நம்முடைய வறு வல்களும் ; சிந்தனைகள் , மனதில செய்ய நினைத்தவை , செய்தவை ,நல்லதாக பார்த்து சுட்டவை ,சுடாமல் சொந்தமாய் தயாரிச்ச தலைப்புக்கள் என்று ஒரு மொக்கை போடும் இடம்
கடந்த நாட்களில் பல்கலைக்கழகம் மூடப்பட்டு இருந்தாலும், என்னதான் காரணம் என்று கேட்காமலே சொல்லலாம். வேற என்ன ஐந்து சிரேஷ்ட மாணவர்களை பல்கலைப்படிப்பில் இருந்து நீக்கியது தான். இது ஒரு வருஷமா, அல்லது நிரந்தரமாய் என்றா எனக்கு தெரியாது. இப்போது உள்ள கடும் சட்ட திட்டங்களுக்கு, (நாங்கள் படிக்கும் காலங்களில் இருந்தது போல் அல்ல ) யாரவது பகிடிவதையில் ஈடு பட்டால் , ஈடுபடுவோர் எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பும் உரிமை உபவேந்தருக்கு இருக்கு. அப்படித்தான் எங்க கழகத்திலும் நடந்திட்டு. விடுவாங்களா நம்ம பசங்க , உடனே போராட்டம் தான். போராடுறவன் போராடட்டும் என்று போட்டு , மிச்ச சொச்சம் எல்லாம் வீடுகளுக்கு படை எடுத்திட்டு. ஒரு சிலதுகள் (வீட்டை போயும் வேலை இல்லை என்று சொல்லுறதுகளை சொல்லுறன் ) இங்கயும் அங்கயும் அலைந்து திரியுதுகள். வழமை போல ஜோடிகளுக்கு வசந்த காலம். எதுவித அழுத்தங்களும், தடைகளும் இல்லாமல் தங்கள் இனிய மாலை, இரவுப் பொழுதுகளை "போக்கி" கொண்டு இருக்குதுகள். நம்மளை யாரும் கேட்பாரில்லை.. :( எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ். வெளியிடவேண்டிய கணணி சார்ந்த வெளியீடுகளை தயாரித்து கொண்டு இருக்கின்றேன். வழமை போல பின்னணி இசை இசைக்க, அடியேன் வேலை செய்து கொண்டு இருக்கும் போது, இணைய வானொலியில் , வந்திச்சு அந்த பாட்டு.. ரொம்பவே நல்ல இருந்திச்சு ஐயா யேசுதாசின் குரலும், சித்ரா அம்மாவின் குரலும் கலந்தொலிக்க ரெட்டை கிளிகள் அன்றாடம் பேசும் ...கட்டில் கதைகள்:) பலதடவை கேட்டு கேட்டு .. களைத்து போயிட்டன். ராஜாவின் இசை ......என்னப்பா .. வார்த்தைகள் இல்லை .. சொல்ல..
நீங்களும் கேட்டு பாருங்களேன்..(situation song pa.... யாருக்கு .. அதுவும் .. இந்த ஜோடிகளுக்கு தான் ) கேட்டு போட்டு சொல்லுங்க.. மாப்பு எப்படி உங்கலால மட்டும் என்று மட்டும் கேட்டு நோகடிச்சுடாதையுங்க..:(
பாடல்: ரெட்டைக்கிளிகள் திரைப்படம்: ஒரே ஒரு கிராமத்திலே இசை: இளையராஜா பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & சித்ரா
ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள் இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும் எட்டுத்திசைகள் தண்ணீர் மேகம் பன்னீர் தூவும் பன்னீர் துளியும் வெந்நீராகும் இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்
ஈர பூக்களில் தேன் இதழ்களில் விழ நான் எடுத்தேன்...நான் எடுத்தேன் ஓர பார்வையில் உன் உணர்ச்சிகள் வர நான் படித்தேன்...நான் படித்தேன் இதயத்தை திறந்தாய் நீ இடையினில் விழுந்தேன் நான் எனக்கென பிறந்தாய் நீ இருப்பதை கொடுத்தேன் நான் நெஞ்சை தழுவி என் தோளில் சாயும் வெள்ளி அருவி கண்ணில் எழுதி உன் பேரை பாடும் வண்ண குருவி சங்கீதம்தான்...சந்தோஷம்தான் நம் உறவினில் பல சுரங்களும் லயங்களும் எழ
ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள் இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும் எட்டுத்திசைகள் தண்ணீர் மேகம் பன்னீர் தூவும் பன்னீர் துளியும் வெந்நீராகும் இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்
நேற்று ராத்திரி என் உடல் நனைந்திட நான் விழித்தேன்...நான் விழித்தேன் காதல் நாயகன் உன் கனவினில் வந்து நான் கலந்தேன்...நான் கலந்தேன் இருட்டினில் வரலாமா இருபுறம் தொடலாமா இலக்கியம் இதுதானே இலக்கணம் கெடலாமா விட்டுக்கொடுத்தால் கண்ணா உன் வேகம் கட்டுப்படுமா தொட்டுப்பிடித்தால் கண்ணே உன் பார்வை சுட்டுவிடுமா அம்மாடி நான் பெண் பாவைதான் உன் விரல்களும் தொட தலைமுதல் அடிவரை சுட
ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள் இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும் எட்டுத்திசைகள் தண்ணீர் மேகம் பன்னீர் தூவும் பன்னீர் துளியும் வெந்நீராகும் இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ லல்லலல்லலாலல்லாலா லாலாலல்ல லல்லலா
தேசிய அடையாள அட்டை மாற்றனும். இத்தனை வயசாச்சு ( மூன்று கழுதை வயசு) இப்பவும் பாடசாலை மாணவன் என்று போட்டு இருந்தால், அதை பார்த்திட்டு என்னையும் பார்த்திட்டு (எனது வடிவையும் , உடலமைப்பையும் சொன்னேன் ) கட்டி வைச்சு பொல்லால அடிப்பாங்கள் . அதால அட்டையை மாற்றுவம் என்று போட்டு விதானையிட்ட போய் ஒரு பத்திரம் எடுத்து நிரப்ப வெளிக்கிட்டால் கனக்க பிரச்சினை.
இருந்த ஊர்களில் எந்த ஊரை சொந்த ஊர் என்று போடுறது. பிறந்த இடத்தை தான் போடுறது வழமை . இருந்தாலும் பிறந்த ஊரில் நான் ஒரு அல்லது இரண்டு வருடம் தான் இருந்தேன். வவுனியாவில் எட்டு வருடங்கள் , சுன்னாகத்தில் ஒரு வருடம் , யாழ்ப்பாணத்தில் எட்டு வருடங்கள், கொழும்பில் பதினான்கு வருடங்கள் ( இதுக்க கண்டியில் ஐந்து வருடங்கள் , நெதர்லாந்தில் மூன்று வருடங்கள் , வேலை செய்யும் ஊர் ஐந்து வருடங்கள்உள்ளடக்கம்).
விதானை என்னுடைய கதையை கேட்டால் தலை சுத்தி விழுந்தாலும் விழுந்திடுவா. ( அம்மையார் தான் விதானை) . தொழிலை விட்டுட்டு போனாலும் போயிடுவா. ஹா ஹா :)
பிறந்த ஊர், இருந்த ஊர், புகுந்த ஊர், புலம்பெயர்ந்த ஊர் , படித்த ஊர், வேலை செய்யும் ஊர், எத்தனை ஊரையா எம்மளுக்கு ?? நம்மளுக்குஎங்குஇருந்தாலும்எல்லாம்ஒன்றுதான்.
(கண்ணனின் யாழ் புகைப்பட தொகுப்பில் இருந்து )
இந்த ஊர் கதை சொல்லும் போது எனக்கு பிடித்த கண்ணதாசனின் வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றது.
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை சொல்லவா? அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா?
இன்று உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது. என்னை பொறுத்த மட்டில் வருடம் முழுதும் கொண்டாடினால் தான் அவளருமை, பெருமை களை சொல்லி முடிக்கலாம். எல்லாருடைய அம்மாக்களும் போற்றப்பட வேண்டியவர்கள். அவர்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
என் வாழ்வில், எனது அம்மா குருவாக, அன்னையாக, வாழ்கையின் ஒவ்வொரு படிகளிலும் எனக்கு உதவியாக/ வழிகாட்டியாக இருந்து வருகின்றதை நினைக்க பெருமையாக இருக்கின்றது. எனது அன்னையர் தின வாழ்த்துக்கள் உங்களுக்கு உரித்தாகட்டும்.
எனக்கு பிடித்த அம்மா பாட்டு... உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைகின்றேன் ...
மலையே ஆடினதாம் மதிலாடினால் என்ன. அதுதான் எனது திருமண வாழ்க்கை, இன்னும் ஒரு இரு நாட்களுக்குள் முற்று புள்ளிக்கு வந்து விடும். நீண்ட நாட்களாக நான் பட்ட துன்பியல் அனுபவங்களுடன் கூடிய விளக்கமான அறிக்கை கொழும்பு மாவட்ட நீதி மன்றம் விவாகரத்து வழங்கப்படுகிறது என்று அறிவித்த பின்னர் தரப்படும். அனுபவங்கள் வாழ்கையின் பாடங்கள்......:)
மனதை உருக்கிய பாடல்: கடந்த வாரம் 155 இலக்க பஸ்ஸில் மருதானைக்கு சென்று வர வேண்டியதாயிற்று. வெள்ளவத்தையில் ஏறும் போது பஸ்ஸில் சனமே இல்லை, இருந்தாலும் கொஞ்ச சனத்தை தன் சாதுரியத்தால் சேர்த்து போட்டான். முன் ஆசனத்தில் இருந்து பஸ்ஸின் இசைதட்டில் இருந்து ஒலித்து கொண்டு இருந்த அழகான சோக பாடல்களை இரசித்து கொண்டு இருந்தேன். கேட்ட பாடல்களில் எனக்கு பிடித்த, என்னை இரசிக்க வைத்த பாடல் இதுதான். நெஞ்சே நெஞ்சே பாவை நெஞ்சே ........................:)
விசேடமாக இந்த பாட்டை ஓட்டுனர் திருப்பி திருப்பி போட்டு பஸ்ஸில் சென்றோருக்கு தன் காதல் "வலி"மையை உணர்த்தி விட்டார். மருதானையில் இறங்கும் போது அவருக்கு ஒரு வாழ்த்து சொல்லி போட்டு இறங்கினேன்:).
சுறா அனுபவங்கள்
நீண்ட நாட்கள் வெளிநாட்டில் இருந்து வித்தியாசமான இரசிகர்களுடன் திரைப்படம் பார்த்து வந்த நான் , அண்மையில் விஜய் இன் சுறா படத்தை லோக்கல் பஜாருடன் பார்த்து ரசித்தேன்( ஒரு பொய் சொல்லுறன் ). தமன்னாவுக்காக தான் நான் அந்த படத்தை பார்த்தேன். தமனாவை ரசித்தேன். படம் பரவாய் இல்லை .. இருந்தாலும் விஜய் அடுத்த முறையாவது அடுத்தவன் காசை சுரண்ட முன், கொஞ்சம் கவனமாய் படத்தை எடுத்தால் சரி.
சுறா படம் பற்றி வந்த ஜோக்ஸ் களில் எனக்கு பிடித்தது :
மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனையை விட அதிகபட்ச தண்டனையாக கட்டி வச்சு சுறா திரைப்படம் பார்க்க விடவேண்டும் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் இன்று கோரிக்கை விடுத்தார்:)
எனக்கு பிடித்த பாடல், எனது கைத்தொலைபேசி ரிங் டோன் பாடல் ...என்னுடைய பிடித்த நடிகை தமனாவின் பாடல் ..இப்படியே சொல்லி கொண்டுபோகலாம் .. இதோ உங்களுக்காக( பாட்டு பாதியில் நிக்குறதுக்கு நான் பொறுப்பில்லை)
துளி துளி துளி மழையாய் வந்தாளே... சுட சுட சுட மறைந்தே போனாளே... பார்த்தால் பார்க்க தோன்றும் பேரை கேட்க தோன்றும், பூபோல் சிரிக்கும்போது காற்றாய் பறந்திட தோன்றும்.... செல் செல் அவளுடன் செல் என்றே காள்கள் சொல்லுதடா... சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொள்ளுதடா... அழகாய் மனதை பறித்து விட்டாளே.......
தேவதை அவள் ஒரு தேவதை அழகிய பூமுகம் காணவே ஆயுள்தான் போதுமோ! காற்றிலே அவளது வாசனை அவளிடம் யோசனை கேட்டுத்தான் பூக்களும் பூக்குமோ!
நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும், பார்வை ஆளை தூக்கும்... கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும்... பாதம் ரெண்டும் பார்க்கும்போது கொலுசாய் மாறதோன்றும்... அழகாய் மனதை பறித்து விட்டாளே....
செல் செல் அவளுடன் செல் என்றே காள்கள் சொல்லுதடா... சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொள்ளுதடா...
சாலையில் அழகிய மாலையில் அவளுடன் போகவே ஏங்குவேன் தோழ்களில் சாயுவேன்.. பூமியில் விழுகிற வேளையில் நிழலையும் ஓடிபோய் ஏந்துவேன், நெஞ்சிலே தாங்குவேன்,
காணும்போதே கண்ணால் என்னை கட்டிபோட்டாள், காயமின்றி வெட்டி போட்டாள்.. உயிரை ஏதோ செய்தாள்... மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும் அங்கே வந்து ஒட்டு கேட்டாள்... கனவில் கூச்சல் போட்டாள்... அழகாய் மனதை பறித்து விட்டாளே...
செல் செல் அவளுடன் செல் என்றே காள்கள் சொல்லுதடா... சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொள்ளுதடா...
பெண்: வாழ்க்கை என்று எதுவும் இல்லை உந்தன் எந்தன் கதையாகும்
இருவரும் :ஒரு பாடல் நான் கேட்டேன் உன் பாசம் அதில் பார்த்தேன்.. வாழ்க்கை என்று எதுவும் இல்லை உந்தன் எந்தன் கதையாகும் ஒரு பாடல் நான் கேட்டேன்.................
நீண்ட நாட்களுக்கு பின் ஒரு படம் பார்க்கலாம் என்று போட்டு கணனி முன்னால் இருந்து எந்த படத்தை பார்க்கலாம் என்று தேடினால் .. தமிழில் தல படம் திரையரங்கு நிறைந்த கூட்டத்துடன் பார்த்தாச்சு. தீராத விளையாட்டு பிள்ளை , தமிழ்ப்படம் எல்லாமே இணையத்தில் வலம் வருகின்றன .. அவையும் பார்த்தாச்சு போன வாரம்.
"பா" படம் நல்ல படம் என்று யாரோ எல்லாம் சொல்லி இருந்தாங்க... சரி போய் இணையமூடகவே DVD தரத்தில் இருக்கின்ற இந்த படத்தை பார்த்தேன். ஆரம்பத்தில் எழுத்து ஓட்டத்தை skip பண்ணி போட்டு பார்த்து கொண்டு இருக்கும்போது எனக்கு கொஞ்சம் பிடிச்ச படமாய் தோன்றியது.
மகன் அபிஷேக் பட்சானின் நான் பார்த்த இரண்டாவது படம் இது.முதல் படம் குரு. அப்பா ( அந்த மேக்கப் செய்த விதம் குறித்து எனக்கு ஒருமின்னஞ்சல் வந்தது .. எங்கையோ விட்டுடன் ....), மகன் இருவரின் நடிப்பும் எனக்கு பிடிச்சு கொண்டுது. இப்படியே படம் பார்த்து கொண்டு இருக்கும்போது இருந்தால் போல ஒரு பாட்டு
இந்த பாட்டை கேட்டவுடனே எனக்கு இது இளையராஜா மெட்டாச்சே.. அவருக்கு பிடித்த மெட்டு இது என்று எனக்கு தெரியும்... அவர் அதை ஒரு நிகழ்ச்சியில் கூட சொல்லி இருந்தார். பின்னோக்கி உடனே போய் மிஸ் பண்ணின எழுத்தோட்டத்தில் பார்த்தால் அடே கொக்கா மக்கா எங்கட ராஜா சார் தானே இசை ..சுப்பரா இருக்கே .. உடனே என்னுடையே தேடல் ஆரம்பம் :
இது இளையராஜா வைத்த One Man Show இல் இருந்து :
இந்த மெட்டை கொண்டு ..... அவர் இசை வரலாற்றில் சூப்பர் கிட் ஆன பாடல்கள்.
மூலப்பாடல் தும்பி வா என்ற பாடல் ஓலங்கள் என்ற மலையாளம் படத்தில் 1982 இல் வெளி வந்தது.
இந்த தும்பி வாவும் நன்றாகவே இருக்கு
தெலுங்கில் இதே மெட்டில்:
இந்த மெட்டை கொண்டு , தமிழ் படமான ஆட்டோ ராஜா வில் ( திரைக்கு வந்த ஆண்டு - 1982)
இதை விட என்னால் கண்டு பிடிக்க முடியாமல் போன பாடல்
கண்ணே கலை மானே என்ற படத்தில் வந்த " நீர்வீழ்ச்சி தீமூட்டுதே ...தீ கூட குளிர் காயுதே " ஒளி வடிவம் இல்லாட்டி என்ன இரசிக்க ஒலி வடிவம் இருக்கு .. .. கேட்டு இரசியுங்கள்...
சரி வந்தனீங்க இந்த பொண்ணு போடும் இசையையும் பார்த்திட்டு போங்க
இத்தனை வருடங்கள் (28 வருடங்கள் ) ஆகியும் அந்த மெட்டும் அதே இசையும் இன்றும் என்றும் மக்கள் மனதில் வாழ்கின்றதுக்கு இது ஒரு உதாரணம்...
குறுகியபயணமாய்ஊருக்குவந்தநான்மீண்டும்ஒரு மேற்குலக ஊர்ருக்குநாளைபயணமாகஇருக்கின்றேன். அதுக்கானதயாரிப்புகள், நண்பர்களின்வருகைஎன்றுஇரவுஒன்பதுமணிகடந்துவிட்டது. சாப்பிட்டு அம்மாவுடன் கடந்த கால கசப்பான அனுபவங்களை உரையாடி விட்டு , ராத்திரி பத்து மணி , வீட்டில் பாயை ( இவ்வளவு காலமும் ஐரோப்பாவில் என்ன buildup எல்லாம் குடுத்து தான் படுத்து எழும்பிறது ) விரித்துப் போட்டு படுக்கும்போது, எனது இணைய வானொலி இதமான இரவில் நிறைந்த சுமைகளை இறக்கி வைத்து விட்டு கேளுங்கள் என்ற தனது வழமையான சேவையை ஆரம்பித்தது.
============விளம்பரஇடைவேளை================ கட்டிலில் படுத்தால் உருண்டு புரள ,விழ உடம்பு விடாதாம் என்று அடிக்கடி என்ற ரூமா சொல்லி, கம்பசில படிக்கிற காலத்தில என்னை விட எல்லாருமே பாய் தான் :) காரணமா :=============> கட்டாந்தறையில் ஒரு துண்டை விரித்தேன் கண்ணில் தூக்கம் சொக்குமே அந்து அந்த காலமே மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும் கண்ணில் தூக்கம் இல்லே அது இந்த காலமே <============================== சொல்லுவினம் .. ரொம்பவே ஓவர் தான் .. :) உண்மையிலஉடம்புகூடினரூமாநான்தான் ..:) இருந்தாலும் எனக்கும் பாய் தான் விருப்பம் .. இவங்கலால double பெட் இல் கடைசியா நான் தான் படுக்கிறது.
============விளம்பரஇடைவேளை================
(இந்த பாயிலையும் பனையோலைப்பாய்,.. தான் நல்லமாமே )
தினமும் நள்ளிரவை கடந்த வேளைகளில் ஒலிக்கும் இதமான பாடல்களை இந்த அலைவரிசையில் கேட்பதுவும் அதில் எனக்கு பிடித்த பாடல்களை ஆங்காங்கே தேடிப்பிடித்து போடுவதும் எனது கடந்த கால அனுபவங்கள். இன்றைய நாளில் வந்த பாடல்களில் முத்தான மூன்று பாடல்கள் நான் ஒரு சில தடவைகள் கேட்டு உள்ளேன்...இருந்தாலும் என்னமோ நீண்ட நாட்களுக்கு பின் கேட்கும்போது அதுவும் எங்கட வீட்டில் இருந்து கேட்கும் போது வரும் ஆனந்தம் என்றுமே மிகையாகாது. அம்மாவின் வழமையான ஒடர் : தம்பியவை உதுகளுக்கு கிட்ட படுக்காதையும் , நாங்களும் சொல்லுறது தூரத்தில தான் படுத்து இருக்கேன்,,, என்று.. :) உண்மையாவே ஐரோப்பாவில் இருந்த போது பக்கத்தில தான் பாட்டு பெட்டியும் , லேப்டாப் இம் . தூங்கிட்டே இருக்கும்போது இடைக்கிடை எழும்பி யாருக்காவது அழைப்பு செய்வதும், இல்லாட்டி farmville விளையாடுவதும் ஒரு வழமையான ஒன்றே,
சரி இந்தாங்க இன்றைய பாட்டுகள் :
1) நீ பௌர்ணமி ... ஜேசுதாஸ் ஐயா பாடின மெகா கிட்டான பாடல்:
2) ஆலமரம் மெல்ல வரும்
3) மீரா படத்தில் வந்த ஜேசுதாஸ் பாடின - புது ரோட்டில தான்
தற்போது ஒரு புற நாட்டில் ஏதோ கல்வி சம்பந்தமான வேலையில் வந்து நிக்குறோம். விமான நிலையத்தில் மூன்று மணி நேரம் வெள்ளனவே ஆஜரானதால் ஒரு கரையாக இருந்து ஒருக்கா இந்த ஒரு இரண்டு பாட்டுகளை கேட்டால் ஏதோ இருக்கிற சுமை எல்லாம் இறங்கி ஓடினதாகவே இருக்கும்.. என்று இணையத்தில் எனக்கு பிடித்த ஒரு சில பாட்டுகளை கேட்டு ரசித்தேன்...... அவற்றில் சில உங்களுக்கும்..
கட்டு மஸ்தான மோகினி
முதலாவது சின்னக்குயில் சித்ராவின் குரலில் வந்த சொந்தம் வந்தது வந்தது... இந்த பாட்டை சித்திரா பாடும் போது பாட்டை ரசித்து கேட்டு ஒரு நிகழ்ச்சியில் அழுத நடிகை கூட இருக்கு.. :) கேட்டு பாருங்க..
சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் தந்தது மாசங்கள் போனாலும் ....... பாசங்கள் போகாது மாமா சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் தந்தது சொர்க்கம் வந்தது வந்தது அதை சொன்னால் என் மனம் துள்ளுது மாசங்கள் போனாலும் வருசங்கள் ஆனாலும் பாசங்கள் போகாது மாமா சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் தந்தது சொர்க்கம் வந்தது வந்தது அதை சொன்னால் என் மனம் துள்ளுது
கண்ணேன்னு சொல்ல வேண்டாம் கிளியேன்னு கிள்ள வேண்டாம் கண்ணாலே கொஞ்சம் பொறு போதும் நீ வாழும் வீட்டுக்குள்ளே நீ போடும் கோட்டுக்குள்ளே நீங்காம இந்த பொண்ணு வாழும் உன்னையே நானே உசுரா தானே நினைச்சேன் மாமா நெசந்தான் ஆமா நான் வாங்கும் மூச்சிக்காத்து உன்னாலதான் உன்னாலதான் ஓயாம உள்ளஞ்சொல்லும் உன் பேரை தான் உன் பேரை தான் சொந்தம் பந்தம் நீ..... (சொந்தம் வந்தது..)
பூப்போல தேகம் தொட்டு சோப்பாலே தேச்சி விட்டு நீராட்ட நீயும் ஒரு சேய் தான் வாய்யான்னு உன்னை கொஞ்சி வாயார உன்னை சொல்லி சோரூட்ட நானும் ஒரு தாய் தான்
இரவா பகலா இருப்பேன் துணையா கண்ணீர் வடிஞ்சா தடுப்பேன் அணையா போகாது உன்னை விட்டு என்னாசை தான் என்னாளும்தான் போனாலும் மண்ணை விட்டு பொட்டோடுதான் பூவோடு தான் வாழ்வோம் மாமா நாம்.... (சொந்தம் வந்தது..)
இரண்டாவது பாட்டை நான் முக வலையில் இணைத்து இருந்தாலும் அந்த அழகிய குரலில் ராஜா அங்கிள் பாடும் போது என்னமோ தெரியல தொடர்ந்து கேட்டிட்டே இருக்கலாம் மாதிரி. மோகினி நடிகையின் ஆரம்ப கால நடிப்பில் (1991 இல் ) வந்த நாடோடி பாட்டுக்காரன் படத்தில் ...
அப்புடி இருந்தனான் இப்படி ஆகிட்டேனே :)
மூன்றாவதுமுத்தானபாட்டுதான் : பனிவிழும்இரவு - மௌனராகம் ரொம்ப நாளாவே ... பிடிக்கும்.. :) ஜானகி எஸ் .பி . ராஜா அங்கிள் போட்டு தாக்கி இருக்கினம்.
நான்காவது :இது சின்ன பூவே மெல்ல பேசு படத்தில் வந்த சின்ன பூவே மெல்ல பேசு பாட்டு..
இறுதியாக கட்ட பொம்மன் படத்தில் வந்த .. ஒ.. ப்ரியா ப்ரியா.. எனக்கு பிடித்த பாட்டு.. எங்க இந்த பாட்டு போனாலும் நின்று கேட்டுட்டு போவேன் ,,, அப்படி ஒரு ஆசை இந்த ப்ரியா வில் எனக்கும் வீட்டு பேர் ப்ரியா தானே ..:)
காதலர் தினம் கொண்டாடும் .. ஒரு தலைக்காதல், கண்டதும்காதல், நிண்டதும் காதல், உண்மைக்காதல் , இரு தலைக்காதல், கள்ளக்காதல் என்று எல்லாக்காதல் நண்பர் களுக்கும் .. அவை எல்லாம் வெற்றி பெறவாழ்த்துக்கள்.
சந்தேகம் ??? இன்று காதல் ஜோடி களுக்கு மட்டும் தானா தினம்? இல்லை காதல் ( அன்பையும் குறிக்கும் ) கொண்ட (பெற்றோர் மீது , படிக்கும் பாடம் மீது, இல்லாட்டி ஒரு பிரபலம் மீது , அரசியல் வாதி மீது ) இவர்களுக்கும்... காதலர் தினம் தானே ???
காதல் ஜோடிகளுக்கு எத்தனையோ பேர் வாழ்த்து தெரிவித்து கொண்டு இருக்கும் நேரத்தில்.. கொஞ்சம்..நான் ... ...
காதலில் தோல்வியுற்றோருக்கு யார்தான் ஆறுதல் சொல்வது. அவர்களையும் இன்று மறக்க கூடாது. அவர்கள் அந்த வலியில் மூழ்கி கிடக்கும் நேரத்தில்..
சரி நாங்கள் ஆறுதல் சொல்லும் அளவுக்கு வளரவில்லை .. இருந்தாலும் என்றோ ஒரு நாள் நீங்களும் ஆறுதல் அடைய வேண்டும்...
பாருங்கள் காதல் தோல்வியால் வந்த வலி செய்யும் வேலைகளை ..
பாருங்க வீட்டில் அம்மா, அப்பா, சகோதரங்கள் , நண்பர்கள் என்று எல்லாரும் அந்தரித்தே போய் விட்டார்கள் ..
என்றையோ ஒரு நாள் சுட்டது:)
காதல் தோல்வியா? அழு... வாய்விட்டு அழு... கதறிக்கதறி அழு... உன் கண்ணீரோடு காதலும் கரைந்து போகும்வரை அழு... பின்பு உலகத்தைப் பார்... காதலையும் மீறி எத்தனையோ அழகுகள்... காதல்தோல்வியும் தாண்டி எவ்வளவோ பிரச்சனைகள்... அழகுகளை ரசிக்கக் கற்றுக்கொள்... பிரச்சனைகளை தீர்க்க பழகிக்கொள்... வாழ்வதற்கே வாழ்க்கையென்பதை புரிந்துகொள்...!
பெற்றவள் இறந்தாலே கண்ணீர்தான் சிந்துகிறாய்... காதல் இறந்ததற்கா உயிரைச் சிந்தத்துணிகிறாய்? காதல் புனிதமானதுதான்... புனிதமான தெதுவும் உயிரை விலையாய் கேட்பதில்லை. விலங்குகளை பலிகொடுத்து கடவுளின் புனிதத்தை கெடுக்கிறோம்... நம்மையே பலிகொடுத்து காதலின் புனிதத்தை கெடுக்கிறோம். நண்பா ... பாருங்கள் தோல்வியா? இந்த இந்த தேடிச்சென்றகாதலைமறந்து தேடிவரும்காதலைஅணைத்துக்கொள்... காதலையே வெறுத்திருந்தால் களவைப் போல காதலையும் கற்று மறந்ததாய் நினைத்துக்கொள்... வாழ்க்கையென்பது வாழ்வதற்கே என்பதைப் புரிந்துகொள்...!
இந்த தொகுப்பில் எனக்கு பிடித்த ஒரு சில காதல் தோல்வி பாடல்கள் ,.. காணொளியாகவும், ஒலி வடிவிலும் தருகின்றேன்.. சோகங்கள் கூட சுமையாக உள்ள போது அதில் உள்ள ஆனந்தம் வேறு.. கொஞ்சம் நினைத்து பாருங்கள்..
1) காதல் ராணி இல்லை : இது எனக்கு நீண்ட நாளாய் பிடித்த பாடல்
2) மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது சோகம் கூட சுகமாகும் ஆசைக்காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே ...
யப்பா என்ன பாடல்.. நம்ம தளபதி ஒழுங்க நடிச்ச காலத்தில் வந்த பூவே உனக்காக பாடல் ...
3)மோகனின் இதயக்கோவில் .. யார்தான் மறக்கலாம்.. எண்பதுகளில் அந்த சின்ன வயசில் நான் பார்த்த முதலாவது காதல் தோல்வி தொடர்பான கதையுள்ள படம்.. சூப்பர் படம்.. அதுக்கு பிறகு எத்தனையோ தடவைகள் .. பார்த்து ..விட்டேன் ..
காதலை சேர்வு மூலம் ( அலைகள் ஓய்வதில்லை ) வாழ வைத்தார் பாரதி ராஜா. அதே காதலை பிரிவு (சாவு) மூலம் வாழ வைத்தார் இந்த இதயக்கோவில் ... மணி ரத்தினம் வாழ்க....:)
காதலியை இழந்தாலும் (அம்பிகா ) உண்மைக்காதலுக்காக வேறு ஒருத்தரையும் (ராதா) ஏற்க மறுக்கும் ஷங்கர் எனும் மோகன் .. இறுதியில் இந்த படத்தில் வரும் காட்சி.. ஷாபா,, நெஞ்சு அடைத்து மூச்சு திணற வைக்கின்றது.. பார்க்க தவறிய எவரும் இருந்தால் பார்த்து விட்டு சொல்லுங்கள் எப்புடி படம் என்று .. :)
இந்த கொடுமையோ என்னவோ தெரியல.. இன்னொரு படமான மெல்ல திறந்த கதவில் இரண்டாவது காதலை இறுதியில் சோக முடிவு வரும்போது கிளைமாக்ஸ் காட்சியில் வைத்து காப்பாற்றி காதலையும் வாழ வைக்குறார்.
காதல் தோல்வி படம் என்றால் வேற என்ன நம்ம முரளி இருக்காரே .. அவற்ற எந்த படம் தான் அப்படி இல்லை.. எனக்கு பல படங்களில் வந்த காதல் தோல்வி பாட்டுகள் பிடித்து இருந்தாலும் காலமெல்லாம் காதல் வாழ்கவில் வரும் ஒரு மணி அடித்தால் பாடல் உண்மையாவே ஹரிஹரனின் குரலில் உள்ளதை கிள்ளி எறிந்தது.
கண்மணி நில்லு காரணம் சொல்லு..ஊமை விழிகள் படத்தில் வந்த இதமான இனிய மெட்டு: எனக்கு தெரிந்த காலத்தில் இருந்து என்ன்டுடைய பாட்டு பெட்டியில் நான் கேட்கும்பாடல்.. ( பிறகு யாரும் பிழையாக நினைக்க வேண்டாம்.. என்ன தங்களுக்கு காலம் முழுக்க தோல்வியோடா தம்பி என்று.. ஹஹா )
மலர் ஒன்று எடுத்து சரம் ஒன்று தொடுத்து தேவி உன் பூஜைக்கு நான் கொடுத்தேன் மலர்ச்சரம் பிரித்து மலர்வளை தொடுத்து ஏழையென் காதலை நீ புதைத்தாய் புதைத்தது மீண்டும் மலராகும் உன் பூஜையை நினைத்தே சரமாகும் எஸ் என் சுரேந்தர் பின்னிட்டார்.. குரலில் ..
இப்படியே எழுதி கொண்டு போனால் ஜேசுதாஸ் தொடக்கும் இன்று வரை உள்ள எல்லா பாடகர்களும் பாடிய சோகப்பாட்டுகளை இங்க தரலாம்.. பிறகு உண்மையாவே இந்த சுவாமிகளுக்கும் பட்ட காதல் தோல்வி போல என்று உறுதி பட நினைத்தே போடுவியள். அதால காதல் தோல்வி பாட்டு கேட்கணும் என்றால் இங்கே கொஞ்ச இணைப்புகளை தரு கின்றேன்.. நான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும்..
ஆட்டோக்ராபில் வந்த ஒரு பாடல் :ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வரிகள் - பா.விஜய் படம் - Autograph
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே! நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில், இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு! மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
உள்ளம் என்பது எப்போதும் உடைந்து போகக்கூடாது, என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக்கூடாது! எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள்! காலப் போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்!
உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும், வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்! யாருக்கில்லைப் போராட்டம்! கண்ணில் என்ன நீரோட்டம்! ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு! மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம் முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்! இலட்சம் கனவு கண்ணோடு இலட்சியங்கள் நெஞ்சோடு, உன்னை வெல்ல யாரும் இல்லை உறுதியோடு போராடு!
மனிதா! உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும் அவமானம் படு தோல்வி எல்லாமே உரமாகும்! தோல்வியின்றி வரலாறா! துக்கம் என்ன என் தோழா! ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்!
மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு! மலையோ அது பனியோ நீ மோதிவிடு!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே! நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!
மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு! மலையோ அது பனியோ? நீ மோதிவிடு!
இப்படி ஒரு பாடல் எவ்வளவு அழகாக சொல்லுது .. வலிகளை தாங்கும் உள்ளமே வாழும் உள்ளம்....
இறுதியாக ...இது என் நண்பன் சோமனுக்கு ஏற்ற பாடல்.. யார் சோமன் என்று மட்டும் கேட்க கூடாது .. அவருக்காக இதை இங்கே பகிர்கிறேன்.. Kalyanam enbathu by svpriyan
ஹா ஹா ஒரு பொல்லாப்புமில்லை இது பாட்டை பற்றி சொன்னேன்..
கடும் வேலைக்கு மத்தியில் இரவு வேளையில் இதமான இடைக்கால காதல் தோல்வி ,சுகமான இதமான கானங்களுடன் இணைந்து இருந்த போது எனது பாட்டு பெட்டியில் போன இந்த இரண்டு மலர் பாடல்களும் என்னை முந்தியே பறி/ பற்றி கொண்டு விட்டன. இருந்தாலும் ஓரிரு தடவைகள் கேட்டு அந்த "மலர்" (ரும்) நினைவுகளை மீட்டு கொண்டேன்.
முதலாவது பாடல் : உண்மையிலையே ஒரு காலத்தில் பலருக்கு பிடித்த ஒரு காதல் தோல்வி பாடல் ; மலரே என்னென்ன கோலம்
மலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம் மலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம் தினமும் வெவ்வேறு நிறமோ இதுதான் உன்னோடு அழகோ மலரே என்னென்ன கோலம் மலரே நலமா...
ஏழ்மையின் இலையுதிர் காலத்தில் இங்கே பூவேது.. காயேது.. நினைத்தால் எட்டாஆஆஆஆத தூரம் எனக்கேன் உன் மீது மோகம் திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே நீயேங்கே.. நானேங்கே.. திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே நீயேங்கே.. நானேங்கே.. நீயேங்கே.. நானேங்கே..
மலரே என்னென்ன கோலம் மலரே நலமா... மலரே.. ஹநலமா...
நிலவை வானத்தில் பார்த்து அருகே வாவென்று கேட்டு நிலவை வானத்தில் பார்த்து அருகே வாவென்று கேட்டு அழுதிடும் குழந்தையின் அம்புலிப்பருவம் என்னோடு நான் கண்டேன்
இருக்கும் வர்க்கங்கள் ரெண்டு உலகில் இப்போதும் உண்டு சமவெளி மலைகளை த்ழுவிட.. நினைத்தால் வழியேது.. முடியாது சமவெளி மலைகளை த்ழுவிட நினைத்தால் வழியேது.. முடியாது.. வழியேது.. முடியாது..
மலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம் தினமும் வெவ்வேறு நிறமோ இதுதான் உன்னோடு... அழகோ... மலரே.. என்னென்ன கோலம்
இரண்டாவது வித்யாசாகரின் இதமானமெட்டுகளில் மலரே மௌனமா பாடல் ; ஒரு காதல் டூயட்
பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ? ஆ மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ? ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே விரல்கள் தொடவா விருந்தைத் தரவா? மார்போடு கண்கள் மூடவா?
மலரே மௌனமா மலர்கள் பேசுமா?
கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன் காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன் காற்றே என்னைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு காற்றே என்னைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு உறவே உறவே உயிரின் உயிரே புது வாழ்க்கை தந்த வள்ளலே
எனக்குஏலுமானவரைஎன்னிடம்இருந்ததொழில்நுட்பவசதியைபயன்படுத்திகதையுடன்கூடியபாடலாகதருகின்றேன்.. ( யார் நித்திரையை குழப்பினது என்று கேட்க வேணாம் .. அது யாருமே இல்லப்பா # SG )
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி உன்னைப் பாராமலே மனம் தூங்காதடி வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி வஞ்சி மலரே ஹோ..நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு சொல்லுதடி வைர சிலையே
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி உன்னை பாராமலே மனம் தூங்காதடி வசந்தமென்னும் ஒரு பாவை நீ அசைந்து வந்த ஒரு சோலை வசந்தமென்னும் ஒரு பாவை நீ அசைந்து வந்த ஒரு சோலை
பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா பொய்கை வண்டாய் உன் கை மாற மங்கை நாண செய்கை செய்தாய் வைகைபோல் நாணத்தில் வளைகின்றேனே வை கை நீ என்றுன்னை சொல்கின்றேனே
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி உன்னை பாராவிடில் நித்தம் உறங்கா விழி
பச்சை அரிசி என பற்கள் கொண்ட உந்தன் புன்சிரிப்பு நெஞ்ச பானையிலே நித்தம் வேகிறது உன் நினைப்பு பச்சை அரிசி என பற்கள் கொண்ட உந்தன் புன்சிரிப்பு நெஞ்ச பானையிலே நித்தம் வேகிறது உன் நினைப்பு வார்த்தை தென்றல் நீ வீசும்போது ஆடும் பூவாய் ஆனேன் மாது இதழோரம் ஜில் என்று நனைகின்றது சிந்தும் தேன் கூட சிந்தொன்று புனைகின்றது
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி உன்னைப் பாராமலே மனம் தூங்காதடி வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி வஞ்சி மலரே ஹோ..நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு சொல்லுதடி வைர சிலையே வசந்தமென்னும் ஒரு பாவை நீ அசைந்து வந்த ஒரு சோலை வசந்தமென்னும் ஒரு பாவை நீ அசைந்து வந்த ஒரு சோலை
எதாவது எழுதுவம் என்றால் நேரம் இல்லை ; ரொம்ப பிஸி .. எனக்கு பிடிச்ச ஒரு காணொளி .. நல்ல ஒரு மசாலா கலவை .. பாருங்க .. பிறகு யார் தயாரிச்சது என்று கேட்க கூடாது ... :)
புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது - வேட்டைக்காரன் வரத பார்த்து
கொல நடுங்குது கொல நடுங்குது
துடி துடிக்குது துடி துடிக்குது
நிலைகுலையுது நிலை குலையுது வேட்டைக்காரன் வரத பார்த்து
என்னதான் இருந்தாலும் மொத்ததுல பாட்டு படு ஜோரு. இனி நீங்களே இந்த படத்தோட பாட்டை வெறுத்தாலும் உங்களை எங்கள் 'சன்' அடிக்கடி கேட்க வைப்பான்..
ஒரு விளம்பரம் :- சிவராத்திரி 2010 :-
" இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முதலாக திரைக்கு வந்து இரண்டு மாதமே ஆன வேட்டைக்காரன் சிவராத்திரி இரவுபத்து மணிக்கு உங்கள் சன் டீவியில் காணத்தவறாதீர்கள் " சிவராத்திரியை ஜோராக நித்திரை கொள்ளாமல் கொண்டாடுங்கள் !! என்று ஒரு பெரிய விளம்பரம் வரும். :) திரைப்படத்தின் முதல் பகுதியை வழங்குவோர் குட் நைட் நுளம்பு சுருள் . இறுதிப்பகுதியை வழங்குவோர் பனடோல் .. உங்கள் தலை வலிகளை போக்க .. படம் தொடங்கும் போதே அருந்துங்கள் .. !!
ராத்திரி வேளை அலுவலகத்தில் நின்று வேலை செய்ய வேண்டி வந்ததால் நண்பிகள் தாங்கள் போடும் பாடல்களை இன்றைக்காவது( வழமையா நான் தான் போடுவது வழக்கம்) ஒரு முறை ரசிக்கும் படி சொன்னதால் அவர்களின் பாடல்களை எக்கேடு கெட்டாவது கேட்டு ரசிக்கலாம் என்ற முடிவோடு பிந்திய இரவு வேலையை ஆரம்பித்தோம். ஏறத்தாள மூன்று மணி நேரம் நேரம் போனதே தெரியாமல் வேலை செய்தோம்...
பல இதமான பாடல்களை போட்டார்கள் அதுக்குள் எனக்கு பிடித்த எட்டு பாடல்கள் இங்கே
பாடல் ஒன்று :-
ஜேசுதாஸ் ஜானகி அம்மா இணைந்து பாடி கலக்கி உள்ளார்கள் .. பார்த்தீபனின் ஆரம்ப கால படம்: உன்னை வாழ்த்தி பாடுகிறேன், இசை: இளையராஜா பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி
ஒரு ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி (2) அழகான கைகள் மீட்டும் வேளை... ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
நதியின் வேகம் பருவ மோகம் கடலைச்சேர மாறிபோகும் நாளும் காதல் ராகம் பாடும் பாடும் இதழில் போடும் இதழின் காயம் இதழில் ஆரும் இனிமையாகும் தேகம் தீண்டும் நேரம் யோகம் யோகம் உன்னை வாழ்த்தி பாடும் பாடல் உதய ராகமோ நம்மை வாழ்த்தும் நமது உலகம் உதயமாகுமோ புது கனவு பாலம் தெரிந்ததே...நெஞ்சினில் இன்பமும் கொஞ்சுது கெஞ்சுது
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே அழகான கைகள் மீட்டும் வேளை... ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை
இளமைக்காட்டில் இனிமைக்கூட்டில் இருக்கும் தேனை எடுக்கும்போது காலம் நேரம் தேவை இல்லை இல்லை மலையின் ஓரம் மலர்ந்த பூவை பறிக்கும் வேடன் இருக்கும்போது காவல் தாண்டும் முல்லை முல்லை மானும் மீனும் சேர்ந்து மாயம் செய்வதேனடி வானம் போடும் காமன் நேரம் கூடத்தானய்யா அட மனதில் சாரல் அடித்ததா...கற்பனை அற்புதம் என்னமோ பண்ணுது
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே அழகான கைகள் மீட்டும் வேளை... ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை ஒரு ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
பாடல் இரண்டு துள்ளி துள்ளி நீ பாடம்மா
சிப்பிக்குள் முத்து படத்தில் கமலா பாலாவா பாடினது என்று காணொளியை பார்த்தால் குழம்பி போகும் பலர் இருக்கின்றனர்.. சூப்பர் நடிப்பு.. யவ்.. நேரம் கிடைத்தால் படத்தை பாருங்கள் சூப்பர்.. நினைக்கின்றேன் ராதிகா கமல் 50 இல் இந்த பாடலை நினைவு கூர்ந்ததாக.. பாடலை பாலுவும் ஜானகி அம்மாவும் கலக்கு கலக்கி இருக்கிறாங்கள்.. ராஜாவின் சுருதி பெட்டி .. இம்ம..
அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ ஆஆஆ நிஸரிமபநிஸரிநிரிநிஸநிப நிஸாரிமரிமரிநிஸா தானனனா தனானா ததரீ..னா..ஆஆஆஆ
துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே
துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே
நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா
நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா
இரவென்றால் மறுநாளே விடியும் உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும் அன்பு கொண்டு நீ ஆடு காலம் கூடும் பூச்சூடு அன்பில்லை நான் ஆட தோளில்லை நான் பூப்போட
துள்ளி துள்ளி துள்ளீ
பாடல் மூன்றுதேடாத இடமெல்லாம் தேடினேன் ;
பலமுறை கேட்டாலும் ஒரு முறை கூட சலிக்காத பாடல். மீண்டும் பாலுவின் கைவண்ணம் விஜயகாந்தின் வசந்தராகம் படத்தில்..
இந்த படத்தில் விஜய் குழைந்தை நட்சத்திரமாய் நடிததாம்.. விஜய காந்தின் பில்டப் களை பார்த்துதான் பின்னாளில் .................????
இதுவரை பாட்டை பிறிந்த பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது இதுவரை ஏட்டை பிறிந்த வார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது
லல்லலலல லலலலலலலாஆஆஆஆ
இதுவரை பாட்டை பிறிந்த பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது இதுவரை ஏட்டை பிறிந்த வார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது
என்னுடைய பல்லவி கிடைத்தது நல்லதொரு சரணம் கிடைத்தது ஹே ஹே ஹே ஹேய்ய்ய்ய்ய்ய்
வெவ்வேறு திசைகளில் ஒடம் என்று வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா ஹ இவ்வாறு விழுந்து இங்கே இன்று சந்திக்க நேர்ந்ததம்மா ஆஆஆஆ
வெவ்வேறு திசைகளில் ஒடம் என்று வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா இவ்வாறு விழுந்து இங்கே இன்று சந்திக்க நேர்ந்ததம்மா என் கண்ணம்மா துண்பங்கள் தீர்ந்ததம்மா
நிஜமோஓஓ.. நிழலோ ஓஓஓஓ உன்னை நான் பார்த்தது பிறிந்தோம் இணைந்தோம் விதிதான் சேர்த்தது
இதுவரை பாட்டை பிறிந்த பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது இதுவரை ஏட்டை பிறிந்த வார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது
மெய் தொட்டு தழுவிய மஞ்சள் நிலா உன் கைவிட்டுப்போனதம்மா என் கண்ணம்மா முன்னாளில் விலகிய வெள்ளைப்புறா உன் இன்னாளில் தோன்றுதம்மா ஆஆஆஆ
மெய் தொட்டு தழுவிய மஞ்சள் நிலா உன் கைவிட்டுப்போனதம்மா என் கண்ணம்மா முன்னாளில் விலகிய வெள்ளைப்புறா உன் இன்னாளில் தோன்றுதம்மா என் கண்ணம்மா என் செல்வம் தீர்ந்ததம்மா ஹ அடடா இதுதான் இறைவன் நாடகம் உறவும் பிறிவும் மனிதன் ஜாதகம்
இதுவரை பாட்டை பிறிந்த பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது இதுவரை ஏட்டை பிறிந்த வார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது
என்னுடைய பல்லவி கிடைத்தது நல்லதொரு சரணம் கிடைத்தது
பாடல் நான்கு -ஓ வசந்த ராஜா
படம் : நீங்கள் கேட்டவை பாடியவர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி இசை : இசைஞானி இளையராஜா இயற்றியவர் : வைரமுத்து வெளியான ஆண்டு : 1984
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா உன் தேகம் என் தேசம் என்னாளும் சந்தோஷம் என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ...
வெண் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள் மண் தொட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே சூடிய பூச்சரம் வானவில்தானோ?
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா உன் தேகம் என் தேசம் என்னாளும் சந்தோஷம் என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ
ஆராதனை நேரம் ஆலாபனை ராகம் அலைபாயுதே தாகம் அனலாகுதே மோகம் என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு மன்மதக் கோயிலில் பாலபிஷேகம்
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா உன் தேகம் என் தேசம் என்னாளும் சந்தோஷம் என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ
பாடல் ஐந்து- சங்கீதஸ்வரங்கள் - அழகன்
இந்த பாடலை எங்கள் வகுப்பு தோழி ஒரு முறை பல்கலையில் பாடி .. கலக்கி இருந்தாள்.. நல்ல பாடல்.. " வாளியின் மகிமை" சொல்லும் பாடல்.. எப்படி எல்லாம் வைக்குறாரு .. என்று யோசிக்க வேண்டாம்.. இதை விட பல பேர் ,... வைச்சதை நாங்கள் பார்த்து களைத்து போயிட்டோம்..
சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா, என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு, அங்கே இரவா, இல்லே பகலா, எனக்கும் மயக்கம் நெஞ்ஞில் என்னவோ நெனச்சேன், நானும் தான் நினைத்தேன் ஞாபகம் வரல, யோசிச்சா தெரியும், யோசனை வரல தூங்கினா விளங்கும், தூக்கம்தான் வரல பாடுறேன் மெதுவா உறங்கு
.
என்னென்ன இடங்கள், தொட்டால் ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லி தா சொர்கத்தில் இருந்து யாரோ எழுதும் காதல்கடிதம் இன்றுதான் வந்தது சொர்கம் வெண்ணிலே திறக்க நாயகன் ஒருவன், நாயகி ஒருத்தி தேன்மழை பொழிய, பூவுடல் நனைய காமனின் சபையில் காதலின் சுவையில் பாடிடும் கவிதை சுகம்தான்
பாடல் ஆறு - என் கண்ணுக்கொரு நிலவா - பாக்கியராஜ் பானுப்பிரியா படம் - ஆராரோ ஆரிரரோ பாடல் வரிகளை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை..
பாடல் ஏழு: முத்தமிழ் கவியே தர்மத்தின் தலைவன் - பெரிய அளவில் வெற்றி பெறாத படமாயினும் படத்தில் வந்த எல்லா பாடல்களும் சூப்பர் கிட். என்றும் ரசிக்கலாம்..
அதில் முத்தமிழ் கவியே யும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்..
பாடல் எட்டு உடன் பிறப்பு
இந்த பாட்டு ஒருமுறை நான் எனது பாட்டு பெட்டிக்கு பாட்டு recording செய்யும் போது என்னையறியாமலே எனது லிஸ்ட் இக்குள் வந்து சேர்ந்து பிறகு எனக்கு இன்று வரை பிடித்து கொண்டு இருக்கும் பாடல்
நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன் பூமுடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன் சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன் பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன் நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போது ராப்பகலாய் எழும் துயர் உன்னை வாட்டிய போது புதுமொழி நாளும் கேட்டு இரு சிறு விழி நீரில் ஆட ஓர் நதி வழி ஓடும் ஓடம் என விதி வழி நானும் ஓட போதும் போதும் வாழ்க்கை என்று ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன் பூமுடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன் சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன் பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன் நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
வாழும் வரை நிழல் என உடன் நான் வருவேனே ஏழ்பிறப்பும் உயிர்துணை உனை நான் பிரியேனே திசையறியாது நானே இன்று தினசரி வாடினேனே இந்த பறவையின் வேடந்தாங்கல் உந்தன் மனமென்னும் வீதி தானே நீண்ட காலம் நேர்ந்த சோகம் நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன் பூமுடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன் சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன் பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன் நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
இந்த தலைப்பில் எழுத எந்த பின் காரணங்களும் இல்லை. எனக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கும் அதனால் இந்த பாட்டுகளை விரும்புகிறேன் என்று நினைக்க வேண்டாம். பின்னடைவுகள் தான் பிறகு பாரிய வெற்றியை தரும் என்ற நம்பிக்கையில் ... !!!
ராத்திரி இணைய வசதி இல்லை அதனால் இருந்த காணொளி பாடல்களை வரிசைப்படுத்தி பார்த்தேன். அதில் ஒரு சில என்னை எப்பவோ கவர்ந்தவை. அதில் இதயம் என்று ஆரம்பிக்கும் பாடல்கள் மூன்று . ஒருக்கா நீங்களும் கேளுங்கள். நிச்சயம் பிடிக்கும் என்று நம்புறேன்
பாடல் ஒன்று :-
மோகனின் சூப்பர் கிட் படங்களில் ஒன்று தான் தான் இந்த இதயக் கோவில், எத்தனை முறையும் பார்த்து கொண்டு இருக்கலாம். பாடல்கள், கௌண்டமணி பகிடிகள், காதலின் வலி என்று எல்லாமே நிறைந்த ஒரு நிறைவான படம். ஒரு சோகமான முடிவு.. என்ன செய்வது காதல் தோல்வி என்று வந்துவிட்டால் இது எல்லாம் விளைவுகள் தான் என்பதை புரிய வைத்த படம்.
படம்:- இதயக் கோவில் பாடியோர்:- எஸ் பி பாலசுப்ரமணியம்,இளையராஜா இசைஅமைத்தவர்:-இளையராஜா
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நானும் சூட்டுவேன்
(டூயட் )
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நானும் சூட்டுவேன்
ஆத்ம ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே உயிரின் ஜீவ நாடிதான் ராகம் தாளம் ஆனதே உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல எனது ஜீவன் ஒன்றுதான் என்றும் புதிது
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நானும் சூட்டுவேன்
(சோகம் )
காமம் தேடும் உலகிலே ஜீவன் என்னும் கீதத்தால் ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும் ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார் என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நானும் சூட்டுவேன்
நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில் சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில் பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா மீராவின் கண்ணன் மீராவிடமே எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாயே வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நானும் சூட்டுவேன்
பாடல் இரண்டு
நான் பிறந்த ஆண்டில் வந்து இன்று வரை இல்லை என்றுமே இந்த பாடல் மெகா ஹிட் தான். ஈழத்து வானொலிகளில் ராத்திரி வேளையில் நடக்கும் பழைய மெட்டுகளை மீட்டி தரும் நிகழ்ச்சிகளில் இந்த பாட்டு எப்படியும் ஒலிக்கும். எனக்கு அங்கே கேட்டு தான் விளைவால் தேடி பிடித்து வைத்து இருக்கேன்.
படம் : புதிய வார்ப்புகள் பாடல் : பஞ்சு அருணாசலம் பாடியவர் : ஜென்சி இசை : இளையராஜா வெளியான ஆண்டு : 1979 பாரதிராஜா, பாக்யராஜ், ரத்தி அக்னி ஹோத்ரி
இதயம் போகுதே இதயம் போகுதே எனையே பிரிந்து காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ இதயம் போகுதே
மணியோசை கேட்டு மகிழ்வோடு நேற்று கைகள் தட்டிய காலை சென்றதெங்கே அரும்பான என் காதல் மலராகுமோ மலராகி வாழ்வில் மனம் வீசுமோ இதயம் போகுதே எனையே பிரிந்து
லாலல லாலல லாலல லாலல லால லால லால லால.....
சுடுநீரில் விழுந்து துடிக்கின்ற மீன்போல் தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா குயில் கூவ வசந்தங்கள் உருவாகுமோ வெயில் தீண்டும் பூவில் பனி நீங்குமோ இதயம் போகுதே எனையே பிரிந்து
மலைசாரல் ஓரம் மயிலாடும் நேரம் பாடல் சொல்லவும் தேவன் இல்லையம்மா நிழல் போல உன்னோடு நான் சங்கமம் தரவேண்டும் வாழ்வில் நீ குங்குமம்
இதயம் போகுதே எனையே பிரிந்து காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ இதயம் போகுதே
பாடல் மூன்று
எல்லாருக்கும் தெரிந்த முரளியின் இதயம் படத்தில் இடம் பெற்ற இதயமே இதயமே பாடல் .
காட்சியும் அதன் பின் பாடலும்
சரிங்க இப்போ பாடல்
இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே நிலவில்லாத நீல வானம் போலவே உயிரில்லாமல் எனது காதல் ஆனதே இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே இதயமே இதயமே
பனியாக உருகி நதியாக மாறி அலை வீசி விளையாடி இருந்தேன் தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து உயிர்க் காதல் உறவாடிக் கலந்தேன் இன்றே இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம் இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம் கோலம் கலைந்ததே புது சோகம் பிறந்ததே நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்
இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே இதயமே இதயமே
என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று உன் மீது படவில்லை துடித்தேன் அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும் உன் நெஞ்சைத் தொடவில்லை ஏன் சொல்லம்மா இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன் இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன் ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்
இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே நிலவில்லாத நீல வானம் போலவே உயிரில்லாமல் எனது காதல் ஆனதே இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே இதயமே இதயமே
பல பாடல்களை கேட்டும் பார்த்தும் உள்ளேன் .. இருந்தாலும் மனதை கொள்ளை கொண்ட பாடல்கள்.
ரசித்து பாருங்கள் ..
1. ஏய் மாமா ..
2. வேம்படியில என் குருவி ( அம்மாடி அது அந்த குருவி இல்ல .... சபார் .. எனக்கு அடிக்கடி இந்த குருவி மட்டர் கிராஸ் பண்ணுது .... ) நன்றி - மெல்போர்ன் கமல் ( வரிகளை சுட்டேன்)
குரல்: ‘என்ரை மனுசி சண்டை போட்டால் சாரயம் கேட்குதடா. அந்தச் சாரயம் உள்ள போனால் பைலா கேட்குதடா....
குரல் 02: ஊத்தடா......மச்சான்.. சுதியேத்தினது போதும்டா..டேய்.... பாடடா....தோடா...
பாடல்: வேம்படியிலை என் குருவி ஏ. எல் படிச்சவா தாவடியிலை என் மனசை கொள்ளை அடிச்சவா சில்லாலை கிழக்காலை தையல் படிச்சவா-ஒரு சொல்லாலை தெல்லிப்பளை லூசர் அடிச்சவா