2009-10-18

எனது பார்வையில் ஆதவன்

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் முதல் முறையாக சூரியா நடிக்கும் படம் தான் ஆதவன்.

ஆதவன், முகமூடி, சிங்கம் என்று மூன்று படங்கள் தொடர் வரிசையில் சூரியாவுக்கு.

அயன் போட்ட சக்கை லாபத்தை தொடர்ந்து ஆதவனும் போடும் என்ற நம்பிக்கையில்.

இருந்தாலும் விஜயின் குருவியை தயாரித்த உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் ஆதவனை தயாரிக்கிறது. இது உதயநிதியின் இரண்டாவது தயாரிப்பு.

இங்கைதான் பிரச்சனையே ஏற்கனவே விஜயின் மதிப்பை எல்லாம் தூக்கி எறிந்த குருவி பட்ட அவமான தோல்வியை ஆதவனும் சந்திக்க நேரிடுமா என்பது தான் கேள்வி ???

இந்தியா , இலங்கையில் வெளியிடப்பட்ட உடனையே விமர்சனங்கள் கொட்ட தொடங்கிய நிலையில் ஐரோப்பாவில் தீபாவளி தினத்தில் வெளியிட இருந்தாலும் லண்டனில்,மற்றும் ஐரோப்பிய நகரங்களில் தீபாவளி தினத்தில் செய்த ஆர்ப்பாட்டம் , கவரும் ஒன்று கூடல் போன்றவற்றால் , ஒரு நாள் பின் தள்ளி வெளியிட செய்தது. இது முகவராக இருக்கும் இலங்கை தமிழர் சொன்ன கதை.

எனினும் ஐரோப்பாவில் திரையிடப்படும் போது சென்று பார்த்து விடல் வேண்டும். தினமும் போடுவது இல்லை, வாடகைக்கு தியட்டர் எடுத்தே போடுவார்கள் , தமிழர்கள் வாழும் நகரங்களில் உள்ள தியட்டர்களில் காட்சி நடக்கும், இது எந்த நாடு என்றாலும் லண்டன் தவிர என்று நினைக்கிறன், சூரிச் சரி , ஜேர்மன் நாட்டில் சரி இது தான் வழமை. நெதேர்லந்தில் தமிழர்கள் நான் வசிக்கும் நரகத்தில் அதிகமாக இருப்பதால் எனது வீட்டிற்கு முன்னால் உள்ள பிரமாண்டமான தியட்டர் இல் தான் போடுவார்கள். ஒரு நேரத்தில் ஏறத்தாள 500 பேரையாவது கொள்ளும் பிரமாண்டமான தியட்டர் அது.

எம்மை போன்ற இளைஞர்களுக்கும் அன்று தான் ஈழத்து தமிழ் பொண்ணுகளை பார்க்க முடியும் . வாயால் சொல்ல முடியாத நிலை, இப்படியா என்ன சரவணன் சார் இது என்று கையை நாடியில் வைச்சு சொல்லும் அளவுக்கு அவர்கள்!!!


அதுக்குள்ளே ஒரு அம்மணி தங்கள் நாய் குட்டியை கூட கூட்டி கொண்டு வந்து விட்டார்கள் குடுத்து வைச்ச நாய்குட்டி !!!அது இடைக்கிடை சன ஆரவரதுக்க சவுண்ட் குடுத்து எல்லாரையும் கலாய்ச்சு கொண்டு இருந்தது ha ha

தீபாவளி வெளியீடு , தொடக்கமே ஒரே விசில், கூ, என்று களை கட்டி இருந்தது. எல்லாம் நம்ம நயன்தாரா , சூரியா , வடிவேலு என்று ஒரே அமர்க்களம்தான் !!!

சனம் நிறைந்த கூட்டம் இடம் கூட இல்லை இருக்க பல்கனி படிக்கட்டுகளில் இருந்து பார்த்தார்கள். ஏறத்தாள 600 பேருக்கு மேல் என்பது மட்டும் தெரிஞ்சது.

சூரியாவுக்கு இப்படி ஒரு ரசிகர்களா என்று சொல்லும் அளவுக்கு பிரமாண்டமான கூடத்தில் நிறைந்து வழிந்த சனம் இடை வேளையின் போது தங்களிடையே கதைக்க தொடங்கிய போதுதான் தெரிந்தது ,



படம் முழுக்க காட்சிகள் தொய்வின்றி செல்வதை காணலாம். உண்மையில் இந்த வருடத்தில் நான் பார்த்த படங்களுக்குள் குடும்பமாய் ரசித்து பார்க்க கூடிய படங்களில் முதிலில் உள்ளது இது தான். இவ்வருடம் வில்லு தொடக்கம் கந்தசாமி வரை பார்த்தேன்.




விதம் விதமான துவக்குகளால் போட்டுத்தள்ளும் சூர்யாவின் கெட்டப்புகள் பார்க்கவே திணறுது. ஹரிஷும் அதுக்கு தக்க மாதிரி பட்டி தொட்டி எல்லாம் அதிரும் விதத்தில் போட்டு தாக்கி உள்ளார்.

இருந்தாலும் ஏமாற்றம் தந்த குருவி பட தயாரிப்பாளர் இங்கே ரசிகர்களை ஏமாற்றாமல் காப்பாத்தி இருக்கார் என்பது படம் பார்த்தவர்களுக்கு புரியும் என்று நம்புறேன்.

இருந்தாலும் இரண்டாவது பாடல் அதாவது நயந்தாராவின் அறிமுகப்பாடல் தான் கொஞ்சம் பிடிக்கல. திரையில் நல்லா தான் இருந்தது. இருந்தாலும் தொடர்ந்து கேட்க கூடியதா இருக்கும் என்று நான் நினைக்க வில்லை.இருந்தாலும் நயன் "தாரா" சூப்பர். கந்தல் சாமியில் சிரேயாவின் குளிர்மையான கவர்ச்சி போல் நயந்தாரா நடிக்கவில்லை என்பது மட்டும் உண்மை.எனினும் நயனின் ஆட்டத்துக்கு ஏற்றவாறு விசில் அடிச்சு ஆரவாரம் செய்ததை பார்க்கவே தெரிகின்றது நயனின் சந்தை இன்னும் இருக்கு என்று. என்னும் கொஞ்சம் மேலே போய் நடித்திருந்தால் என்ன என்று கூட தோன்றுகிறது :)

"யாரோ போட்ட tune இக்கு நான் மியூசிக் டைரக்டர் ஆ என்றதும் சரோஜா தேவி எங்களுக்கு பாட்டு hit ஆயிட்டு என்றால் சரி என்பது மட்டும் தான் இரட்டை அர்த்தம் கொண்ட வசனம் போல் எனக்கு தெரிஞ்ச அளவில் தெரிகின்றது.

வெற்றிக்கொடிகட்டில் பார்த்தீபனிடம் படம் முழுக்க வாங்கி கட்டின மாதிரி சூரியாவிடம் இங்கே வாங்கி தள்ளுகிறார் வடிவேலு. சமையலறையில் நடக்கும் காட்சிகள் சூப்பர்காமெடிகள்.

கைப்புள்ள தொடக்கம் பானர்ஜீ வரை வடிவேலின் தொடர் கெட்டப்புகள் அவர் பால் இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.

ஹரிஷ் ஜெயராஜின் இசையில் ஏற்கனவே சூப்பர் கிட் ஆன பாடல்கள் தான் இவை மூன்றும்

1- ஹசிலி பிசிலி- கார்த்திக், ஹரிணி, பர்ன், மாயா, பாடல் – பா.விஜய்



2- வாராயோ – உன்னி கிருஷ்ணன், சின்மயி, மேகா, பாடல்- கபிலன்



3-ஏனோ ஏனோ பனித்துளி - shail hada., சுதா ரகுநாதன், ஆண்ட்ரியா, பாடல் -தாமரை

Ice Land ல் எடுத்த பாடல் காட்சிகள் சூப்பர், உள்ளடக்கம்( காட்சி அமைப்பும்)



4- டமுக்கு டமுக்கு – பென்னி தயாள். பாடல் - நா.முத்துக்குமார்


பத்து வயசு சிறுவனாய் சூரியா தோன்றும் காட்சிகள் ரவிக்குமாரின் பல வித்தியாசமான வயது கொண்ட வேடங்களில் நடிக்க விடும்ஆசை இன்னும் முடியல போல் தெரிகின்றது.கொஞ்சம் சறுக்கியும் இருக்காரு. சண் டிவியில் குடுத்த பேட்டியை பார்த்த எனக்கு ஏதோ பிரமாதம் போல் இருக்கும் என்று இருந்த எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.

சூரியாவை போலீஸ் (ரியாஸ்கான்) கைது செய்ய வந்து அடித்து தள்ளும் காட்சியால் குடும்பமே கண்ணீர் விடும் காட்சி ரசிகர்களையும் ஒருக்கா கண்ணீர் விட்டால் என்ன என்று செய்ய வைக்குது.

சூர்யாவின் பிளாஷ்பேக் காட்சிகள், இறுதியில் தந்தையை காப்பாத்தி கொண்டு போகும் காட்சிகள், கொஞ்சம் மனதை இளக/விறு விறுப்பு அடைய செய்தாலும் வில்லனை போட்டு தள்ளும் காட்சிகள் குருவியில் தண்ணிக்க லிப்ட் ஓட தாட்டு விட மீண்டு வந்த விஜய் மாதிரி கொஞ்சம் ஓவரான build up தான். இருந்தாலும் பார்க்கலாம். குருவி என்று அடிக்கடி இழுக்க காரணம் தயாரிப்பாளர் ஒன்றே ராஜா. சரிங்களா..


வழமை போல கே எஸ் ரவிக்குமார் படத்தின் இறுதியில் தோன்றுவாரா இல்லையா என்று நினைக்கையில், ஐயா இன்னும் இரண்டு பேர் வேலைக்கு வந்து இருக்காங்க என்று வடிவேலு கதைக்கும் வசனத்தில் பிடித்து கொண்டேன். ஒன்று கே ,எஸ் ரவிக்குமார் மற்றது யார், சென்று பாருங்கள் தெரியும் விடை.


ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ரசனை, நான் ரஜனி ராசிகராக இருந்தும் சூரியாவின் இந்த படம் நல்லா இருக்கு என்று சொல்லுறன். குடும்பத்துடன் பாருங்கள். பார்த்து விட்டு சொல்லுங்கள். எப்படி என்று.

2009-10-15

அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாட வந்த பூவனம்

MOVIE : தாலாட்டு பாடவா
MUSIC : இளையராஜா
SINGERS : அருண்மொழி & S.ஜானகி

அருண்மொழி இளையராஜாவின் இசையில் இடம் பெற்ற இந்த படத்தின் அனைத்து ஆண்குரலுக்கு உயிர் கொடுத்துள்ளார்.

இந்த படத்தை R.Sundarrajan இயக்கி உள்ளார் .
இவர் ஒரு இயக்குனராகவும், நடிகராகவும், பாடலாசிரியராகவும், கதை திரைக்கதை வசனம் எழுதியும் பிரபல்யமானவர்.

எனக்கு பிடித்த பாடல்:- முதா கராத்த மோதகம்

இதே படத்தில் இன்னும் இரண்டு சுப்பர் பாடல்கள் இருந்தாலும், எனக்கு இதில் ஏதோ பிரியம். ஒருக்கா நீங்களும் கேளுங்க


முதா கராத்த மோதகம்
சதாவி முக்த்தி சாதகம்
கலாதரா வதம் சகம்
விலாசி லோக ரக்சகம்
அனாயகைக்கனாயகம்
வினா சிதேப்ரதைத்தியகம்
நடஷுபாசு நாசகம்
நமாமிதம் வினாயகம்
முதா கராத்த மோதகம்
சதாவி முக்த்தி சாதகம்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்

தொடாமலும் படாமலும்
உலாவும் காதல் வாகனம்
வராமலும் தராமலும்
விடாது இந்த வாலிபம்

உன்னோடு தான் பின்னோடு தான்
வந்தாடும் இந்த மோகனம்
கையோடு தான் மெய்யோடு தான்
கொஞ்சாமல் என்ன தாமதம்

உன் பார்வை யாவும் நூதனம்
பெண் பாவை நீ என் சீதனம்

உன் வார்த்தை அன்பின் வாசகம்
பெண்ணுள்ளம் உந்தன் ஆசனம்

அள்ளாமலும் கிள்ளாமலும்
தள்ளாட வந்த பூவனம்



வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்

வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்

ல ல ல ல ல ல
லா லா
ல ல ல ல ல ல
லா லா

கல்யாணமும் வைபோகமும்
கொண்டாடும் நல்ல நாள் வரும்
அன்னாளிலே பொன்னாளிலே
என் மாலை உந்தன் தோள் வரும்

சல்லாபமும் உல்லாசமும்
கண் காணும் நேரம் சோபனம்
சொல்லாமலும் கொள்ளாம்லும்
திண்டாடும் பாவம் பெண் மனம்

இந்நேரம் அந்த ஞாபகம்
உண்டாக நீயும் காரணம்

கண்ணார நாமும் காணலாம்
செவ்வாழை பந்தல் தோரணம்

என் ஆசையும் உன் ஆசையும்
அந்நாளில் தானே பூரணம்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்

வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்

2009-10-14

இந்த தீபாவளி கொண்டாட்டங்கள் தேவையா

என்னப்பா எடுத்த எடுவைக்கு சமயத்துக்கு எதிராக போற மாதிரி இருக்கே என்று யோசிக்காதையுங்க. சில கருத்துக்களை சொல்லலாம் என்று தான் இப்படி ஒருதலைப்பு !!!
நாட்டில் நடந்த சம்பவங்களும், துன்பம் அனுபவிக்கும் மக்களுக்காகவும் தான் இப்படி ஒரு முறை சிந்தித்தேன்.

எனக்கு கொண்டாடங்கள் என்றால் என்ன என்று தெரியாது. நான் கொண்டாட்டங்கள் கொண்டாடி பல ஆண்டுகள் ஆகி விட்டன. இது பலருக்கும் பொருந்தும்.

ஏன் சொல்கிறேன் என்றால் சொந்த வீட்டில் இருந்து கொண்டு இனிதாக கொண்டாடி பல ஆண்டுகள் !!!

இவை இருக்க , நான் தீபாவளி பற்றி எனக்கு இருக்கும் அறிவை பகிர்ந்து போட்டு, அத்தோடு எனக்கு இருக்கும் தீபாவளி சந்தேகங்களையும் உங்களிடமும் கேட்டு விடுகிறேன்.

தீபாவளி உருவான கதை

1- நமக்குள் இருக்கும் இறைவன்; ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறான். இந்த ஜோதிவடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும். தீபம் வழிபாடு ஸ்ரீ தீபாவளி என நாம் கொள்ளலாம். நரகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்த நாளை அவன் விருப்பப்படி கொண்டாடும் நாள் என்று ஒரு கதையும் இருக்கிறது. அதாவது நரகாசுரன் என்ற தீமையை அழித்த நாள். அதனால் அன்று தீது பாவ வழி என்று அசைவ உணவுகளை தவிர்த்து புத்தாடை, இனிப்பு வகைகள், பலகாரங்கள், நல்ல அறுசுவை சைவ உணவுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது தான் சிறப்பானதாக இருக்கும்.

2- இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.





தீபாவளி தினத்தில் நடப்பவை நியாயமா???

1 - புத்தாடை அணிந்த பின்,கோவில் சென்று தரிசனம் செய்து போட்டு வந்து அசைவ பிரியர்கள் மட்டன் அல்லது சிக்கன் சாப்பாட்டை ஒரு பிடி பிடிப்பார்கள்.

இது உங்களுக்கே நியாயமா தோழர்களே, நீங்கள் செய்வது பச்சையாவே சமயத்தை கொள்ளுகிறீர்கள். சமயம் சொல்லவில்லை மட்டன் கறி சாப்பிட சொல்லி.!!!

எனக்கு தெரிந்த காலத்தில் இருந்து தீபாவளி தினத்தில் வீட்டில் எண்ணெய் வைத்து தேய்த்து குளித்து போட்டு, புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து , மதியம் பங்குக்கு வெட்டின கிடாய் கறியும் Fried Rice இம் ஒரு பிடி பிடித்து போட்டு மாலையில் ஒரு படமும் பார்த்து போட்டு ஒழுங்கையில் கூடி நின்று தோழர்களுடன் ஒரு அரட்டை அடித்தல். இரவு தெரிந்தவர்கள் வருவார்கள், இல்லை நாங்கள் போவோம் யாரும் வீடுகளுக்கு. இதுதான் நான் பார்த்த தீபாவளி. ஆனால் இப்படி எல்லாம் எனி செய்ய முடியுமா, முடியாத என்று எல்லாம் இருக்கு!!



இன்று கொழும்பில் மட்டும் இல்லை இலங்கையில் எங்கே எங்கே தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கே எல்லாம் நான் பார்த்த ஒன்று , இந்த கோவிலுக்கு செல்லுதல். போறதுக்கு யாரும் தடை இல்லை. போனால் அதற்கு பிறகு முறையாக இருங்கள் நண்பர்களே.
கொழும்பில் குறிப்பாக கதிரேசன் கோவில் களை கட்டும். புத்தாடை அணிந்த வாலிபர்கள், , தங்கை மார் , அக்காமார் என்று ஒரு திருமண விழாவில் இருப்பது போன்று மன சஞ்சல படும். என்னமா இந்த figure எல்லாம் எங்கே இருந்தன, நாமும் வெள்ளவத்தை தானே, நம்மட database இல இல்லையே என்று அவதி படும் இளைஞர்களை கூட நான் பார்த்து உள்ளேன். எனது குமுறல் அல்ல ஹாஹா.


Kathiresan Temple
இப்படி எல்லாம், வந்து போட்டு மதியம் அரைவாசி பேர் கொழும்பில் உள்ள பிரபல்ய ஹோட்டல் களில் mutton கறி சாப்பிட்டதும் மீதி பேர் வீட்டில் ஆடு சாப்பிடும் வழமையே. ஏன் இப்படி எல்லாம் செய்து சமயத்தில் கறை படிய செய்கிறீர்கள்.




காலயில் கடவுளை வணக்கி போட்டு மாலையில் செய்யுறது கொடுமை . இது கூடாது. இரண்டில் ஒன்றை செய்யுங்கள். ஒன்றில் கோவில் போய் விட்டு சைவமாய் இருந்து நாளை களியுங்கள், அதுதான் முடியாது என்றால் கோவில் போகாமல் ஆடு சாப்பிடுங்கள்.


ஆனால் வரலாறு சொல்லுகிறது தீபாவளி தினத்தில் மாமிசம் உண்ணாமல் இருக்கும் படி தான், இது எனக்கு எனது சமய ஆசான் சொல்லி தந்தது. நாம் யாருமே கடை பிடிக்க வில்லை. சமய நம்பிக்கை இருந்தால் மொத்தமாகவே சைவ பிரியர்கலாகவே இருக்க வேண்டும்..!!!


2-பட்டாசு வெடித்தல்

ஒருசிலரை மகிழ்விப்பதற்காக பட்டாசு வெடித்து, சுற்றுச்சூழலையும் நாசப்படுத்தி, பலரை வேதனைக்குள்ளாக்கும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாதா?மாலையில் ஒருக்கா குடியிருப்புகள் நிறைந்த வெள்ளவத்தை பகுதிக்கு சென்றால் இந்த பட்டாசு வெடிச்சு வந்த குப்பைகளையும் காணலாம்.இது எல்லாம் நாம் இருக்கும் சூழலில் இப்போ தேவையா? ஒரு புறம் மக்கள் துன்பம் மறுபுறம் அதே இன மக்கள் கொண்டாட்டம் , இதுதான் கொடுமை சார் .



3- மதுபான சாலைகள் மூடுவதில்லை, ஒரு சில மூடி இருக்கும் , அப்படி என்றால் ஹோட்டல் சென்று pub இல் ஒரு பிடி பிடித்து விட்டு வந்து உளறுவார்கள். இது எல்லாம் இப்போ தேவையா??




நான் எனது அபிப்பிராயத்தை சொல்கிறேன்!! கொஞ்சம் யோசியுங்கள் !!.
நான் உபதேசம் செய்ய சமய புலவர்/பேரறிஞர் இல்லை, துன்பங்களை எல்லாம் அனுபவித்த சாதாரண குடிமகன் !!!



முக்கிய செய்தி

இந்த தீபாவளிக்கு முந்தைய நாள் வெள்ளிக்கிழமை என்பதால் அன்றும் அசைவம் சாப்பிட முடியாது???. மறுநாள் (ஞாயிறு) சஷ்டி விரதம் தொடங்குகிறது. முருக பக்தர்கள் ஒருவாரம் விரதம் இருப்பார்கள். மன கஷ்டம் இருக்கும் சில பேருக்கு அசைவம் சாப்பிட, இருந்தாலும் சாப்பிட்டு போடுவார்கள், இது தான் எங்களின் மனம் !!!
இந்த செய்தியை பார்த்து விட்டு ஒரு சிலர் எட்டு நாட்களுக்கு சேர்த்து தீபாவளி தினத்தில் பிடி பிடிப்பார்கள் :)


தீபாவளித் திருவிழாவின் தத்துவம் என்ன?

தீமையை ஒழிப்பது, தீயோரை ஒடுக்குவது, தீமையையும், தீயோரையும் வளர விடுவதன்று; வாழ விடுவதன்று நோக்கம். இந்த நோக்கத்தைப் புரிந்து கொள்ளவும், போற்றவும் தீபாவளி திருநாளில் நாம் ஒவ்வொருவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இந்த கால கட்டத்தில் தீபாவளியிலாவது ???என்ன செய்யலாம்???

தீபாவளிக்கு செலவழிக்கும் ஒரு தொகை பணத்தை(புத்தாடை வாங்கி ,பட்டாசு வெடித்து, மது பானம் அருந்தி ) கொண்டு போய் அயலில் உள்ள இடைத் தங்கல் முகாமில் உள்ள மக்களுக்கு அன்பளியுங்கள்.
அனாதையாக இருக்கிற சிறுவர் சிறுமியர்களுடன் சென்று உரையாடுங்கள். முதியோர் இல்லம் சென்று கை விடப்பட முதியோர்களை பராமரியுங்கள். இறுதியாக தானங்களில் சிறந்த தானம் அன்னதானம், அதை ஒரு குழுமம் அமைத்து செய்யுங்கள். இதை எல்லாம் செய்தால் நரகாசுரன் என்ற அரக்கன் தானாகவே அழிவான். இதை விளங்கி கொள்ளும் அளவில் இந்த உலகில் யாரும் இல்லை வருத்தம் அடைகிறேன்.


சரி இவைதான் முடியாட்டியும் எதுவித கொண்டாட்டங்களும் இன்றி அமைதியாக கொண்டாடினால் அவதியுறும் உறவுகளை மதித்ததாகவும் இருக்கும், ஆறுதல் அளித்ததாகவும் இருக்கும் அவ்வாறே செய்வார்கள் என்று நம்பி எனது புலம்பலை இங்கே நிறுத்துகிறேன்.

இருந்தாலும் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

2009-10-08

உன்னை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட-அன்புள்ள ரஜினிகாந்த்

அன்புள்ள ரஜினிகாந்த் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. நடராஜ்( இலங்கை மன்னாரைச் சேர்ந்த "சிலோன்" நடராஜன் - திருட்டு பயலே படத்திலே விவேக் கூட ஒரு காமெடி இல உங்களுக்கு சிலோன் நடராசனை தெரியுமோ என்று கேட்டது போல இருக்கு ) இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் மீனா பின்னாளில் ரஜனிகாந்துடன் ஜோடியாக "வீரா", "எஜமான்" "முத்து" இலும் , ரஜனியின் "குசேலன்" படத்திலும் நடித்திருக்கிறார்.

தீவிர ரஜனி ரசிகன் நான் என்பது என்னுடன் பழகிய நண்பர்களுக்கு தெரியும். ( இது பற்றி பிறகு பதிவில் எழுதுகிறேன்) ஆனாலும் குறை நிறைகளையும் கதைத்து நியாயங்களை ஏற்று கொள்ளும் அளவுக்கு நான் ரஜனி ரசிகன். இப்போ சிலர் ( விடலை பசங்கள் எல்லாம் விரலை தூக்கி, கோலரில வாயை வைக்கிறது எல்லாம் ரஜனி எப்பவோ செய்து விட்டார் அதாவது இருபது வருசத்துக்கு முன்னரே - கண்ணா புதுசா ட்ரை பண்ணுங்க எதாவது அப்போதான் சமுதாயம் உங்களையும் ஏற்று கொள்ளும் -நான் சொல்லல சிவாஜி படத்தில் விவேக் சொன்னது ) தாங்கள் தான் அடுத்த சுப்பர் ஸ்டார் என்று லொள்ளு பண்ணுவது எல்லாம் முடியலப்பா. என்ன செய்யுறது புலம்பிட்டு போகட்டும்.

சரி விஷயத்துக்கு வருவோம் இந்த படத்தில் தான் லதா ரஜனிகாந்த் முதல்முதலாக பின்னணி பாடினார். பாடல் - "கருணை உள்ளமே, ஓர் கடவுள் இல்லமே".

ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்தாகவே வருகிறார்.

அன்றைய காலங்களில் ரஜனியின் எளிமையான நடிப்பு இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் செதுக்கப்பட்டுள்ளது.

எனக்கு இந்த படத்தில் வந்த இரண்டு பாடல்கள் என்றுமே பிடிக்கும்
1- தேன் பூவே பூவே வா தென்றல் தேட
2-கருணை உள்ளமே, ஓர் கடவுள் இல்லமே

இரண்டையும் கேட்டு பாருங்கள் மனம் உருகி போடுவீர்கள்.. ராஜா தனது இசையால் பட்டி தொட்டி எல்லாம் போட்டு தாக்கி உள்ளார்.


1-தேன் பூவே பூவே வா தென்றல் தேட


பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி

தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட


பனி விழும் புல்வெளியில் தினம்தினம் பொன் பொழுதில்
கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவதேவி என்னோடு தான்


(உனை நினைத்தேன்)

இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்
அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
காதல் யோகம்தான் கட்டில் மீது
காணவேண்டும் உன்னோடு தான்

(உனை நினைத்தேன்)


2-கருணை உள்ளமே, ஓர் கடவுள் இல்லமே

பெ: கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே(2)
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை

குழு: தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வமன்றி யாரும் இல்லை
(கடவுள்)

பெ: சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா

குழு: ஊனம் உள்ள பேரை காத்திடும்
இறைவா என் இறைவா

பெ: ஜீவன் யாரும் ஒன்று
இங்கு யாரும் சொந்தமே

குழு: ஜீவன் யாரும் ஒன்று
இங்கு யாரும் சொந்தமே

பெ: இது தான் இயற்கை
தந்த பாசபந்தமே

(கடவுள்)

பெ: கண்ணிழந்த பிள்ளை
ஆனால் உன்னை
கண்ணீருக்கும் பேர்கள்
கண்டது இல்லை
ஊருக்கொரு வானம் இல்லையே
இறைவா உன் படைப்பில்

குழு: ஆளுக்கொரு ஜாதியில்லையே
அது போல் உயிர் பிறப்பில்

பெ: உண்ணும் உணவும் நீரும்
தினம் தந்த தெய்வமே

குழு: உண்ணும் உணவும் நீரும்
தினம் தந்த தெய்வமே

பெ: என்றும் உனக்கே நாம் நன்றி சொல்லுவோம்
(கடவுள்)


முத்து மணி சுடரே வா கூட பிடிக்கும் ; இருந்தாலும் இவையிரண்டும் மேவி விட்டன. பாட்டு சுப்பர் இருந்தாலும் ஒழுங்கு வரிசையில் மூன்றாம் இடம் !!! ஜேசுதாஸ் ஐயா பாடி கலக்கி இருக்கார் !!!1




பாடியவர்: K.J. யேசுதாஸ்

ரஜினி அங்கிள்............

முத்து மணி சுடரே வா...
முல்லை மலர் சரமே வா...

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே...
கண்ணே என் பொண்ணே தாலேலோ

[முத்து மணி...]

ம்ஹ்ஹூஊம் நான் தூன்க மாட்டேன்...
அங்கிள் நான் ஒளிஞ்சுக்கிறேன்.. என்ன புடிங்க பாக்கலாம்

ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே...
ஆசைகள் பூத்தாடும் தேன்மொழி எங்கே...
அழகாய் நாள் தோறும்
புதுமை கொண்டாடும்
மலரே நீ பேசு...அவளைக் கண்டாயோ...
தானாக தள்ளாடும் பூவண்ணமே...
தானாக தள்ளாடும் பூவண்ணமே...
உடைகள் அணிந்து கனவு சுமந்து
நடந்த நிலவை நீயும் தேடுவாய்...

ரஜினி அங்கிள்...நான் இங்க இருக்கேன்...இங்க...இங்க...

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே...
கண்ணே என் பொண்ணே தாலேலோ

காற்றினில் தேர் போல ஓடிடும் மானே...
தன் வழி போனாளே...கனிமொழி எங்கே...
அலை போல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு
தனியே பார்த்தாயோ...அவளும் வந்தாளோ...
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி...
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி...
அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து
ஒளிந்த பதுமை நேரில் வந்தது...

[முத்து மணி...]

2009-10-06

இலை உதிர் காலமும் ஆரம்பிச்சிட்டுது.

ஐரோப்பாவில் எனக்கு பிடித்த ஒரு அம்சம் நான்கு காலங்களிலும் ஏற்படும் உணரத்தக்க, இரசிக்கத்தக்க சூழ்நிலை மாற்றங்கள்.

அதிலும் குளிர்காலத்துக்கு முந்தைய இலைஉதிர்காலத்தில் மரங்கள் காட்டும் வண்ண ஜாலங்கள் அருமையிலும் அருமை. பச்சை பசலேன இருந்தவை திடீர் என்று தங்கள் நிறங்களை மாற்றி கொள்ளுவது மட்டும் இல்லை, குப்பை கொட்டி எங்கும் சருகும் குச்சியுமாக இருக்கும் காட்சி கூட ஒரு அழகு.( எங்கள் வீடு பலா கொட்டின குப்பை பரவாய் இல்லை) எவ்வளவு துப்பரவு செய்தாலும் திரும்ப கொட்டி கொட்டி கொண்டு இருக்கும். இதுக்குள்ள காத்து வேற. குளிரும் கூட. சில்லென்று இருக்கும் ஒருக்கா நடந்து திரிந்தா. மழை கூட அடிக்கடி பெய்து சங்கடத்துக்குள் இட்டு செல்லும். எல்லாம் ஒரு காலநிலை மாற்றம் தான்.

இருந்தாலும் அழகை ரசிக்கும் எங்களை போன்ற இளம் வாலிபர்களுக்கு புகைப்படம் எடுத்து hard disk ஐ நிரப்புவதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலும் இல்லை
சரி வங்க ஒன்றிரண்டு தொகுப்பை பார்த்து விட்டு செல்லுங்கள்.

பெரிசா போடுவதற்கு என்னும் காலம் இருக்கு



















இந்த சருகுகளால் நிரம்பி கிடக்கும் வீதிகளை, பொது இடங்களை துப்பரவு செய்யும் வாகனங்களும் அதுக்குள்ள மும்முரமாய் சேவையில் ஈடுபடும்.

இள மனது பல கனவு - செல்வி

யாரும் அடிச்சு பிடிச்சு இது எந்த செல்வி ??? என்று பார்க்காதீங்க. நான் சொன்ன செல்வி படத்தின் பெயர் . வேற எதுவும் இல்ல.

சிலர் இந்த சீரியல் செல்வியோ ( நம்மளுக்கும் உந்த சீரியலுக்கும் ஆகாது பாருங்கோ , இதுவரை எந்த சீரியலும் பார்த்தும் இல்லை, பார்க்க போறதும் இல்லை ) இல்லாட்டி போனால் நம்மட காதலி செல்வியோ இல்ல யாரோ ஒரு பொண்ணு செல்வி என்றோ நினைத்தால் வருத்தம் தெரிவிக்கின்றேன்.


இந்த பாடல் யாழ் இல் உள்ள ஒரு பிரபல்ய குளிர்களி கடையில் (கல்யாணி - பெயரே பிரபல்யம் - பிறகு குளிர்களி , ரோல்ஸ் பிரபல்யமாய் இருக்காதா ??) உயர்தரம் வகுப்புகளுக்கு இடையிலான ( science hall தனியார் கல்வி நிறுவனத்தில் பயிலும் போது) இடைவேளையின் போது உணவருந்தி வர சென்ற போது முதல் முதல் நான் கேட்டேன்.

அந்த நேரம் கேட்டது ( நான் இருந்த மன நிலை நல்லது - வகுப்பில நல்ல குளிர்மையாக பார்த்து போட்டு தானே வந்தது ) என்னமோ என்னை ஒரு கற்பனை உலகத்துக்கு இட்டு சென்று விட்டது , பிறகு யாரோட என்று எல்லாம் கேட்க வேணாம். யாரும் உயர்தரம் 97 இல் பிரபல்யமானவர்கள் யாருடனும் என்று வைச்சு கொள்ளுவம். ஆஹா !!!

உண்மையில் அடுத்த கணமே சூப்பர் ஷோ ரெகார்டிங் பார் சென்று பாட்டை சொல்லி அடிச்சு கொண்டு வந்து வீட்டில் பல தடவை கேட்டு ரசித்தேன். எனது ஹிட் லிஸ்ட் இல் உள்ள இந்த பாடலை நீங்களும் கேளுங்கள்.

ஆகா இப்படி ஒரு கற்பனை என்ன கொடுமை இது . நாயை வைத்தே ஒரு டூயட் பாடல். அந்த காலத்தில் இருந்த வசதிகளை கொண்டு அமைய பெற்ற பாடலை பாலா வும் ஜானகி அம்மாவும் அனுபவித்தே பாடியுள்ளார்கள் போலும்.


ராஜா வும் போட்டு தாக்கி உள்ளார் !!!

பாடல்: இள மனது பல கனவு
திரைப்படம்: செல்வி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே
இந்த மனதுக்கும் வயதுக்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
அது இரவுக்கும் பகலுக்கும் பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே

இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே

கொடியிடை நாணத்தில் நெளிகிறதோ
கனிகளின் பாரத்தில் வளைகிறதோ
மனமொரு மோகத்தில் விழுகிறதோ
மருவிடும் ஆசைகள் வருகிறதோ
விரல் பட்டு இளமொட்டு விரியட்டுமே
வெட்கம் விலகட்டும் விலகட்டுமே
இரு கண்ணும் இரு கையும் இள நெஞ்சமும்
அன்பை எழுதட்டும் எழுதட்டுமே
புது மலரை முதன் முதலாய் தொடுவதினால் சுடுகிறதோ
புது மலரை முதன் முதலாய் தொடுவதினால் சுடுகிறதே


இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே
இந்த மனதுக்கும் வயதுக்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
அது இரவுக்கும் பகலுக்கும் பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே
இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே


அழகிய வாசல்கள் திறந்திடுமோ
அதிலொரு ஆனந்தம் பிறந்திடுமோ
தலையணை வேதங்கள் விளங்கிடுமோ
தொடங்கிய ராகங்கள் தொடர்ந்திடுமோ
இளமைக்குள் விளைகின்ற எழில் வண்ணமே
இங்கு மலரட்டும் மலரட்டுமே
தனிமைக்குள் எழுகின்ற துயர் வெள்ளமே
இன்று வடியட்டும் வடியட்டுமே
புது உலகம் அதிசயமாய் விழிகளிலே விரிகிறதோ
புது உலகம் அதிசயமாய் விழிகளிலே விரிகிறது

இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே
இந்த மனதுக்கும் வயதுக்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
அது இரவுக்கும் பகலுக்கும் பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே
இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே

2009-10-05

ஆசிரியர்கள் தினம்-மீட்கும் நினைவுகள்

செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம். மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மை படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது.

'எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும். இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர்.அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.

இந்த ஆசிரியர்களின் அருமையை அவனிக்கு புலப்படுத்தும் நோக்கில்தான் ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படுகிறது.

முன்னர் ஒரு காலத்தில் எனது கல்லூரியில் ஆசிரியர் தினம் கல்லூரி மண்டபத்தில் பெரிய எடுப்பில் நடை பெறும். அங்கே தங்கள் தங்கள் விருப்பமான ஆசிரியர்களுக்கு மாணவர்கள் ஒழுங்கு வரிசையில் நின்று சென்று மாலை அணிவித்து வாழ்த்துவார்கள்.
எனக்கு தெரிந்த வகையில் நான் ஆண்டு ஒன்பது தொடக்கம் ஆண்டு பன்னிரண்டு வரை ஒரு சில ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து , அவர்கள் திருப்பாதம் வீழ்ந்து வணங்கி உள்ளேன்.


ஆண்டு 9 - சா வே . பஞ்சாட்சரம் - சமயம் / தமிழ்
ஆண்டு 10- சா வே . பஞ்சாட்சரம் - சமயம்
ஆண்டு 11 -சா வே . பஞ்சாட்சரம் - சமயம்
ஆண்டு 12- திரு இலட்சுமணபிள்ளை - தூய கணிதம் , வகுப்பு ஆசான்.

இவர்கள் எனது கல்லூரி வரலாற்றில் பெரிய திருப்பங்களுக்கு உரிய ஆசான்கள்.

சா வே ஆசானிடம் முறையாக தமிழ் மற்றும் சமயம் படித்த காரணம் தான் இன்றும் என்னை சமய ரீதியாகவும் தமிழ் ரீதியாகவும் ஈடு பட செய்தது என்று சொல்லலாம்.

இவர்களை விட எனக்கு பாடம் படிப்பித்த சகல ஆசான்களும் திருப்பு முனைக்கு காரணம் தான் . உள்ளடக்கம் ( எனது தாயாரும்)

!!!வாழ்த்துக்கள் எல்லா ஆசிரியர்களுக்கும் !!!

இதைவிட கொடுமை என்ன என்றால் பாடசாலையில் தான் இப்படி என்றால் மாலை நேரங்களில் கல்வி நிலையங்களிலும் குசும்பு தான்.
ஆசான்களை இதே சாட்டில் வைச்சு கடிச்சு( உண்மையாகவே கடிக்கிறது இல்லை ) துவைச்சு எடுப்பது ஒரு வழமையான காரியம்!!!

இதற்கிடையில் ஆசான் மாருக்கு எங்கட பொம்பிளை பிள்ளைகள் வைச்ச பேர்களை பற்றி ஒரு முறை யாரோ பின்னல் இருந்து சவுண்ட் குடுக்க அதுக்கு அப்புறம் என்ன ஒரு கூ தான். பிறகு என்ன எல்லா பெயர்களும் வெளியில வந்து ஒரு மாதிரி ஆசான்களை நோண்டியடிக்கும் பம்பலும் நினைவில் நின்ற சம்பவங்கள்.


பல்கலை வாழ்க்கையில் எனக்கு தெரிந்த அளவில் ஓரிரு தடவைகள் எல்லா பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், உபவேந்தர் போன்றோர் ஒரு வரிசையில் நிக்க மாணவர்கள் வரிசயில் சென்று வெத்திலை குடுத்து அவர்களின் காலில் வீழ்ந்து வணங்கி வந்த சம்பவங்கள் ஞாபகம் இருக்கு.

நான் விரிவுரியாளர் ஆக பணி புரியும் காலத்தில் நாங்களும் வரிசயில் நிக்க எங்கள் மாணவர்கள் வந்து எங்களிடம் ஆசிர்வாதம் பெற்று செல்லும் போதுதான் எனக்கு இந்த "குரு" வின் மகிமை விளங்கினது. எவ்வளவு புனித மானது என்று.

ஆசிரியர்களுக்கு :-
ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் இளைஞ‌ர்களு‌க்கு ந‌ல்ல மு‌ன்மா‌தி‌ரியாக ‌திக‌ழ்‌ந்து ப‌ண்பாடு ம‌ற்று‌ம் நாக‌‌‌ரீக‌த்‌தி‌ன் அடி‌ப்படைகளாக ‌விள‌ங்க வே‌ண்டு‌ம்.
மீண்டும் ஒரு முறை ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !!!
Related Posts Plugin for WordPress, Blogger...