பொதுவாக கர்நாடக இசைக் கச்சேரி மேடைகளில் பாடப்படும் கீர்த்தனைகள் சரி , கதாநாயகிகள் மேடைகளில் ஆடும் நாட்டிய பாடல்கள் சரி திரைப்படங்களில் இடம்பெறும்போது, அவை நிஜ மேடைகளில் எந்த ராகத்தில் இசைக்கப் படுகிறதோ அல்லது எப்படி ஆடப்படுகிறதோ அதே மாதிரி தான் சினிமா படங்களிலும் இடம் பெறுகின்றது.
ஒரு காலத்தில் மேடை அமைத்து அதில் நாயகி சரி நாயகன் சரி ஒரு பாட்டு பாடும் போது அதை சபையோர் இருந்து ரசித்தல்(இதில் நாயகனோ நாயகியோ சபையில் இருந்து ரசிக்கலாம் , இதுவும் உள்ளடக்கம் ), அல்லது நாயகியும் நாயகனும் போட்டிக்கு பாடுதல் போன்றவையே ஒரு காலத்தில் டூயட் , அல்லது காதல் வளர்க்கும் , காதல் தோல்வி பாடல் காட்சிகளாக வந்து ரசிகர்கள் மனதில் பிரபல்யம் அடைந்தது.
இந்த வகை இன்று அருகி விட்டது . இன்று கதாநாயகியும் நாயகனும் வீட்டில் சந்தித்து அல்லது எங்கையாவது தோட்டத்தில் , ஆற்றில் குளிக்கும் போது , அல்லது படிக்கும் கூடத்தில் , வகுப்பறையில் சந்தித்து கதைத்தால், உடனே வரும் டூயட் பாடல் அமெரிக்காவிலோ , அல்லது வேறு எந்த ஒரு நாட்டிலையோ எடுத்து விட்டு அதன் மூலம் ரசிகர்களையும், வசூலையும் அள்ளி கொள்வார்கள் இந்த சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்.
முதல் வகையில் எனக்கு
பிடித்த பல பாடல்கள் இருந்தாலும் , மிகவும் பிடித்த பாடல்களை இங்கே தருகின்றேன். உங்களுக்கும் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
1-முதலாவது மற்றும் இரண்டாவது பாடல்கள் , சிந்து பைரவியில் இடம்பெற்ற கலைவாணியே( யேசுதாஸ்) மற்றும் பாடறியேன் படிப்பறியேன்(சித்திரா ) பாடல்கள். இவை எந்த நேரத்திலும் கேட்டு ரசிக்க கூடியவை .
கலைவாணியே
பாடறியேன் படிப்பறியேன்
இது மேடை நிகழ்ச்சியில் சித்ரா பாடியது இதைப்பாருங்கள்
2- ஆடல் கலையே தேவன் தந்தது.. ரஜனியின் 100 ஆவது படம் : ஸ்ரீ ராகவேந்திரா
அதில் அம்பிகா ஆட, ரஜனி பாட ( உண்மையில் ஜேசுதாசின் அந்த இனிமையான குரல்தான் இந்த பாட்டை பிர பல்யப்படுத்தி விட்டது) சபையோர் ரசிப்பதை பார்த்தால் என்ன ஒரு சுகம்...:)
3- சங்கீதம் பாட ஞானம் உள்ளவர்கள் வேண்டும்.. இந்த பாட்டை என்னவோ தெரியவில்லை எனக்கு ரொம்பவே பிடிக்கும்..
அதுவும் ஷோபனா படத்தில் தூள் நடிப்பு..காமெடி .. இந்த படத்தில் சூப்பர் கிட் பாடல்கள் இன்னும் இருக்கு... பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் பாருங்கள்.. இளம் வயது சிவமணி ட்ரம்ஸ் வாசிச்சு கலக்கி இருக்கார். இசை ஒரு பெருங்கடல் அதை ஞானத்தால் பாடுவதா அல்லது கேள்வி ஞானம் போதுமா என்று பாலா வும் வாணி ஜெயராமும் வரிந்து கட்டி கொண்டு பாடுவதை பார்த்தால் உண்மையிலே புல்லரிக்குது...:)
4- சலங்கை ஒலி படம் இருபது வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் விடாத ஒரு மாபெரும் பிரமிப்பு. எத்தனை முறை பார்த்திருப்பேன் என்பதற்கு கணக்கே இல்லை. இசைஞானிக்கு தேசிய விருதை வாங்கித் தந்த படம்! கமல்ஜெயப்பிரதா .. நடிப்பு.. நாட்டியம் பற்றி சொல்லி முடிக்க ஏலாது. ,
எஸ் .பிசைலஜாவின் அருமையான நாட்டியம்.. சொல்ல முடியாத வார்த்தைகள்.. பாடல் மட்டுமாபாடுவேன் .. ஆடவும் தெரியும் என்று ஆடிக்காட்டி படத்தையே அசத்தியவர் இவர்.
இந்த படத்தில் வந்த எல்லா பாடல்களும் ரொம்பவே பிடிக்கும். ஆனால் இங்கே நான் மேடையில் ஆடிய பாடல்கள் வரிசையில் இந்த பாட்டை மட்டும் தரு கின்றேன்.
சலங்கையின் ஒலி என் காதுகளில் இன்னும் பல வருடங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும்!
சலங்கை ஒலியை தொடர்ந்து சலங்கையிட்டாள் ஒரு மாதுவும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். :)
6- சங்கீத ஜாதி முல்லை ... என்ன படமையா.. காதல் ஓவியம்.. இப்படி என்னொரு படம் இப்ப எடுத்தால் நான் முதல் ஷோ பார்க்க முதல் நாள் இரவே போய் நிற்பேன் ..
பிடித்த வைரவரிகள் .. எஸ் பியின் பழைய குரல்...
விழி இல்லை என்னும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
பூவில் ஒரு வண்டு, வெள்ளிச்சலைங்கைகள், நதியில் ஆடும் பாடல்கள் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை...
7- தில்லான மோகனாம்பாள் - பத்மினி .. ஸ்ஹபாஆஆ என்ன வென்று எல்லாம் சொல்லுறது. நலந்தானாவைப்பாருங்கள் .. ரசியுங்கள்
8- கங்கைக்கரை மன்னனடி- வருஷம் 16 . குஷ்புவின் அறிமுகம்.. படத்தில் மேடையில் ஆடி அசத்தும் அருமையான பாடல் .. ஜேசுதாஸ் குரலில்.. இனிமைதான்:)
ஆமா எனக்கு ஒரு சந்தேகம் .. இப்ப நடிக்கிற நடிகைகளுக்கு இந்த பரத நாட்டியம் தெரியாதாமே .. அல்லாட்டி ஒரு பரத நாட்டியம் ஆடின கட்சியை அங்கே இங்க .... வைத்து இருக்கலாமே ,... :)
எப்புடி இருந்தாலும் எங்கட ஜோதிகா அசத்திய ரா ரா நாட்டியம் இன்றைக்கும் வியக்க வைக்கும் ஒன்றே எனக்கு ..
No comments:
Post a Comment