2010-09-08

நடிகர் அமரர் முரளி அவர்களுக்கு எனது கண்ணீர்அஞ்சலிகள்

இன்று மாரடைப்பால் அகால மரணமான தமிழ் நடிகர், பலருக்கும் பிடித்த நடிகர், காதல் சோகம் என்றால் எப்படி இருக்கும் அதன் வலியை உணர்த்தும் வகையில் பல படங்களில் நடித்து , பலரின் மனதில் இடம்பிடித்த நடிகர் அவர்களுக்கு அடியேனின் ஆழ்ந்த அனுதாபங்கள். நானும் ஒரு விதத்தில் ரசிகன் தான்.
காதலில் தோல்வி என்று எதுவுமில்லை, ஒரு இரசிகன் அவ்வளவுதான்.
காதல் வலி, ஒரு தலைக்காதல் வலி, இது எல்லாம் பற்றி தெட்ட தெளிவாய் விளக்கிய நடிகர். அதனால் தான் ரசிகன். இந்த காதல் எல்லாம் வேணாமப்பா .. என்று எனக்கு உணர்த்தியதால் ரசிகன்.
நடித்த முதல் படமே பூவிலங்கு . நல்ல கிட்டான படம்.


எனக்கு பிடித்த படங்கள்

  • பொற்காலம்
  • பகல் நிலவு
  • ரோஜா மலரே
  • ஆனந்தம்
  • சமுத்திரம்
  • காலமெல்லாம் காதல் வாழ்க
  • இதயம்
  • காதலுடன்
  • சுந்தரா டிராவல்ஸ்
  • உன்னுடன்
  • பூவிலங்கு
பகல் நிலவு படத்தில் எல்லாமே நல்ல பாடல்கள். இருந்தாலும் இந்த பாட்டில் உள்ள வரிகள் கொஞ்சம், இன்னும் பத்து வரிகளை பாடலாசிரியர் எழுதி இருக்கலாம் என்று எனக்கு ஒவ்வொரு முறையும் பாடல் கேட்கும் போது தோன்றும். உங்களுக்கும் அப்படி இருக்கும் என்று நினைக்கின்றேன். அவ்வளவு நல்லதொரு மெட்டு. வாழ்க இசைஞானி . குரலுக்கு சொந்தக்காரர்கள் ஜெயச்சந்திரன் , சுசீலா!!!

பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம் இது தானடி
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா

பூவிதழ் போல முல்லை என் பிள்ளை
புன்னகை செய்தால் கண்படும்
கண்மணி பிள்ளை கொஞ்சமும் வாட
கண்ட என் நெஞ்சம் புண்படும்
அன்னை தந்தை யாவும் அண்ணன் தானடி
அன்பு கொண்டு வாழும் சொந்தம் தானடி
நூறு நூறு ஜென்மம் கூடி நின்று வாழும்
வரவும் வேண்டி தினமும் தவமிருக்கும்


பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம் இது தானடி
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா





No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...