2009-11-01

பிந்தி கொண்டு போகும் வேட்டை காரனும் .. பின்னால் பரவும் வதந்திகளும் கதைகளும்

ஒரு புறம் விஜையை மறு புறம் தயாரிப்பாளர் கலா நிதி மாறனையும் சேர்த்து வைச்சு ரௌண்டு கட்டி அடிக்கிறாங்கள்.. ஒரு முறை சொன்ன விஜய் ஜோக்ஸ் பின்னால (ஏற்கனவே அடிக்க திரியுறாங்கள் என்று கேள்வி ..) இருந்தாலும் என்னும் ஒரு பகுதி தரலாம் என்று இருக்கேன்.

வேட்டைக்காரன் படக்கதை:

பண்டிக் காய்ச்சல் நோயால விஜய்யோட குடும்பமே மாண்டு போகுது. அதுக்குப் பழிவாங்க விஜய் உலகத்தில உள்ள எல்லாப் பண்டிகளையும் வேட்டையாடுகிறார். கிளைமாக்ஸ்ல நூறு பண்டிகளை ஒரே நேரத்தில் ஒரே ஒரு பன்ச் டயலாக் சொல்லி கொல்ல முயற்சிக்கிறார். தொண்ணூற்று ஒன்பது பண்டிகள் உடனே செத்து விழ, மீதி ஒரு பண்டி மட்டும் செவிடு எண்டு கண்டு பிடிப்பதுதான் விஜயின் மதியூகம். அந்த ஒரு பண்டியையும் த்ரில்லா ஒரு டான்ஸ் ஆடி கொன்று விடுவது படத்தைப் பார்பவர்கட்கு நுனிக் குண்... இருக்க வைக்கிறது! ஆல் இன் ஆல் தியேட்டரில கதிரையே தேவைப் படாது! - நன்றி சனா ...

முக்கியம் : வெளியில சொல்லி போடாதிங்க அடுத்த படத்துக்கு கதையா எடுத்தாலும் எடுதிடுவான்கள். கவனம் :)
அடேங்க் கொய்யால வேட்டை காரனுக்கு பின்னால இவ்வளவு ரண களம் நடந்து இருக்கு ....இல்லைங்க இன்னும் இருக்கு .. கலாய்க்க..


1. மாறன் :நம்மளோட படம் 100நாள் ஓடனும்
விஜய்: இல்லை 200நாள் ஓடனும்
மாறன் :ஜோக் அடிக்காதிங்க சார்
விஜய்: ங்கொய்யால முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?


2.ரிப்போர்ட்டர் : சார் உங்களோட வேட்டைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்ட்டே இருக்குதே ஏன்?
விஜய் : சென்சார் போர்டு மெம்பர்ஸ் படத்த பாக்க பயப்படுறாங்க.


நன்றி loshan:)

3.முதல் பரிசு அடையார்ல பிளாட், ரெண்டாவது பரிசு கார்
போட்டி நடக்கும் இடம் சேப்பாக்கம் கிரவுண்டு.
தகுதி: எதையும் தாங்கும் இதயம்
போட்டி என்னன்னா விஜய் நடிச்ச குருவி படம் 10 முறை பாக்கனும்
போட்டியின் விதிகள் : படம் பாக்கும் போது வாந்தி எடுக்கக்கூடாது,அவர் என்ன பண்ணினாலும் திட்டாம படம் பாக்கனும்...முக்கியமா உயிரோட இருக்கனும்..

போட்டிக்கு வந்த ஒருத்தன்: கொய்யால ஒருக்கா பார்த்தே குடல் இல்லாமல் போற அளவுக்கு வாந்தி .. அப்புறம் ௰ தரமா .. ஐயோ அம்மாடி வேணாம்டா.. எஸ்கேப் ..


4.விஜய் அரசியலில் சேர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் தன்னுடைய முதல் பட்ஜெட்டைஎப்படி தயாரிப்பார்.
ஆந்திராவின் பட்ஜெட்டை ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுப்பார்( ரீமேக்)

5.விஜயின் அடுத்த 7 படங்கள்
வேட்டைக்காரன், சமையல்காரன், குடிகாரன்,பைத்தியக்காரன்,பிச்சைக்காரன்,குடுகுடுப்பைக்காரன்..
(கதை தெரிந்தோர் தொடர்பு கொள்ளவும்.. )


6 எமன் : நான் உன் உயிரை எடுக்க போகிறேன். உன் கடைசி ஆசை என்ன?.
விஜய்: நான் நடிச்ச வேட்டைக்கரன்படத்தை நீங்க பாக்கனும்.
எமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல பாத்தா நீ என்ன கொல்ல பாக்குறியே.......எஸ்கேப்

அம்மாடி இன்னொரு ,,,, காரனில் சந்திக்கும் வரை .. பாய்..........................................

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...