பேசாமல் எனது ஹர்ட் டிஸ்க் இல் இருந்து என்னிடம் உள்ள வீடியோ பாட்டுகளை பார்த்தும் கேட்டும் ரசித்த படி இறுதி வினாத்தாள் தயாரிக்கும் பணிகளை தொடங்கினேன்.
எனக்கு பிடித்த ஒரிரு பாடல்களை இங்கே பகிர்கிறேன்.
ஜேர்மனியின் செந்தேன் மலரே
இந்த பாடல் கமல், ரதி ஆகியோர் நடித்து 1980 களில் வெளிவந்த உல்லாச பறவைகள் படத்தில் , பஞ்சு அருணாச்சலம் பாடல்வரிகளுக்கு இசை ஞானி இசை மீட்டினார்.
இந்த பாடல் எனக்கு பிடிக்க பல காரணம். நான் ஐரோப்பாவில் இருந்த காலத்தில், இந்த பாடலை பார்த்து தான் , சில ஊர்களுக்கும் , சுற்றுலா மையங்களுக்கும் சென்று வந்தேன்.
இந்த பாடலில் ,
- லூவர் நூதன ஆகியன- Paris (தொல் பொருள் களஞ்சியம் )(http://www.louvre.fr/llv/commun/home.jsp?bmLocale=en
- ஆம்ஸ்டர்டம் டாம் சதுக்கம் ( Dam Square நெதர்லாந்து )
- பேர்லின் Brandenburg Gate
- நெதர்லாந்து காற்றாலைகள் (windmills)
உனக்கும் எனக்கும் ஆனந்தம்
இந்த saumiya என்னும் சிறுமி ஆடும் ஆட்டம் ..... என்னத்தை சொல்லுறது. இந்த பாடல் ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் வெளிவந்து இருந்தாலும், இந்த மீள் கலவை பாடல் எனக்கு நனறாகவே பிடிக்கும்.
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
திரு.கே.ஏஸ்.ரவிக்குமார் டைரக்ஷனில் வெளிவந்த படம் சேரன் பாண்டியன். குடும்ப காவியம் என்றே சொல்லலாம். என்ன அருமையான பாடல்கள் இந்த படத்தில். எனக்கு இந்த பாடல் ரொம்பவே பிடிக்கும். SA ராஜ்குமார் இன் ஆரம்ப கால இசையில் வெளிவந்த பாடல்கள்.
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
பிரித்தாலும் பிரியாது நம் காதல் அழியாது
வரும் தடைகளை உடைத்திடும் உறவுக்கு வழிகொடு
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
காணும் கனவெல்லாம் எங்கும் நீதானே
என் கனவெல்லாம் நினவாக வா வா கண்மணியே
வீசும் காற்றில் தூசியானேனே
உன்னை எங்கோ மனம் பேச உள்ளம் நொந்தேனே
நாம் ஒன்று சேரும் திருநாளும் உருவாகும்
ஜென்மங்கள் எழேழும் நாம் வாழ்வதை தடுத்திட முடியாது
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
காதல் பிரிவென்றால் உள்ளம் துடிக்கிறதே
அதை காதால் கேட்டாலே உலகே வெறுக்கிறதே
தீயாய் உடலெங்கும் என்னை சுடுகிறதே
உன்னை தேடும் கண்கள் கண்ணீர் வடிக்க்க்கிறதே
உன்னோடு நாளும் என நானே வருவேனே
உடலோடு உயிராக நாம் சேர்ந்தது வேறு யாருக்கும் தெரியாதே
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
பிரித்தாலும் பிரியாது நம் காதல் அழியாது
வரும் தடைகளை உடைத்திடும் உறவுக்கு வழிகொடு
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே..ஏஏஏஏ
காதல் கடிதம் வரைந்தேன் வசந்தம் வந்ததா... எனக்கு ரொம்பவே பிடித்த மற்றுமொரு பாடல்
மனோ, ஸ்வர்ணலதா( எனக்கு பிடித்த பாடகி அருமையான பெண் குரல் சோக பாடல்களை பாடுவதில் புகழ் கொண்டவர் ), ஆகியோரின் குரலில் ராஜ்குமாரின் இசையில் சேரன் பாண்டியன் படதில் வெளிவந்தது.
கேட்டு பாருங்களேன்.
காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா
உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே
உங்கள் கடிதம் வந்ததால்
இன்பம் எங்கும் பொங்குதே
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்திடும் இனிய சீதனம்
காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே
உயிரின் உருவம் தெரியாதிருந்தேன்
உனையே உயிராய் அறிந்தேன் தொடர்ந்தேன்
வானும் நிலவும் போலவே
மலரும் மணமும் போலவே
கடலும் அலையும் போலவே
என்றும் வாழவேண்டுமே
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
(காதல்..)
பயிலும் பொழுதில் எழுதும் எழுத்தில்
உனது பெயர் தான் அதிகம் எனக்கு
வானம் கையில் எட்டினால்
அங்கும் உன்னை எழுதுவேன்
நிலவை கொண்டு வந்துதான்
பெயரில் வர்ணம் தீட்டுவேன்
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
(காதல்..)
No comments:
Post a Comment