நம்முடைய வறு வல்களும் ; சிந்தனைகள் , மனதில செய்ய நினைத்தவை , செய்தவை ,நல்லதாக பார்த்து சுட்டவை ,சுடாமல் சொந்தமாய் தயாரிச்ச தலைப்புக்கள் என்று ஒரு மொக்கை போடும் இடம்
ஒரு தாயின் தாலாட்டை கேட்டது குழந்தை பருவத்தில், அந்த தாலாட்டு நினைவில் திரும்பி வருவதில்லை,ஆனால் ஒவ்வொருவருடைய தாயின் தாலாட்டு இப்படித்தான் இருக்கும் என்று காட்டிய இசையின் இசையே , எனது உள்ளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். தொடரட்டும் உமது இசைப் பயணம், உன் நிழலும் இசை பாட நாங்கள் ரசித்திருப்போம்.
இசைஞானி இசையில் வந்த எந்த பாடலும் எனக்கு பிடிக்கும். எத்தனை என்று போடுறது அதால என்னை கவர்ந்த கொஞ்சம் வித்தியாசமாய் எனது தெரிவுகள் :
விண்ணைத்தாண்டி வருவாயா பாட்டு வந்த காலத்தில் இருந்து எனக்கு இந்த பாட்டும் மெட்டும் ரொம்பவே பிடிச்சு போச்சு.. நேற்று இந்த பாட்டை பாடிய அல்போன்சு நேரடியாக ஒரு நிகழ்ச்சியில் பாடியதை பார்த்து உள்ளம் உருகி விட்டது.
உங்களுக்கும் இந்த பாட்டு பிடிக்கும் என்று நினைகின்றேன்.
மாமலை ஏறி வரும் தென்னல்
புது மணவாளன் தென்னல் , ...
பள்ளி மேடையே தொட்டு தலோடி குருசில் தொழுது வரும்போல்,
கடந்த ஒரிரு நாட்களாக , ஊருக்கு போகணுமே .. என்று ஒரே வேலை , அதற்கு இடையில் ஒரு குறுகிய பயணமாய் வேறு ஊரில் தற்போது நிற்கின்ற போதும், எப்பிடியாவது , சினி திரைகளில் வந்த பாடல்களில் , ஒரு மேடையில் மட்டுமே பாடி ஆடி அசத்திய பாடல்களின் தொகுப்பை போட்டே தீரனும் என்று ஒரு முடிவுடன்................
பொதுவாக கர்நாடக இசைக் கச்சேரி மேடைகளில் பாடப்படும் கீர்த்தனைகள் சரி , கதாநாயகிகள் மேடைகளில் ஆடும் நாட்டிய பாடல்கள் சரி திரைப்படங்களில் இடம்பெறும்போது, அவை நிஜ மேடைகளில் எந்த ராகத்தில் இசைக்கப் படுகிறதோ அல்லது எப்படி ஆடப்படுகிறதோ அதே மாதிரி தான் சினிமா படங்களிலும் இடம் பெறுகின்றது.
ஒரு காலத்தில் மேடை அமைத்து அதில் நாயகி சரி நாயகன் சரி ஒரு பாட்டு பாடும் போது அதை சபையோர் இருந்து ரசித்தல்(இதில் நாயகனோ நாயகியோ சபையில் இருந்து ரசிக்கலாம் , இதுவும் உள்ளடக்கம் ), அல்லது நாயகியும் நாயகனும் போட்டிக்கு பாடுதல் போன்றவையே ஒரு காலத்தில் டூயட் , அல்லது காதல் வளர்க்கும் , காதல் தோல்வி பாடல் காட்சிகளாக வந்து ரசிகர்கள் மனதில் பிரபல்யம் அடைந்தது.
இந்த வகை இன்று அருகி விட்டது . இன்று கதாநாயகியும் நாயகனும் வீட்டில் சந்தித்து அல்லது எங்கையாவது தோட்டத்தில் , ஆற்றில் குளிக்கும் போது , அல்லது படிக்கும் கூடத்தில் , வகுப்பறையில் சந்தித்து கதைத்தால், உடனே வரும் டூயட் பாடல் அமெரிக்காவிலோ , அல்லது வேறு எந்த ஒரு நாட்டிலையோ எடுத்து விட்டு அதன் மூலம் ரசிகர்களையும், வசூலையும் அள்ளி கொள்வார்கள் இந்த சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்.
முதல் வகையில் எனக்கு
பிடித்த பல பாடல்கள் இருந்தாலும் , மிகவும் பிடித்த பாடல்களை இங்கே தருகின்றேன். உங்களுக்கும் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
பாடறியேன் படிப்பறியேன் இது மேடை நிகழ்ச்சியில் சித்ரா பாடியது இதைப்பாருங்கள்
2- ஆடல்கலையேதேவன்தந்தது.. ரஜனியின் 100 ஆவதுபடம் : ஸ்ரீராகவேந்திரா அதில் அம்பிகா ஆட, ரஜனி பாட ( உண்மையில் ஜேசுதாசின் அந்த இனிமையான குரல்தான் இந்த பாட்டை பிர பல்யப்படுத்தி விட்டது) சபையோர் ரசிப்பதை பார்த்தால் என்ன ஒரு சுகம்...:)
3- சங்கீதம் பாட ஞானம் உள்ளவர்கள் வேண்டும்.. இந்த பாட்டை என்னவோ தெரியவில்லை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.. அதுவும் ஷோபனா படத்தில் தூள் நடிப்பு..காமெடி .. இந்த படத்தில் சூப்பர் கிட் பாடல்கள் இன்னும் இருக்கு... பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் பாருங்கள்.. இளம் வயது சிவமணி ட்ரம்ஸ் வாசிச்சு கலக்கி இருக்கார். இசை ஒரு பெருங்கடல் அதை ஞானத்தால் பாடுவதா அல்லது கேள்வி ஞானம் போதுமா என்று பாலா வும் வாணி ஜெயராமும் வரிந்து கட்டி கொண்டு பாடுவதை பார்த்தால் உண்மையிலே புல்லரிக்குது...:)
4- சலங்கைஒலிபடம்இருபது வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும்விடாதஒருமாபெரும்பிரமிப்பு. எத்தனைமுறைபார்த்திருப்பேன்என்பதற்குகணக்கேஇல்லை. இசைஞானிக்கு தேசிய விருதை வாங்கித் தந்த படம்!கமல்ஜெயப்பிரதா .. நடிப்பு.. நாட்டியம்பற்றிசொல்லிமுடிக்கஏலாது. , எஸ் .பிசைலஜாவின் அருமையான நாட்டியம்.. சொல்ல முடியாத வார்த்தைகள்.. பாடல் மட்டுமாபாடுவேன் .. ஆடவும் தெரியும் என்று ஆடிக்காட்டி படத்தையே அசத்தியவர் இவர்.
இந்த படத்தில் வந்த எல்லா பாடல்களும் ரொம்பவே பிடிக்கும். ஆனால் இங்கே நான் மேடையில் ஆடிய பாடல்கள் வரிசையில் இந்த பாட்டை மட்டும் தரு கின்றேன்.
சலங்கையின் ஒலி என் காதுகளில் இன்னும் பல வருடங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும்!
சலங்கை ஒலியை தொடர்ந்து சலங்கையிட்டாள் ஒரு மாதுவும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். :)
6- சங்கீத ஜாதி முல்லை ... என்ன படமையா.. காதல் ஓவியம்.. இப்படி என்னொரு படம் இப்ப எடுத்தால் நான் முதல் ஷோ பார்க்க முதல் நாள் இரவே போய் நிற்பேன் ..
பிடித்த வைரவரிகள் .. எஸ் பியின் பழைய குரல்...
விழி இல்லை என்னும் போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
பூவில் ஒரு வண்டு, வெள்ளிச்சலைங்கைகள், நதியில் ஆடும் பாடல்கள் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை...
7- தில்லான மோகனாம்பாள் - பத்மினி .. ஸ்ஹபாஆஆ என்ன வென்று எல்லாம் சொல்லுறது. நலந்தானாவைப்பாருங்கள் .. ரசியுங்கள்
8- கங்கைக்கரை மன்னனடி- வருஷம் 16 . குஷ்புவின் அறிமுகம்.. படத்தில் மேடையில் ஆடி அசத்தும் அருமையான பாடல் .. ஜேசுதாஸ் குரலில்.. இனிமைதான்:)
ஆமா எனக்கு ஒரு சந்தேகம் .. இப்ப நடிக்கிற நடிகைகளுக்கு இந்த பரத நாட்டியம் தெரியாதாமே .. அல்லாட்டி ஒரு பரத நாட்டியம் ஆடின கட்சியை அங்கே இங்க .... வைத்து இருக்கலாமே ,... :)
எப்புடி இருந்தாலும் எங்கட ஜோதிகா அசத்திய ரா ரா நாட்டியம் இன்றைக்கும் வியக்க வைக்கும் ஒன்றே எனக்கு ..
தென் இந்திய தமிழ் தொலைக்காட்சிகள் பெரும்பாலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளையே கொண்டு தான் காலத்தை ஓட்டி கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு தொலைக்காட்சியும் வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்கு பெயர் போனது.
சில இருக்கிற எல்லா சீரியல்களையும் போட்டு காலத்தை ஒட்டி கொண்டு இருக்கின்றன . அந்த சேனல்களை நான் இங்கே கருத வில்லை. அதே போல் சினிமா, டாப் டென் பாடல்கள், திரை விமர்சனம், டாப் டென் திரைப்படங்கள், சமையல் சமையல் ( இது கடுப்பு ஏத்தும் நிகழ்ச்சி ) இவையும் இங்கே நான் கருத வில்லை.
சன் டிவி யில் பெரும்பாலும் அசத்தபோவது யாரு, தயாரித்து வழங்கும் காமெடி டைம் எல்லாரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகள்.
ஜெயா டிவி யில் வரும் ராக மாலிகா, என்னோடு பாட்டு பாடுங்கள் ( இது இப்போது இல்லை) போன்றவையும் ,
அதே போல் கலைஞர் டிவி யில் , பாட்டுக்கு பாட்டு , மானாட மயிலாட போன்றவை பிர பல்யமானவை. ( வேறு ஏதும் இருந்த மன்னியுங்கப்பா)
எனக்கு தெரிந்த நண்பர்களிடம் நான் கேட்பது அடிக்கடி யாரவது சொக்குதே மனம் என்ற இசை நிகழ்ச்சி நடப்பது தெரியுமா என்று ?? யாருமே அதை பார்ப்பதாக சொல்லவுமில்லை. சிலர் அப்படி ஒன்று இருக்கா என்று கூட கேட்டார்கள்.
இதுக்காக எல்லாருக்காகவும் சேர்த்து ஒரு சிறு தொகுப்பை தருகின்றேன்.
சொக்குதே மனம் இரவு ஒன்பதரை மணி முதல் பத்து மணி முதல் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் இந்தவித்தியாசமான நிகழ்ச்சியில் மனதைக் கரைக்கும் அருமையான பழைய ஹிட்பாடல்களை ரீமிக்ஸ் செய்து பாடிக் காட்டி அசத்துகிறார்கள்.
ராத்திரியாச்சுன்னா, மிட் நைட் மசலாக்களைப் பார்த்து விட்டு தூங்கப் போகும் சகலமகா ஜனங்களுக்களையும் நல்ல திசையில் திருப்பும் வகையில், சொக்குதே மனம் என்ற ஒரு அருமையான வித்தியாசமான நிகழ்ச்சியைப் போட்டு வித்தியாசமான விருந்தைப்படைத்து வருகிறது ஜெயா டிவி.
ப்ரியா சுப்ரமணியன்
தொகுத்து வழங்குவதிலும் பார்க்க, பூத்து குலுங்கும்புன்னகை , இனிமையான குரல், அணிந்து இருக்கும் ஆபரணங்கள் , விதம் விதமான சேலைகள் என்று சொல்லி எல்லாரையும் ஆட்டம் காண வைக்கின்றார் பிரியா சுப்ரமணியன்.
மேடையமைப்பு : கலர் கலரான மின்குமிழ்கள், அழாகான ஓவியங்கள், பிரமிக்க வைக்கும் சிற்ப வேலைப்பாடுகள் என்று நீட்டி கொண்டே போகலாம்.
பாடகர்கள்: யார் குரலிலும் பாடும் வல்லமை கொண்ட பாடகர்கள் , பாடகிகள். அதுவும் பழைய ஆண் குரல்களான ராஜா, சௌந்தராஜன் ,ஸ்ரீநிவாஸ், பிறகு ஜேசுதாஸ் , பாலா , இளையராஜா , ஜெயச்சந்திரன் ,வாசுதேவன் என்று எல்லா குரல்களும் இருக்கும். அதே போல பெண் குரல்களான ஜானகி, ,சுஷீலா என்று நீட்டி கொண்டே போகலாம்.
இசைக்குழு: தரமான குழு , ஒரு இசை நிகழ்ச்சி நடத்த தேவையான எல்லா விதமான இசைக்கருவிகளும் , வித்துவான்கள் போன்ற கலைஞர்களும் இருப்பார்கள்.
இந்தியாவில் இந்த நிகழ்ச்சி பெரும் கிட். பழசுகள் சரி, புதுசுகள் சரி விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி.
திரைப்பட வீடியோ கலவையுடன் தரமான ஒலி, ஒளியமைப்புடன் ஞாயிறு இரவில் சொக்குதே மனம் ரசிகர்களை சொக்க வைத்து விட்டு செல்கின்றது. நான் இந்த நிகழ்ச்சியை நீண்ட நாட்களாக பார்த்து ரசித்து வருகின்றேன். அதிலும் குறிப்பாக இறுதியாக ஒரு சூப்பர் கிட் இளையராஜாவின் இசையில் வந்த சூப்பர் கிட் பாட்டை பாடி எல்லாரின் மனதையும் திருடியது மட்டும் இல்லாமல் வசிகரீத்தும் செல்வார் சிரிப்பழகி ப்ரியா .