நம்முடைய வறு வல்களும் ; சிந்தனைகள் , மனதில செய்ய நினைத்தவை , செய்தவை ,நல்லதாக பார்த்து சுட்டவை ,சுடாமல் சொந்தமாய் தயாரிச்ச தலைப்புக்கள் என்று ஒரு மொக்கை போடும் இடம்
தென் ஆபிரிக்காவில் வரும் 2010ல்(ஜூன் 11-ஜூலை 11) 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்க உள்ளது. இதற்கான இரண்டாவது லீக் போட்டிகள் தற்போது நடை பெற்று முடிந்தன. இதில் இறுதியாக இந்த வாரம் நடந்த போட்டிகளில் ( இறுதிப்போட்டி அல்ல )
விறு விறுப்பாக்கிய பிரான்ஸ் -அயர்லாந்து FIFA உலக கோப்பை
இந்த போட்டியை வென்றால் தான் தென்னாபிரிக்கா செல்லலாம் என்று இருந்த பிரான்சுக்கு அயர்லாந்தின் Robbie Keane 32வது நிமிடத்தில் அடித்த கோல் பிரஞ்சு ரசிகர்களை ஒரு கணம் ஆட செய்தது.
Robbie Keane
திறமையான, முதல் தரமான பல வீரர்களை தனகத்தே கொண்ட பிரான்ஸ் இறுதி வரை போராடிய போதும் , வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின் இறுதி நிமிடத்தில் வெளியே சென்ற பந்தை ஹென்றி யின் கை மறித்தது மட்டும் இன்றி ஹென்றியே அதே பந்தை வில்லியம் காலாஸ் இக்கு பாஸ் செய்ய வில்லியம் காலாஸ் அடித்த கோலுடன் பிரான்ஸ் இம் தகுதி கண்டது.
நடுவர் ஹென்றியின் கையில் பந்து பட்டத்தை கவனிக்கவில்லை யாதலால் பெரும் சர்ச்சை போட்டி முடிந்த பிறகு ;
ஹென்றியின் கையில் பந்து படும் போது நடுவர் கவனிக்க வில்லையாதலால் இது நடுவரின் தவறே தவிர வேறு யாரும் எதுவும் செய்ய முடியாது என்று FIFA ம் அயர்லாந்தின் கோரிக்கையை கால வாரி விட்டது.
அவர்கள் வழங்கிய அறிக்கையின் ஒரு பகுதி ஆங்கிலத்தில்:
FIFA said in a statement: "FIFA has replied to the request made by the Football Association of Ireland to replay the 2010 FIFA World Cup play-off match held on 18 November 2009 between France and the Republic of Ireland in Paris.
"In the reply, FIFA states that the result of the match cannot be changed and the match cannot be replayed. As is clearly mentioned in the Laws of the Game, during matches, decisions are taken by the referee and these decisions are final."
உண்மையும் அதுதானே நடுவர்கள் சிலவேளைகளில் விடும் தவறால் பாரிய இழப்புகள் எந்த விளையாட்டிலும் இடம்பெறுதல் வழமை. :)
2.ரஷியாவை வீழ்த்திய ஸ்லோவானியா
வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ரஷ்யா ச்லோவானியா விற்கு எதிராக களமிறங்கியது. கடந்த 2002ல் தென் கொரிய அணியை உலக கோப்பை அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற Guus Hiddink , இம்முறை ரஷ்யாவின் பயிற்சியாளராக இருந்தார். இதனால் எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 44வது நிமிடத்தில் ஸ்லோவேனிய வீரர் ஸ்லாட்கோ டெடிக், ஒரு சூப்பர் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். இதற்கு ரஷ்யாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இறுதியில் ஸ்லோவேனிய அணி 1-0 என வெற்றி பெற்று உலக கோப்பை தொடருக்கு முன்னேறியது. கால்பந்து ரேங்கிங் பட்டியலில் தற்போது 12வது இடத்தில் உள்ள ரஷ்யா, கடந்த 1994, 2002ல் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. 2006ல் தகுதி பெறாத இந்த அணி, மீண்டும் ஏமாற்றம் அளித்துள்ளது.
அப்போது நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடம் முடியும் வேளை. பல்கலை வாழ்க்கையை ரொம்பவே ரசித்திட்டு இருந்த காலம். போடுற படங்கள், நிகழ்ச்சிகள், ஒன்று கூடல்கள், உள்ளூர் பிரயாணங்கள் என்று மிகவும் களை கட்டி கொண்டு இருந்த நேரம் தான் இந்த துன்பியல் சம்பவம் இடம் பெற்றது.
ஏற்கனவே பல்கலை மட்டத்தில் தமிழ் மாணவர்களுக்கு இடையில் ஓரளவுக்கு என்னை தெரிந்து இருந்தாலும் ; குறிப்பாக நான் ரஜனி ரசிகன் மன்னிக்கவும் "தீவிர ரசிகன்" என்று சொல்லும் அளவுக்கு தெரிந்து இருக்கவில்லை.
என்னுடைய நண்பர்களுக்கு தெரியும். அடிக்கடி ரஜனி பஞ்ச் வைத்து கதைத்தல், ரஜனி போஸ்டர்களை எல்லாம் அறையில் ஒட்டி வைத்து இருத்தல்( வீட்டில் இப்பவும் அண்ணாமலை , தளபதி , பாஷா ,சிவாஜி போஸ்டர்கள் சுவருடன் பதிக்கபட்டுள்ளது). அப்படி ஒரு ரசிகன். அடிக்கடி ரஜனி படங்களை பார்ப்பதும் பாடல்களை தான் கேட்பதாலும் எனது அறை நண்பர்கள் என்னில் அப்படி ஒரு வெறுப்பு. ஏதும் கதைத்தால் ரஜனி ஸ்டைலில் சொல்லி கலாயித்து விடுதல் வழமையான ஒன்று என்பதால் காலப்போக்கில் அவர்களே கண்டு கொள்ளுற இல்லை. இதை விட ரஜனி ரசிகன் என்பதிற்கு introduction தேவை இல்லை:)
அவரது பிறந்த தினத்தில் நாங்கள் ( என்னுடன் இன்னும் தீவிரமான மூன்று பேர் இருக்காங்கள்) ஏழைகளுக்கு உணவு கொடுத்து உதவுதல் வழமை. இது கடந்த எட்டு ஒன்பது வருடங்களாக நடக்கும் உண்மை.
நீண்ட நாட்கள் படங்கள் ஏதும் நடிக்காமையால் நாங்களும் வருத்தம் தான். இப்படியாக இருக்கும் போது தான் பாபா படம் எடுக்கபோறதாக வெளியில கதை பரவவே ..எனக்கு வீட்டில் இணைய வசதி(வார இறுதி நாட்களில் ); ஏற்கனவே பல்கலையில் கணணி விஷேட துறை அதால இரவு எட்டு மணி வரை எங்களுக்கு என்று விசேடமாக ஒதுக்கபட்ட lab இல் இருந்து தேடுதல் வேட்டை தான். அப்பப்போ வரும் செய்திகளை நண்பர்களுக்கு SMS, ஈமெயில் ஓடு நிண்டு விடாமல் எங்கள் தீவிர ரசிகர்களுக்கு call பண்ணி கூட சொன்னதுண்டு. அவர்கள் கூட சில வேலைகளில் call பண்ணி எனக்கு தகவல் சொல்லி இருக்கார்கள்.அப்படி ஒரு நெட்வொர்க். இப்பவும் இயந்திரன் பற்றி கதைத்து கொண்டு தான் இருக்கோம்.
தமிழ் நாடு தமிழ் நாடு என் உயிர் நாடு
பாபா இசைத்தட்டு வந்தவுடன் ஓடி திரிந்து ஒரு மாதிரி இணையத்தில் கேட்டும் பிறகு எனது வால்க்மேன் இனுள் எப்பவும் பாட்டை கேட்க ஆரம்பிக்கும் போது அதுவே முதல் பாடலாக வரும் அளவுக்கு செய்தும் வைத்து கொண்டு தான் இருந்தது. அப்படி ஒரு அவா. பாடல்கள்களில் அப்பவே ஷக்தி கொடு பாடல் கேட்டதும் என்னமோ எல்லாம் ஆகிடுவேன். இதை விட தனியார் வானொலிகள் கூட உதாரணமாக ஷக்தி சூரியன் இரண்டுமே அடிக்கடி அந்த பாடலின் அந்த பகுதியை போட்டிக்கு ஒலி பரப்பி ரசிகர்களிடையே பாட்டை பிர பல்யப்படுதியது வரலாறு.
இப்படி எல்லாம் ஆராவரத்தில் இருக்கும் போது தான்.. படமும் வெளியாகும் திகதி அறிவிக்கபட்டது. எனக்கு முதல் ஷோ பார்ப்பதில் எந்தவித பிரச்னையும் இருக்காது என்பது எங்கள் கூட்டத்துக்கே தெரியும். ஏனெனில் ஒரு காலத்தில் நானும் திரைப்படங்களை தருவித்தவனே, ( பல்கலைக்கழகத்தில் உள்ள சங்கங்கள் அடிக்கடி ரீல்ஸ் படங்கள் போடும் போது அடிக்கடி என்னாலான உதவிகள் செய்து இருக்கின்றேன்).
இது எப்புடி என்று கேட்க கூடாது ; எல்லாம் அரசியல் தான். படையப்பா , பாஷா , அருணாச்சலம், முத்து, தளபதி,அண்ணாமலை எல்லாமே என்னால் , எனது பீடம் நடத்தும் வருடாந்த தமிழ் தின நிகழ்ச்சிகள் தொடக்கம் பல்கலை சங்கங்களுக்கு வருவித்து காட்டபட்ட ரஜனி படங்கள்.இதை விட குஷி, காதலுக்கு மரியாதை, friends, இந்தியன் ,தெனாலி , பஞ்சதந்திரம் , காசி,ஆளவந்தான்,துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே ,ஆனந்த பூங்காற்றே ,Kutch Kuth Kotakai, என்று ஒரு நீண்ட பட்டியல். ...கூட பழகிய என் நண்பர்களுக்கு தெரிந்து இருக்கும் என்ன என்ன படங்கள் என்று. அது ஒரு காலம். இப்படி எல்லாம் தருவிக்கும் அளவுக்கு எனக்கு வேண்டியவர்கள் இருந்ததால் செய்தேன். அவர்கள் உதவி என்றுமே மறக்க முடியாது. அவர்களின் உதவியால் காட்சி படுத்த முடிந்தது.
அவர்களின் உதவியால் எனக்கு ஐந்து டிக்கெட்கள் எடுத்தாச்சு பாபா பார்க்க.
அடுத்த நாள் படம் வருது கொன்கோர்ட் இக்கு.முதல் நாள் மாலையில் கூட ஒரு பதற்றம் வெளியிடுவார்களா என்று. தமிழ் நாட்டில் அரசியல் இல் மாற்றம் வரும் என்று சொல்ல போறதா ஒரு கதையை கட்டி விட்டு ராமதாஸ் ஐயா தனது ஆட்களுடன் எதிர் பேரணிகள். ஜெயா அம்மா புகைத்தால் பிடித்து உள்ளுக்கே போட்டுடுவேன் என்று புலம்பல் , இத்தனையையும் தலை என்னென்று சமாளிக்க போகுதோ என்று எங்களுக்கு வியப்பு. எங்களுக்கு தெரியும் தலை பாஷா ஸ்டைலில் அல்லது அண்ணாமலை ஸ்டைலில் எதாவது ஒரு வழி பண்ணும் என்று. எங்களுக்கு என்ன கொழும்பில் யார்தான் ரஜனிக்கு எதிரா கொடி பிடிப்பாங்க. படம் ஓடும் என்று தெரியும்.
அதிகாலை திட்ட மிட்ட படி நான் , இன்னும் இரு தீவிர ரஜனி ரசிகர்கள் ஆன இயந்திரவியல் பீட அண்ணன் மார்கள்( ஒருவர் தற்போது கொழும்பில் SLT il வேலை செய்கின்றார், அடுத்தவர் நியூயார்க் இல் வேலை செய்யும் செல்லமான அண்ணாவும் - இருவருமே யாழ் இந்துவின் மைந்தர்கள் ) ; மூவரும் மாத்தறை நோக்கி புறப்படும் புகை வண்டியில் அதிகாலை 5 :00 மணிக்கு பயணம் ஆரம்பம். எங்களுக்குள் ஏதோ பொண்ணு பார்க்க போற மாதிரி த்ரில். காலை 8:30 மணி கொழும்பில் தரை இறக்கம். நேரவே எங்கள் வீட்டில் காலை உணவு. சரியாக பத்து மணி கொன்கோர்ட் வாசலில் ஆஜர். சனமோ சனம். ஆட்டோ காரன் தொடக்கம் high லெவல் வரை , ஒரு புறம் முட்டியடிக்கும் ரசிகர்கள் ,மறுபுறம் கொன்கோர்ட் வாசலில் விஷேட பாதுகாப்பு. எங்களுக்கு வாசலுக்கு சென்று எங்கள் அடையாளங்களை சொல்லவே நேரம் சரியா வந்துட்டுது. ஒரு மாதிரி உள்ளே போனால் எல்லாரும் விசில் அடிகிறாங்கள். Ginger பீரும் கடலயும் வாங்கி கொண்டு பலகணி இல் இருந்தால். அங்கே கொழும்பில் இப்போ பிரபல்யாமாகி கொண்டு இருக்கும் கட்டிட கட்டுனர் இவரும் பேராதனை தான் , எங்கள் நண்பர் தான் - இந்துவின் மைந்தன் தான் வருகை தந்தார். எல்லாருமாக ஒரு மாதிரி இருந்து ஆயத்தம்.
ஒரு மணி நேரம் பிந்தி படம் ஆரம்பம்; வழமை போல் வரும் ரஜனியின் சூப்பர் ஸ்டார் sound ஏ கேட்கவில்லை. அடிச்சாங்கள் பாருங்க விசில் கூ .. இன்றைக்கும் ஞாபகம் இருக்கு எங்களுக்கு முன் இருந்த ஒரு வயதான மனிதர் எழும்பி விசில் அடிச்சது. எனக்கு திரையே தெரியவில்லை அந்த அளவுக்கு எல்லாரும் எழும்பி நின்று என்னமோ ரஜனி கீழே நிக்குறாரு என்ற மாதிரி ஆரவாரம்.
Blaze in அறிமுகம் இதில் தான் என்று நம்புகிறேன்( பிழை என்றால் திருத்தி விடவும்)
திப்பு திப்பு குமாரா பாடலில் வாழ்கை ஒரு சினிமா என்று அழகாக சொல்லி இருக்கார் :)
ரஜனி வரும் போது கான்கார்ட் அதிர்ந்தது.. இது மாதிரி பிறகு சிவாஜி பார்க்கும் போது தான் அதிர்ந்தது என்று சொல்லுவன். கேட்க வேணாம் இடைக்க படமே பார்க்கவில்லையா என்று. பல படம் பார்த்தேன் 2nd ஷோ கூட பார்த்து இருக்கேன். அப்படி ஒரு அதிர்வு இல்லை.
படமும் ஆரம்பிச்சிட்டு .. ஓட்டிடு இருக்கு .........சுரேஷ் கண்ணா மீண்டும் ஒரு பாஷா எடுப்பார் என்ற கனவு மெல்ல மெல்ல தகர தொடங்கியது. எங்களுக்குள் ரசனை இருந்தாலும் படம் பட்டம் விடுமளவுக்கு வந்துடுத்தே என்று ஒரு கவலை. இருந்தாலும் இடை வேளை வரை விசிலும் கூவுமாக இருந்தது. பிறகு என்னடா எல்லாரும் எழும்பி போகலை என்று படையப்பா வேஷத்தில் ரஜனி வரும் போது மகா ரசிகர்கள் அடிச்ச விசிலில் உறுதி செய்து கொண்டேன்:)
படத்தில் ஒரு கட்டத்தில் கடவுள் இல்லையே என்று சொன்ன ரஜனி பிறகு கடவுள் இல்லை ஏதோ ஷக்தி இருக்கு என்று ஏற்று கொள்வதும் படத்தின் உள்கருத்து போல கிடந்திச்சு.
அதிர வைத்த காட்சிகளில் இதுவும் ஒன்று
என்னடா வேற ஏதோ படத்தின் ஒரு பகுதியை கொண்டு வந்து போட்டுடான்களோ என்று கூட தோன்றிச்சு. அப்படி இல்லை என்று சொல்லும் அளவுக்கு இடைக்கிடை ரஜனியின் பஞ்ச், action இருக்கும், அதுவே எங்களுக்கு ஒரு விசில் அடிக்க சொல்லும். ஒரு மணி நேரம் கொஞ்சம் சோர்வாக இருந்தாலும் இறுதி மணித்தியாலம் எப்படி போனதென்றே தெரியாது, அந்த அளவுக்கு மீண்டும் விசில், கூ, அதுவும் ஷக்தி கொடு காட்சி,பாடல்கள் எல்லாமே ஒரே பரபரப்பு.. ரஜனி அரசியலுக்கு வருவாரா இல்லையா என்று.
"உப்பிட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் .வாழ்ந்தாலும் இங்கேதான் ஓடி விட மாட்டேன்" "கட்சிகள் பதவிகளை நான் விரும்ப மாட்டேன் காலத்தின் கட்டளையை நான் மறக்க மாட்டேன்" என்று சொன்னது ஓரளவுக்கு ரஜனி தமிழக அரசியலில் கால் வைப்பார் என்று இருந்தாலும், என்னும் வைக்க வில்லை. என்னை பொறுத்த வரை ,அவர் வைக்க மாட்டார். மேலும் ஈழ தமிழர்கள் இக்கு கூட குரல் கொடுத்தவர்.
நம் நடை கண்டு அகங்காரம் தூளாக வேண்டும் நம் படை கண்டு திசை யாவும் பயந்தோட வேண்டும் . .. தீமைக்கும் கொடுமைக்கும் தீ வைக்க சக்தி கொடு வறுமைக்கு பிறந்தவரை வாழ்விக்க சக்தி கொடு
முடிவெடுத்த பின்னால் நான் தடம்மாற மாட்டேன் முன்வைத்த காலை நான் பின்வைக்க மாட்டேன் ... எனை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன் ஏணியாய் நானிருந்து ஏமாற மாட்டேன் !!! ...
"உப்பிட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் . வாழ்ந்தாலும் இங்கேதான் ஓடி விட மாட்டேன்" கட்சிகள் பதவிகளை நான் விரும்ப மாட்டேன் காலத்தின் கட்டளையை நான் மறக்க மாட்டேன்
சக்தி கொடு இந்த பாடலுடன் வரும் காட்சி ஒரு த்ரில் தான்!!
ரகுமான் நன்றே இசை அமைத்திருக்கார் என்று பாடல்களை கேட்கும் போதே தெரியும்.. சண்டை காட்சிகளில் கூட திரையரங்கு அதிறும் விதத்தில் இசைந்திருக்கார். make up ai ரஜனி மறந்திட்டார் என்று விமர்சனங்கள் இருந்தாலும். இப்போ அதை எல்லாம் அலச தேவை இல்லை
எல்லாமே மாயா சாயா:)
ஒருமாதிரி விறு விறுப்புடன் படம் பார்த்து முடிஞ்சாச்சு.உண்மையாவே ரஜனியின் பிழையா இல்லை இயக்குனர் பிழையா என்று எல்லாம் எங்களுக்குள் குமுறல்.
தீவிர ரசிகனான நான் வெளிய வரும் போது முகமே இருட்டின மாதிரி இருந்திச்சு,. சீ இவ்வளவு பின்னடைவு ஏனிந்த படத்திற்கு.. என்னமா மாதிரி படம் எடுத்து இருக்கலாம் அவசரப்பட்டு போட்டார் போல என்று எங்களுக்குள் ஒரே discussion.
"தெரிஞ்சது கையளவு தெரியாதது உலகளவு "என்றுதானே சொல்லிட்டாரு பிறகென்ன கனக்கவே மிஸ் பண்ணுறாரு என்று சொல்லி இருக்காரு என்று நாங்களே தீர்மானம் எடுத்தபடி( விழுந்தும் மீசையில் மண் பிரளவில்லை மாதிரி)வீடு நோக்கி பயணம்.
இதுக்கிடையில் நாங்கள் பாபா படம் முதல் ஷோ பார்க்க வந்த கதை பரவீற்று. திரும்பி இரவு பல்கலைக்கழகம் சென்றதும் ஒரே ஆரவாரம். மற்றவர்கள் போல் இல்லாமல் உடனேயே சொல்லிட்டம் படம் பெரிசா வாய்ப்பு இல்லை என்று.மும்மூர்த்திகளும் ஒரே மாதிரி அறிக்கை விட்டதால், அதை எல்லாருமே ஏற்று கொண்டார்கள்."நாங்கள் தீவிர ரசிகர்கள் பாபா படம் தோல்வியில் செல்லும்" என்று நாங்களே வரிந்து கட்டி சொன்னது கூட எங்களுக்கு பெருமையை பெற்று தந்தது.
அந்த வாரம் தான் வலிகாமம் ஒன்று கூடல், இந்துவின் ஒன்று கூடல் என்று அடுத்தடுத்து வந்தது. அதில் மும்மூர்த்திகளையும் எழுப்பி வைத்து போட்டு அறு அறு என்று அழாத குறையா வாங்கி வித்தே போட்டார்கள், நாங்களும் இல்லாத பொல்லாத எல்லாம் சொல்லி கலாயித்து கொண்டே இருந்த ஞாபகங்கள் இருக்கு.
போற வாற இடம் எல்லாம் எனக்கு நோட்டீஸ் அடிச்ச மாதிரி நீங்களே அந்த பாபா படம் போய் பார்த்தனியல் என்று சொல்லி கேட்டு நையாண்டி செய்தளவுக்கு பிரபல்யமாக்கி விட்டது ரஜனியின் பாபா.
அதே படத்தை நாங்கள் மூவருமாக ஓரிரு தடவைகள் கொழும்பில் மன நிறைவுக்காக பார்த்து மகிழ்ந்த வரலாறும் உண்டு.
பாபா வை ரஜனி தயாரித்து இருந்தததால் படமும் ஓடாததால் நல்ல மனம் கொண்ட ரஜனி ( அரசியல் நோக்காக இருந்து இருக்கலாம் - விமர்சனங்களும் காரணம் - தியட்டர்) உரிமையாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்து வரலாற்றில் இடம் பிடித்து கொண்டது இங்க கவனிக்க வேண்டியது ஒன்று . இப்போ இருக்கும் நடிகர்களில் யாரவது அப்படி செய்தார்கள் என்று எனக்கு தெரிந்த அளவில் இல்லை.
அதுவும் மூன்றெழுத்து குஷியமான நடிகரின் மலேசியா போய் வந்த படத்தை போட்டுட்டு தியட்டர் உரிமையாளரும் அவர் சொந்தங்களும் இலவச இணைப்பு மாதிரி இலவச காட்சி நடத்தி நாட்களை ஒட்டியதாக கோடம்பாக்கம் தகவல்கள் சொல்கின்றது. இதை பத்து முறை பார்த்து எங்களை எல்லாம் வியப்பில் ஆழ்த்திய அவரது ரசிகர்கள் இருக்கார்கள்.
கதம் கதம் :முடிஞ்சது முடிஞ்சு போட்டு
என்ன இருந்தாலும் தோல்விகளே வெற்றியின் முதல்படி ; தொடர்ந்து வந்த சந்திரமுகி , சிவாஜி எல்லாமே அதிரும் படி செய்திருகின்றன. ரஜனி கௌரவ படமான குசேலன் அவ்வளவு வெற்றியை தராத போதும், வர இருக்கும் இயந்திரன் தூள் பறக்க வைக்கும் என்பதில் ஐயம்இல்லை.
தனியார் வானொலியில் வேலை செய்யும் பிரபல்யமான வானொலி அறிவிப்பாளரை கடந்த முறை கொழும்பில் சந்தித்த போது அவர் சொன்ன கதை ஞாபகம் இருக்கு " அவர் தம்பியார் இப்பவும் ரஜனியின் பாபா தோல்வி இல்லை என்றே சொல்லுவாராம்" எங்களை போல இன்னுமொருவன் இருக்கான் என்ற பிரமிதம் அன்றே அடைந்தேன்.
மீண்டும் இன்னுமொரு ரஜனியின் பட அனுபவத்தில் சந்திக்கும் வரை ..
நான் ரஜனியின் பெரும்பாலான படங்களை பார்த்தது மட்டும் இல்லை , என்னுடன் DVD இல் வைத்து இருக்கேன். ஏறத்தாள 150 படங்களின் ஒரிஜினல் DVD என்னிடம் இருக்கு. தேவை ஏற்படின் போட்டு பார்த்து ரசிப்பேன். :)
ரஜனியின் பெயரை வைத்து உழைக்கும் ஒரு சின்ன விளம்பரம் :
ராத்திரி வேளை அலுவலகத்தில் நின்று வேலை செய்ய வேண்டி வந்ததால் நண்பிகள் தாங்கள் போடும் பாடல்களை இன்றைக்காவது( வழமையா நான் தான் போடுவது வழக்கம்) ஒரு முறை ரசிக்கும் படி சொன்னதால் அவர்களின் பாடல்களை எக்கேடு கெட்டாவது கேட்டு ரசிக்கலாம் என்ற முடிவோடு பிந்திய இரவு வேலையை ஆரம்பித்தோம். ஏறத்தாள மூன்று மணி நேரம் நேரம் போனதே தெரியாமல் வேலை செய்தோம்...
பல இதமான பாடல்களை போட்டார்கள் அதுக்குள் எனக்கு பிடித்த எட்டு பாடல்கள் இங்கே
பாடல் ஒன்று :-
ஜேசுதாஸ் ஜானகி அம்மா இணைந்து பாடி கலக்கி உள்ளார்கள் .. பார்த்தீபனின் ஆரம்ப கால படம்: உன்னை வாழ்த்தி பாடுகிறேன், இசை: இளையராஜா பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி
ஒரு ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி (2) அழகான கைகள் மீட்டும் வேளை... ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
நதியின் வேகம் பருவ மோகம் கடலைச்சேர மாறிபோகும் நாளும் காதல் ராகம் பாடும் பாடும் இதழில் போடும் இதழின் காயம் இதழில் ஆரும் இனிமையாகும் தேகம் தீண்டும் நேரம் யோகம் யோகம் உன்னை வாழ்த்தி பாடும் பாடல் உதய ராகமோ நம்மை வாழ்த்தும் நமது உலகம் உதயமாகுமோ புது கனவு பாலம் தெரிந்ததே...நெஞ்சினில் இன்பமும் கொஞ்சுது கெஞ்சுது
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே அழகான கைகள் மீட்டும் வேளை... ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை
இளமைக்காட்டில் இனிமைக்கூட்டில் இருக்கும் தேனை எடுக்கும்போது காலம் நேரம் தேவை இல்லை இல்லை மலையின் ஓரம் மலர்ந்த பூவை பறிக்கும் வேடன் இருக்கும்போது காவல் தாண்டும் முல்லை முல்லை மானும் மீனும் சேர்ந்து மாயம் செய்வதேனடி வானம் போடும் காமன் நேரம் கூடத்தானய்யா அட மனதில் சாரல் அடித்ததா...கற்பனை அற்புதம் என்னமோ பண்ணுது
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே அழகான கைகள் மீட்டும் வேளை... ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை ஒரு ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
பாடல் இரண்டு துள்ளி துள்ளி நீ பாடம்மா
சிப்பிக்குள் முத்து படத்தில் கமலா பாலாவா பாடினது என்று காணொளியை பார்த்தால் குழம்பி போகும் பலர் இருக்கின்றனர்.. சூப்பர் நடிப்பு.. யவ்.. நேரம் கிடைத்தால் படத்தை பாருங்கள் சூப்பர்.. நினைக்கின்றேன் ராதிகா கமல் 50 இல் இந்த பாடலை நினைவு கூர்ந்ததாக.. பாடலை பாலுவும் ஜானகி அம்மாவும் கலக்கு கலக்கி இருக்கிறாங்கள்.. ராஜாவின் சுருதி பெட்டி .. இம்ம..
அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ ஆஆஆ நிஸரிமபநிஸரிநிரிநிஸநிப நிஸாரிமரிமரிநிஸா தானனனா தனானா ததரீ..னா..ஆஆஆஆ
துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே
துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே
நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா
நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா
இரவென்றால் மறுநாளே விடியும் உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும் அன்பு கொண்டு நீ ஆடு காலம் கூடும் பூச்சூடு அன்பில்லை நான் ஆட தோளில்லை நான் பூப்போட
துள்ளி துள்ளி துள்ளீ
பாடல் மூன்றுதேடாத இடமெல்லாம் தேடினேன் ;
பலமுறை கேட்டாலும் ஒரு முறை கூட சலிக்காத பாடல். மீண்டும் பாலுவின் கைவண்ணம் விஜயகாந்தின் வசந்தராகம் படத்தில்..
இந்த படத்தில் விஜய் குழைந்தை நட்சத்திரமாய் நடிததாம்.. விஜய காந்தின் பில்டப் களை பார்த்துதான் பின்னாளில் .................????
இதுவரை பாட்டை பிறிந்த பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது இதுவரை ஏட்டை பிறிந்த வார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது
லல்லலலல லலலலலலலாஆஆஆஆ
இதுவரை பாட்டை பிறிந்த பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது இதுவரை ஏட்டை பிறிந்த வார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது
என்னுடைய பல்லவி கிடைத்தது நல்லதொரு சரணம் கிடைத்தது ஹே ஹே ஹே ஹேய்ய்ய்ய்ய்ய்
வெவ்வேறு திசைகளில் ஒடம் என்று வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா ஹ இவ்வாறு விழுந்து இங்கே இன்று சந்திக்க நேர்ந்ததம்மா ஆஆஆஆ
வெவ்வேறு திசைகளில் ஒடம் என்று வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா இவ்வாறு விழுந்து இங்கே இன்று சந்திக்க நேர்ந்ததம்மா என் கண்ணம்மா துண்பங்கள் தீர்ந்ததம்மா
நிஜமோஓஓ.. நிழலோ ஓஓஓஓ உன்னை நான் பார்த்தது பிறிந்தோம் இணைந்தோம் விதிதான் சேர்த்தது
இதுவரை பாட்டை பிறிந்த பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது இதுவரை ஏட்டை பிறிந்த வார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது
மெய் தொட்டு தழுவிய மஞ்சள் நிலா உன் கைவிட்டுப்போனதம்மா என் கண்ணம்மா முன்னாளில் விலகிய வெள்ளைப்புறா உன் இன்னாளில் தோன்றுதம்மா ஆஆஆஆ
மெய் தொட்டு தழுவிய மஞ்சள் நிலா உன் கைவிட்டுப்போனதம்மா என் கண்ணம்மா முன்னாளில் விலகிய வெள்ளைப்புறா உன் இன்னாளில் தோன்றுதம்மா என் கண்ணம்மா என் செல்வம் தீர்ந்ததம்மா ஹ அடடா இதுதான் இறைவன் நாடகம் உறவும் பிறிவும் மனிதன் ஜாதகம்
இதுவரை பாட்டை பிறிந்த பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது இதுவரை ஏட்டை பிறிந்த வார்த்தைகளூக்கு ஓர் சரணம் கிடைத்தது
என்னுடைய பல்லவி கிடைத்தது நல்லதொரு சரணம் கிடைத்தது
பாடல் நான்கு -ஓ வசந்த ராஜா
படம் : நீங்கள் கேட்டவை பாடியவர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி இசை : இசைஞானி இளையராஜா இயற்றியவர் : வைரமுத்து வெளியான ஆண்டு : 1984
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா உன் தேகம் என் தேசம் என்னாளும் சந்தோஷம் என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ...
வெண் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள் மண் தொட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே சூடிய பூச்சரம் வானவில்தானோ?
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா உன் தேகம் என் தேசம் என்னாளும் சந்தோஷம் என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ
ஆராதனை நேரம் ஆலாபனை ராகம் அலைபாயுதே தாகம் அனலாகுதே மோகம் என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு மன்மதக் கோயிலில் பாலபிஷேகம்
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா உன் தேகம் என் தேசம் என்னாளும் சந்தோஷம் என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ
பாடல் ஐந்து- சங்கீதஸ்வரங்கள் - அழகன்
இந்த பாடலை எங்கள் வகுப்பு தோழி ஒரு முறை பல்கலையில் பாடி .. கலக்கி இருந்தாள்.. நல்ல பாடல்.. " வாளியின் மகிமை" சொல்லும் பாடல்.. எப்படி எல்லாம் வைக்குறாரு .. என்று யோசிக்க வேண்டாம்.. இதை விட பல பேர் ,... வைச்சதை நாங்கள் பார்த்து களைத்து போயிட்டோம்..
சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா, என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு, அங்கே இரவா, இல்லே பகலா, எனக்கும் மயக்கம் நெஞ்ஞில் என்னவோ நெனச்சேன், நானும் தான் நினைத்தேன் ஞாபகம் வரல, யோசிச்சா தெரியும், யோசனை வரல தூங்கினா விளங்கும், தூக்கம்தான் வரல பாடுறேன் மெதுவா உறங்கு
.
என்னென்ன இடங்கள், தொட்டால் ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லி தா சொர்கத்தில் இருந்து யாரோ எழுதும் காதல்கடிதம் இன்றுதான் வந்தது சொர்கம் வெண்ணிலே திறக்க நாயகன் ஒருவன், நாயகி ஒருத்தி தேன்மழை பொழிய, பூவுடல் நனைய காமனின் சபையில் காதலின் சுவையில் பாடிடும் கவிதை சுகம்தான்
பாடல் ஆறு - என் கண்ணுக்கொரு நிலவா - பாக்கியராஜ் பானுப்பிரியா படம் - ஆராரோ ஆரிரரோ பாடல் வரிகளை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை..
பாடல் ஏழு: முத்தமிழ் கவியே தர்மத்தின் தலைவன் - பெரிய அளவில் வெற்றி பெறாத படமாயினும் படத்தில் வந்த எல்லா பாடல்களும் சூப்பர் கிட். என்றும் ரசிக்கலாம்..
அதில் முத்தமிழ் கவியே யும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்..
பாடல் எட்டு உடன் பிறப்பு
இந்த பாட்டு ஒருமுறை நான் எனது பாட்டு பெட்டிக்கு பாட்டு recording செய்யும் போது என்னையறியாமலே எனது லிஸ்ட் இக்குள் வந்து சேர்ந்து பிறகு எனக்கு இன்று வரை பிடித்து கொண்டு இருக்கும் பாடல்
நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன் பூமுடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன் சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன் பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன் நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போது ராப்பகலாய் எழும் துயர் உன்னை வாட்டிய போது புதுமொழி நாளும் கேட்டு இரு சிறு விழி நீரில் ஆட ஓர் நதி வழி ஓடும் ஓடம் என விதி வழி நானும் ஓட போதும் போதும் வாழ்க்கை என்று ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன் பூமுடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன் சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன் பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன் நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
வாழும் வரை நிழல் என உடன் நான் வருவேனே ஏழ்பிறப்பும் உயிர்துணை உனை நான் பிரியேனே திசையறியாது நானே இன்று தினசரி வாடினேனே இந்த பறவையின் வேடந்தாங்கல் உந்தன் மனமென்னும் வீதி தானே நீண்ட காலம் நேர்ந்த சோகம் நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன் பூமுடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன் சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன் பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன் நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
வருடாவருடம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் கந்த சஷ்டி விரதம் தொடங்கப்பட்டு ஆறு நாட்கள் ஆறுமுகப்பெருமானை வழிபடப்படுகின்றது. அந்த வகையில் சென்ற மாதமும் 19ம் திகதி தொடக்கம் 24ம் திகதி சனிக்கிழமை வரை கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்பட்டது
போரிட முன் சூரனின் விநாயாகர் வழிபாடு
இறுதி நாள் மாலை சூரன் போர் பெரும்பாலும் எல்லா கோவில்களிலும் களைகட்டும். குறிப்பாக முருகன் கோவில்களில் மக்கள் அலை மோத முருகன் சூரனுடன் போராடுவார்.
வரலாறு
அசுரகுல நாயகனாக இருந்த தொல்லைகள் அளவுக்கு மீறிய சமயத்தில், அவனுடைய ஆணவத்தை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று தேவர்கள் முருகப் பெருமானிடம் வேண்டுகோள் வைத்ததாகவும், முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கடற்கரையில், சூரபத்மனுடன் முருகப் பெருமான் போரிட்டு சூரனை வென்றதாகவும், முருகப்பெருமான் சூரபத்மனுடன் போரிட்டு வென்றதை கந்த சஷ்டி விரதமாக பக்தர்கள் மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபடுவதாகவும், சூரசம்ஹாரம் முடிந்ததும் விரதத்தை நிறைவேற்றியதாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
இது இவ்வாறு இருக்க .. எனக்கு தெரிந்த முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் பார்த்து இருந்தாலும், குறிப்பாக எனது பல்கலைக்காலங்களில் குன்றத்தில் உள்ள குறிஞ்சிக்குமரனில் கலந்து கொண்டு உடல் பயிற்சி செய்ததை நினைத்தால் எப்படா கெதியா தாயகம் சென்று மீண்டும் களத்தில் இறங்க வேண்டும் என்ற அவா தோன்றும்.
எனது அனுபவங்கள் ஒரு சில கதையம்சமும் , புகைப்பட தொகுப்பும் நிறைந்ததாக இங்கே வலம் வருகின்றது.
எங்கள் சூரன் சுமார் 4 அடி உயரம், பிதுங்கும் விழி, கையில் அம்பு வில்’ நீல நிறத்தில் ,அச்சுறுத்தும் பார்வையுடன் இருப்பார்.
தினமும் நாங்கள் முருகனை தூக்கி தூக்கி தோளில் வைத்து வீதி உலா வரும் இளம் சிங்கங்கள் அன்று மட்டும் எதிரியின் பக்கம்
சூரனை வழிப்படுத்தி முருகனுடன் போரிட செய்தல் எங்களின் கடமை.
மாலை நான்கு மணிக்கு சனம் வர தொடங்கும், பல்கலை மாணவர்கள் தவிர ஊரார் , விரதம் பிடிப்போர் என்று சனம் நிரம்பி வழியும்.
ஆரம்பமே அமர்க்களம் ..
சரியாக நான்கு மணி பிள்ளையார் பூசையுடன் சூரன் தன் படையணிகளுடன் தயாரகி விடுவான். எனக்கு தெரிந்த அளவில் தளபதிகள், பிராந்திய தளபதிகள், கட்டளை தளபதிகள் எல்லாம் முதலே திட்டங்களுடன் இருப்பதால் , இலகுவில் காலாட்படை , உளவறியும் படை, கிளைமோர் வைக்கும் படை என்று எல்லாம் பெயர் வைத்து இருக்கும் ஆட்களை வைத்து கொண்டு சூரன் போரை முன் நடத்த கூடி இருக்கும்.
ஒரு முறை உணர்ச்சி வசம் கொண்ட தோழர்கள்கள் வசந்த மண்டபத்துக்குள்ளேயே புகுந்து விட்டார்கள் சூரனுடன் . கோவில் குருக்களே பயந்து ஈடாடி போனார் :)
பெரும்பாலும் விரதம் பிடிப்போர், தொந்திகளுக்கு தொல்லை குடுக்காமல் இருப்போர் முருகனுடனையே நின்று கொள்ளவர்,
குறிப்பாக இந்தச் சூரன் சிங்கத்தலை,யானைத்தலை,எருமைத்தலை என பல தலைமாற்றங்கள்.
சூரன் ஆரம்பத்தில் யானை முகத்துடன் வந்து செய்யும் அட்டகாசமான நகர்வுகளை முருகன் நக்கலாக ;" என்ன சின்ன பிள்ளை தனமாய் இருக்கு என்று " பார்த்தாலும் , தொடரும் விறு விறுப்பான தாக்குதல் மூலம் முருகன் மட்டும் இல்லை பார்க்க வந்தவர்கள் சரி, குருக்கள் சரி திணறிபோடுவார்கள்.
முன்னுக்கு கொம்பு பிடிக்கும் என்னை போன்ற கொஞ்சம் உடம்பு மிக்கவர்கள் தங்கள் சாதுரியத்தை பாவித்து வேகமாக வந்து குதி அடிக்கும் ப்ரேக் சூரனை காவுறவர்கள் திக்கு முக்காடி போகும் அளவுக்கு அப்படி ஒரு கால் பிரேக். சட புட என்று அடிக்கும் வட்டம் , கீழே மேல என்று சடம் புடாம் என்று தூக்கி போட்டு கொண்டு பின்னுக்கு போகுதல் ,முன்னுக்கு வரல் , சடார் என்று எல்லாத்தையும் போட்டுட்டு ஓடி போதல் , எல்லாம் வியக்கும் ஆரம்பங்களே. இதிலும் இன்னொன்று ஒரு முறை கொம்பு பிடித்த நான் என்னை மீறி கொம்பு சென்றாதால் அருகில் உள்ள ரோஜா தோட்டத்துக்குள் தூக்கி எறியப்பட்ட சோகமான சம்பவங்களும் நடந்துள்ளது. எனக்கு மட்டும் இல்லை பலர் அப்படி மாட்டி உள்ளார்கள்.
களைப்பு என்பதற்கு இடமே இல்லை . போரை தோய்ய விடாமல் மாறி மாறி படையணிகளை சூரனுடன் அனுப்பி போரிடுதல் தான் எங்களை போன்ற மூத்த உறுப்பினர்களின் கடமை. ஆரம்பத்தில் ஒருக்கா களைத்தாலும் , பிறகு பழகி போடும்.
களைக்கும் தோழர்களுக்கு விசேடமாக குளிர் பானங்கள்,தேநீர், கோப்பி, வடை , பிஸ்கட் என்று சாராமாரியாக குடுத்து உற்சாக படுத்த எங்களின் சமையல் படையணி , பின் புலத்தில் இயங்கும்.
எல்லாத்திலும் பாராட்ட வேண்டிய ஒருவர் சூரனை இப்படி எல்லாம் நாங்கள் வதை செய்யும் போது சூரனின் தலையை ஆட்டும் மகான் , படும் அவலமோ சொல்ல முடியாது. இருந்தாலும் அவரின் வல்லமையால் எல்லாம் சமாளிப்பது( களத்தில்), அடுத்த நாள் அவருக்கு அதன் பலன் தெரியும் என்று நினைக்கின்றேன்:)
ஏறத்தாள ஒரு மணி கடும் போருக்கு மத்தியில் பிள்ளையாரடியில் முதலாவது தலை விழும்.
விசேடமாக தவில் பிடித்து அடிக்க வைப்பது எங்களை போன்றோருக்கு ஒரு ஆசை.
மேளம் சரி இல்லாட்டி போர் சூடு பிடிக்காது. தவில் அடிக்கும் அடியில் பொடியன்கள் சிறப்பாக செயல்படுவான்கள்.
கந்த சஸ்டி கூட ஒரு fast track அடிதான்.
நாங்கள் சினிமா பாடல்களுக்கு தடை அதனால் எல்லாமே முருகன் பாட்டு தான். அதுவும் ஒரு கிக்கு தான்
வீதி எங்கும் சனம் நிரம்பி வழிய அவர்களுக்கும் சூரன் சென்று பிரேக் போடுவதும் அவர்களை ஒருக்கா கத்த செய்வதும் சூரன் செய்யும் ரீங்கார சேஷ்டைகள். அதுவும் மழை பெய்யும். எங்களுக்கு சொல்லியா குடுக்கணும் அடிக்கும் பிரேக் சேறு எல்லாம் கொண்டே எல்லாரிலும் பிரள செய்து பார்த்து கொண்டு நிற்பவர்கள் எல்லாம் களத்தில் இறக்குவதே நோக்கம்.
இதை விட பொடியல் எல்லாம் வேட்டியும் சால்வையுமா நிக்கும் போது, பெண்கள் யார் எல்லாம் கட்டுடம்பு பொடியல் என்று என்று ஒரு ஓரக்கனாலே பார்ப்பதும் இந்த சூரன் போர் இல் தான்.
சிங்க தலையுடன் திரியும் சூரன் காட்டும் வித்தைகள் பல, சாரமாரியான வித்தைகள். விறு விறுப்பானது சூரனை தாங்கியவாறு முழங்காலில் நடப்பது , கடினமான ஒன்றாயினும் அந்த நேரம் எல்லாம் போர் மயமாய் இருக்கும் போது செய்துபோடுவார்கள்.
இதை விட ஹலோவீன் ஸ்டைல் இல் வெளிக்கிட்டு வந்த காட்டும் மாஜா ஜாலங்கள் பல. எல்லாமே புதுசா இருக்கும்.
இறுதியாக உள் வீதியில் நடக்கும் பாரிய முறியடிப்பு தாக்குதால் தான் நெருப்புடன் வந்து தாக்குதல். இது முதன் முறை செய்யும் போது முருகனை தூக்கி கொண்டு முன்னுக்கு நிண்ட விடலை பசங்கள் எல்லாருமே ஓடியே போட்டாங்கள் நெருப்புக்கு பயத்தில. இதில இருந்தே தெரியும் யார் எல்லாம் முருகன் பக்கம் இருப்பாங்கள் என்று. வாயுக்குள் மண்ணெண்ணெய் நிரப்பி பந்தத்துக்கு ஊதி நெருப்பால் முருகனை வெருட்டல். உண்மையில் அதை செய்த நம்மட நண்பன் துளசிக்கு வாழ்த்துக்கள். உண்மையாவே அதை செய்வது கடினம் அந்த டென்ஷன் இல் நெருப்பு பரவி வர வேணும். வியக்கும் வித்தைகள்..
108 தடவைகள் சூரனை தூக்கி எறிந்து பிடித்தல், தோளில் நண்பர்களை ஏற்றியவாறு அவர்களின் மேல் சூரன் ஓடி திரிதல், இன்னும் என்னை வியக்கசெய்தவை.
மூலஸ்தானத்துக்கு முன்பாக கோபுர வாசலில் நடை பெறும், மலைக்குள் இருந்து பதுங்கி தாக்குதல், சேவல் , மயில் எல்லாம் இல்லாடியும் எல்லாம் கொடிகளே. இருக்கும். இருந்தாலும் விறு விறுப்பாக செய்து வைப்பதில் முருக அடியார்கள்.
வெளி வீதியில் நடக்கும் போரில் முதலில் மாமரக்கிளையுடனும் வருவார். அந்தக் கிளையில் தொங்கும் மாங்காய்க்கு நாங்கள் அலையா விட்டாலும் அந்த மாங்காய்க்கு, திருமணமான பெண்களிடமும், பலகாலம் குழந்தைப் பாக்கியமில்லாப் பெண்களிடமும் கேட்டால் சொல்வார்கள் இந்த மாங்காய் சாப்பிட்டால் குழந்தைப் பாக்கியம் கிட்டுமென்பது நம்பிக்கை.அது நடந்ததாகக் கூடப் பலர் கூறக் கேட்டுள்ளேன்
அதற்கு பிறகு நடை பெறும் இறுதி யுத்தத்தில் 108 தடவைகள் வட்டம் அடித்தல் சொல்லி முடிக்க்க இயலாது, முடியும் கையேடு மாறி மாறி மூன்று தடைவைகள் அடிக்கும் வட்டம், கீழே மேலே தூக்கி போட்டவாறு ஓடி திரிதல் தண்ணி விசிறியவாறு அங்கேயும் இங்கேயும் ஓடுதல், என்று பல வித்தைகளை காட்டி இறுதியாக முருகனின் காலில் இரவு 9 மணியளவில் சரண். ஐந்து மணி நேரம் நடந்த உக்கிர சண்டை முற்றும்பெறும்.
இதற்குள் இவ்வளவு நடந்தும் தொடர்ந்து விஷேட அபிஷேகம் அன்று சொல்லி இரவு 11.30 மணி செல்லும்.
அதிகாலையில் பாறணை சமையல் (2002)
இடம் இருந்து வலம் தேவர், பிரியன், பத்மநிருபன், அரவிந்தன்
இதிலும் சுவரஷியம் என்னவென்றால், பலர் இரவு கோவிலில் தங்கி அதிகாலை நடை பெறும் பாறணை பூசையில் கலந்து கொள்வார்கள். இரவு முழுக்க இருந்து அடிக்கும் அரட்டை அதிகாலை 3 மணிக்கு நிறைவுக்கு வரும். நீராடி போட்டு சமையலில் ஈடுபட்டு காலை 6 மணிக்கு பாறணை தயார். பிறகு அந்த பூசைக்கு பின் விரதம் முறிப்பவர்கள், முறிக்க எங்களை போன்றவர்கள் நல்லா ஒரு பிடி பிடித்து போட்டு தூக்கம் கொள்ள சரி. பகல் மீண்டும் திருக்கல்யாண தயார் படுத்தல்கள். அது இன்னொரு பெரிய நீண்ட கதை.
எல்லாம் முடிய இரவு போய் அறையில் படுத்தால் சொர்க்கம் தெரியும், முந்த நாள் போட்ட ப்ரேக், சுழட்டி அடிச்ச வட்டம், தூக்கி எறிந்த ஏறி ...எல்லாவற்றின் பின் விளைவுகள் பல,
முதல் நாள் அடிச்ச ப்ரேக் அடையாளங்கள்
எல்லாம் நன்மைக்கே என்று போட்டு பனடோல் தேவையாயின் அதனையும் போட்டு போட்டு பல்கலை சென்ற வரலாறுகளும் இருக்கு.
இங்கே பகிரப்பட்ட படங்கள் என்னிடம் இருந்தவை, பலர் எங்களை போல செய்தார்கள், செய்கிறார்கள்,செய்வார்கள் அவர்களுக்கு எல்லாம் குறிஞ்சிக்குமரன் அருள் கட்டாயம் கிடைக்கும் என்று சொல்லி எனது அனுபவங்களை நிறைவு செய்கிறேன்.
இந்த தலைப்பில் எழுத எந்த பின் காரணங்களும் இல்லை. எனக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கும் அதனால் இந்த பாட்டுகளை விரும்புகிறேன் என்று நினைக்க வேண்டாம். பின்னடைவுகள் தான் பிறகு பாரிய வெற்றியை தரும் என்ற நம்பிக்கையில் ... !!!
ராத்திரி இணைய வசதி இல்லை அதனால் இருந்த காணொளி பாடல்களை வரிசைப்படுத்தி பார்த்தேன். அதில் ஒரு சில என்னை எப்பவோ கவர்ந்தவை. அதில் இதயம் என்று ஆரம்பிக்கும் பாடல்கள் மூன்று . ஒருக்கா நீங்களும் கேளுங்கள். நிச்சயம் பிடிக்கும் என்று நம்புறேன்
பாடல் ஒன்று :-
மோகனின் சூப்பர் கிட் படங்களில் ஒன்று தான் தான் இந்த இதயக் கோவில், எத்தனை முறையும் பார்த்து கொண்டு இருக்கலாம். பாடல்கள், கௌண்டமணி பகிடிகள், காதலின் வலி என்று எல்லாமே நிறைந்த ஒரு நிறைவான படம். ஒரு சோகமான முடிவு.. என்ன செய்வது காதல் தோல்வி என்று வந்துவிட்டால் இது எல்லாம் விளைவுகள் தான் என்பதை புரிய வைத்த படம்.
படம்:- இதயக் கோவில் பாடியோர்:- எஸ் பி பாலசுப்ரமணியம்,இளையராஜா இசைஅமைத்தவர்:-இளையராஜா
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நானும் சூட்டுவேன்
(டூயட் )
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நானும் சூட்டுவேன்
ஆத்ம ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே உயிரின் ஜீவ நாடிதான் ராகம் தாளம் ஆனதே உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல எனது ஜீவன் ஒன்றுதான் என்றும் புதிது
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நானும் சூட்டுவேன்
(சோகம் )
காமம் தேடும் உலகிலே ஜீவன் என்னும் கீதத்தால் ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும் ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார் என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நானும் சூட்டுவேன்
நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில் சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில் பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா மீராவின் கண்ணன் மீராவிடமே எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாயே வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நானும் சூட்டுவேன்
பாடல் இரண்டு
நான் பிறந்த ஆண்டில் வந்து இன்று வரை இல்லை என்றுமே இந்த பாடல் மெகா ஹிட் தான். ஈழத்து வானொலிகளில் ராத்திரி வேளையில் நடக்கும் பழைய மெட்டுகளை மீட்டி தரும் நிகழ்ச்சிகளில் இந்த பாட்டு எப்படியும் ஒலிக்கும். எனக்கு அங்கே கேட்டு தான் விளைவால் தேடி பிடித்து வைத்து இருக்கேன்.
படம் : புதிய வார்ப்புகள் பாடல் : பஞ்சு அருணாசலம் பாடியவர் : ஜென்சி இசை : இளையராஜா வெளியான ஆண்டு : 1979 பாரதிராஜா, பாக்யராஜ், ரத்தி அக்னி ஹோத்ரி
இதயம் போகுதே இதயம் போகுதே எனையே பிரிந்து காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ இதயம் போகுதே
மணியோசை கேட்டு மகிழ்வோடு நேற்று கைகள் தட்டிய காலை சென்றதெங்கே அரும்பான என் காதல் மலராகுமோ மலராகி வாழ்வில் மனம் வீசுமோ இதயம் போகுதே எனையே பிரிந்து
லாலல லாலல லாலல லாலல லால லால லால லால.....
சுடுநீரில் விழுந்து துடிக்கின்ற மீன்போல் தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா குயில் கூவ வசந்தங்கள் உருவாகுமோ வெயில் தீண்டும் பூவில் பனி நீங்குமோ இதயம் போகுதே எனையே பிரிந்து
மலைசாரல் ஓரம் மயிலாடும் நேரம் பாடல் சொல்லவும் தேவன் இல்லையம்மா நிழல் போல உன்னோடு நான் சங்கமம் தரவேண்டும் வாழ்வில் நீ குங்குமம்
இதயம் போகுதே எனையே பிரிந்து காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ இதயம் போகுதே
பாடல் மூன்று
எல்லாருக்கும் தெரிந்த முரளியின் இதயம் படத்தில் இடம் பெற்ற இதயமே இதயமே பாடல் .
காட்சியும் அதன் பின் பாடலும்
சரிங்க இப்போ பாடல்
இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே நிலவில்லாத நீல வானம் போலவே உயிரில்லாமல் எனது காதல் ஆனதே இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே இதயமே இதயமே
பனியாக உருகி நதியாக மாறி அலை வீசி விளையாடி இருந்தேன் தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து உயிர்க் காதல் உறவாடிக் கலந்தேன் இன்றே இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம் இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம் கோலம் கலைந்ததே புது சோகம் பிறந்ததே நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்
இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே இதயமே இதயமே
என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று உன் மீது படவில்லை துடித்தேன் அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும் உன் நெஞ்சைத் தொடவில்லை ஏன் சொல்லம்மா இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன் இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன் ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்
இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே நிலவில்லாத நீல வானம் போலவே உயிரில்லாமல் எனது காதல் ஆனதே இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே இதயமே இதயமே
ஆகா இப்படியும் செய்யுறாங்கள் ................. நல்ல ஒரு தேர்வு ....எடிட்டிங்..
முக்கியமாக இதையும் பாருங்க உள் கருத்து உள்ள ஒரு நகைச்சுவை ( காலத்துக்கு ஏற்றது)
இதுதான் உள் கருத்து : அமெரிக்காவில் நிக்கும் ..................... இடம் விசாரிக்கும் போது இந்த போலீஸ் இக்கு ஏற்பட்ட நிலவரம் தான் அமெரிக்காவின் சீ ஐ எ இக்கும்.. நீங்களே பாத்திரங்களை தெரிவு செய்யுங்க
பண்டிக் காய்ச்சல் நோயால விஜய்யோட குடும்பமே மாண்டு போகுது. அதுக்குப் பழிவாங்க விஜய் உலகத்தில உள்ள எல்லாப் பண்டிகளையும் வேட்டையாடுகிறார். கிளைமாக்ஸ்ல நூறு பண்டிகளை ஒரே நேரத்தில் ஒரே ஒரு பன்ச் டயலாக் சொல்லி கொல்ல முயற்சிக்கிறார். தொண்ணூற்று ஒன்பது பண்டிகள் உடனே செத்து விழ, மீதி ஒரு பண்டி மட்டும் செவிடு எண்டு கண்டு பிடிப்பதுதான் விஜயின் மதியூகம். அந்த ஒரு பண்டியையும் த்ரில்லா ஒரு டான்ஸ் ஆடி கொன்று விடுவது படத்தைப் பார்பவர்கட்கு நுனிக் குண்... இருக்க வைக்கிறது! ஆல் இன் ஆல் தியேட்டரில கதிரையே தேவைப் படாது! - நன்றி சனா ...
முக்கியம் : வெளியில சொல்லி போடாதிங்க அடுத்த படத்துக்கு கதையா எடுத்தாலும் எடுதிடுவான்கள். கவனம் :)
அடேங்க் கொய்யால வேட்டை காரனுக்கு பின்னால இவ்வளவு ரண களம் நடந்து இருக்கு ....இல்லைங்க இன்னும் இருக்கு .. கலாய்க்க..
1. மாறன் :நம்மளோட படம் 100நாள் ஓடனும் விஜய்: இல்லை 200நாள் ஓடனும் மாறன் :ஜோக் அடிக்காதிங்க சார் விஜய்: ங்கொய்யால முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?
2.ரிப்போர்ட்டர் : சார் உங்களோட வேட்டைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்ட்டே இருக்குதே ஏன்? விஜய் : சென்சார் போர்டு மெம்பர்ஸ் படத்த பாக்க பயப்படுறாங்க.
நன்றி loshan:)
3.முதல் பரிசு அடையார்ல பிளாட், ரெண்டாவது பரிசு கார் போட்டி நடக்கும் இடம் சேப்பாக்கம் கிரவுண்டு. தகுதி: எதையும் தாங்கும் இதயம் போட்டி என்னன்னா விஜய் நடிச்ச குருவி படம் 10 முறை பாக்கனும் போட்டியின் விதிகள் : படம் பாக்கும் போது வாந்தி எடுக்கக்கூடாது,அவர் என்ன பண்ணினாலும் திட்டாம படம் பாக்கனும்...முக்கியமா உயிரோட இருக்கனும்..
போட்டிக்கு வந்த ஒருத்தன்: கொய்யால ஒருக்கா பார்த்தே குடல் இல்லாமல் போற அளவுக்கு வாந்தி .. அப்புறம் ௰ தரமா .. ஐயோ அம்மாடி வேணாம்டா.. எஸ்கேப் ..
4.விஜய் அரசியலில் சேர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் தன்னுடைய முதல் பட்ஜெட்டைஎப்படி தயாரிப்பார். ஆந்திராவின் பட்ஜெட்டை ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுப்பார்( ரீமேக்)
5.விஜயின் அடுத்த 7 படங்கள் வேட்டைக்காரன், சமையல்காரன், குடிகாரன்,பைத்தியக்காரன்,பிச்சைக்காரன்,குடுகுடுப்பைக்காரன்.. (கதை தெரிந்தோர் தொடர்பு கொள்ளவும்.. )
6 எமன் : நான் உன் உயிரை எடுக்க போகிறேன். உன் கடைசி ஆசை என்ன?. விஜய்: நான் நடிச்ச வேட்டைக்கரன்படத்தை நீங்க பாக்கனும். எமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல பாத்தா நீ என்ன கொல்ல பாக்குறியே.......எஸ்கேப்
அம்மாடி இன்னொரு ,,,, காரனில் சந்திக்கும் வரை .. பாய்..........................................