஒரு மாதிரி இணையத்தில் கேட்டும் பிறகு எனது வால்க்மேன் இனுள் எப்பவும் பாட்டை கேட்க ஆரம்பிக்கும் போது அதுவே முதல் பாடலாக வரும் அளவுக்கு செய்தும் வைத்து கொண்டு தான் இருந்தது. அப்படி ஒரு அவா.
பாடல்கள்களில் அப்பவே ஷக்தி கொடு பாடல் கேட்டதும் என்னமோ எல்லாம் ஆகிடுவேன். இதை விட தனியார் வானொலிகள் கூட உதாரணமாக ஷக்தி சூரியன் இரண்டுமே அடிக்கடி அந்த பாடலின் அந்த பகுதியை போட்டிக்கு ஒலி பரப்பி ரசிகர்களிடையே பாட்டை பிர பல்யப்படுதியது வரலாறு.இப்படி எல்லாம் ஆராவரத்தில் இருக்கும் போது தான்.. படமும் வெளியாகும் திகதி அறிவிக்கபட்டது. எனக்கு முதல் ஷோ பார்ப்பதில் எந்தவித பிரச்னையும் இருக்காது என்பது எங்கள் கூட்டத்துக்கே தெரியும். ஏனெனில் ஒரு காலத்தில் நானும் திரைப்படங்களை தருவித்தவனே, ( பல்கலைக்கழகத்தில் உள்ள சங்கங்கள் அடிக்கடி ரீல்ஸ் படங்கள் போடும் போது அடிக்கடி என்னாலான உதவிகள் செய்து இருக்கின்றேன்).இது எப்புடி என்று கேட்க கூடாது ; எல்லாம் அரசியல் தான். படையப்பா , பாஷா , அருணாச்சலம், முத்து, தளபதி,அண்ணாமலை எல்லாமே என்னால் , எனது பீடம் நடத்தும் வருடாந்த தமிழ் தின நிகழ்ச்சிகள் தொடக்கம் பல்கலை சங்கங்களுக்கு வருவித்து காட்டபட்ட ரஜனி படங்கள்.இதை விட குஷி, காதலுக்கு மரியாதை, friends, இந்தியன் ,தெனாலி , பஞ்சதந்திரம் , காசி,ஆளவந்தான்,துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே ,ஆனந்த பூங்காற்றே ,Kutch Kuth Kotakai, என்று ஒரு நீண்ட பட்டியல். ...கூட பழகிய என் நண்பர்களுக்கு தெரிந்து இருக்கும் என்ன என்ன படங்கள் என்று.
அது ஒரு காலம். இப்படி எல்லாம் தருவிக்கும் அளவுக்கு எனக்கு வேண்டியவர்கள் இருந்ததால் செய்தேன். அவர்கள் உதவி என்றுமே மறக்க முடியாது. அவர்களின் உதவியால் காட்சி படுத்த முடிந்தது.

அவர்களின் உதவியால் எனக்கு ஐந்து டிக்கெட்கள் எடுத்தாச்சு பாபா பார்க்க.அடுத்த நாள் படம் வருது கொன்கோர்ட் இக்கு.முதல் நாள் மாலையில் கூட ஒரு பதற்றம் வெளியிடுவார்களா என்று. தமிழ் நாட்டில் அரசியல் இல் மாற்றம் வரும் என்று சொல்ல போறதா ஒரு கதையை கட்டி விட்டு ராமதாஸ் ஐயா தனது ஆட்களுடன் எதிர் பேரணிகள். ஜெயா அம்மா புகைத்தால் பிடித்து உள்ளுக்கே போட்டுடுவேன் என்று புலம்பல் , இத்தனையையும் தலை என்னென்று சமாளிக்க போகுதோ என்று எங்களுக்கு வியப்பு. எங்களுக்கு தெரியும் தலை பாஷா ஸ்டைலில் அல்லது அண்ணாமலை ஸ்டைலில் எதாவது ஒரு வழி பண்ணும் என்று. எங்களுக்கு என்ன கொழும்பில் யார்தான் ரஜனிக்கு எதிரா கொடி பிடிப்பாங்க. படம் ஓடும் என்று தெரியும்.

அதிகாலை திட்ட மிட்ட படி நான் , இன்னும் இரு தீவிர ரஜனி ரசிகர்கள் ஆன இயந்திரவியல் பீட அண்ணன் மார்கள்( ஒருவர் தற்போது கொழும்பில் SLT il வேலை செய்கின்றார், அடுத்தவர் நியூயார்க் இல் வேலை செய்யும் செல்லமான அண்ணாவும் - இருவருமே யாழ் இந்துவின் மைந்தர்கள் ) ; மூவரும் மாத்தறை நோக்கி புறப்படும் புகை வண்டியில் அதிகாலை 5 :00 மணிக்கு பயணம் ஆரம்பம். எங்களுக்குள் ஏதோ பொண்ணு பார்க்க போற மாதிரி த்ரில். காலை 8:30 மணி கொழும்பில் தரை இறக்கம். நேரவே எங்கள் வீட்டில் காலை உணவு. சரியாக பத்து மணி கொன்கோர்ட் வாசலில் ஆஜர். சனமோ சனம். ஆட்டோ காரன் தொடக்கம் high லெவல் வரை , ஒரு புறம் முட்டியடிக்கும் ரசிகர்கள் ,மறுபுறம் கொன்கோர்ட் வாசலில் விஷேட பாதுகாப்பு. எங்களுக்கு வாசலுக்கு சென்று எங்கள் அடையாளங்களை சொல்லவே நேரம் சரியா வந்துட்டுது. ஒரு மாதிரி உள்ளே போனால் எல்லாரும் விசில் அடிகிறாங்கள். Ginger பீரும் கடலயும் வாங்கி கொண்டு பலகணி இல் இருந்தால். அங்கே கொழும்பில் இப்போ பிரபல்யாமாகி கொண்டு இருக்கும் கட்டிட கட்டுனர் இவரும் பேராதனை தான் , எங்கள் நண்பர் தான் - இந்துவின் மைந்தன் தான் வருகை தந்தார். எல்லாருமாக ஒரு மாதிரி இருந்து ஆயத்தம்.ஒரு மணி நேரம் பிந்தி படம் ஆரம்பம்; வழமை போல் வரும் ரஜனியின் சூப்பர் ஸ்டார் sound ஏ கேட்கவில்லை. அடிச்சாங்கள் பாருங்க விசில் கூ .. இன்றைக்கும் ஞாபகம் இருக்கு எங்களுக்கு முன் இருந்த ஒரு வயதான மனிதர் எழும்பி விசில் அடிச்சது. எனக்கு திரையே தெரியவில்லை அந்த அளவுக்கு எல்லாரும் எழும்பி நின்று என்னமோ ரஜனி கீழே நிக்குறாரு என்ற மாதிரி ஆரவாரம்.


Blaze in அறிமுகம் இதில் தான் என்று நம்புகிறேன்( பிழை என்றால் திருத்தி விடவும்)


திப்பு திப்பு குமாரா பாடலில் வாழ்கை ஒரு சினிமா என்று அழகாக சொல்லி இருக்கார் :)

ரஜனி வரும் போது கான்கார்ட் அதிர்ந்தது.. இது மாதிரி பிறகு சிவாஜி பார்க்கும் போது தான் அதிர்ந்தது என்று சொல்லுவன். கேட்க வேணாம் இடைக்க படமே பார்க்கவில்லையா என்று. பல படம் பார்த்தேன் 2nd ஷோ கூட பார்த்து இருக்கேன். அப்படி ஒரு அதிர்வு இல்லை.படமும் ஆரம்பிச்சிட்டு .. ஓட்டிடு இருக்கு .........சுரேஷ் கண்ணா மீண்டும் ஒரு பாஷா எடுப்பார் என்ற கனவு மெல்ல மெல்ல தகர தொடங்கியது. எங்களுக்குள் ரசனை இருந்தாலும் படம் பட்டம் விடுமளவுக்கு வந்துடுத்தே என்று ஒரு கவலை. இருந்தாலும் இடை வேளை வரை விசிலும் கூவுமாக இருந்தது. பிறகு என்னடா எல்லாரும் எழும்பி போகலை என்று படையப்பா வேஷத்தில் ரஜனி வரும் போது மகா ரசிகர்கள் அடிச்ச விசிலில் உறுதி செய்து கொண்டேன்:)படத்தில் ஒரு கட்டத்தில் கடவுள் இல்லையே என்று சொன்ன ரஜனி பிறகு கடவுள் இல்லை ஏதோ ஷக்தி இருக்கு என்று ஏற்று கொள்வதும் படத்தின் உள்கருத்து போல கிடந்திச்சு.


அதிர வைத்த காட்சிகளில் இதுவும் ஒன்று


என்னடா வேற ஏதோ படத்தின் ஒரு பகுதியை கொண்டு வந்து போட்டுடான்களோ என்று கூட தோன்றிச்சு. அப்படி இல்லை என்று சொல்லும் அளவுக்கு இடைக்கிடை ரஜனியின் பஞ்ச், action இருக்கும், அதுவே எங்களுக்கு ஒரு விசில் அடிக்க சொல்லும். ஒரு மணி நேரம் கொஞ்சம் சோர்வாக இருந்தாலும் இறுதி மணித்தியாலம் எப்படி போனதென்றே தெரியாது, அந்த அளவுக்கு மீண்டும் விசில், கூ, அதுவும் ஷக்தி கொடு காட்சி,பாடல்கள் எல்லாமே ஒரே பரபரப்பு.. ரஜனி அரசியலுக்கு வருவாரா இல்லையா என்று.

"உப்பிட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் .வாழ்ந்தாலும் இங்கேதான் ஓடி விட மாட்டேன்" "கட்சிகள் பதவிகளை நான் விரும்ப மாட்டேன் காலத்தின் கட்டளையை நான் மறக்க மாட்டேன்" என்று சொன்னது ஓரளவுக்கு ரஜனி தமிழக அரசியலில் கால் வைப்பார் என்று இருந்தாலும், என்னும் வைக்க வில்லை. என்னை பொறுத்த வரை ,அவர் வைக்க மாட்டார். மேலும் ஈழ தமிழர்கள் இக்கு கூட குரல் கொடுத்தவர்.
நம் நடை கண்டு அகங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசை யாவும் பயந்தோட வேண்டும் .
..
தீமைக்கும் கொடுமைக்கும் தீ வைக்க சக்தி கொடு
வறுமைக்கு பிறந்தவரை வாழ்விக்க சக்தி கொடு

முடிவெடுத்த பின்னால் நான் தடம்மாற மாட்டேன்
முன்வைத்த காலை நான் பின்வைக்க மாட்டேன்
...
எனை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன்
ஏணியாய் நானிருந்து ஏமாற மாட்டேன் !!!
...

"உப்பிட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் .
வாழ்ந்தாலும் இங்கேதான் ஓடி விட மாட்டேன்"
கட்சிகள் பதவிகளை நான் விரும்ப மாட்டேன்
காலத்தின் கட்டளையை நான் மறக்க மாட்டேன்

சக்தி கொடு இந்த பாடலுடன் வரும் காட்சி ஒரு த்ரில் தான்!!

ரகுமான் நன்றே இசை அமைத்திருக்கார் என்று பாடல்களை கேட்கும் போதே தெரியும்.. சண்டை காட்சிகளில் கூட திரையரங்கு அதிறும் விதத்தில் இசைந்திருக்கார்.
make up ai ரஜனி மறந்திட்டார் என்று விமர்சனங்கள் இருந்தாலும். இப்போ அதை எல்லாம் அலச தேவை இல்லை


எல்லாமே மாயா சாயா:)

ஒருமாதிரி விறு விறுப்புடன் படம் பார்த்து முடிஞ்சாச்சு.உண்மையாவே ரஜனியின் பிழையா இல்லை இயக்குனர் பிழையா என்று எல்லாம் எங்களுக்குள் குமுறல்.

தீவிர ரசிகனான நான் வெளிய வரும் போது முகமே இருட்டின மாதிரி இருந்திச்சு,. சீ இவ்வளவு பின்னடைவு ஏனிந்த படத்திற்கு.. என்னமா மாதிரி படம் எடுத்து இருக்கலாம் அவசரப்பட்டு போட்டார் போல என்று எங்களுக்குள் ஒரே discussion.

"தெரிஞ்சது கையளவு தெரியாதது உலகளவு "என்றுதானே சொல்லிட்டாரு பிறகென்ன கனக்கவே மிஸ் பண்ணுறாரு என்று சொல்லி இருக்காரு என்று நாங்களே தீர்மானம் எடுத்தபடி( விழுந்தும் மீசையில் மண் பிரளவில்லை மாதிரி)வீடு நோக்கி பயணம்.

இதுக்கிடையில் நாங்கள் பாபா படம் முதல் ஷோ பார்க்க வந்த கதை பரவீற்று. திரும்பி இரவு பல்கலைக்கழகம் சென்றதும் ஒரே ஆரவாரம். மற்றவர்கள் போல் இல்லாமல் உடனேயே சொல்லிட்டம் படம் பெரிசா வாய்ப்பு இல்லை என்று.மும்மூர்த்திகளும் ஒரே மாதிரி அறிக்கை விட்டதால், அதை எல்லாருமே ஏற்று கொண்டார்கள்."நாங்கள் தீவிர ரசிகர்கள் பாபா படம் தோல்வியில் செல்லும்" என்று நாங்களே வரிந்து கட்டி சொன்னது கூட எங்களுக்கு பெருமையை பெற்று தந்தது.

அந்த வாரம் தான் வலிகாமம் ஒன்று கூடல், இந்துவின் ஒன்று கூடல் என்று அடுத்தடுத்து வந்தது. அதில் மும்மூர்த்திகளையும் எழுப்பி வைத்து போட்டு அறு அறு என்று அழாத குறையா வாங்கி வித்தே போட்டார்கள், நாங்களும் இல்லாத பொல்லாத எல்லாம் சொல்லி கலாயித்து கொண்டே இருந்த ஞாபகங்கள் இருக்கு.

போற வாற இடம் எல்லாம் எனக்கு நோட்டீஸ் அடிச்ச மாதிரி நீங்களே அந்த பாபா படம் போய் பார்த்தனியல் என்று சொல்லி கேட்டு நையாண்டி செய்தளவுக்கு பிரபல்யமாக்கி விட்டது ரஜனியின் பாபா.

அதே படத்தை நாங்கள் மூவருமாக ஓரிரு தடவைகள் கொழும்பில் மன நிறைவுக்காக பார்த்து மகிழ்ந்த வரலாறும் உண்டு.

பாபா வை ரஜனி தயாரித்து இருந்தததால் படமும் ஓடாததால் நல்ல மனம் கொண்ட ரஜனி ( அரசியல் நோக்காக இருந்து இருக்கலாம் - விமர்சனங்களும் காரணம் - தியட்டர்) உரிமையாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்து வரலாற்றில் இடம் பிடித்து கொண்டது இங்க கவனிக்க வேண்டியது ஒன்று . இப்போ இருக்கும் நடிகர்களில் யாரவது அப்படி செய்தார்கள் என்று எனக்கு தெரிந்த அளவில் இல்லை.

அதுவும் மூன்றெழுத்து குஷியமான நடிகரின் மலேசியா போய் வந்த படத்தை போட்டுட்டு தியட்டர் உரிமையாளரும் அவர் சொந்தங்களும் இலவச இணைப்பு மாதிரி இலவச காட்சி நடத்தி நாட்களை ஒட்டியதாக கோடம்பாக்கம் தகவல்கள் சொல்கின்றது.
இதை பத்து முறை பார்த்து எங்களை எல்லாம் வியப்பில் ஆழ்த்திய அவரது ரசிகர்கள் இருக்கார்கள்.


கதம் கதம் :முடிஞ்சது முடிஞ்சு போட்டு

என்ன இருந்தாலும் தோல்விகளே வெற்றியின் முதல்படி ; தொடர்ந்து வந்த சந்திரமுகி , சிவாஜி எல்லாமே அதிரும் படி செய்திருகின்றன. ரஜனி கௌரவ படமான குசேலன் அவ்வளவு வெற்றியை தராத போதும், வர இருக்கும் இயந்திரன் தூள் பறக்க வைக்கும் என்பதில் ஐயம்இல்லை.

தனியார் வானொலியில் வேலை செய்யும் பிரபல்யமான வானொலி அறிவிப்பாளரை கடந்த முறை கொழும்பில் சந்தித்த போது அவர் சொன்ன கதை ஞாபகம் இருக்கு " அவர் தம்பியார் இப்பவும் ரஜனியின் பாபா தோல்வி இல்லை என்றே சொல்லுவாராம்" எங்களை போல இன்னுமொருவன் இருக்கான் என்ற பிரமிதம் அன்றே அடைந்தேன்.


மீண்டும் இன்னுமொரு ரஜனியின் பட அனுபவத்தில் சந்திக்கும் வரை ..நான் ரஜனியின் பெரும்பாலான படங்களை பார்த்தது மட்டும் இல்லை , என்னுடன் DVD இல் வைத்து இருக்கேன். ஏறத்தாள 150 படங்களின் ஒரிஜினல் DVD என்னிடம் இருக்கு. தேவை ஏற்படின் போட்டு பார்த்து ரசிப்பேன். :)


ரஜனியின் பெயரை வைத்து உழைக்கும் ஒரு சின்ன விளம்பரம் :

3 comments:

K.Guruparan said...

ம்
நல்லா மினக்கெட்டு இருக்கிறியள்.
நான் இந்த தொகுப்பை சொன்னன்

தர்ஷன் said...

நான் இதைப் பார்த்தது arena (கடுகஷ்தொட்ட ) வில். படம் பார்த்து முடிந்ததும் சங்கடமாய் இருந்தது. ரெண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் போய் பார்த்தேன். அப்போது நன்றாய் இருப்பதாய்த்தான் பட்டது. இப்பவும் அவ்வப்போது DVD இல்பார்ப்பதுண்டு.

ப்ரியானந்த சுவாமிகள் said...

நன்றி குரு ; அறுவடை என்றால் வரம்பில நிக்காமல் வயலுக்க இறங்கி வேலை செய்யுற ஆக்கள் தானே நாங்கள் அதுதான் கொஞ்சம் கூட மினக்கேட்டுட்டன்.

நன்றி தர்ஷன் : என்னை போல நீங்களும் ஒரு தீவிர ரசிகன் போல் ; நானும் மிகவும் வருத்தப்பட்டேன். உண்மை நானும் நண்பர்களுடன் arena il பார்த்தேன். எப்படியோ அந்த படத்தின் தோல்வியை பின்னால் சரி செய்து கொண்டார் என்பதை நினைத்து பெருமிதம் அடை கிறேன். இயந்திரனில் தூள் பறத்துவார் என்பதில் ஐயம்இல்லை

Related Posts Plugin for WordPress, Blogger...