Showing posts with label கொழும்பு. Show all posts
Showing posts with label கொழும்பு. Show all posts

2010-04-24

கொழும்பு வர வேற்(ர்க்)கிறது

நீண்ட நாட்களுக்கு பின் தாயகம் திரும்பி இருக்கிறம். போன அலுவல்களை கச்சிதமாய் முடித்து விட்டு, போன இடத்து பழக்க வழக்கங்கள் , கலாச்சாரங்கள் ..இன்னும் பலவற்றை கற்று , பார்த்து தெளிந்து போட்டு , முன்னர் பலர் சொல்லும் குறள் "இருந்தாலும், இறந்தாலும் நம்ம ஊரில் தான் என்று சொன்னது சரி என்று கொண்டு , கடந்த சில நாட்களுக்கு முன் ஐரோப்பாவுக்கு ஒரு போட்டு வாறன் சொல்லி போட்டு வந்துட்டேன் .:)
ஊருக்கு நிம்மதியா வாறதுக்கு கூட ஒழுங்காக குடுத்து வைக்கல. வேறென்ன லண்டன் ஊடாக போட்டு தந்த டிக்கட்டு தான். அதுவும் குறுக்கால போன விமானம் ஓடாத படியால் .. ஒரு நாலு நாள் லண்டனில் தஞ்சம்.
பிரிட்டிஷ் விமானம் மூலம் லண்டன் வரும் போது, நெதர்லாந்தில் வைச்சு என்னுடைய பட்டிகளில் பாதியை எறிஞ்சே போட்டேன்.( பட்டி என்றது ; குளிருக்கு போடும் கவசங்கள் ... அதுவே ஒரு ஐந்து கிலோ போலும் .. யோசித்து பார்த்தேன் , நம்ம ஊரில எவன்தான் உதெல்லாம் போடுவான் . சரி ஒருக்கா இரண்டு தரம் போட்டால், சொல்லுவாங்கள் இவரு இப்பதான் வந்தவரு அங்கே இருந்து , கலர்ஸ் காட்டுறாரு என்று.. வேணமையா..... வீண் வம்பு.. வந்த செலவோடு இதுவும் போகட்டும் .. என்று குப்பை தொட்டியில் போட்டு விட்டு எறிட்டன்)



என்னுடைய கஷ்ட காலம், லண்டனில் இருந்து கொழும்பு செல்லும் விமானம் அன்று ஓட வில்லை. தங்க இடம் குடுத்தார்கள். அடுத்த விமானம் இன்னும் இரண்டு நாளில் போகுமாம் ,அதிலை தான் இடம் இருக்காம் என்று.. குறுக்கால போனவங்கள் என்று போட்டு, திட்டி திட்டி நின்றது தான். இரண்டு நாள் பின்னர் .. நாலு நாள் வரை போனதை நினைச்சா.... கடுப்பா தான் இருக்கு.. என்னமோ ஒரு மாதிரி கொழும்பு வந்து சேர்ந்தேன்..

அந்த மாதிரி குளிருக்க குடும்பம் நடத்தி போட்டு நம்ம ஊருக்கு வரும் போது.. உடம்பே வேர்த்து போச்சு. காலை ஏழு மணி கொழும்பில் காலடி எடுத்து வைத்தேன். போட்டு கொண்டு வந்த உடுப்பு , உடம்பு எல்லாமே வியர்வையில் மிதந்தன..
என்னமா வெட்கை, புழுதி, வாகன இரைச்சல், இராணுவ சோதனை காவலரண்கள் என்று எல்லாவற்றையும் கேட்டும், பார்த்தும், வியந்தும் கொண்டு வீடு வந்தேன்.
வந்த நேரம் கொஞ்சம் விறு விறுப்பான காலம் அன்றைய நாளை விட்டால் தொடர்ந்து 14 நாட்களுக்கு விடுமுறை என்ற படியால், உடனையே தொழில் செய்யும் இடம் நோக்கி சென்று தொழிலுக்கு வந்து விடேன் என்று உறுதி செய்து போட்டு வந்தேன்.

ஐரோப்பாவில் வெளிய போகணும் என்றால் உடுப்பு போட்டு வெளிக்கிடுறது பெரிய பில்ட் அப். உள்ளாடைகள் , அதுக்கு பிறகு குளிருக்கு warmer , பிறகு shirt, பிறகு sweater, பிறகு ஜாக்கெட்;; உதெல்லாம் போட்டு விட்டு பிறகு கைக்கு கையுறை , தலைக்கு கம்பளி தொப்பி , பிறகு கழுத்துக்கு சால்வையை விட மிக நீண்ட துண்டால் ஒரு சுத்து கட்டு , சப்பாத்து , ஒரு headphone தலைக்கு, இதெல்லாம் தேவையா. நிம்மதியா நம்ம ஊரில் ஒரு சாரம், ஒரு ஷர்ட் இது காணும் முன் கடையில போய் பேப்பர் வாங்க , பாண் வாங்க .
அதுதான் சொல்லுறன் " சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா" புரிஞ்சு கொள்ளுங்க நண்பர்களே ..

நேற்று ஆபிசில் இருந்து கொழும்பு நோக்கி வெளிக்கிடும் போது கடும் வெயில், கொழும்பு வர கடும் மழை , மின்னல், இடி முழக்கம், வாகன நெரிசல்.. என்ன கொடுமை. திட்டி திட்டி ஓடோடி வந்து சேர்ந்தேன் . ஐரோப்பாவில் இருந்த காலத்தில் எங்கையும் போறதென்றால், காலநிலையை பார்த்து போட்டு தான் போறது. இவங்கள் இங்க சொல்லுற காலநிலை பற்றி நான் கருத்து எதுவும் கூற விரும்ப வில்லை.


கொட்டும் மழை ; வாகன நெரிசல் ...

சனி, ஞாயிறு மாலையில்Marine Drive ( இராமக்க்ரிஷ்ணாவில் தொடங்கி பம்பல பிட்டிய மஜெஸ்டிக் சிட்டி வரை ) இல் நடக்கும் தொழில் ; உடம்புக்கும் உத்தமமான தொழில் ; நடக்கும் பழசுகளை போட்டி மாதிரி முந்தி நடக்கும் போது உள்ளத்தில் என்ன கிளு கிளுப்பு .. நாங்களும் யாரையோ முந்துரோம்ள:) என்று தான் :) என்னோடு இன்னும் சில எஞ்சினியர் மாரும் நடக்கினம் .... :) அவை தங்கட எதிர்கால மனைவி மாரை தெரிவு செய்யும்பொருட்டு உடம்பை 16 வயது மாதிரி வைத்து இருக்க வேணுமாம் என்று விரும்பினம். :)

2009-12-19

பஸ் நம்பர் 155 இம் நீதிமன்ற வழக்கும்



கொழும்பில் ஓடும் 155 பஸ் வண்டியால் பாதிக்கப்பட்டோர் பலர் .. அதில் பயணம் செய்த ஒருவன் செய்த காரியத்தால், பொலிசு விசாரணை வழக்காக வந்து நீதிமன்றில் அந்த இளைஞன் நிறுத்தப்படுகிறான்.
பராசக்தி படத்தில் சிவாஜி கதைத்த போன்றதொரு கற்பனை ..
( ஒரு புது முயற்சி .. பிழை என்றால் திருத்தி விடவும் )

நீதிபதி :- உன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறாய் :

குற்றவாளி :-
இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது. புதுமையான பல வழக்குகளை கண்டிருக்கிறது.
ஆனால் இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானது அல்ல.
வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவனல்ல.
வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாக பேருந்தில் பயணிக்கும் ஜீவன்களில் நானும் ஒருவன்...
ஒட்டுனரை கியர் தடியால் தாக்கினேன்..
கண்டக்டரையும் கண்மூடித்தனமாக தாக்கினேன்..
குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றேன் இப்படியெல்லாம்..
நீங்கள் எதிபார்ப்பீர்கள் நான் இவற்றையெல்லாம் மறுக்கப் போகின்றேன் என்று....
இல்லை நிச்சயமாக இல்லை...
தாக்கினேன் ஏன்..
அவன் வண்டியை ஓட்டியதற்காகவா இல்லை..உருட்டியதற்காக............
நானே பாதிக்கப்பட்டேன்.. நேரடியாக பாதிக்கப்பட்டேன்....

என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும்.
கேளுங்கள் சொல்கிறேன் :


யாழ்ப்பாணத்திலே பிறந்தேன் நான்.
பிறக்க ஒரு தேசம் ,
பிழைக்க ஒரு தேசம் .
இது தமிழனின் விதி.

ஆவணி திங்கள்,
வாரத்தின் முதல் நாள்
அதுவும் திங்கள்,
காலை எட்டு மணி
அம்மா செய்த புட்டை கூட
அரைகுறையாக விழுங்கி கொண்டு
வெளுத்து வைச்ச A/L shirt இக்கு
கறுப்பாக ஒரு ஜீன்சு, ஒரு tie
கையில் எனது persoanal file
எடுத்த வீச்சுக்கு அப்பாவுக்கு கூட
போட்டு வாறேன் என்று சொல்லாமல்
வெள்ளவத்தை bus தரிப்புக்கு
ஓட்டோடி வந்தேன் interview போக,
நான் போக வேண்டிய ஊர்களை சொன்னபடி
வசந்தமாய் வந்தது பஸ் வண்டி 155,
ஓடோடி போய் ஏறினேன்
முன் சீட்டிலும் அமர்ந்தேன் ..
வெள்ளவத்தை கடக்க அரை மணி நேரம் ,
பம்பலபிட்டி கடக்க அரை மணி நேரம்...
அப்போ மருதானை தான் எப்போவரும் ?
நான் interview போவேனா என்று ஏக்கம்,
பக்கத்து seat Aunty யிடம் இடைக்கிடை கேட்டேன்
வரும் வரும் விரைவில் வரும் என்ற பதில் தந்தாள்!


Interview கேள்விகளை வாசித்தபடி
அவன் போட்ட தமிழ் டப்பான் கூத்தை கேட்டபடி
ஒன்று அரை மணி நேரம் கழித்து அடைந்தேன் நகர மண்டபத்தை,
யாருமே இல்லை அழைத்து செல்ல ..
இருந்தாலும் conductor இன் அறை கூவல் தொடர்கிறது ..
அங்கே நின்ற மாட்டை பார்த்தா??
மாடு கூட அவனது அறை கூவலை கேட்பதகா தெரிய வில்லை

அறைகூவல் அவன் தொழில்
ஒவ்வொரு இடமும் பல முறை கூவி செல்வது அவன் கடமை
அந்த கூவலுக்கு தான் சம்பளம் அவனுக்கு
அதுக்காக யாருமே இல்லாத இடத்தில் கூவுவதா ??
இப்படியே போனால் எப்போதான் நான் மருதானை போவது
இது என்னோடு நிண்டு போகட்டும் என்று முடிவெடுத்தேன்!!

உனக்கேன் இவ்வளவு அக்கறை,
உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை,
என்று கேட்பீர்கள்.
நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன்.
interview நேரம் முடிஞ்சு போச்சு ..!!
வேலையும் போச்சு!!!
வாழ விட்டார்களா இந்த மன்னனை,
இது சுயநலம் என்பீர்கள்
இல்லவே இல்லை என் சுயநலம் பொதுநலம் கலந்திருக்கிறது.
ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.

எழுந்தேன் ஆசனத்தை விட்டு,
புடுங்கி எடுத்தேன் கியர் தடியை
அடித்தேன் ட்ரிவரை
அவன் அப்பி யனவா சொல்லும் வரை அடித்தேன்
ஓடி வந்த கண்டக்டர் ஐ மீது பாய்ந்து பாய்ந்து அடித்தேன் ..
அவன் மணி அடிக்கும் மட்டும்!!

இது செய்ய தூண்டியது யார் குற்றம் .. ??
விதியின் குற்றமா?
அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் 155 பஸ் ஓனர்களின் குற்றமா?
டிக்கெட் போடாமல் பணம் பறிக்கும் இந்த பஸ் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்?
மகிந்தவின் குற்றமா?
அல்லது
பசிலின் குற்றமா ??
அல்லது
பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் அரசாங்கத்தின் குற்றமா?

நான் மட்டும் நினைத்து இருந்தால்
Toyota Corrola வாங்கி ஓடி இருப்பேன்,
இல்லவே இல்லை நானுமொரு பொது மகன்
அதனால் தான் பொது மக்கள் போல்
பயணம் செய்ய முயற்சித்தேன்!!

விட்டார்களா இல்லை ..!!!
பாருங்கள் என் நிலபரத்தை,
இன்று மாவட்ட நீதிமன்றில்
குற்றவாளியாக நிக்குறேன் ..

சொல்லுங்கள் இப்போது உங்கள் தீர்ப்பை
நான் செய்தது தவறா சரியா
என் வாதத்தை ஆராயுங்கள்
வாழ விடுங்கள் என்னை
என்னை மட்டுமா
எத்தனை பேர்
155 bus ஆல் பாதிக்கப்பட்டார்கள்
எல்லாருக்கும் ஒரு தீர்ப்பு தாருங்கள்

நீதிபதி தீர்ப்பில்: 155 பஸ் ஓனர்களின் நடவடிக்கை தான் இந்த மாதிரி இளைஞர்களை உருவாக்கியது .. இதனால் இந்த பஸ் எங்கேயாவது தரிப்பில் இரண்டு நிமிடத்துக்கு மேல் நின்றால் உடனடியாக அயலில் உள்ள பொலிசு இக்கு அறியப்படுத்தவும் என்று சொல்வதோடு .. இந்த இளைஞனுக்கு இந்த சம்பவத்தால் எந்த வேலையை இழந்தானோ அதே இடத்தில மீண்டும் interview வைத்து தகுதியானவன் ஆயின் வேலைக்கு எடுக்க உத்தரவிடுகிறேன் ""


காலப்போக்கில் (2012): 155 நம்பர் பஸ் ஆனது 138 நம்பர் பஸ்சிலும் வேகமாக ஓடியது ...
Related Posts Plugin for WordPress, Blogger...