ஆடி என்றாலே அம்மனுக்கு உற்சவம் தான் ! ஆடியில் அம்மனுக்கு ஆடிச்செவ்வாய், மற்றும் ஆடிப்பூரம் இரண்டும் பிரபல்யமானவை! அது மட்டுமல்ல ஆடியில் தான் பெரும்பாலான அம்மன் கோவில்கள் சரி, சிவன் கோவில்களில் உள்ள அம்மன் வாசல் சரி கொடியேறி திருவிழாக்கள் நடை பெறும்.
இந்த ஆடிச் செவ்வாய் தினங்களில் சுமங்கலிப்பெண்கள் அம்மனை வழிபட்டால் தாங்கள் வேண்டும் வரங்கள் எல்லாத்தையும்.. பெற்றுக்கொள்வர் என்பது மரபு. இதைதான் இந்த பல மொழியும் உணர்த்தி நிற்கின்றது. " ஆடிச்செவ்வாய் தேடிக்குளி அரைச்ச மஞ்சளை பூசிக்குளி " - ஆடியிலே சுமங்கலி பெண்கள் மஞ்சள் பூசி குளித்து அம்மனை சுமங்கலி பூசை செய்து வழிபட்டால் நன்றே வேண்டும் வரங்கள் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்வர்.
இதை விட ஆடிப்பூர தினத்தை தான் அம்மன் ருதுவான ( பெரிய பிள்ளை ஆதல், பூப்பு அடைதல் ) தினமாக கொள்ளுவர். இந்த தினத்தில் பெரும்பாலான ஆலயங்களில் தீர்தோற்சவம் நடைபெறும். இரதோற்சவ தினத்தில் இரதத்தில் எழுந்தருளும் இறைவன் ( எந்த இறைவனாகவும் இருக்கலாம் ), அழித்தல் தொழிலைத் தான் மேற்கொள்வார். அதனால்தான் பெரியோர்கள் சொல்லுவார்கள் தேருக்கு கட்டாயம் போகணும் கடவுளை கும்பிடனும் என்று. அன்று தோன்றும் இறைவன் நம்மிடைத்தே உள்ள ஆணவம் அகங்காரம் மற்றும் தீய பழக்கங்களை எல்லாவற்றையும் அழிப்பார் என்பது முன்னையோர் கருத்து.
( அது சரி ஊரில தேர் என்றால் நம்மளுக்கு என்ன , ஒரு சாரார் வீட்டில சீரியலும் சமையலும், மற்றொரு சாரார் கோவிலடியில் குளிர்களியுண்பதுவும், குளிர் காய்தலும் தானே)..
அடுத்த நாளாகிய தீர்த்ததுக்கும் கட்டாயம் ஆலயம் சென்று வழிபடல் வேண்டும். அன்று தான் கடவுள் அருளல் என்ற தொழிலை செய்வதாக ஆலய பூஜை வரலாறுகள் சொல்லுகின்றன.
( முந்தி ஒரு காலத்தில் சுட்டு வைத்து இருந்தது - எனது புகைப்பட தொகுப்பில் இருந்து )
எங்கட கோவில் இரதோற்சவ புகைப்படங்கள் 2012 July 22
எங்கள் ஆலயத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ சொர்ணாம்பிகா தேவி !! வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய போது
ஆலய வடக்கு வீதியில்
வடம் இழுக்கும் பெண்கள்
இணுவையூர் நாதஸ்வர வித்துவான் சுந்தரமூர்த்தி ஐயா அவர்களின் சேவகம்
எங்கட கோவிலில் ஆடிப்பூர இரதோற்சவத்தில் வடக்கு வீதியில் இந்த பாட்டை நாதஸ்வர தவில் இசையுடன் கேட்டேன்.
அண்மையில்..கொழும்பில் மயூரபதி காவடியிலும்.. பார்த்து ரசித்தேன்.. :
இந்த பாடல் ஒரு சினிமா படத்தில் வந்த அம்மனை நோக்கி வரம் வேண்டும் பாடல் !!
பாட்டை பாருங்க..... உள்ள அம்மன் எல்லாமே இங்க இருக்காங்க.. # #பயமா இருக்கு!!
பாடல் வரிகள் :
கோல விழியம்மா ராஜா காளியம்மா
பளையதாயம்மா பங்காரு மாயம்மா
முத்து மாரியம்மா பத்ர காளியம்மா
முண்டக்கன்னியம்மா எங்க கண்ணியம்மா
குங்கும கோதையே அன்னை யசோதையே
செந்தூர தேவானை சிங்கார ரூபினி
அன்னை விசாலாட்சி சொவ்தாம்பா விருப்பாட்சி
சுந்தர நீலியே சௌந்தர வல்லியே
வல்லியம்மா எங்கள் அல்லியம்மா
தங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா
அடி அங்களாம்மா எங்கள் செங்கலம்மா
அருள் முப்பதம்மா அனல் வெப்பதம்மா
சிங்காரி ஓங்காரி சங்கரி உமையத்தா
மண்மாரி பன்னாரி செல்லாயி சிலம்பாயி
மருவத்தூர் அம்மாவே ஓம் சக்தியே
ஓரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா , வேறு துணை யாரம்மா ?
குதமில்லா ஓரு உத்தம நெஞ்சுக்கு
சோதனைகள் எதுக்கு ? - அவர்
கட்டிய தாலிக்கும் போட்டுக்கும் பூவுக்கும்
காவல் கொடு எனக்கு ..
நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை
நீ வந்து மற்றிடம்மா ...
மடியேந்தி பிச்சை கேட்கிறேன் - அம்மா
மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்
காணாத பொய் வழக்கு வீணாக வந்திருக்கு
வாதாட சாட்சி ஏதம்மா ?
ஊர் வழ ஆட்சி செய்யும் மீனாக்ஷி தேவியம்மா
நான் வாழ நீதி கூறம்மா
சோதனையை வேதனையை சேர்த்து விட்டேன் உன்னடியில்
சோகங்களை திரோகங்களை தீர்த்துவிடு என் வழியில்
வாழ்வரசி ஆவதற்கு தாலி தந்த கண்ணியம்மா
வாசல் வந்த பிள்ளை மனம் வாடலமா பொன்னியம்மா
அகிலாண்டேஸ்வரி சபை ஏறம்மா
அவர் மீது வீழ்ந்த பழி தீரம்மா
திருபதூர் கௌமாரி திருவானைக்கா அம்மா
மாங்காட்டு காமாக்ஷி மலையாள பகவதி
தஞ்சாவூர் மாரியே கண்யாகுமரியே
மலையனூர் செண்பகம் மயிலாப்பூர் கற்பகம்
கன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜகதம்பா
துளுக்கனதம்மாவே துர்க்கை அம்மாவே
முக்குழி அம்மாவே வழங்கி அம்மாவே
எல்லை அம்மாவே கங்கை அம்மாவே
நாச்சியம்மா தங்க பேச்சியம்மா
அன்னை மூகாம்பிகா எங்கள் யோகம்பிகா
அடி அலமேலம்மா தாயே வரிக்கோலம்மா
துய தஞ்சையம்மா வீர படவேட்டம்மா
வைரவி பைரவி தேனாட்சி திருபட்சி
அம்மாயி ப்ரம்மாயி அழக்கம்மா கனகம்மா
அதி பராசக்தியே ......
ஓரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா , வேறு துணை யாரம்மா ?
ஓயாத சத்தியமும் சாயாத சக்கரமும்
நீதானே பூமி மீதிலே ..
அத்தா நீ கண் திறந்து பத்தாலே வஞ்சனைகள்
வீழாதோ உந்தன் காலிலே ..
பெண்ணினங்கள் வேண்டுவது அன்னை உந்தன் குங்குமமே
குங்குமத்தில் நீ இருந்து காக்கணும் என் மங்கலமே
சத்தியத்தை காக்க உந்தன் சக்கரத்தை சுத்தி விடு
உக்கிரத்தில் நீ எழுந்து உண்மைக்கொரு வெற்றி கொடு
உன் நீதி பூமியில் தவறாகுமா ?
என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா ?
தாயே பெரியம்மா தாலி தரும் அம்மா
தெப்ப குலதம்மா தேரடி பூவம்மா
மங்களம் நீயம்மா மந்தவெளி அம்மா
அர்தனாரியம்மா அன்னை ஜோதியம்மா
வடிவுடையம்மாவே திரிப்புரசுந்தரி
வேற்காடு மாயம்மா கஸ்துரி தாயம்மா
உருமாறி உலகம்மா உருத்ரக்ஷா திலகம்மா
உண்ணாமுலை அம்மா பன்னாரி அம்மாவே
மகேஸ்வரி சர்ப்ப யாகெஸ்வரி
அடி லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி
சக்தி ஜெகதீச்வரி அன்னை பரமேஸ்வரி
எங்கள் புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி
அபிராமி சிவகாமி அருள்மாரி மகாமாயி
மமுண்டி சாமுண்டி பாஞ்சாலி அத்தாயீ
சோலையூர் மகாமாயி ஓம் சக்தி தாயே
அம்பாள் அருள் எல்லாருக்கும் கிடைக்க பிரார்த்திப்போமாக !!