Showing posts with label தமிழ் சினிமா. Show all posts
Showing posts with label தமிழ் சினிமா. Show all posts

2010-09-12

தமிழ் பின்னணி பாடகி சுவர்ணலதா இன்று காலமானார்

தமிழ் திரையுலகில் கடந்த மற்றும் இந்த வாரங்களில் இரண்டு மறைவுகள் நிகழ்ந்துள்ளன. கடந்த வாரம் நடிகர் முரளி , இன்று பாடகி சுவர்ணலதா.

1989-ம் ஆண்டு முதல் சினிமாவில் பாடி, ஒரு சில சூப்பர் கிட் பாடல்களுக்கு சொந்தக்காரியான சுவர்ணலதாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.
நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.



எனக்கு பிடித்த பாடல்கள்

தளபதி- அடி ராக்கம்மா கையைத்தட்டு
வள்ளி - என்னுள்ளே என்னுள்ளே
வீரா- மாடத்திலே கன்னி மாடத்திலே , மலைக்கோவில் வாசலிலே
தர்மதுரை- மாசி மாசம்



எவனோ ஒருவன் - அலை பாயுதே மாயா மச்சின்றா - இந்தியன் அஞ்சாதே ஜீவா - ஜோடி முக்காப்புலா - காதலன் போறாளே பொண்ணுத்தாயே- கருத்தம்மா பூங்காற்றிலே - உயிரே



சின்னத்தம்பி- போவோமா ஊர்கோலம் , நீ எங்கே
சத்ரியன் - மாலையில் யாரோடு
அமைதிப்படை - சொல்லிவிடு வெள்ளி நிலவே
உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் - என்னை தொட்டு
செந்தமிழ் பாட்டு - காலையில் கேட்டது
பாட்டு வாத்தியார்- நீ தானே நாள்தோறும் நான் பாடும்
என் ராசாவின் மனசிலே - குயில் பாட்டு


2010-09-08

நடிகர் அமரர் முரளி அவர்களுக்கு எனது கண்ணீர்அஞ்சலிகள்

இன்று மாரடைப்பால் அகால மரணமான தமிழ் நடிகர், பலருக்கும் பிடித்த நடிகர், காதல் சோகம் என்றால் எப்படி இருக்கும் அதன் வலியை உணர்த்தும் வகையில் பல படங்களில் நடித்து , பலரின் மனதில் இடம்பிடித்த நடிகர் அவர்களுக்கு அடியேனின் ஆழ்ந்த அனுதாபங்கள். நானும் ஒரு விதத்தில் ரசிகன் தான்.
காதலில் தோல்வி என்று எதுவுமில்லை, ஒரு இரசிகன் அவ்வளவுதான்.
காதல் வலி, ஒரு தலைக்காதல் வலி, இது எல்லாம் பற்றி தெட்ட தெளிவாய் விளக்கிய நடிகர். அதனால் தான் ரசிகன். இந்த காதல் எல்லாம் வேணாமப்பா .. என்று எனக்கு உணர்த்தியதால் ரசிகன்.
நடித்த முதல் படமே பூவிலங்கு . நல்ல கிட்டான படம்.


எனக்கு பிடித்த படங்கள்

  • பொற்காலம்
  • பகல் நிலவு
  • ரோஜா மலரே
  • ஆனந்தம்
  • சமுத்திரம்
  • காலமெல்லாம் காதல் வாழ்க
  • இதயம்
  • காதலுடன்
  • சுந்தரா டிராவல்ஸ்
  • உன்னுடன்
  • பூவிலங்கு
பகல் நிலவு படத்தில் எல்லாமே நல்ல பாடல்கள். இருந்தாலும் இந்த பாட்டில் உள்ள வரிகள் கொஞ்சம், இன்னும் பத்து வரிகளை பாடலாசிரியர் எழுதி இருக்கலாம் என்று எனக்கு ஒவ்வொரு முறையும் பாடல் கேட்கும் போது தோன்றும். உங்களுக்கும் அப்படி இருக்கும் என்று நினைக்கின்றேன். அவ்வளவு நல்லதொரு மெட்டு. வாழ்க இசைஞானி . குரலுக்கு சொந்தக்காரர்கள் ஜெயச்சந்திரன் , சுசீலா!!!

பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம் இது தானடி
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா

பூவிதழ் போல முல்லை என் பிள்ளை
புன்னகை செய்தால் கண்படும்
கண்மணி பிள்ளை கொஞ்சமும் வாட
கண்ட என் நெஞ்சம் புண்படும்
அன்னை தந்தை யாவும் அண்ணன் தானடி
அன்பு கொண்டு வாழும் சொந்தம் தானடி
நூறு நூறு ஜென்மம் கூடி நின்று வாழும்
வரவும் வேண்டி தினமும் தவமிருக்கும்


பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம் இது தானடி
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா





2010-09-02

என் இதயத்தை திருடிய " இதயத்தை திருடாதே " பாடல்கள்

வேலை செய்யும் இடத்தில் சகோதர மொழி விரிவுரையாளர் பல தடவை கேட்டும் அவரது வீட்டுக்கு செல்ல முயற்சிக்கும் போதெல்லாம் தடைகள் எதாவது வந்து அந்த குறுகிய பயணத்தை செய்ய முடியாமல் பல முறை கைவிட்டு இருந்தேன். கடைசியாக நேற்று மாலை அந்த பயணத்தை மேற்கொண்டு அவர் வசிக்கும் ஊருக்கு சென்று வந்தேன்.

பாதைகள் தெரியாத காரணத்தால் உதவியாளரும் நானுமாய் சென்றோம்.
வழமை போல பாட்டு பெட்டி தனது வேலையை ஆரம்பித்தது.
மலைகளுக்கு இடையில் செல்வதால், எப் எம் அலைவரிசைகளின் ஒலிபரப்பை தெளிவாக கேட்க முடியாது. இதனால் அண்மையில் எனக்கு ஒரு நண்பர் ( நண்பியாகவும் இருக்கலாம்), தந்த இறுவெட்டுகள் தான் போகும் போதும் வரும் போதும் எங்கட பாட்டு பெட்டியை இயங்க வைத்தது.

வீட்டில் இருந்து வெளிக்கிடும் போது சாரதி, சார் இந்தாங்கோ எந்திரன் பாடல்கள் சீடி , என்று தூக்கி தந்தார். வாகனத்தில் முதலில் அதுதான் கேட்கிறது. பிறகுதான் எதுவென்றாலும். நம்ம சாரதி நிலபரத்தை யோசிச்சு பாருங்க.. :(




பிறகு , ஏறத்தாழ ஒரு மணித்தியாலம் போன பின்னர், அன்பளிப்பாக வந்த சீடிக்களை பார்த்தால் , அதில் எல்லாமே ஓடியோ சீடிகள் . அதுவும் எனக்கு பிடித்த இதயத்தை திருடாதே பட பாட்டு சீடியும் கிடந்தது .

உடனடியாகவே ஒரு படப்பாட்டுகள் நிகழ்ச்சி மாதிரி அந்த படத்தில் உள்ள எல்லா பாடல்களையும் கேட்டு இரசித்தேன். ஒரு படத்தில் எல்லா பாடல்களையும் கேட்டு இரசிக்க கூடிய மாதிரி சில படங்களையே சொல்லலாம். அந்த வரிசையில் இந்த படமும் ஒன்று.

கீதாஞ்சலி என்ற பெயரில் தெலுங்கில் சூப்பர் கிட் இயக்குனர் மணிரத்தினம் 1989 இல் இசைஞானியின் இசையில் இயக்கிய படம் தான் தமிழில் இதயத்தை திருடாதே என்று வெளிவந்தது.
நாகர்ஜுன் , கிரிஜா ஷெட்டர் நடித்து , நூறு நாட்களுக்கு மேல் ஓடி சூப்பர் கிட் வெற்றியை தந்த படம் தான் இது. அதனை பாடல்களும் சூப்பர் கிட்.
நல்ல கதை, ஒருக்கா பாருங்க. படத்தை பலதடவை பார்த்துள்ளேன் .

இந்த படத்தில் உள்ள பாடல்கள்

ஆத்தாடி அம்மாடி பாடல்

சித்ராவின் இனிமையான குரலுக்கு இந்த பாடலும் சான்று . சின்னக்குயில் நீங்க தான்

ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
உருகுதோ... மருகுதோ...
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையும்
கொடியிலே... அரும்புதான்...
குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே ஹே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே



வானமும்... வையமும்...
கரங்களை இணைப்பதே மழையில்தான்
செடிகளும்... கொடிகளும்...
ஈரமாய் இருப்பதே அழகுதான்
மழையின் சாரலும் கிள்ளாமல் கிள்ளவும்
அழகும் ஆசையும் ஆடாமல் ஆடவும்
துள்ளுகின்ற உள்ளமென்ன
தத்தளிக்கும் மேனியென்ன
வஞ்சியெந்தன் கண்கள் கண்ட
தேவலோகம் பூமிதான்

(ஆத்தாடி)

என்னவோ... எண்ணியே...





இளையவள் இதயமே ததும்புதா
சிறுசிறு... மழைத்துளி...
சிதறிட சபலம்தான் அரும்புதா
வானதேவனே சொல்லாமல் செய்திட
வாயுதேவனே முத்தாட வந்திட
நீறு பூத்த கூந்தலோடு ஊதக்காத்து தழுவும்போது
துள்ளும் பெண்ணின் உள்ளம் நூறு
கவிதை சொல்லும் ஓஹொஹோ

(ஆத்தாடி)
ஒ ப்ரியா.. ப்ரியா

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல் - எங்கு பாடினாலும் நின்று கேட்டு போட்டு போறது .அப்படி ஆசை.. ஏன் தெரியுமா.. நானும் ப்ரியா தானே ..:)
மனோ, சித்ரா நீங்க பல்லாண்டு காலம் வாழ்க.

ஒ ப்ரியா ப்ரியா

என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் மாறுமோ

இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓரோரம்
கானல் நீரால் தாகம் தீராது

ஒ ப்ரியா ப்ரியா

உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவதோ

வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் நமது
தேவன் நீதான் போனால் விடாது

தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி

அன்பு கொண்ட கண்களும்

ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
ராஜ மங்கை கண்களே

என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் எழை இங்கு ஓர் பாவி அல்லவோ
எதனாலும் ஒரு நாளும் மறையாது ப்ரேமையும்
எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காட்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா







ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

காளிதாசன் ஏடுகள்

கண்ணன் ராச லீலைகள்
பருவ மோகம் தந்தது பாவம் அல்லவே
ஷாஜஹானின் காதலி

தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது
இறந்தாலே இறவாது விளைகின்ற ப்ரேமையே
அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெட்றி கொள்ளுமே
இளம் கன்னி உன்னுடன் கூட வா வா


ஒ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா
ஒ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா

ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மண்கலம்
ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்


ஒ பாப்பா லாலி

மனோவின் மற்றுமொரு இனிமையான குரல்






காவியம்
பாடவா தென்றலே

மனோவின் குரலில் இனிமையான பாடல்

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில்
மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே
காவியம் பாடவா தென்றலே

விளைந்ததோர் வசந்தமே
புதுப்புனல் பொழிந்திட
மனத்திலோர் நிராசையே
இருட்டிலே மயங்கிட
வாழ்கின்ற நாட்களே
சோகங்கள் எனபதை
கண்ணீரில் தீட்டினேன்
கேளுங்கள் என்கதை
கலைந்து போகும் கானல் நீரிது

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ



புலர்ந்ததோ பொழுதிதுவோ
புள்ளினத்தின் மகோத்ஸவம்
இவை மொழி இசைத்ததும்
சுரங்களின் மனோகரம்
புதுப் பிரபஞ்சமே
மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்கம்தான்
முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சி இல்லையே

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
காவியம் பாடவா தென்றலே





ஓம்
நமக



காட்டுக்குள்ளே




2010-07-30

வர இருக்கும் எந்திரன் பாடல்கள் - ஒரு முன்னோட்டம்





நீண்ட நாட்களாய் தீவிர ரஜனி ரசிகர்கள் ( மற்றும் ரகுமான் ரசிகர்கள் உள்ளடக்கம் ), எதிர்பார்த்து காத்திருந்த தலையின் , தமிழ் சினிமாவின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டாரின், சூப்பர் கிட் இயக்குனர் சங்கரின், எந்திரன், ஒலிப்பேழை அல்லது ஒலிநாடாப் பேழை வெளியீடு நாளை மலேசியாவின் PICC hall,( இணைய முகவரி http://www.picc.gov.my/v1/) இல் சிறப்பாக நடை பெற இருக்கின்றது.
எங்களை போன்ற தீவிர ரசிகர்கள் , கடந்த சில நாட்களாய் நடத்திய தேடுதல் வேட்டையில், மாதிரி பாடல்கள் கிடைக்க பெற்றுள்ளன. இறுதியில் பார்க்கவும்.


ரகுமானின் இணைய தளத்தில் ஏழு பாடல்கள் இருப்பதாக பதியப்பட்டுள்ளது.

T...RACK LISTING

1) Puthiya Manidha
Singers: S. P. Balasubramaniam, A. R. Rahman, Khatija Rahman
Lyrics: Vairamuthu

2) Kadal Anukkal
Singers: Vijay Prakash, Shreya Ghoshal
Lyrics: Vairamuthu

3) Irumbile Oru Idhaiyam
Singers: A. R. Rahman, Kash'n'Krissy
Lyrics: Kaarki
English lyrics: Kash'n'Krissy

4) Chitti Dance Showcase
Singers: Pradeep Vijay, Pravin Mani, Yogi B
Additional Arrangements and Programming: Pravin Mani


5) Arima Arima
Singers: Hariharan, Sadhana Sargam
Additional Vocals: Benny Dayal, Naresh Iyer
Lyrics: Vairamuthu


6) Kilimanjaro
Singers: Javed Ali, Chinmayi
Lyrics: P. Vijay
Additional Vocal Arrangements: Clinton Cerejo

7)Boom Boom Robo Da
Singers: Yogi B, Keerthi Sagathia, Swetha Mohan, Tanvi Shah
Lyrics: Kaarki


வழமை போலவே ஆரம்ப பாடல் அநேகமாய் புதிய மனிதா பாடல் என்று நினைக்கின்றேன். ஆரம்ப பாடல்களை எஸ் பி பாடுவது வழமை .. இருந்து தான் பார்ப்போமே.. :) ரகுமானின் மூத்த மகளும் இணைந்து பாடி இருப்பது இங்கே சிறப்பம்சம்.



கிடைக்க பெற்ற படத்தொகுப்புகளில் இருந்து எந்திரன் மற்றுமொரு சங்கர் , ரகுமான் , ரஜனியின் வெற்றி படைப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் , இந்த வயசிலும் நீங்கள் ஒரு அன்பால சேர்ந்த கூட்டத்தை வைத்து இருப்பதற்கு.


இளமை பொங்கும் ரஜனி , கவர்ச்சி பொங்கி நடிக்கும் இயற்கை அழகி ஐசு , பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ..

" சும்மா பேரை கேட்டாலே அதிருதில... !!! "


அரிமா அரிமா பாடலை கேட்க :

http://www.mediafire.com/?c2swqqob24rqgxb
Related Posts Plugin for WordPress, Blogger...