Showing posts with label இலங்கை அரசியல். Show all posts
Showing posts with label இலங்கை அரசியல். Show all posts

2010-04-08

குத்தீட்டு வந்து இருப்பீங்க ???

இன்று இலங்கை பாராளுமன்ற தேர்தல், நான் என்றுமே அரசியல் எழுதுறது இல்லை. இங்கவும் அதே தான்.
வாக்களிப்பது கடமை.. கட்டாயம் வாக்களித்து இருப்பீர்கள் . நாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து செயல்பட்டு இருப்பீர்கள் .
வடிவேல் காமெடி போல "தனித்து செயல் படாதையடா ...தனித்து செயல் படாதையடா ... என்று எத்தனை வாட்டி சொல்லுறது என்றதை நினைத்து பார்த்தேன்..:)


நான் பார்த்து ரசித்த தேர்தல் காமெடிகள் சில.. நீங்களும் ரசியுங்கள்..

1- குறள் அமுதம்

"அடிச்சு சொல்லுறன்... இப்படி நடக்காட்டி பாருங்கோவன் ..
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தந்து மகிந்த சிந்தனையை வெற்றியடைய செய்த எல்லோருக்கும் நான் உங்களின் தலைவன் என்ற ரீதியில் நன்றி சொல்லக்கடமைப்பட்டுளேன்"


2 - நண்பியின் மூஞ்சி புத்தகத்தில்

கொழக்கட்டையோ மோதகமோ எதுவெண்டாலும் உள்ளுக்க இருக்கிறது ஒண்டுதான். புள்ளடியை பாத்து குத்துங்கப்பா..!


3- வடிவேல் காமெடி




4- விவேக் காமெடி




5- சத்தியராஜ் காமெடி

2010-01-27

ஜன நாயக நாட்டில் - இராணுவ ஆட்சி வேண்டாம் என்று தீர்ப்பு

தேர்தல் முடிவுகள் வந்து முடியும் தருவாயில் ஏற்கனவே மாண்பு மிகு ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ பதினைந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று கொண்டு இருக்கார்.
தேர்தல் இல் எந்த வித குளறு படியும் நடக்க வில்லை என்று எதிர் கட்சி தலைவர் கூட கூறிய நிலையில் , இந்த வளமான எதிர் காலத்தை உருவாக்க மகிந்தவுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறார்கள்.



அதி மதிப்புக்குரிய ஜனாதிபதி பிடிக்கிற விதத்தில் தெரியுது இல்ல..நினைச்சன் அப்பவே இதுதான் அர்த்தம் என்று .." சும்மா பேரை கேட்டாலே அதிருதில .... "

ஆமா ஜனாதிபதி அவர்களே ,அதிர்ந்தது..

எங்கள் ஜனாதிபதி நாட்டையும் வளப்படுத்து வார் என்பதில் ஐயம் இல்லை. அடுத்த ஆறு ஆண்டுகள் உங்கள் ஆட்சியில் இன்னும்பல விடிவுகள் வரணும் என்று வாழ்த்துகிறோம்.

இலங்கையில் இனி மீண்டும் வளமான எதிர்காலம் தொடரும்;தொடங்கும்.


ஜனநாயக நாட்டில் இராணுவ ஆட்சி நடக்க விடுவமா? நாங்கல்லாம் யாரு? மக்கள் தலைவன் மகிந்த வாழ்க..வெற்றியின் சின்னம் வெற்றிலை சின்னம்.

Related Posts Plugin for WordPress, Blogger...