2009-11-14

ராத்திரி வேளை-- எட்டு இதமான ராகங்கள்

ராத்திரி வேளை அலுவலகத்தில் நின்று வேலை செய்ய வேண்டி வந்ததால் நண்பிகள் தாங்கள் போடும் பாடல்களை இன்றைக்காவது( வழமையா நான் தான் போடுவது வழக்கம்) ஒரு முறை ரசிக்கும் படி சொன்னதால் அவர்களின் பாடல்களை எக்கேடு கெட்டாவது கேட்டு ரசிக்கலாம் என்ற முடிவோடு பிந்திய இரவு வேலையை ஆரம்பித்தோம்.
ஏறத்தாள மூன்று மணி நேரம் நேரம் போனதே தெரியாமல் வேலை செய்தோம்...

பல இதமான பாடல்களை போட்டார்கள் அதுக்குள் எனக்கு பிடித்த எட்டு பாடல்கள் இங்கே



பாடல் ஒன்று :-

ஜேசுதாஸ் ஜானகி அம்மா இணைந்து பாடி கலக்கி உள்ளார்கள் .. பார்த்தீபனின் ஆரம்ப கால படம்: உன்னை வாழ்த்தி பாடுகிறேன், இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி

ஒரு ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி (2)
அழகான கைகள் மீட்டும் வேளை...
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

நதியின் வேகம் பருவ மோகம் கடலைச்சேர மாறிபோகும்
நாளும் காதல் ராகம் பாடும் பாடும்
இதழில் போடும் இதழின் காயம் இதழில் ஆரும் இனிமையாகும்
தேகம் தீண்டும் நேரம் யோகம் யோகம்
உன்னை வாழ்த்தி பாடும் பாடல் உதய ராகமோ
நம்மை வாழ்த்தும் நமது உலகம் உதயமாகுமோ
புது கனவு பாலம் தெரிந்ததே...நெஞ்சினில் இன்பமும் கொஞ்சுது கெஞ்சுது

ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை...
ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை



இளமைக்காட்டில் இனிமைக்கூட்டில் இருக்கும் தேனை எடுக்கும்போது
காலம் நேரம் தேவை இல்லை இல்லை
மலையின் ஓரம் மலர்ந்த பூவை பறிக்கும் வேடன் இருக்கும்போது
காவல் தாண்டும் முல்லை முல்லை
மானும் மீனும் சேர்ந்து மாயம் செய்வதேனடி
வானம் போடும் காமன் நேரம் கூடத்தானய்யா
அட மனதில் சாரல் அடித்ததா...கற்பனை அற்புதம் என்னமோ பண்ணுது

ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை...
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
ஒரு ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை


பாடல் இரண்டு
துள்ளி துள்ளி நீ பாடம்மா

சிப்பிக்குள் முத்து படத்தில் கமலா பாலாவா பாடினது என்று காணொளியை பார்த்தால் குழம்பி போகும் பலர் இருக்கின்றனர்.. சூப்பர் நடிப்பு.. யவ்.. நேரம் கிடைத்தால் படத்தை பாருங்கள் சூப்பர்.. நினைக்கின்றேன் ராதிகா கமல் 50 இல் இந்த பாடலை நினைவு கூர்ந்ததாக..
பாடலை பாலுவும் ஜானகி அம்மாவும் கலக்கு கலக்கி இருக்கிறாங்கள்.. ராஜாவின் சுருதி பெட்டி .. இம்ம..


அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ ஆஆஆ
நிஸரிமபநிஸரிநிரிநிஸநிப நிஸாரிமரிமரிநிஸா
தானனனா தனானா ததரீ..னா..ஆஆஆஆ

துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா

துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா




துள்ளி துள்ளி துள்ளீ
துள்ளி துள்ளி துள்ளி
துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

கட்டிய தாலி உண்மையென்று
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்


கட்டிய தாலி உண்மையென்று
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்

மன்னவன் உன்னை மறந்ததென்ன
உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன

மன்னன் உன்னை மறந்ததென்ன

மன்னன் உன்னை மறந்ததென்ன
உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன

தாயே தீயில் மூழ்கி
அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்
நீதி மட்டும் உறங்காது
நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு
நீதி மட்டும் உறங்காது
நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு

துள்ளி துள்ளி துள்ளீ
துள்ளி துள்ளி துள்ளி
துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

துன்பம் என்றும் ஆணுக்கல்ல
அது அன்றும் இன்றும் பெண்களுக்கே

துன்பம் என்றும் ஆணுக்கல்ல
அது அன்றும் இன்றும் பெண்களுக்கே

நீ அன்று சிந்திய கண்ணீரில்
இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா

நீ அன்று சிந்திய கண்ணீரில்
இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா

இரவென்றால் மறுநாளே விடியும்
உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்
அன்பு கொண்டு நீ ஆடு
காலம் கூடும் பூச்சூடு
அன்பில்லை நான் ஆட
தோளில்லை நான் பூப்போட

துள்ளி துள்ளி துள்ளீ


பாடல் மூன்றுதேடாத இடமெல்லாம் தேடினேன் ;

பலமுறை கேட்டாலும் ஒரு முறை கூட சலிக்காத பாடல். மீண்டும் பாலுவின் கைவண்ணம் விஜயகாந்தின் வசந்தராகம் படத்தில்..

இந்த படத்தில் விஜய் குழைந்தை நட்சத்திரமாய் நடிததாம்.. விஜய காந்தின் பில்டப் களை பார்த்துதான் பின்னாளில் .................????


தேடாத இடமெல்லாம் தேடினேன்
பாடாத பாட்டெல்லாம் பாடினேன்
ஆணாலும் நான் தேடும் பல்லவி
தாளாமல் வாடினேன்
தண்ணீரில் ஆடினேன்


இதுவரை பாட்டை பிறிந்த
பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டை பிறிந்த
வார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது

லல்லலலல லலலலலலலாஆஆஆஆ

இதுவரை பாட்டை பிறிந்த
பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டை பிறிந்த
வார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது

என்னுடைய பல்லவி கிடைத்தது
நல்லதொரு சரணம் கிடைத்தது
ஹே ஹே ஹே ஹேய்ய்ய்ய்ய்ய்

வெவ்வேறு திசைகளில் ஒடம் என்று
வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா
ஹ இவ்வாறு விழுந்து இங்கே இன்று
சந்திக்க நேர்ந்ததம்மா ஆஆஆஆ

வெவ்வேறு திசைகளில் ஒடம் என்று
வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா
இவ்வாறு விழுந்து இங்கே இன்று
சந்திக்க நேர்ந்ததம்மா என் கண்ணம்மா
துண்பங்கள் தீர்ந்ததம்மா

நிஜமோஓஓ.. நிழலோ ஓஓஓஓ
உன்னை நான் பார்த்தது
பிறிந்தோம் இணைந்தோம்
விதிதான் சேர்த்தது

இதுவரை பாட்டை பிறிந்த
பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டை பிறிந்த
வார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது

மெய் தொட்டு தழுவிய
மஞ்சள் நிலா உன்
கைவிட்டுப்போனதம்மா என் கண்ணம்மா
முன்னாளில் விலகிய வெள்ளைப்புறா உன்
இன்னாளில் தோன்றுதம்மா ஆஆஆஆ

மெய் தொட்டு தழுவிய
மஞ்சள் நிலா உன்
கைவிட்டுப்போனதம்மா என் கண்ணம்மா
முன்னாளில் விலகிய வெள்ளைப்புறா உன்
இன்னாளில் தோன்றுதம்மா என் கண்ணம்மா
என் செல்வம் தீர்ந்ததம்மா ஹ
அடடா இதுதான் இறைவன் நாடகம்
உறவும் பிறிவும் மனிதன் ஜாதகம்

இதுவரை பாட்டை பிறிந்த
பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டை பிறிந்த
வார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது

என்னுடைய பல்லவி கிடைத்தது
நல்லதொரு சரணம் கிடைத்தது


பாடல் நான்கு -ஓ வசந்த ராஜா


படம் : நீங்கள் கேட்டவை
பாடியவர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
இசை : இசைஞானி இளையராஜா
இயற்றியவர் : வைரமுத்து
வெளியான ஆண்டு : 1984

ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம் என்னாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே

ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ...

வெண் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள்
மண் தொட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு
விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே
விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே
சூடிய பூச்சரம் வானவில்தானோ?



ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம் என்னாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ

ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்
அலைபாயுதே தாகம் அனலாகுதே மோகம்
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு
மன்மதக் கோயிலில் பாலபிஷேகம்

ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம் என்னாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ

பாடல் ஐந்து- சங்கீதஸ்வரங்கள் - அழகன்

இந்த பாடலை எங்கள் வகுப்பு தோழி ஒரு முறை பல்கலையில் பாடி .. கலக்கி இருந்தாள்.. நல்ல பாடல்.. " வாளியின் மகிமை" சொல்லும் பாடல்.. எப்படி எல்லாம் வைக்குறாரு .. என்று யோசிக்க வேண்டாம்.. இதை விட பல பேர் ,... வைச்சதை நாங்கள் பார்த்து களைத்து போயிட்டோம்..


சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா, என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு, அங்கே இரவா,
இல்லே பகலா, எனக்கும் மயக்கம்
நெஞ்ஞில் என்னவோ நெனச்சேன்,
நானும் தான் நினைத்தேன்
ஞாபகம் வரல,
யோசிச்சா தெரியும்,
யோசனை வரல
தூங்கினா விளங்கும்,
தூக்கம்தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு


.

என்னென்ன இடங்கள்,
தொட்டால் ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லி தா
சொர்கத்தில் இருந்து யாரோ எழுதும்
காதல்கடிதம் இன்றுதான் வந்தது
சொர்கம் வெண்ணிலே திறக்க
நாயகன் ஒருவன், நாயகி ஒருத்தி
தேன்மழை பொழிய, பூவுடல் நனைய
காமனின் சபையில் காதலின் சுவையில்
பாடிடும் கவிதை சுகம்தான்

பாடல் ஆறு - என் கண்ணுக்கொரு நிலவா - பாக்கியராஜ் பானுப்பிரியா
படம் - ஆராரோ ஆரிரரோ
பாடல் வரிகளை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை..





பாடல் ஏழு: முத்தமிழ் கவியே தர்மத்தின் தலைவன் - பெரிய அளவில் வெற்றி பெறாத படமாயினும் படத்தில் வந்த எல்லா பாடல்களும் சூப்பர் கிட். என்றும் ரசிக்கலாம்..




அதில் முத்தமிழ் கவியே யும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்..




பாடல் எட்டு உடன் பிறப்பு


இந்த பாட்டு ஒருமுறை நான் எனது பாட்டு பெட்டிக்கு பாட்டு recording செய்யும் போது என்னையறியாமலே எனது லிஸ்ட் இக்குள் வந்து சேர்ந்து பிறகு எனக்கு இன்று வரை பிடித்து கொண்டு இருக்கும் பாடல்

நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூமுடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே

ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போது
ராப்பகலாய் எழும் துயர் உன்னை வாட்டிய போது
புதுமொழி நாளும் கேட்டு இரு சிறு விழி நீரில் ஆட
ஓர் நதி வழி ஓடும் ஓடம் என விதி வழி நானும் ஓட
போதும் போதும் வாழ்க்கை என்று
ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூமுடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே




வாழும் வரை நிழல் என உடன் நான் வருவேனே
ஏழ்பிறப்பும் உயிர்துணை உனை நான் பிரியேனே
திசையறியாது நானே இன்று தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீதி தானே
நீண்ட காலம் நேர்ந்த சோகம்
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூமுடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...