பல பாடல்களை கேட்டும் பார்த்தும் உள்ளேன் .. இருந்தாலும் மனதை கொள்ளை கொண்ட பாடல்கள்.
ரசித்து பாருங்கள் ..
1. ஏய் மாமா ..
2. வேம்படியில என் குருவி ( அம்மாடி அது அந்த குருவி இல்ல .... சபார் .. எனக்கு அடிக்கடி இந்த குருவி மட்டர் கிராஸ் பண்ணுது .... )
நன்றி - மெல்போர்ன் கமல் ( வரிகளை சுட்டேன்)
குரல்: ‘என்ரை மனுசி சண்டை போட்டால் சாரயம் கேட்குதடா. அந்தச் சாரயம் உள்ள போனால் பைலா கேட்குதடா....
குரல் 02: ஊத்தடா......மச்சான்.. சுதியேத்தினது போதும்டா..டேய்.... பாடடா....தோடா...
பாடல்:
வேம்படியிலை என் குருவி ஏ. எல் படிச்சவா
தாவடியிலை என் மனசை கொள்ளை அடிச்சவா
சில்லாலை கிழக்காலை தையல் படிச்சவா-ஒரு
சொல்லாலை தெல்லிப்பளை லூசர் அடிச்சவா
‘’ஏ...கந்சாமி கானா... கேளு கரவெட்டி மைனா’
நாவாந்துறை மீனு என்கிட்ட ஆட்டாதே வாலு!
(வேம்படியிலை என் குருவி...)
( கலவை பொருத்தம் இல்லை இருந்தாலும். பாட்டை ....ரசியுங்கள் ...)
அரியாலை ஊருக்குள்ளே மரியாதை உள்ளவனை
சரசாலைத் தவறணையில் குடிகாரன் ஆக்கிவிட்டாய்
கொட்டடியில் கோட்டை வைச்ச வெள்ளையனைக் கலைச்சது போல்
நாயன்மார்க்கட்டில் வைச்சு நாயே என்று கலைச்சு விட்டாய்
நவாலிப் புலவனுக்கு மீசாலைத் தாடியடி
கிளாலிக் கடலுக்குள்ளை பலாலி ஆமியடி.....
கந்சாமி உனக்கு காதல் கண்றாவி எதற்கு
நெஞ்சோடு சோகம் தீரும்... அண்ணாந்து ஊத்து
((வேம்படியிலை என் குருவி...)
3. இப்போது பிரபல்யமாகி வரும் யாழ் தேவி பாடல் ..
4.. போனால் போகுது நம்மட SL Night :)
எத்தனையோ தாங்குறீங்க இதையும் சேர்த்துகுங்க
No comments:
Post a Comment