2009-08-27

Ring tone செய்யும் மாயா ஜாலங்கள்

கொஞ்ச நாளா எனக்கும் இந்த Ring TOne இக்கும் ஏதோ பூர்வீக தொடர்பு இருக்கு
கடைசியா அம்மா விடம் நல்லா வாங்கி கட்டினது.

இப்போ நம்ம Project Supervisor கிட்ட முறையாக மாட்டி கொண்டேன்.
என்னமோ தெரியாது இந்த வில்லு பட Tones தான் எனக்கு ஆப்பு வைக்கிறது என்று ஒரு முடிவோட இருக்கு போல.
இதுதான் Flash back.



செவ்வாய் தோறும் Company சென்று வருவது வழக்கம். வழமை போல இன்றும் சென்று வேலை பார்த்து விட்டு மாலை ஒரு Presentation தயார் படுத்தி கொண்டு இருக்கும் போது என்னுடன் எனது Supervisor , எனது Company Supervisor மற்றும் ஒரு Dutch அம்மையார் im உரையாடி கொண்டு இருந்தனர்.
நான் silent mode இல தான் எனது கையடக்க தொலைபேசியை வைப்பது வழமை. ஆனாலும் இன்று ஏதோ ஒரு யோசனையில் மறந்து போட்டேன்.
யோசனைகளை வர ரொம்ப காரணங்கள் உண்டு. அம்மாவின் பயணம், மனைவியின் ஊரிலிருந்தான பயணம் என்று பல யோசனைகளால் மறந்து போச்சு இந்த மாப்பு !!!
வினை அங்க தான் வந்து சேர்ந்தது.
நான் போட்டு இருந்த Ring tone, ஒருக்கா ரிங் பண்ணினதால , எனது supervisor மட்டும் இல்லை, என்னை சுற்றி நின்ற எல்லாரும் ஒருக்கா என் மீது கடைக் கண்ணால் பார்த்தாங்க பாருங்க.
அதை நான் என்னென்று சொல்லுறது.
எனக்கு ஏதோ இன்று தான் கடைசி நாள் மாதிரி இருந்திச்சு.

அப்படி என்ன தான் அந்த ring tone என்று ஒருக்கா பாருங்களேன்

Ring Tone இல உள்ளடக்கப்பட்ட பாடல் வரிகள் இவ்வளவும் தான்


Lyrics :

Are You Crazy
You Useless Illiterate Fool
Do You Have A Brain?
How Dare You
I Will Kill You
You Country Brute
I Will Slap You
I Will Make You Stand In Shoes
Unnai Thunu Thunda Vettiduven //தமிழில வந்ததால தப்பிச்சேன் மாமோய்
Unnai Gun Ah Vechu Suttuduven //தமிழில வந்ததால தப்பிச்சேன் மாமோய்
Never Ever Come Next To Me
You Understand
Go To Hell
You Loser….!!


video is here :

இந்த கானொளியில் கொஞ்சம் கதை வசனமாய் நீண்டு கொண்டு போகிறது

http://www.youtube.com/watch?v=jRxn3TIsLFM



ஏதோ இதுவரைக்கும் எனக்கு Email ஏதும் வர வில்லை , எதுக்கும் காலையில் போய் உண்மையை சொல்லிடுவம். அப்புறம் நாங்க தப்பினோம் பிழைச்சோம் ஆகிடலாம் !!!Lol

2009-08-26

மறக்க முடியாத லூட்டி அடித்த இன்னுமொரு நாள்

இன்று ஏதோ எங்கள் ஆபீஸில்( நெதர்லாந்து) எங்கள் குழுமத் தலைவர் வருகை தராததால் ஒரே கொண்டாட்டம். எங்கள் அறையில் இரண்டு நம்ம தென் நாட்டு பொண்ணுகளும் நானும் தான். அதுகளும் நன்றே தமிழில் பேசுவதால் என்றுமே எங்கள் லூட்டிகளுக்கு குறை இல்லை.

ஏதாவது பற்றி, இல்லை போனால் யாரையாவது பற்றி பேசிக்கொள்வது வழக்கம் . இன்று சற்று வேற மாதிரி ( பயப்பட வேண்டாம்) கதைத்து கொண்டு இருக்கும் போது ஒரு சக்கை போடு போட்ட ஜோக்கை நம்ம பொண்ணு ஒருத்தி அவிழ்த்து விட்டாள்.
அதுவும் A1 ஜோக் தான் !!

ஒரு பேராசிரியரும் அவர் பால் வேலை செய்யும் மாணவனும் சந்தித்து கொள்கின்றனர். ( எங்கே என்று எல்லாம் கேட்க கூடாது ,நான் சூடாகிடுவன்)

அப்போது அந்த பேராசிரியர் அந்த மாணவனிடம் ஒரு கேள்வி கேட்டார்.
இதுதான் அந்த கேள்வியின் சாராம்சம்.

அதாவது ஒரு புகை வண்டி 40 km/h வேகத்தில ஒரு தண்டவாளத்தில் ஓடி கொண்டு இருக்கிறது. ஒரு பையன் அந்த தண்ட வாளத்தில் விழுந்து கிடக்குறான். ( ரொம்ப யோசிக்க வேணாம், புகை வண்டி அடிக்குமா , அடிக்காத என்று வடிவேலு மாதிரி கேட்டார் என்று அதுதான் இல்லை ).

கேட்டார் ஒரு கேள்வி , அப்படியே கண்ணை கட்டின மாதிரி இருந்திச்சு.
என்ன தெரியுமா " தண்டவாளத்தின் குறுக்கே படுத்து இருக்கும் பையனின் வயசு என்ன "
சொல்லுவியளோ ஹா ஹா.
மாணவன் பயப்பிடாமல் சொன்னான், ஒரு 20 இருக்கும் என்று.
இதை பார்த்து கொண்டு இருந்த பேராசிரியரின் துணைவியார் அறிவு கேட்டு விழுந்து போனார்.
பிறகு அவருக்கு வைத்தியம் எல்லாம் செய்து, எழுப்பி விட அந்த பையனின் காதுக்குளே கேட்டாவாம், தம்பி நீர் என்னென்று 20 என்று சரியா சொல்ல முடிஞ்சது என்று.
அதுக்கு மாணவன் சொன்னான் " ஒரு நாற்பது வயசு முழு லூசு கேள்வி கேட்குது அதை பார்த்திட்டு விடை சொல்லுது எப்படியும் ஒரு அரை லூசா தானே இருக்க்கும், அதாலே அது இருபது வயசு பையன் என்று மொக்கையா சொன்னதும், எழும்பியிருந்த அந்த பேராசிரியரின் மனைவி மீண்டும் மயங்கி போனாளாம்,

தினமும் இப்படி எத்தனை பேராசிரியரின் மனைவி மார் மயங்கி மயங்கி விழுந்து எழுதல் நடக்குது என்று ஒருக்கா பார்க்கணும் போல இருக்கு !!!

எந்த பேராசிரியரையும் கடிக்க எழுதவில்லை , சிலவேளைகளில் உண்மையும் தான்!!!

2009-08-25

Nokia வின் தொலைபேசிகள்

என்ன கொடுமை இதுவா .. உண்மை எத்தனை விதமான கையடக்க தொலைபேசிகள்..



இதை விட இன்னும் பல



















இப்பவே கண்ணை கட்டுதா இல்லை இன்னும் இருக்கு. முடியல !!!!
அவசரம் எனின் கீழுள்ள இணைய தளத்திற்கு செல்லவும்
http://www.typhone.nl/gsm/3/nokia

ஐரோப்பிய நாடுகளில் இந்த இணைய தளம் மிகவும் பிரசித்தம். இணையம் மூலமாக கைத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் போது விளையும் குறைவு. நேரமும் கொஞ்சம். வீட்டிலையே பொருளை கொண்டு வந்து தருதல், இதை விட ஆறுதல் ~~~

2009-08-24

உலகிலேயே மிகப்பயங்கரமான நீச்சல் தடாகம்

என்ன என்று யோசிகிறீர்களா , உண்மை தான்.



டெவில்ஸ்( Devils Pool) நீச்சல் தடாகம் தான் சிம்பாவே நாட்டில் உள்ளது. 128 அடி ஆழம் கொண்ட ஒரு நீர்வீழ்ச்சியின் உச்சி தான் அது. அதன் விளிம்பில் ஒரு நீச்சல் தடாகம். நீந்த தகுந்த காலங்கள், நீரின் நிலை குறைவாக உள்ள காலங்கள்.

இங்கு எல்லாம் போய் நீந்த வேணுமா ? என்றே தோன்றும். ஆமாம் இதுக்கென்று சென்று வருகிறார்கள் பல உல்லாச பயணிகள் !!!



இந்த தொகுப்பை பார்த்த பல்கலை நண்பன் ஒருத்தன் சொன்னான். எங்கட கம்பசில இருக்கிற அந்த 50 மீற்றர் குளத்திலையே நாங்கள் இறங்கி பத்து அடி ஆழமான பகுதிக்கு செல்வது இல்லை. இது என்ன கொடுமை சார். உண்மையும் தான். நான் பல்கலையில் படிக்கும் காலத்திலும் சரி, விரிவுரையாளர் ஆக இருகின்ற காலத்திலும் சரி நீச்சல் அடிக்க போவதுதான். அங்கே அருமையான நண்பிகள்(சகோதர மொழி) உடன் நீச்சலில் ஒரு அரட்டை போட்டு விட்டு வருவது வழமை. அதுவும் 5 அடி ஆழம் மட்டும் நீந்தி சென்று ஐயோ அம்மாடி என்று ஓடி வந்து விடுவேன்.
இங்கே பர்ருங்களேன் இந்த இளசுகள், பழசுகளின் சேட்டைகளை !!!










இதன் காணொளிகளை இங்கே பார்வையிடலாம்

http://www.youtube.com/watch?v=4hlhidk7KgM"

போனால் போகட்டும் வந்தனீங்கள் இதையும் பார்த்து விட்டு செல்லுங்கள் !!!

ஒரு நல்ல சமாச்சாரம் இந்த அசின் பெயரில் நீச்சல் தடாகம். ( உண்மையாகவே இந்த அசின் இல்லை)
http://www.fabulousphilippines.com/asin-hot-springs.html

பிலிப்பைன்ஸ் நாட்டிலாமே . நல்லவேளை இது நம்ம ரசிகர் மன்றங்களுக்கு தெரியாது ,
தெரிந்தால் அப்புறம் நயன் நீச்சல் தடாகம், ஷ்ரேயா நீச்சல் தடாகம், அப்புறம் நம்ம ஜூனியர் தமன்னா நீச்சல் தடாகம், நம்ம சீனியர் த்ரிஷா நீச்சல் அரண்மனை , போனா போகுது நம்ம சுப்பர் சீனியர் நமீதா நீச்சல் தடாகம், நம்ம குரு மாவளிகா நீச்சல் தடாகம் என்று எல்லாம் கட்டி ஒரே நீச்சல் தான் கடைசியில்.

யாருக்கும் என் அறிவுரையை கேட்டு கட்ட போறது என்றால் எனக்கும் ஒரு சிறு லஞ்சம் தந்து போடுங்கள். பகவானே நமக !!!


சுவாமியே!!!! ஏன் நீங்கள் நம்ம ஷ்ரேயா, நமீதா, நயன் குளிக்கிற நீச்சல் தடாகம் பற்றி ??? சொல்லுகிறீர்கள் எங்கே அவர்கள் என்ற எனது பக்கத்து அறை நண்பனின் முனு முனுப்பு காரணமாக இந்தா ஒரு கிளைமாக்ஸ் காட்சியில் !!!!






2009-08-23

விநாயக சதுர்த்தி


பேராதனை குறிஞ்சியில் வீற்றிருக்கும் எங்கள் தொப்பையப்பன்


இன்று விநாயகர் சதுர்த்தி ,

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

பிள்ளையாரை வணங்கி எந்த காரியத்திலும் ஈடுபட வேணும் என்று எங்கள் சமயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் எந்த கடவுளை வணங்கினாலும் முதலில் பிளையாரை வணங்கி விட்டுதான் எந்த கடவுளையும் வழிபடல் வேண்டும் என்று சொல்லப்படுகின்றது



மூன்று முறை தலையில் கையால் குட்டி மூன்று முறை தோப்பு கரணம் போட்டு ""அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே'' என்று தொப்பை யப்பனை வழிபடல் வேண்டும்

இவ்வாறு செய்யும் போது சுக்லாம் பரதரம் என்ற ஸ்துதியை கூட பாடலாம். அவ்வாறு தான் உண்மையில் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். இது தெரியாதவர்கள் பலர். அதனால் அதை தவிர்த்து விட்டு தொப்பையப்பனே என்று சொல்வது வழமையாகி விட்டது

இந்த தோப்புக்கரணம் போடுவதற்கு பின்னால் ஒரு கதை இருப்பதாக எல்லாரும் அறிவார்கள். அறியாதோர் இருப்பின் இது தான் புராணக்கதை!! (இணையத்தில் எடுத்தது )


சுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தானத்தில் இருக்கின்ற பிள்ளையார்

ஒருமுறை தவமுனிவரான அகத்தியர் கமண்டலமும் கையுமாக வந்து கொண்டிருந்தார். அப்போது காக உருவெடுத்து வந்த விநாயகப் பெருமான் அக்கமண்டல நீரை தட்டி விட்டு ஓடி விட்டார். காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஓடிவந்தது. காகம் தட்டியதால் விரிந்து பரந்த நீராக ஓடியது என்பதால் "காவிரி' என்ற பெயர் அந்நதிக்கு உண்டானது. அகத்தியர் தட்டி விட்ட காகத்தைத் திரும்பிப் பார்த்தார். அதைக் காணவில்லை. காகம் நின்ற இடத்தில் கொழு கொழு என்று ஒரு சிறுவன் நின்றிருந்தான். அவன் தான் தொப்பைக் கணபதி. செய்த செயலுக்காக முனிவரைப் பார்த்துச் சிரித்தான்.


கோபமடைந்த அகத்தியர் அச்சிறுவன் தான் கமண்டல நீரை கவிழ்த்தவன் என்ற எண்ணத்தில் அவனது தலையில் குட்ட முயன்றார். ஆனால், அச்சிறுவன் விநாயகப் பெருமானாக அகத்தியர் முன் நின்றான். குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர், அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு, மன்னிக்குமாறு வேண்டினார். மற்றொரு கதையும் இதற்கு காரணமாக உள்ளது.கஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்களுக்கு கொடுமைகள் செய்து வந்தான். தேவர்களை தன்னைக் கண்டால், தோப்புக்கரணம் இடவேண்டும் என்று நிர்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் இச்செயலைச் செய்து வந்தனர். அவனைச் சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர். விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும் அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள் விநாயகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர். அதுமுதல் விநாயகருக்கு தோப்புக்கரணம் இடும் முறை உண்டானது.


இன்று ஆலயங்களில் கொழுக்கட்டை( மோதகம்) அவித்து ( பொறித்து) விநாயகரை வழிபடுவர். இன்று மோதக பிரசாதம் நன்றே கிடக்கும், யாருக்கும் மோதகம் ஆசை என்றால் அருகில் உள்ள ஆலயத்தை நாடவும்.

எனது பல்கலை காலங்களில் குறிஞ்சியில் நடை பெரும் விநாயக சதுர்த்தியில் நாங்கள் மோதகம் சாப்பிட்ட வரலாறே தனி. என்னுடன் எனது சாப்பாட்டு நண்பர்கள் ( E- Faculty e-98 இல் சாப்பாட்டுக்கு பிரபல்யமானவர்கள் யார் என்று தெரிந்து இருக்கும்) . அவர்கள் இன்று கூட ஏதாவது ஒரு கோவிலில் கட்டாயம் மோதகதுக்காக காத்து இருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. வாழ்க நண்பர்கள்.

அது என்ன மோதகம் அவிப்பது விநாயகருக்கு இந்த விஷேட நாளில் , அதுக்கும் ஒருகதை உண்டு. அதுதான் இது

கொழுக்கட்டையின் கூர்மையான முன் பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. எவரும் அதிகம் விரும்பாத வெள்ளெருக்கு மாலை, மருத்துவக் குணமுடைய அருகன் புல் அர்ச்சனை ஆகியனவும் விநாயகருக்குப் பிடித்தமானவை. "மற்றவர்களால் கைவிடப்பட்டவர்களுக்கும் நான் ஆதரவாக நிற்பேன்' என்பதை வெள்ளெருக்கு மாலை தெரிவிக்கின்றது. "விநாயகரை வணங்கினால் நோய்கள் தீரும்; பிறவி நோயும் மாயும்' என்பதை அருகன்புல் அர்ச்சனை அறிவிக்கின்றது. கணபதியைத் தொழுவோம்! கவலையெல்லாம் மறப்போம்!


இணையத்தில் -http://www.slokakids.com/

2009-08-20

Kamal's Powerful Leg story




1) In 1978, Kamal Hasan's tamil movie "Sivappu Rojakal" was released. He played the role of a Psychopath killer (femicide). A year later, a guy named "Psycho Raman" was caught for brutally murdering people especially women.

2) In 1988, Kamal played the role of an unemployed youth in the movie "Sathya". In 89-90's our country faced lot of problems due to unemployment.

3) In 1992, his blockbuster movie "Devar Magan" was released. It’s a village based subject. The movie portrayed scenes of communal clashes. Exactly a year later in 1993, there were many communal clashes in southern districts.

4) We all know in 1996 many people in our country was cheated by finance companies. Kamal Hassan had clearly depicted this in his movie "Mahanadhi" which was released in 1994, well a year in advance.

5) In "Hey Ram"(2000), there are few scenes relating to Hindu Muslim clashes. We all know 2 years later, Godhra ( Gujarat riots) incident happened.

6) He used a word called 'tsunami' in his movie "Anbe Sivam"(2003).The word 'TSUNAMI' was not known to many people before. In 2004, 'tsunami' stuck the east coast of our country and many people lost their lives.

7) In his movie "Vettaiyadu Vilayadu "(2006) there are two characters called Ilamaran & Amudhan who played the roles of psychopath killers. After 3 months of release of the movie, the NOIDA serial killing came to light (Moninder & Sathish)

8) In his latest movie "Dasavatharam" in 2008 he mentioned about a deadly virus, which spread via air, that may destroy the world. Now in 2009 we have the Swine Flu that spreads through air. And to be specific, in the movie Kamal develops a bio weapon and finds out the deadly effect of the virus in a lab in America . Now the first case of Swine Flu was detected in Mexico ( North America ).


WHAT DO U CALL THIS ----- “A COINCIDENCE”?

2009-08-05

முருக பெருமானின் காட்சி

நானும் ஒரு முருக பத்தன் தான்.



நன்றி :- Nallur.tk

ஆனால் நான் அவரை நேரே கண்டு தரிசிக்கும் ஆற்றல் இது வரைக்கும் கிடைக்க வில்லை.
என்றோ ஒரு நாள் அவரை சந்திக்க துடிக்கிறேன்



சரி இப்போ கதைக்கு வருவோம் !!!!


இந்த அம்மாவுக்கு அது எட்டி இருக்கிறது

http://www.tamilwin.com/view.php?2aSWnVe0dHj0M0ec0G7D3b4D9EO4d3g2h2cc3DpY2d426QV2b02ZLu2e

கடவுள் இருக்காரா இல்லையா என்று எல்லாம் நான் சொல்ல மாட்டேன். இது எனக்கு தேவை இல்லாத வம்புக்குள் கொண்டு போய விடும்.
ஆனாலும் எதோ ஒரு ஷக்தி இருக்கிறது என்பது உண்மை. இது எனக்கு தெரிந்த அறிவு!!!
சரி அதை விடுவம்!!


நாங்க இந்த தலைப்பில் ஒரு மசாலா எழுத காரணம். இந்த முருகன் செய்தி வாசித்த பின் நண்பர்கள் சிலரில் ஏற்பட்ட மாற்றங்கள்/கூறிய எழுதிய கருத்துக்கள் !!!!

1

ஒரு நண்பன் தனது கருத்தை சொல்லும் போது; கடவுளுக்கு கண் இல்லை, எல்லாம் பேய்காட்டு என்று சடார் என்று பாய்ந்து கொண்டான். அவன் கூறுவதும் ஒரு சிலர் ஏற்பர். நாட்டில் நடை பெற்ற துன்பகரமான நிகழ்வுகளால் ஆகும் என்று நான் நினைக்கிறன்.

2

இன்னுமொருவன் சொன்னான், குடுத்தவர் கூரையை பிச்சிட்டு குடுக்காமல் பிச்சை காரன் மாதிரி சும்மா ஐயாயிரம் மட்டும் கொடுத்தார், Waste Fellow( vivek Style ila) என்றான்

3-
இன்னுமொருவன் தனது Facebook பதிவில்
தான் ஓர் நடமாடும் தெய்வம் எனவும், தான் இலங்கை ரூபாயில் வசூல் வாங்குவதால் தன்னால் மாத்திரமே இலங்கை ரூபாயில் பணமுடிப்பு கொடுத்திருக்க முடியும் என்றும் எழுதி இருந்தான் !!

4- இன்னுமொருவன் சர்ச்சையாக எழுதி விட்டான்!!
......... பகவான் இதை வன்மையாக கண்டிக்கிறார் , இது ............ பகவான் தான் அப்படி வந்து கொடுத்ததாகவும் சொல்லி இருக்கான்!!

நான் எந்த பகவான் என்று சொல்ல விரும்பவில்லை.

எனக்கு, முன்னர் கல்லூரியில் பயிலும் போது மாதா , பிதா , குரு, தெய்வம் என்று சொல்லி படிப்பிச்சவர் எண்கள் இணுவையூர் பஞ்சாட்சரம் ஆசிரியர்.
அப்போது ஓன்று சொல்லுவார். நீங்க உங்கள் பெற்றோரை மதியுங்கள். குருவை மதியுங்கள். தெய்வம் தானாக ஆசிர்வதிக்கும் என்று.
அதிலும் உண்மை இருக்கு. நாங்கள் , எங்களில் பலர், எங்கள் பெற்றோரை மதிப்பது அரிது. பொதுவாக ஏதாவது ஆகணும் என்பதற்காக நாங்கள் ஒரு ஐஸ் வைப்பம். மற்றும் படி சொல்வழி கேட்பது அரிது.. !!!

நீங்கள் எந்த கடவுளையும் குறையாக சொல்லாதீர்கள். உங்களுக்கு எந்த கடவுள் பிடிக்குதோ அவரை வழிபடுங்கள். அவர் பால் இருக்கும் தத்துவங்களை அறியுங்கள். படியுங்கள் வாழ்கையில் நடை முறை படுத்துங்கள்.
( பிறகு நான் முருக பத்தன் அதால வள்ளியை தேடலையோ என்று கேட்கவேனாம்) !!!

மேலும் நான் எந்த பகவான் பக்தனும் இல்லை. நான் எங்கள் சிவ குடும்பத்துடனே நிக்குறன். எனக்கு மற்ற பகவான்களை பற்றி எதுவுமே தெரியாது. தெரிந்து கொள்ள வேணும் என்ற ஆர்வமும் இல்லை. அதற்காக அவர்களை நான் குறையாக சொல்லவும் இல்லை.



5- இது மிகவும் ஜொள்ளு மாதிரி ஒன்றை எழுதி இருந்தான்

ம்..ம்.... பொது இடத்தில அரைகுறை ஆடையுடன் தோன்றிய குற்றத்தக்காக அந்த அம்மா கதிர்"காமக்" கந்தன் மீது வழக்கு போடலாம். அனால் அவர் தான் பொது இடத்தில இல்லை, இடுப்பிலதான் அரைகுறை ஆடையுடன் தோன்றினான் எண்டு மொக்ககையை போட்டாலும் போடுவார்.

6-
முருகனையே வம்பில் மாட்டி விடுற மாதிரி ஒரு நண்பன் எழுதி இருந்தான்!!!!
நோட்டு நம்பர பார்த்தா முருகன் எந்த வங்கில இருது எடுதிருகார் எண்டு தெரியும்.
இல்லாட்டி முருகன் கள்ள நோட்டு அடிக்கிறார் எண்டு அர்த்தம்!!!


தொடரும் !!!
Related Posts Plugin for WordPress, Blogger...