2010-09-02

என் இதயத்தை திருடிய " இதயத்தை திருடாதே " பாடல்கள்

வேலை செய்யும் இடத்தில் சகோதர மொழி விரிவுரையாளர் பல தடவை கேட்டும் அவரது வீட்டுக்கு செல்ல முயற்சிக்கும் போதெல்லாம் தடைகள் எதாவது வந்து அந்த குறுகிய பயணத்தை செய்ய முடியாமல் பல முறை கைவிட்டு இருந்தேன். கடைசியாக நேற்று மாலை அந்த பயணத்தை மேற்கொண்டு அவர் வசிக்கும் ஊருக்கு சென்று வந்தேன்.

பாதைகள் தெரியாத காரணத்தால் உதவியாளரும் நானுமாய் சென்றோம்.
வழமை போல பாட்டு பெட்டி தனது வேலையை ஆரம்பித்தது.
மலைகளுக்கு இடையில் செல்வதால், எப் எம் அலைவரிசைகளின் ஒலிபரப்பை தெளிவாக கேட்க முடியாது. இதனால் அண்மையில் எனக்கு ஒரு நண்பர் ( நண்பியாகவும் இருக்கலாம்), தந்த இறுவெட்டுகள் தான் போகும் போதும் வரும் போதும் எங்கட பாட்டு பெட்டியை இயங்க வைத்தது.

வீட்டில் இருந்து வெளிக்கிடும் போது சாரதி, சார் இந்தாங்கோ எந்திரன் பாடல்கள் சீடி , என்று தூக்கி தந்தார். வாகனத்தில் முதலில் அதுதான் கேட்கிறது. பிறகுதான் எதுவென்றாலும். நம்ம சாரதி நிலபரத்தை யோசிச்சு பாருங்க.. :(




பிறகு , ஏறத்தாழ ஒரு மணித்தியாலம் போன பின்னர், அன்பளிப்பாக வந்த சீடிக்களை பார்த்தால் , அதில் எல்லாமே ஓடியோ சீடிகள் . அதுவும் எனக்கு பிடித்த இதயத்தை திருடாதே பட பாட்டு சீடியும் கிடந்தது .

உடனடியாகவே ஒரு படப்பாட்டுகள் நிகழ்ச்சி மாதிரி அந்த படத்தில் உள்ள எல்லா பாடல்களையும் கேட்டு இரசித்தேன். ஒரு படத்தில் எல்லா பாடல்களையும் கேட்டு இரசிக்க கூடிய மாதிரி சில படங்களையே சொல்லலாம். அந்த வரிசையில் இந்த படமும் ஒன்று.

கீதாஞ்சலி என்ற பெயரில் தெலுங்கில் சூப்பர் கிட் இயக்குனர் மணிரத்தினம் 1989 இல் இசைஞானியின் இசையில் இயக்கிய படம் தான் தமிழில் இதயத்தை திருடாதே என்று வெளிவந்தது.
நாகர்ஜுன் , கிரிஜா ஷெட்டர் நடித்து , நூறு நாட்களுக்கு மேல் ஓடி சூப்பர் கிட் வெற்றியை தந்த படம் தான் இது. அதனை பாடல்களும் சூப்பர் கிட்.
நல்ல கதை, ஒருக்கா பாருங்க. படத்தை பலதடவை பார்த்துள்ளேன் .

இந்த படத்தில் உள்ள பாடல்கள்

ஆத்தாடி அம்மாடி பாடல்

சித்ராவின் இனிமையான குரலுக்கு இந்த பாடலும் சான்று . சின்னக்குயில் நீங்க தான்

ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
உருகுதோ... மருகுதோ...
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையும்
கொடியிலே... அரும்புதான்...
குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே ஹே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே



வானமும்... வையமும்...
கரங்களை இணைப்பதே மழையில்தான்
செடிகளும்... கொடிகளும்...
ஈரமாய் இருப்பதே அழகுதான்
மழையின் சாரலும் கிள்ளாமல் கிள்ளவும்
அழகும் ஆசையும் ஆடாமல் ஆடவும்
துள்ளுகின்ற உள்ளமென்ன
தத்தளிக்கும் மேனியென்ன
வஞ்சியெந்தன் கண்கள் கண்ட
தேவலோகம் பூமிதான்

(ஆத்தாடி)

என்னவோ... எண்ணியே...





இளையவள் இதயமே ததும்புதா
சிறுசிறு... மழைத்துளி...
சிதறிட சபலம்தான் அரும்புதா
வானதேவனே சொல்லாமல் செய்திட
வாயுதேவனே முத்தாட வந்திட
நீறு பூத்த கூந்தலோடு ஊதக்காத்து தழுவும்போது
துள்ளும் பெண்ணின் உள்ளம் நூறு
கவிதை சொல்லும் ஓஹொஹோ

(ஆத்தாடி)
ப்ரியா.. ப்ரியா

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல் - எங்கு பாடினாலும் நின்று கேட்டு போட்டு போறது .அப்படி ஆசை.. ஏன் தெரியுமா.. நானும் ப்ரியா தானே ..:)
மனோ, சித்ரா நீங்க பல்லாண்டு காலம் வாழ்க.

ஒ ப்ரியா ப்ரியா

என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் மாறுமோ

இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓரோரம்
கானல் நீரால் தாகம் தீராது

ஒ ப்ரியா ப்ரியா

உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவதோ

வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் நமது
தேவன் நீதான் போனால் விடாது

தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி

அன்பு கொண்ட கண்களும்

ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
ராஜ மங்கை கண்களே

என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் எழை இங்கு ஓர் பாவி அல்லவோ
எதனாலும் ஒரு நாளும் மறையாது ப்ரேமையும்
எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காட்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா







ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

காளிதாசன் ஏடுகள்

கண்ணன் ராச லீலைகள்
பருவ மோகம் தந்தது பாவம் அல்லவே
ஷாஜஹானின் காதலி

தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது
இறந்தாலே இறவாது விளைகின்ற ப்ரேமையே
அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெட்றி கொள்ளுமே
இளம் கன்னி உன்னுடன் கூட வா வா


ஒ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா
ஒ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா

ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மண்கலம்
ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்


பாப்பா லாலி

மனோவின் மற்றுமொரு இனிமையான குரல்






காவியம்
பாடவா தென்றலே

மனோவின் குரலில் இனிமையான பாடல்

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில்
மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே
காவியம் பாடவா தென்றலே

விளைந்ததோர் வசந்தமே
புதுப்புனல் பொழிந்திட
மனத்திலோர் நிராசையே
இருட்டிலே மயங்கிட
வாழ்கின்ற நாட்களே
சோகங்கள் எனபதை
கண்ணீரில் தீட்டினேன்
கேளுங்கள் என்கதை
கலைந்து போகும் கானல் நீரிது

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ



புலர்ந்ததோ பொழுதிதுவோ
புள்ளினத்தின் மகோத்ஸவம்
இவை மொழி இசைத்ததும்
சுரங்களின் மனோகரம்
புதுப் பிரபஞ்சமே
மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்கம்தான்
முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சி இல்லையே

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
காவியம் பாடவா தென்றலே





ஓம்
நமக



காட்டுக்குள்ளே




No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...