2009-11-29

ஞாயிறை பொழுது போக்கிய தொலைபேசி அழைப்புகள்
இதமான சனி இரவு களைத்து போய் நண்பனின் வீட்டில் இருந்து வந்து சேரும் போது அதிகாலை 1 மணி .... வீட்டை சுத்தம் செய்து போட்டு படுப்பம் என்று .. சொல்லி கொண்டு வந்த களைப்புக்கு தேநீர் அருந்த தண்ணியை கொதிக்க வைத்து கொண்டு இருக்கும் போது, கொழும்பில் இருந்து உற்ற நண்பனின் அழைப்பு; காதல் தோல்வி.. அதுதான் மைய்யக்கருத்து..( இதை சொல்லி முடிக்க ஒரு மணித்தியாலம் போட்டுது )பெண் பகுதி எனக்கு தெரிந்த பகுதி.. எனது உதவி .. தேவை.. எப்படியோ பேசி எதாவது செய்,, என்று .. அழுது புலம்பல் .... எனக்கு இருக்கிற களைப்பு எல்லாமே போயிட்டு .. !!! பேசுகிறேன் என்று சொல்லி அந்த பகுதிக்கு தொலைபேசியை அதிகாலையே ( 2 மணி ஐரோப்பிய நேரம்- இலங்கை நேரம் ஞாயிறு காலை 6:30 மணி ) முறுக்கினால் .... இன்றைய ஞாயிறு நாள் எப்புடி .. போயினது என்று தெரியாது அத்தனை தடவை .. கால் எடுத்தாச்சு.. .,. .. பெண்பகுதியினர் ஏமாற்றி விட்டனரா இல்லை ..பெண்ணுக்கு விருப்பம் இல்லையா.. என்று நான் அறிய இன்று மாலை நான்கு மணி..

நானறிந்த அளவில்..
ஒரு தலைக்காதல் , நான் படித்து ( 4 வருடங்கள் ) முடித்து விட்டு வருகிறேன் அதுவரை wait பண்ணுவியா என்று நண்பன் கேட்டதுக்கு அவள் மௌனமாய் இருந்தது, அதுக்கு பிறகு நண்பன் அவளுடன் பழகிய விதங்கள் என்று எல்லாம்.. அவனை அவளும் ஏற்று க் கொண்டு விட்டாள் என்று கடந்த நான்கு வருடமாக அவனது படிப்பை நன்றே செய்து முடித்து விட்டு வந்த போது அது அவ்வாறு இல்லை என்று .. புரிந்ததும்.. அவனது மனமும் உடைந்தது.. வாழ்வும் பாழாய் போனது என்று புலம்பல்.. ;

சரி பெண் பகுதியினரை ... ஒரு மாதிரி சமாளித்து கதைத்தால் .. சாத்திரம் பார்த்து "சரி" என்றால் திருமணம் செய்து வைக்க தயார் என்று .. சொன்னது கொஞ்சம் ஆறுதல் . அது நடக்காது.. என்று எனக்கு நன்றே தெரியும் . அவர்களுக்கும் தான் .செவ்வாய் குற்றம் தான் .. தடை செய்யுது.. என்று பெண் பகுதியினர் சொல்லி விட்டனர்.. அதால பேசாமல் வேறு பெண்ணை பார்க்கவும் என்று அறுத்து உறுத்து சொல்லி தொலைபேசியை வைத்து விட்டனர்.. எனக்கு கடைசியில் கதைக்க ஒரு chance கூட குடுக்கவில்லை.. :(

பெண்ணுக்கு விருப்பம் இல்லை என்று சொன்ன பிறகு .. என்னதான் செய்யலாம்.. பேசாம குடித்து கும்மாளம் போடாமல் வீரமாய் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டியது தானே.. என்று ஒரு உறுதியான ஆறுதல்கள் சொன்னதுதான் ...

ஒன்று போனால் இன்னொன்று .. இனியாவது .. காதலிக்கும் போது confirmation letter ஐயும் சேர்த்து வாங்குங்க பசங்களா.. இல்லாட்டிஇப்படித்தான் .. நடக்கும்..:)

சாத்திரம் உண்மையா .. கடவுள் இருக்காரா .. சாத்திரம் பார்த்து செய்த திருமணம் எல்லாம் சரியான திசையில் குடும்ப வாழ்கையை கொண்டு செல்கின்றனவா.. அல்லது காதல் திருமணங்கள் சரியான திசையில் குடும்ப வாழ்கையை கொண்டு செல்கின்றனவா?? இதுக்கெல்லாம் இருந்து யோசித்தால் ஒரு பெரிய சபையே வைக்கலாம்.. வேணாம் விடுங்க .. இந்த தலைப்புகளில் ஒன்றால் ..நானே நன்றே பாதிக்கப்பட்டு இருக்கின்றேன்.. :)

யப்பாடி கடந்த ஒரு நாள் நான் நித்திரை கூட கொள்ளவில்லை,..இந்த ஆரவாரத்துக்க எனது பாட்டு பெட்டியில் ஒரு பாட்டு போயிச்சு.. அதுவும்.. situation song.. :)
கேளுங்க நீங்களும் ,..கடைசியில் suriya வரும் காட்சி பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்ப வில்லை


ஆசைக்காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே"True love does not come by finding the perfect person, but by learning to see an imperfect person perfectly."

1 comment:

K.Guruparan said...

//நானறிந்த அளவில்..
ஒரு தலைக்காதல் , நான் படித்து ( 4 வருடங்கள் ) முடித்து விட்டு வருகிறேன் அதுவரை wait பண்ணுவியா என்று நண்பன் கேட்டதுக்கு அவள் மௌனமாய் இருந்தது, அதுக்கு பிறகு நண்பன் அவளுடன் பழகிய விதங்கள் என்று எல்லாம்.. அவனை அவளும் ஏற்று க் கொண்டு விட்டாள் என்று கடந்த நான்கு வருடமாக அவனது படிப்பை நன்றே செய்து முடித்து விட்டு வந்த போது அது அவ்வாறு இல்லை என்று .. புரிந்ததும்.. அவனது மனமும் உடைந்தது.. வாழ்வும் பாழாய் போனது என்று புலம்பல்.. ;//

ம்
ம்

நேர மாட்டன் எண்டு சொன்னவள் பின்னாலையே நாலு வருசமாய் திரிஞ்ச ஆக்களை எனக்கு தெரியும்!!

ஹிஹி
யாரெண்டு கேட்கக் கூடாது.
அழுது போடுவன்

Related Posts Plugin for WordPress, Blogger...