நம்முடைய வறு வல்களும் ; சிந்தனைகள் , மனதில செய்ய நினைத்தவை , செய்தவை ,நல்லதாக பார்த்து சுட்டவை ,சுடாமல் சொந்தமாய் தயாரிச்ச தலைப்புக்கள் என்று ஒரு மொக்கை போடும் இடம்
2010-09-30
எந்திரன் ஒரு மந்திரன் ,தந்திரன், the MASS
வி ஐ பி ஷோ பார்க்க கிடைத்தது. எனக்கு இதனை பெற்று தர உதவிய விமல் மற்றும் லோஷனுக்கு நன்றிகள்.
நான் இங்கு படம் விமர்சனம் செய்யவில்லை. என்னுடைய பார்வையில், எந்திரன் எப்புடி என்பததுதான்...
ரஜனி படங்களில் ரஜனியின் ஸ்டைலில் உள்ள ஆரம்பம் போலில்லாமல், வித்தியாசமாய், ரஜனி ரோபோ தயாரிக்கும் ஆய்வு கூடத்தில் கடுமையாக வேலை செய்து கொண்டிருப்பது போல, சங்கர் கல கலப்பில்லாத ஆரம்பத்தை வழங்கியிருந்தார்.
எழுத்தோட்டம் தொடங்கும் போதே புதிய மனிதா பாடல் முதல் பகுதி, விஞ்ஞானியாக வரும் ரஜனி வசீ என்னும் பெயரில் படம் முழுக்க வலம் வருகின்றார். ஆரம்பமே கிராபிக்ஸ் மூலம் ரோபோவின் இயக்கங்களை காட்டி கொஞ்சம் வித்தியாசமான வரவேற்பை பெற முயற்சித்து உள்ளார் சங்கர். அதிலும் வெற்றி தான் அவருக்கு.
சிட்டி ரஜனி ரோபோவின் பெயர். அது படத்தின் ஆரம்பத்தில் இருந்தே குறும்புகள்தான் செய்யும். உணவு தயாரித்தல், ஐஸின் அறையை துப்பரவு செய்தல் எல்லாமே வரவேற்க தக்க காட்சிகள்.
குறிப்பாக ஐஸுடன் ஒரு நாளிரவு இருந்து பரீட்சைக்கு உதவி செய்யும் ரோபோவின் குறும்புகள் தான் எத்தனை. அதிலும் விசேடமாக ஆத்தா காமெடி சூப்பர். படத்தை பாருங்கள், இந்த காட்சிகளை இரசியுங்கள். அதிலும் காலேஜ் professor இடம் ஐஸை மாட்டி விடும் காட்சி இரசிக்கத்தக்கது.
பொய் பேசத் தெரியாத சிட்டி , பொய் பேசும் கருணாசையும் , சந்தானத்தையும் படுத்தும் பாடுகள் நல்ல நகைச்சுவையாகவும் சிரிக்க கூடியனவாகவும் இருந்தன. குறிப்பாக தண்ணி அடிக்கும் காட்சி சூப்பர் காமெடி. கொஞ்சம் கூட காமெடி இருந்திருக்கலாம்.
ஐசு இன்றும் உன்னழகு மாறவில்லை. உன் புன் சிரிப்பு இன்றும் அன்றும் என்றும் அதுவே தான். அழகுக்கு ஐசு என்று இன்னொரு பெயர் இருக்கு என்று உறுதிபடுத்தி கொண்டேன் மீண்டும் இன்று தான்.
ரஜனியின் ஸ்டைல் அழகு, குரல், நடை எப்படி இருந்திச்சோ , அதுவும் அப்படியே இருக்கு.
பாடல்கள் அனைத்தும் சூப்பர் .. காணொளியுடன் கூடி இருப்பதால் இன்னும் மெகா கிட் ஆகுமென்பதில் ஐயமில்லை. விசேடமாக காட்சியமைப்புகள் எல்லாமே சூப்பர். கண்ணுக்கு குளிர்ச்சி தரும் விதத்தில் அமைந்திருந்தன.
ஆங்காங்கே ஐசும் தனது படு கவர்ச்சியை , குறிப்பாக மார்பக கவர்ச்சியை அள்ளி வழங்கி இருந்தமை , திரையரங்கில் அடிச்ச விசில்களுக்கு ஒரு காரணம்.
ஐஸை காப்பாத்தும் ரோபோவின் சண்டை காட்சிகள் பிரமாதம். ஒரு நிஜ கீரோ வைப்போல் ஐஸை வில்லன்களிடம் இருந்து காப்பாத்துகின்ற ரோபோ நீ வாழ்க. திரையரங்கு அதிர்ந்த வண்ணம் இருந்தது. ரகுமானின் பின்னிசையால்.:)
கலாபவன் மணி , ஐசு ஒரு நாள் காதல் காட்சியில் பலரும் எதிர்பார்த்ததை சங்கர் நிறைவேற்றி வைக்க வில்லை போல!!! அதுக்கும் விசிலும் கூச்சலுமாய் இருந்திச்சு.
அந்த காட்சியில் ஐஸை பார்த்த ரசிகன் ஒருந்தன், ஏதோ கெட்ட வார்த்தை மூலம் ஐஸின் கவர்ச்சியை வர்ணித்ததை , கடும் விசிலுக்கும் மத்தியில் கேட்க கூடியதாக இருந்தது. வேறென்ன முன்னர் சொன்ன மார்பக கவர்ச்சியை தான் :)
படத்தில் ரகுமான் இசையை சொல்லத்தேவை இல்லை , திரையரங்கு அதிர்ந்த வண்ணம் தான் இருந்திச்சு. காட்சியமைப்புகள் சூப்பர். ரோபோவின் விஞ்ஞான ஆய்வு கூடம், கணனிகளில் வரும் மென்பொருள் வர்ணனைகள், மென்பொருளில் செயல்பாடுகள் (commands) இயங்கும் விதங்கள் எல்லாமே சூப்பராக படமாக்கப்பட்டுள்ளது.
இராணுவத்துக்கு ரோபோவை வழங்கி , அதன் மூலம் எதிரிகளை அழிக்க வேண்டும் என்பதே விஞ்ஞானி ரஜனியின் நோக்கம். ஆனால் வில்லனாக வரும் Danny Denzongpa அதாவது போரா, ரஜனி பயன்படுத்தும் விஞ்ஞான தகவல்களை பெற்று அதன் மூலம் பெறும் லாபத்தை ஏற்படுத்திகொள்ளாலாம் என்பது அவர் தியானம்.
நேர காலம் இப்படி வருகின்றது : ஒரு கட்டத்தில் ரோபோவான ரஜினிக்கு மனித உணர்ச்சிகளான காதல், துரோகம், வெறுப்பு முதலியன இல்லை அதனால் இதனை இராணுவத்தில் பயன் படுத்த முடியாது என முடிவாகி விடுகிறது.
அப்போதுதான் ரஜனி , சிட்டிக்கு மனித உணர்ச்சிகளான காதல், துரோகம், வெறுப்பு முதலியன வற்றை புகுத்துகின்றார். ஐஸுடன் காதல் டுயட் கூட.
அதன் பயன் ரோபோவான ரஜினிக்கு மனித உணர்ச்சிகளான காதல், துரோகம், வெறுப்பு முதலியன வரத் துவங்குகின்றன. அதாவது ஐஸ்வர்யா மீது காதலும் அதனால், தன் தந்தையான விஞ்ஞானி ரஜினி மீது வெறுப்பும் சேர்கிறது. இதனால் கோவம் கொண்ட ரஜனி, சிட்டியை அடித்து உடைத்து குப்பைக்குள் போட்டு விடுகின்றார். இதனை வில்லனான போரா கேள்விபட்டு, இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றார்.
பாருங்கள். பொய்யா சொல்லுறம்.. நிரம்பி வழியும் ரசிகர்கள் ..
ரஜினிக்கு துரோகம் செய்யும் விதமாகவும், அத்துடன் நாட்டின் அழிவுகளுக்கு ரோபோ ரஜினியை பயன்படுத்தத் துவங்குகிறார் வில்லன். மென்பொருள் ஏற்றபட்டு அழித்தல் ரஜனி ரோபோ தயாராகின்றது. அழிவுகள் தொடங்குகின்றது.
ரஜனி ,ஐஸ்வர்யா திருமணத்தை குழப்புவதன் மூலம் ரோபோ ரஜனியின் வில்லத்தனம் வெளியில் வருகின்றது. ரஜனி வில்லன் பாத்திரம் ஏற்று நடித்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனையில் நினைத்ததை விட ரோபோ வியப்பூட்டும் வகையில், செய்கின்றது. கொஞ்சம் ஹோலிவூட் புகுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் ரஜனி, வில்லன் ரோல் செய்த படங்களில் இதுதான் பெஸ்ட்.
சாபுசிரிலின் கலை, செட்ஸ் அனைத்தும் அசத்தல்.ஒரு படி மேலாக ரத்னவேலு தன் கேமராவுக்குள் இவற்றை எல்லாம் கொண்டு வந்து எங்களுக்கு படம் பிடித்து காட்டியுள்ளமை வரவேற்க தக்கது. வாழ்க !!!அடுத்தது பீட்டர் ஹெயின். தங்களின் பங்களிப்பிற்கு வாழ்த்துக்கள் !!! தங்கள் பணியை செவ்வனே செய்து கொடுத்துள்ளீர்கள். வாழ்க !!!
கிராபிக்ஸ் மூலம் தான் படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள். வேறென்ன வழமை போல சண்டை தான். ரஜனியுடன் அல்ல. ரோபோவுக்கும் , ரோபோவை அழிக்க வரும் ரஜனி யுடன் கூடிய இராணுவம் மற்றும் போலீசுடன். ஐசும் , ரஜனியும் சேர்ந்து கணனிகளின் உதவியுடன் , வில்லன் மூலம் பதிவு செய்யப்பட்ட மென்பொருளை நீக்கி, பழைய ரோபோவை கொண்டுவருதல் தான் கிளைமாக்ஸ் இறுதிப்பாகம் .
எனக்கு ரொம்பவே பிடிச்சு இருந்திச்சு. துப்பாக்கி சூடுகள், சன்னங்கள் என்று ஒரே அமர்க்களம் தான். ட்ரான்ஸ் போமர் காட்சிகள் சிலவும் உள்ளடக்கம்.
யுத்தத்தில் வெற்றி பெறுகின்றார் ரஜனி. நீதி மன்ற உத்தரவுக்கு ஏற்ப, ரோபோவை அழிகின்றார்கள். ஆனால் 2030 , இந்தியா வல்லரசு ஆகுமென்று கனவுடன் இருக்கும் ஆண்டு. அந்த ஆண்டில் எந்திரன் முக்கிய பாத்திரம் பெறுவான் என்ற ஒரு கருத்துடன் திரைப்படம் முடிவுக்கு வருகின்றது. இதுதான் கதையும் எந்திரனும்.
சிலர் சொல்லலாம் எந்திரன் வேஸ்ட் என்று . கிராபிக்ஸ் கூட என்று .
அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி : நீங்க ஆவாதர் பார்ப்பீங்களாம் , spidar man பார்ப்பீங்களாம், அங்க முழுக்க முழுக்க கிராபிக்ஸ் தானே இருக்காம். பிறகு என்ன தமிழில் ஏதுமிருந்தால், அதுவும் கொஞ்சம் தான், உங்களுக்கு குறை கண்டு பிடிக்கிறது. ஒருத்தன் தனது முயற்சியை செய்ய விட மாட்டீங்களே???..
எழுதும் விமர்சனங்களின் ஆசிரியர்கள் ஒரு வேளை ரஜனியின் எதிராளியாக இருக்கலாம். பொய்யாக , திரிபுடன், நம்பும் படி எழுதாலாம். இதை எல்லாம் விட்டு போட்டு ஒருக்கா போய் பாருங்க, தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் ஆரம்பாச்சு என்று நீங்களும் சொல்லுவீங்க.
எல்லாப்புகழும் ரோபோ ரஜினிக்கே!!
வாழ்த்துக்கள் !!!
2010-09-28
எந்திரன் VIP ஷோ பார்ப்பது உறுதி
இயக்குனர் சங்கரின் கனவு நனவாகும் நாள். சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் கனவு நனவாகும் நாள்.
இலங்கையில் வி ஐ பி ஷோ முதல் நாள் இரவு காண்பிக்கப்படுகின்றது. எப்படியாவது வழமை போல் வி ஐ பி காட்சியை பார்த்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அது அவ்வாறே அமைகின்றது.
ஏற்கனவே கொழும்பில் வி ஐ பி டிக்கட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.
ODC 1750/= , பல்கனி: 2500/=
விலை கொஞ்சம் கூடத்தான். இருந்தாலும் வி ஐ பி ஆச்சே.. பார்த்திடுவோம்ல.ரஜனியின் தீவிர ரசிகன். பல நண்பர்கள் என்னுடன் வாக்கு வாதம் செய்தார்கள்.
இப்படத்தை கலைஞர் சார்ந்த கூட்டம் தயாரித்ததால் , ஈழ மக்களின் துரோகிகள் அவர்கள், அவர்களின் படத்தை பார்ப்பதா என்று. நான் என்னுடைய பூரண விளக்கத்தை அளித்தேன். சின்னப்பிள்ளை தனமாய் இருக்கிறார்கள் என்றும் அவர்களைப்பார்த்து சொல்லியுள்ளேன். கோவப்படுபவர்கள் படட்டும். அதைப்பற்றி அதிகம் கவனம் கொள்ள விரும்பவில்லை.
உலகம் முழுக்க 2000 திரையரங்குகளில் திரையிடும் அளவுக்கு ஒரு படம் வந்துள்ளது என்றால் , அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பங்கு உண்டு. அவ்வளவுதான்.
2010-09-26
எத்தனை முரட்டுக்காளைகள் வந்தாலும் சூப்பர் ஸ்டாரின் முரட்டுக்காளை தான் ஜெயிக்கும்
வழமை போல் இம்முறையும் இவற்றை செய்தாலும் , கொழும்பில் சினுங்கிய படி இருந்த மழை, என்னை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க வில்லை.
வீட்டில் செய்மதி வசதியுடன் கூடிய தொலைக்காட்சி. இருக்கிற தமிழ் சேவைகள் எல்லாமே நாள் முழுக்க சீரியல்களை ஒளி பரப்புவதால் எங்களை போன்ற இளசுகளுக்கு பார்க்க ஒன்றுமே இல்லை. இன்று சும்மா அங்க இங்க என்று மாத்தி மாத்தி பார்க்கும் போது , கொலைஞர் தொலைக்காட்சியில் முரட்டுக்காளை இறுவெட்டு வெளியீடு நடை பெற்றது.
சுந்தர் சி, சினேகா நடிக்கும் 'முரட்டுக்காளை' படத்தினை ஐங்கரன் இண்டர்நேஷனல் மீடியாஸ் தயாரிக்கின்றது. ஒரு பெரிய நிகழ்வாக ஒளி பரப்பிக்கொண்டு இருந்தது.
எனக்கு இந்த படம் எவ்வளவு கிட் ஆகுதோ தெரியாது. ஆனால் சுந்தர் சி ரஜனியை வைத்தும் படம் எடுத்துள்ளதால் , ஏதோ ஒரு விதத்தில் இப்படத்தையும் ரஜனிக்கு எடுப்பது போல் எடுக்க முயற்சி செய்து இருக்கலாம். இருந்தாலும் இவர் நடிகர் இங்கே. இருந்துதான் பார்ப்போமே. இயக்குனர் செல்வபாரதி என்னதான் செய்ய போறார் பார்ப்போமே.
என்னுடைய , ச்சே ச்சே பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜனியின் முரட்டுக்காளை பார்த்தவர்கள், எதிர்காலத்தில் எத்தனை முரட்டுக்காளைகளை பார்த்தாலும் , அந்த பழைய காளையே சூப்பர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு சூப்பர் கிட் படம்.
'சூப்பர் ஸ்டார்' ரஜினி காந்த் நடிப்பில் 1980-ல் வெளியானது முரட்டுக்காளை.
http://en.wikipedia.org/wiki/Murattu_Kaalai_%281980_film%29
இப்படம் ரஜினியின் 64வது படம், தமிழ்த் திரையுலகில் அவருக்கு மாபெரும் திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்த, மாபெரும் வெற்றிப் படம். இப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் அட்டகாசமான பாடல்கள்.
குறிப்பாக பொதுவாக என் மனசு தங்கம் , அந்த கால டப்பான் குத்து. மலேசியா வாசுதேவன் குரலில் ராஜா அங்கிள் இசையோ பிரமாதம்.
இன்றும் எழும்பி ஆடலாம். அப்படி ஒரு இசை. கிராமிய இசை.
பிடிச்ச வரிகள் :
வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
பொறந்த ஊருக்கு புகழ சேரு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
நாலு பேருக்கு நன்மை செய்தா
கொண்டாடுவார்... பண்பாடுவார்
என்னாலும் உழைச்சதுக்கு
பொன்னாக பலமிருக்கு
ஊரோடு சேர்ந்து வாழுங்க
அம்மனருல் சேரும்... தினம் நம்ம துணையாகும்
ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்
ஹெய்... ஆனந்தம் காணுவோம் என்னாலுமே
2010-09-12
தமிழ் பின்னணி பாடகி சுவர்ணலதா இன்று காலமானார்
1989-ம் ஆண்டு முதல் சினிமாவில் பாடி, ஒரு சில சூப்பர் கிட் பாடல்களுக்கு சொந்தக்காரியான சுவர்ணலதாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.
நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனக்கு பிடித்த பாடல்கள்
தளபதி- அடி ராக்கம்மா கையைத்தட்டு
வள்ளி - என்னுள்ளே என்னுள்ளே
வீரா- மாடத்திலே கன்னி மாடத்திலே , மலைக்கோவில் வாசலிலே
தர்மதுரை- மாசி மாசம்
எவனோ ஒருவன் - அலை பாயுதே மாயா மச்சின்றா - இந்தியன் அஞ்சாதே ஜீவா - ஜோடி முக்காப்புலா - காதலன் போறாளே பொண்ணுத்தாயே- கருத்தம்மா பூங்காற்றிலே - உயிரே
சின்னத்தம்பி- போவோமா ஊர்கோலம் , நீ எங்கே
சத்ரியன் - மாலையில் யாரோடு
அமைதிப்படை - சொல்லிவிடு வெள்ளி நிலவே
உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் - என்னை தொட்டு
செந்தமிழ் பாட்டு - காலையில் கேட்டது
பாட்டு வாத்தியார்- நீ தானே நாள்தோறும் நான் பாடும்
என் ராசாவின் மனசிலே - குயில் பாட்டு
வருகின்ற தை முதல் பல்கலை விரிவுரையாளர்கள் பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம்
கடந்த வாரம் நிதியமைச்சு மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருடன் நடை பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஓரளவிற்கு சாதகமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
தொகுப்பின் ஆங்கில வடிவம்
On the strength of this assurance on behalf of H.E the President, the FUTA delegation led by Professor Sampath Amaratunge, with Dr. Rohan Fernando, Prof. Sudantha Liyanage and Dr. S.R.D. Rosa met with Dr. P.B Jayasundara on 6th September 2010 at 8.00am at the Treasury in a positive and cordial environment with Dr. Jayasundara asking the Head of the FUTA Delegation to explain current realities concerning the problem. After a lengthy discussion, with the Treasury Secretary the following positions were established:
(a) That the new revisions should be done on the salary scales proposed by the FUTA through the Ministry of Higher Education to the National Salaries and Cadre Commission (NSCC) and Secretary to the President, on 13th August 2010
(b) That the Treasury has accepted the proposals submitted by the FUTA through the Ministry of Higher Education
(c) The proposals will be included in the forthcoming National Budget of 2010 and accordingly, university academics will get a promising remuneration package until action is taken to streamline the basic salary of university academics.
(d) Recognize academics as a distinct professional category
(e) That the Treasury would propose a performance based allowance system along with additional payments for those who hold doctoral degrees in the future.
(f) That the FUTA as proposed by the Treasury will work on Service Minutes (to mean a document that brings together the procedure for recruitment, promotion, leave entitlements etc.,
relating to academic staff).
(g) FUTA reassured the government that academics have the public interest as the foremost consideration and regard their national level obligations as sacred as professional rights.
சம்பள விபரங்கள்
Post | Scale | Proposed Basic Salary | 25% Allowances | Allowances | Total |
Senior Professor | U-AC-5 | 135000 | 33750 | 5500 | 174250 |
Professor | U-AC-5 | 120000 | 30000 | 5500 | 155500 |
Ass. Professor | U-AC-4 | 108000 | 27000 | 5500 | 140500 |
Senior Lecturer GI | U-AC-3 I | 100000 | 25000 | 5500 | 130500 |
Senior Lecturer GII | U-AC-3 II | 88000 | 22000 | 5500 | 115500 |
Lecturer Confirmed | U-AC-3 III | 78000 | 19500 | 5500 | 103000 |
Lecturer Probationary | U-AC-3 IV | 63000 | 15750 | 5500 | 84250 |
2010-09-09
இதுவரை பயணம் செய்த இடங்களும், செய்ய விரும்பும் இடங்களும்
இந்த கேள்விக்கு நான் பதிலளித்தால் எவ்வாறு இருக்கும்? "ஒரு பென்சில் கடதாசியுடன் உக்காந்து யோசிப்பீர்களா " என்று கேட்க வேணாம் .. நான் ............................... இருந்தவாறே கொஞ்சம் கூட யோசித்தேன். எந்த எந்த நாடுகள் நகரங்கள் எல்லாம் நீங்க பயணம் செய்தீர்கள் என்று கேட்டு இருந்தால் , என்ன பதில் குடுப்பேன்.
என் கேள்விக்கென்ன பதில் .. ..................... ஆங்கிலம் கலந்த விடை
1. European Countries I have been
| Countries I have been | Cities of those countries |
1 | | Eindhoven, Amsterdam, Utrecht , Den Hague, Rotterdam, Den Helder, Delft, Venlo, Leiden, Maastricht and most of the cities, because I lived in this cool country for years. |
2 | Germany | Dusseldorf, Berlin, Frankfurt, Aachen, Cologne, Dortmund, Essen, Hanover, Bremen, Hamburg, Stuttgart and Munich |
3 | Switzerland | Geneva, Zurich, Lucerne, Basel and Zug |
4 | Italy | Rome, Pizza, Florence, Milan and Venice |
5 | Sweden | Stockholm, Lund and Helsingborg |
6 | France | Paris, Lille , Lyon and Versailles |
7 | Portugal | Porto |
8 | Spain | Barcelona and Madrid |
9 | Luxemburg | Luxemburg City |
10 | Belgium | Brussels, Antwerp and Bruges |
11 | Norway | Oslo |
12 | Austria | Vienna and Linz |
13 | Denmark | Copenhagen |
14 | Czech Republic | Prague |
15 | Texel Islands | Whole Island |
16 | England | London City |
2. Asian Countries I have been
| Countries I have been | Cities of those Countries |
1 | India | Delhi, Agra (Taj Mahal) |
3. Airports I have been / May be on Transit or landing Destination
| Country | Airport |
1 | Germany | Frankfurt, Dusseldorf, Berlin and Munich |
2 | Switzerland | Zurich and Geneva |
3 | Belgium | Brussels |
4 | Italy | Rome and Milan |
5 | Austria | Vienne |
6 | | Amsterdam and Eindhoven |
7 | Portugal | Porto |
8 | Spain | Barcelona |
9 | Czech Republic | Prague |
10 | England | Heathrow |
11 | Norway | Oslo |
12 | Sweden | Stockholm |
13 | UAE | Dubai |
14 | Jordan | Jordan |
15 | Qatar | Doha |
16 | Bahrain | Bahrain |
17 | Kuwait | Kuwait |
18 | Denmark | Copenhagen |
4. Places would like to see
| Country | Cities |
1 | U.S. | New York |
2 | Australia | Sydney |
3 | Thailand | Bangkok |
4 | Peru | Machu pichu |
5 | Japan | Tokyo |
6 | South Korea | Seoul |
7 | Canada | Toronto |
8 | Hong Kong | No idea |
9 | India | Mumbai ,Kerala & Chennai |
ரொம்பவே லொள்ளு இல்லாமல் அவங்க கேட்ட கேள்விக்கும் பதில்
| City/Villages |
1 | Jaffna |
2 | Chunnakam |
3 | Vavuniya |
4 | Kandy |
5 | Colombo |
6 | Mulaitheevu |
7 | Kilinochi |
8 | Mannar |
9 | Trincomalee |
10 | Baticalo |
11 | Amparai |
12 | Galle |
13 | Matara |
14 | Gampola |
15 | Hatton |
16 | Nuwareliya |
17 | Ratnapura |
18 | Matala |
19 | Awisawala |
20 | Kegalle |
21 | Badulla |
22 | Bandarawella |
23 | Haputale |
24 | Monaragala |
25 | Beruwala |
26 | Negembo |
27 | Puttlam |
28 | Chillaw |
நீங்களும் ஒருக்கா இந்த கேள்விக்கு பதிலை எழுதிப்பாருங்க