நம்முடைய வறு வல்களும் ; சிந்தனைகள் , மனதில செய்ய நினைத்தவை , செய்தவை ,நல்லதாக பார்த்து சுட்டவை ,சுடாமல் சொந்தமாய் தயாரிச்ச தலைப்புக்கள் என்று ஒரு மொக்கை போடும் இடம்
ஒரு தாயின் தாலாட்டை கேட்டது குழந்தை பருவத்தில், அந்த தாலாட்டு நினைவில் திரும்பி வருவதில்லை,ஆனால் ஒவ்வொருவருடைய தாயின் தாலாட்டு இப்படித்தான் இருக்கும் என்று காட்டிய இசையின் இசையே , எனது உள்ளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். தொடரட்டும் உமது இசைப் பயணம், உன் நிழலும் இசை பாட நாங்கள் ரசித்திருப்போம்.
இசைஞானி இசையில் வந்த எந்த பாடலும் எனக்கு பிடிக்கும். எத்தனை என்று போடுறது அதால என்னை கவர்ந்த கொஞ்சம் வித்தியாசமாய் எனது தெரிவுகள் :
கடந்த ஒரிரு நாட்களாக , ஊருக்கு போகணுமே .. என்று ஒரே வேலை , அதற்கு இடையில் ஒரு குறுகிய பயணமாய் வேறு ஊரில் தற்போது நிற்கின்ற போதும், எப்பிடியாவது , சினி திரைகளில் வந்த பாடல்களில் , ஒரு மேடையில் மட்டுமே பாடி ஆடி அசத்திய பாடல்களின் தொகுப்பை போட்டே தீரனும் என்று ஒரு முடிவுடன்................
பொதுவாக கர்நாடக இசைக் கச்சேரி மேடைகளில் பாடப்படும் கீர்த்தனைகள் சரி , கதாநாயகிகள் மேடைகளில் ஆடும் நாட்டிய பாடல்கள் சரி திரைப்படங்களில் இடம்பெறும்போது, அவை நிஜ மேடைகளில் எந்த ராகத்தில் இசைக்கப் படுகிறதோ அல்லது எப்படி ஆடப்படுகிறதோ அதே மாதிரி தான் சினிமா படங்களிலும் இடம் பெறுகின்றது.
ஒரு காலத்தில் மேடை அமைத்து அதில் நாயகி சரி நாயகன் சரி ஒரு பாட்டு பாடும் போது அதை சபையோர் இருந்து ரசித்தல்(இதில் நாயகனோ நாயகியோ சபையில் இருந்து ரசிக்கலாம் , இதுவும் உள்ளடக்கம் ), அல்லது நாயகியும் நாயகனும் போட்டிக்கு பாடுதல் போன்றவையே ஒரு காலத்தில் டூயட் , அல்லது காதல் வளர்க்கும் , காதல் தோல்வி பாடல் காட்சிகளாக வந்து ரசிகர்கள் மனதில் பிரபல்யம் அடைந்தது.
இந்த வகை இன்று அருகி விட்டது . இன்று கதாநாயகியும் நாயகனும் வீட்டில் சந்தித்து அல்லது எங்கையாவது தோட்டத்தில் , ஆற்றில் குளிக்கும் போது , அல்லது படிக்கும் கூடத்தில் , வகுப்பறையில் சந்தித்து கதைத்தால், உடனே வரும் டூயட் பாடல் அமெரிக்காவிலோ , அல்லது வேறு எந்த ஒரு நாட்டிலையோ எடுத்து விட்டு அதன் மூலம் ரசிகர்களையும், வசூலையும் அள்ளி கொள்வார்கள் இந்த சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்.
முதல் வகையில் எனக்கு
பிடித்த பல பாடல்கள் இருந்தாலும் , மிகவும் பிடித்த பாடல்களை இங்கே தருகின்றேன். உங்களுக்கும் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
பாடறியேன் படிப்பறியேன் இது மேடை நிகழ்ச்சியில் சித்ரா பாடியது இதைப்பாருங்கள்
2- ஆடல்கலையேதேவன்தந்தது.. ரஜனியின் 100 ஆவதுபடம் : ஸ்ரீராகவேந்திரா அதில் அம்பிகா ஆட, ரஜனி பாட ( உண்மையில் ஜேசுதாசின் அந்த இனிமையான குரல்தான் இந்த பாட்டை பிர பல்யப்படுத்தி விட்டது) சபையோர் ரசிப்பதை பார்த்தால் என்ன ஒரு சுகம்...:)
3- சங்கீதம் பாட ஞானம் உள்ளவர்கள் வேண்டும்.. இந்த பாட்டை என்னவோ தெரியவில்லை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.. அதுவும் ஷோபனா படத்தில் தூள் நடிப்பு..காமெடி .. இந்த படத்தில் சூப்பர் கிட் பாடல்கள் இன்னும் இருக்கு... பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் பாருங்கள்.. இளம் வயது சிவமணி ட்ரம்ஸ் வாசிச்சு கலக்கி இருக்கார். இசை ஒரு பெருங்கடல் அதை ஞானத்தால் பாடுவதா அல்லது கேள்வி ஞானம் போதுமா என்று பாலா வும் வாணி ஜெயராமும் வரிந்து கட்டி கொண்டு பாடுவதை பார்த்தால் உண்மையிலே புல்லரிக்குது...:)
4- சலங்கைஒலிபடம்இருபது வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும்விடாதஒருமாபெரும்பிரமிப்பு. எத்தனைமுறைபார்த்திருப்பேன்என்பதற்குகணக்கேஇல்லை. இசைஞானிக்கு தேசிய விருதை வாங்கித் தந்த படம்!கமல்ஜெயப்பிரதா .. நடிப்பு.. நாட்டியம்பற்றிசொல்லிமுடிக்கஏலாது. , எஸ் .பிசைலஜாவின் அருமையான நாட்டியம்.. சொல்ல முடியாத வார்த்தைகள்.. பாடல் மட்டுமாபாடுவேன் .. ஆடவும் தெரியும் என்று ஆடிக்காட்டி படத்தையே அசத்தியவர் இவர்.
இந்த படத்தில் வந்த எல்லா பாடல்களும் ரொம்பவே பிடிக்கும். ஆனால் இங்கே நான் மேடையில் ஆடிய பாடல்கள் வரிசையில் இந்த பாட்டை மட்டும் தரு கின்றேன்.
சலங்கையின் ஒலி என் காதுகளில் இன்னும் பல வருடங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும்!
சலங்கை ஒலியை தொடர்ந்து சலங்கையிட்டாள் ஒரு மாதுவும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். :)
6- சங்கீத ஜாதி முல்லை ... என்ன படமையா.. காதல் ஓவியம்.. இப்படி என்னொரு படம் இப்ப எடுத்தால் நான் முதல் ஷோ பார்க்க முதல் நாள் இரவே போய் நிற்பேன் ..
பிடித்த வைரவரிகள் .. எஸ் பியின் பழைய குரல்...
விழி இல்லை என்னும் போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
பூவில் ஒரு வண்டு, வெள்ளிச்சலைங்கைகள், நதியில் ஆடும் பாடல்கள் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை...
7- தில்லான மோகனாம்பாள் - பத்மினி .. ஸ்ஹபாஆஆ என்ன வென்று எல்லாம் சொல்லுறது. நலந்தானாவைப்பாருங்கள் .. ரசியுங்கள்
8- கங்கைக்கரை மன்னனடி- வருஷம் 16 . குஷ்புவின் அறிமுகம்.. படத்தில் மேடையில் ஆடி அசத்தும் அருமையான பாடல் .. ஜேசுதாஸ் குரலில்.. இனிமைதான்:)
ஆமா எனக்கு ஒரு சந்தேகம் .. இப்ப நடிக்கிற நடிகைகளுக்கு இந்த பரத நாட்டியம் தெரியாதாமே .. அல்லாட்டி ஒரு பரத நாட்டியம் ஆடின கட்சியை அங்கே இங்க .... வைத்து இருக்கலாமே ,... :)
எப்புடி இருந்தாலும் எங்கட ஜோதிகா அசத்திய ரா ரா நாட்டியம் இன்றைக்கும் வியக்க வைக்கும் ஒன்றே எனக்கு ..
நீண்ட நாட்களுக்கு பின் ஒரு படம் பார்க்கலாம் என்று போட்டு கணனி முன்னால் இருந்து எந்த படத்தை பார்க்கலாம் என்று தேடினால் .. தமிழில் தல படம் திரையரங்கு நிறைந்த கூட்டத்துடன் பார்த்தாச்சு. தீராத விளையாட்டு பிள்ளை , தமிழ்ப்படம் எல்லாமே இணையத்தில் வலம் வருகின்றன .. அவையும் பார்த்தாச்சு போன வாரம்.
"பா" படம் நல்ல படம் என்று யாரோ எல்லாம் சொல்லி இருந்தாங்க... சரி போய் இணையமூடகவே DVD தரத்தில் இருக்கின்ற இந்த படத்தை பார்த்தேன். ஆரம்பத்தில் எழுத்து ஓட்டத்தை skip பண்ணி போட்டு பார்த்து கொண்டு இருக்கும்போது எனக்கு கொஞ்சம் பிடிச்ச படமாய் தோன்றியது.
மகன் அபிஷேக் பட்சானின் நான் பார்த்த இரண்டாவது படம் இது.முதல் படம் குரு. அப்பா ( அந்த மேக்கப் செய்த விதம் குறித்து எனக்கு ஒருமின்னஞ்சல் வந்தது .. எங்கையோ விட்டுடன் ....), மகன் இருவரின் நடிப்பும் எனக்கு பிடிச்சு கொண்டுது. இப்படியே படம் பார்த்து கொண்டு இருக்கும்போது இருந்தால் போல ஒரு பாட்டு
இந்த பாட்டை கேட்டவுடனே எனக்கு இது இளையராஜா மெட்டாச்சே.. அவருக்கு பிடித்த மெட்டு இது என்று எனக்கு தெரியும்... அவர் அதை ஒரு நிகழ்ச்சியில் கூட சொல்லி இருந்தார். பின்னோக்கி உடனே போய் மிஸ் பண்ணின எழுத்தோட்டத்தில் பார்த்தால் அடே கொக்கா மக்கா எங்கட ராஜா சார் தானே இசை ..சுப்பரா இருக்கே .. உடனே என்னுடையே தேடல் ஆரம்பம் :
இது இளையராஜா வைத்த One Man Show இல் இருந்து :
இந்த மெட்டை கொண்டு ..... அவர் இசை வரலாற்றில் சூப்பர் கிட் ஆன பாடல்கள்.
மூலப்பாடல் தும்பி வா என்ற பாடல் ஓலங்கள் என்ற மலையாளம் படத்தில் 1982 இல் வெளி வந்தது.
இந்த தும்பி வாவும் நன்றாகவே இருக்கு
தெலுங்கில் இதே மெட்டில்:
இந்த மெட்டை கொண்டு , தமிழ் படமான ஆட்டோ ராஜா வில் ( திரைக்கு வந்த ஆண்டு - 1982)
இதை விட என்னால் கண்டு பிடிக்க முடியாமல் போன பாடல்
கண்ணே கலை மானே என்ற படத்தில் வந்த " நீர்வீழ்ச்சி தீமூட்டுதே ...தீ கூட குளிர் காயுதே " ஒளி வடிவம் இல்லாட்டி என்ன இரசிக்க ஒலி வடிவம் இருக்கு .. .. கேட்டு இரசியுங்கள்...
சரி வந்தனீங்க இந்த பொண்ணு போடும் இசையையும் பார்த்திட்டு போங்க
இத்தனை வருடங்கள் (28 வருடங்கள் ) ஆகியும் அந்த மெட்டும் அதே இசையும் இன்றும் என்றும் மக்கள் மனதில் வாழ்கின்றதுக்கு இது ஒரு உதாரணம்...
தென் இந்திய தமிழ் தொலைக்காட்சிகள் பெரும்பாலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளையே கொண்டு தான் காலத்தை ஓட்டி கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு தொலைக்காட்சியும் வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்கு பெயர் போனது.
சில இருக்கிற எல்லா சீரியல்களையும் போட்டு காலத்தை ஒட்டி கொண்டு இருக்கின்றன . அந்த சேனல்களை நான் இங்கே கருத வில்லை. அதே போல் சினிமா, டாப் டென் பாடல்கள், திரை விமர்சனம், டாப் டென் திரைப்படங்கள், சமையல் சமையல் ( இது கடுப்பு ஏத்தும் நிகழ்ச்சி ) இவையும் இங்கே நான் கருத வில்லை.
சன் டிவி யில் பெரும்பாலும் அசத்தபோவது யாரு, தயாரித்து வழங்கும் காமெடி டைம் எல்லாரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகள்.
ஜெயா டிவி யில் வரும் ராக மாலிகா, என்னோடு பாட்டு பாடுங்கள் ( இது இப்போது இல்லை) போன்றவையும் ,
அதே போல் கலைஞர் டிவி யில் , பாட்டுக்கு பாட்டு , மானாட மயிலாட போன்றவை பிர பல்யமானவை. ( வேறு ஏதும் இருந்த மன்னியுங்கப்பா)
எனக்கு தெரிந்த நண்பர்களிடம் நான் கேட்பது அடிக்கடி யாரவது சொக்குதே மனம் என்ற இசை நிகழ்ச்சி நடப்பது தெரியுமா என்று ?? யாருமே அதை பார்ப்பதாக சொல்லவுமில்லை. சிலர் அப்படி ஒன்று இருக்கா என்று கூட கேட்டார்கள்.
இதுக்காக எல்லாருக்காகவும் சேர்த்து ஒரு சிறு தொகுப்பை தருகின்றேன்.
சொக்குதே மனம் இரவு ஒன்பதரை மணி முதல் பத்து மணி முதல் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் இந்தவித்தியாசமான நிகழ்ச்சியில் மனதைக் கரைக்கும் அருமையான பழைய ஹிட்பாடல்களை ரீமிக்ஸ் செய்து பாடிக் காட்டி அசத்துகிறார்கள்.
ராத்திரியாச்சுன்னா, மிட் நைட் மசலாக்களைப் பார்த்து விட்டு தூங்கப் போகும் சகலமகா ஜனங்களுக்களையும் நல்ல திசையில் திருப்பும் வகையில், சொக்குதே மனம் என்ற ஒரு அருமையான வித்தியாசமான நிகழ்ச்சியைப் போட்டு வித்தியாசமான விருந்தைப்படைத்து வருகிறது ஜெயா டிவி.
ப்ரியா சுப்ரமணியன்
தொகுத்து வழங்குவதிலும் பார்க்க, பூத்து குலுங்கும்புன்னகை , இனிமையான குரல், அணிந்து இருக்கும் ஆபரணங்கள் , விதம் விதமான சேலைகள் என்று சொல்லி எல்லாரையும் ஆட்டம் காண வைக்கின்றார் பிரியா சுப்ரமணியன்.
மேடையமைப்பு : கலர் கலரான மின்குமிழ்கள், அழாகான ஓவியங்கள், பிரமிக்க வைக்கும் சிற்ப வேலைப்பாடுகள் என்று நீட்டி கொண்டே போகலாம்.
பாடகர்கள்: யார் குரலிலும் பாடும் வல்லமை கொண்ட பாடகர்கள் , பாடகிகள். அதுவும் பழைய ஆண் குரல்களான ராஜா, சௌந்தராஜன் ,ஸ்ரீநிவாஸ், பிறகு ஜேசுதாஸ் , பாலா , இளையராஜா , ஜெயச்சந்திரன் ,வாசுதேவன் என்று எல்லா குரல்களும் இருக்கும். அதே போல பெண் குரல்களான ஜானகி, ,சுஷீலா என்று நீட்டி கொண்டே போகலாம்.
இசைக்குழு: தரமான குழு , ஒரு இசை நிகழ்ச்சி நடத்த தேவையான எல்லா விதமான இசைக்கருவிகளும் , வித்துவான்கள் போன்ற கலைஞர்களும் இருப்பார்கள்.
இந்தியாவில் இந்த நிகழ்ச்சி பெரும் கிட். பழசுகள் சரி, புதுசுகள் சரி விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி.
திரைப்பட வீடியோ கலவையுடன் தரமான ஒலி, ஒளியமைப்புடன் ஞாயிறு இரவில் சொக்குதே மனம் ரசிகர்களை சொக்க வைத்து விட்டு செல்கின்றது. நான் இந்த நிகழ்ச்சியை நீண்ட நாட்களாக பார்த்து ரசித்து வருகின்றேன். அதிலும் குறிப்பாக இறுதியாக ஒரு சூப்பர் கிட் இளையராஜாவின் இசையில் வந்த சூப்பர் கிட் பாட்டை பாடி எல்லாரின் மனதையும் திருடியது மட்டும் இல்லாமல் வசிகரீத்தும் செல்வார் சிரிப்பழகி ப்ரியா .
தை மாதம் 16 ஆம் திகதி சிட்னி -ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் குடுத்து வைச்சவர்கள். இசைப்புயல் A.R.Rahuman நடத்திய இலவச இசை விருந்து தான் ..
திருட்டு காணொளிகள் பல இணையத்தில் உலாவ தொடங்கினாலும்.. ஒரிஜினல் வரும் வரை பொறுக்க முடியாது.. எனக்கு தெரிந்த வரையில் முழுமையாக உள்ளடக்கப்பட்டு இருக்குது.
அப்போது பல்கலைக்கழக அனுமதி கிடைத்து விட்டது. கொழும்பில் தனியார் கணணி மையத்தில் இரண்டு வருட டிப்ளோமா முடியும்காலம், முதல் முறையாக சகோதர மொழி மாணவர்களுடன் பழகிய காலங்கள். இன்றும் அவர்கள் எனது நண்பர்களா இருக்கிறார்கள். வார நாட்களில் கணணி மையத்தில் தான் காலத்தை போக்குறது.
யாழ்ப்பாண பிள்ளைகளை, முன்னர் அங்கு இருந்த காலத்தில் ஒரு சிலருடன் கதைத்து ,சில வேளைகளில் கதைக்காமல் தவிர்த்து ரொம்பவே பீல் பண்ணி இருந்த காலத்தில் தான் , இப்படி யான புது அனுபவங்கள் இந்த புது முகங்களுடன்.
நான் படித்த வகுப்பில் ஆறே ஆறு பையன்கள்(மூன்று சகோதர மொழி, நானும் கரனும் மற்றது இன்னொரு கொழும்பில் வளந்த பையன் - கொழும்பு பையன் ). மிச்சம்எல்லாமே ( பதினனைந்து) தமிழ் சகோதரிகள். யாரு என்றெல்லாம் கேட்க கூடாது. அதில பாதி தமிழே கதைக்காம , எதை கேட்டலும் ஆங்கிலத்தில் எங்களையும் கதைக்க வைக்க முயலும் சகோதரிகள். அவங்களை பற்றி சொல்லணும் என்றால் ( கட்டமைப்பை ) , நமீதா மவளிகாவே தோத்து போயிடுற அளவுக்கு ....... அல்லாத பிகர்கள். மீதி சைவப்பழங்கள். பட்டை தீட்டி தான் அங்கேயும் வருவினம். போனால் போகுது ஒரு மகாலட்சுமி மாதிரி என்று சொல்லுவம்.
விளம்பர இடைவேளை ஆரம்பம்
வேறு வகுப்பில் படித்த நண்பர் ஒருத்தன் சொன்ன ஞாபகம் இருக்கு.. "டேய் உங்கட வகுப்பில எல்லாமே பெண் பிள்ளைகலாமே " ஆமா நாங்க எப்படி தான் ஆண்பிள்ளைகளாய் இருக்கிறது.. அதுகளே மாத்தி போட்டுதுகள்.. என்று உடனே வெட்கம் , மானம் ,ரோஷம் ,சூடு சுரணை இல்லமல் சொல்லிப்போட்டேன்.:)
விளம்பரஇடைவேளை முடிவு
எங்களுக்கும் வகுப்பு போறதென்றால் ஒரே கிளு கிளுப்பு. அதுவும் காலை தொடங்கினால் மாலை 4:00 மணி வரை வகுப்பு., பின்னர் எங்கள் கணணி மையத்துக்கு அருகாமையில் உள்ள , MC இல் இருக்கிற KFC இக்கு போறது ( கூட்டிட்டு இல்ல ,கூட்டி கொண்டு போவினம் )..அப்போ எல்லாம் கோழி விலை குறைவு ..:( இப்ப எல்லாம் அப்படி யாரும் கூட்டிட்டு போக கட்டு படியாகாது ..கோழி 1000 ருபாய்.
இப்படி இருக்கிற காலத்தில் நம்ம கரனுக்கு ஒரு கொழும்பு பெண் மீனாட்சி என்று சொல்லுவம் சுருக்கமாக, அவள் மீது ஒரு கிக்கு ,லவ்வு ,நாங்க சும்மா இருப்பமோ வாற போற நேரம் எல்லாம் அவளை பார்த்து எங்கட ஸ்டைல் இல் " யாரோ தங்களை லவ் பண்ணினம் போல , நீங்க வர வர புதுசு புதுசா உடுப்பு போடுறீங்க" என்று சொல்லி அவளுக்கும் அலுத்து போச்சு.. மீனாட்சிக்கு எங்கள் மூவரில் யாரு என்று தான் சந்தேகம். அவளும் ஒவ்வொருத்தரா பரீட்சித்து பார்த்தாள். நாங்களும் பரீட்சையில் ஒரே மாதிரி பதில்கள் வழங்கி அவளை குழப்பினோம்.
இருந்தாலும் பொண்ணு மட்டரில நாங்க சறுக்குவம் என்று தெரியாமல் இல்லை அவளுக்கும். இப்படி இருக்கும்போது தான் தென் இலங்கை சுற்று பயணம் , இரண்டு நாட்கள் .வகுப்பில் ஒரு சகோதரியை தவிர எல்லாரும் வர கூடிய தாய் இருந்தது.. நாங்க விடுவமோ. எங்க பஸ் வண்டிக்கையே எங்க சகோதரிகள் , எங்க நல்ல காலத்துக்கு விசிறிகள் வேற பஸ் வண்டிக்க. கொழும்பை தாண்ட முதலே ஆட்டம் பாட்டம் .. சூப்பர். என்னட்ட இருந்த ஒரு சில பாட்டுகள் ( அப்போ தான் தேவா என்னை டப்பான் குத்தால் கவர்ந்த நேரம்) அவரின் பாட்டுகள் தான். நாள் முழுக்க ..:) முக்கிய விஷயம் நாங்க ஆட இடமிருக்கவில்லை . இருக்கிற பொண்ணுகள் எல்லாமே ஆட தொடங்கிற்றுதுகள். துப்பட்டாவை இடுப்பில் கட்டி போட்டு ஆட தொடங்க நாங்க முழு நாளும் அங்க விழுந்து இங்க விழுந்து ஓவ்வொரு கோணத்தில் படம் எடுத்த தான் வேலை :) நான் இல்லை .. எல்லாருமாய் ..
போட்ட பாட்டுகளில் ஒரு சிலவற்றை அப்பப்போ இங்கே இணைத்துள்ளேன்.
முதல் நாள் கதிர்காமம் , மலை ஏறினது ; முருகன் என்று போய் முடியவே இருட்டிட்டு.
இரவு ஒரு நல்ல சாப்பாடு ( என்ன ...குக்குள் மஸ் , பொல் சம்போல், பத், கங்குன் ) . ஒரு விசிறி மாணவனின் வீட்டில் தான். அனுபவம் அவங்கட சாப்பாடு சாப்பிட்டு.. இப்போ எல்லாம் அதுதான் கூட சாப்பிடுறது. செலவும் இல்லை .. :)
இரண்டாம் நாள் மாத்தறை ,காலி என்று போனாலும் கூட நேரம் பஸ் பயணம் தான். பாட்டு பெட்டிக்கு ஒய்வு இல்லை. பொண்ணுங்க ஆட்டமும் தொடர்கிறது.
நாங்களும் எப்படியாவது இந்த லவ் மட்டரை சொல்லியே ஆகணும் என்று , தொடங்கியாச்சு. முதலில தூரவா (பஸ் இக்க போய் நின்றுகொண்டு தம்பி பாட்டை போடுடா என்றதும் போட்டேன் அந்த பாட்டை )
அதுதான் மீனாட்சி மீனாட்சி .. ஆனந்த பூங்காற்றே .. அதோட எல்லாரும் எங்க மற்றைய சகோதரிகளும் சேர்ந்து மீனாட்சி அப்படி என்ன தான் காதல் என்று சொல்ல .. பின்னுக்க இருந்த நான் கரன் என்னவாம் என்றேன்.. ஒருக்கா சப் என்று போச்சு.. பிறகென்ன ட்ரிப் எப்படி இருக்கும் என்று தெரியும்தானே .. மீனாட்சி அழ தொடங்க , எல்லாரும் என்னை பேச, கரன் உவங்கள் போய் என்று சொல்ல ,, நான் தனியவே நின்று வேண்டி கட்டினது தான் .. ( இது வழமை தானே - வடிவேலு ஸ்டைல் இல் .ம்ம்ம்ம்ம்ம்......................)
ஒரு இரண்டு மணி நேரம் பஸ் டிரைவர் நிம்மதியா பஸ் ஒட்டி இருப்பான். அப்புறம் மாலை பேருவல கடல் கரையில் ஒரு சில மணி நேரம் .. அதுக்கு பிறகு எல்லாருமா சேர்ந்து வந்த trip ஐ முதலில் முடித்து போட்டு பிறகு கதைப்பம்..
அதுக்கு பிறகு எங்கே தேவா .. எல்லாமே .. எங்கட சோகமான ஆட்டம் தான்.. அப்போது தான் நாங்கள் ஆடினது.. நிம்மதியா .. :)
அதிலும் முக்கியமாய் அஞ்சலியை மடிக்கலாம் என்ற பாட்டுக்கு ..எங்களை மறந்து ஆடினது மறக்க முடியாது..
அஞ்சலியைமடிக்கலாம் :)
ஒரு மாதிரி அந்த பொண்ணுகளும் எங்கட ஏதோ ஆடினதை பார்த்தோ தெரியல .. கொஞ்சம் வெளிப்பாய் இருந்ததை காண கூடியதை இருந்தது ..
போதிக்கின்னு.. :)
இப்படியே வந்து சேர்ந்திட்டம் .. சந்தோஷமான ஆரம்பம் பெரிய வெற்றி இல்லாமல் முடிஞ்சு போச்சு .. ஹா ஹா ..
அடுத்த நாள் வகுப்புக்கு போகும்போது மீனாட்சி நெருப்பு எடுத்ததை பார்த்த போது ,,.. காளி வேஷம் தெரிஞ்சது.. எப்படி.. சமாளிக்க முடியுமோ.. அப்படி எல்லாம் சமாளிச்சு பார்த்தேன்,.. முடியவே இல்ல .. இருந்தாலும்.. எங்கட tune எல்லாமே அந்த மீனாட்சி பாடல்தான்.. " அடி அடிச்சால் அம்மியும் நகரும் " என்று எங்கட சங்கத்தின் திருநாமம் ,.,,. முயற்சி செய்து செய்து ,, மீனாட்சி ஒரு கட்டத்தில்( ஏறத்தாள இரண்டு ஆண்டுகள் மேலான காதல் .. முடிவுக்கு வந்தது..) ..
விளமபர இடைவேளை ஆரம்பம்
அதாவது நான் பல்கலைக்கழகம் போற காலத்தில்,( இங்கே ஒன்றை சொல்லணும் .. எங்கட கம்பஸ் இல் போய் படிக்க தொடங்கின பிறகு) , யாரோ ஒருத்தன் என்னை கொழும்பில் கேட்டன் மச்சான் . உனக்கு ராசிடா... கொழும்பில இவளவை ,, கம்பஸ் இல் அவளவை... நான் சொன்னேன் " தேரான தேரெல்லாம் தெருவில் ஓட , தேவாங்குகள் மட்டும் கம்பஸ் வருமாம் " இப்போ இதை தத்துவம் மாதிரி .. ... எடுத்து வைச்சு இருக்கானாம் .. அவன்.. இது பத்து வருஷத்துக்கு பின்னர் சொன்னான் .. எனக்கு:) )
விளமபரஇடைவேளைமுடிவு
ஒரு நாள் கரன் எனக்கு " தொல்லை" பேசியில் மச்சான் மீனாட்சி என்னை வரட்டாம் KFC இக்கு ..தானும் ஏதோ கதைக்க வேணுமாம். அப்ப எனது அறிவுரை தம்பி தனியே போயிடாதே ,,, அடியாள் வைச்சு அடிக்க போறாளோ ..அல்லது ... காதலை சொல்ல போறாளோ.. இல்லை ... நான் வேறை யாரையோ காதலித்து விட்டேன் ,,, என்று.. சொல்ல ..போறாளோ .,.. என்ற ஏக்கத்துடன் கூடிய அறிவுரையை சொன்னேன்..
அங்கே ..நடந்தது என்ன.. கரனின் நிலைமை என்ன.. அடுத்த வாரம் தொடரும்.,.
(சீரியல் எல்லாம் பார்த்து பொறுமையா இருக்குறவர்களுக்கு.. பரவாய் இல்லை மற்றையோர் மன்னிக்கணும்.. நேரம் இல்லை எழுதி முடிக்க ... :)